சில பக்தி பாடல்களில் பிறவி எடுத்தலை பற்றி இவ்வாறு கூறுவார்கள். ஒவ்வொரு நாளும் எத்தனையோ உயிர்கள் உலகில் பிறந்து இறக்கின்றன. ஆனால் இறைவா இத்தகைய மனிதப்பிறவி எனக்கு கொடுத்து எந்த நேரமும் என்னை பக்தி செய்ய தூண்டிய உன்னை வணங்க வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன் என பக்தி தோய்ந்து பாடுவார்கள்.
எல்லா உயிரும் மனிதப்பிறவி எடுப்பதில்லையாம்.. அப்படி மனிதனாக பிறந்த அனைவரும் இறைவனை நினைப்பதில்லையாம். ஆயிரத்தில் ஒருவருக்கே பிரதிபலன் நோக்காத பக்தி ஏற்படுகிறது. லட்சத்தில் ஒருவருக்கே அதனால் ஆன்மீக உயர்நிலை ஏற்பட்டு, இறைவனில் கலந்து இன்புறுகிறார்கள்.
சென்னையில் இணைய எழுத்தாளர்களை சந்தித்த பொழுது இந்த கருத்துக்கள் தான் தோன்றியது.
[இணைய எழுத்தாளர்னு சொல்லிட்டேன் ஓகேவா தங்கங்களே? :)) ]
எத்தனையோ நபர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். அதில் எத்தனை பேர் பதிவு எழுதுகிறார்கள், மேலும் பதிவு எழுதினாலும் பரஸ்பரம் எத்தனைபேர் சந்தித்துக் கொள்கிறார்கள் என பார்க்கும் பொழுது நான் ”ஆயிரத்தில் ஒருவன்” என்பதை உணர்ந்தேன்.
அப்துல்லா, கேபிள் சங்கர், பலாபட்டறை சங்கர், எறும்பு ராஜகோபால், ஜெட்லி சங்கர், துளசி டீச்சர் என பல இணைய எழுத்தாளர்களை சந்தித்தேன். பல கருத்துக்களில் கலந்துரையாடல் இருந்தது. ஆன்மீக பணியாக சென்னை வந்தாலும், இவர்களுக்காக ஒரு நாள் ஒதுக்கி சந்தித்தது எனக்கும் நிறைவை அளித்தது.
பதஞ்சலி யோகசூத்திரம் பற்றி எழுத சொன்னார்கள் திரு ராஜகோபாலும், சகோதரி துளசி கோபாலும் :)...! ஏதோ எனக்கு தெரிந்ததை கிறுக்குவதால் சிலர் வந்து செல்லும் தளமாக இருக்கும் இந்த வலைப்பக்கத்தை முற்றிலும் முடக்க அவர்கள் தீட்டிய திட்டத்தை ரசித்தேன். :)
நான் இணைய தளத்தில் எழுதுவது மற்றும் நகைச்சுவையாக செயல்படுவது எல்லாம் எங்கள் அறக்கட்டளை சார்ந்த நபர்களுக்கும், பல மாணவர்களுக்கும் அவ்வளவாக தெரியாது. எனது உதவியாளருக்கு கூட அன்றுதான் பதிவு, வலையுலகம் என்ற விஷயம் தெரியவந்தது.
அவர்களுக்கெல்லாம் இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம் தான். :)
இந்த வலைதளத்தை வாசிக்கும் ரங்கன், முனுசாமி மற்றும் உமாசங்கர் போன்றவர்கள் இதில் கலந்துகொண்டார்கள். நான் எழுதும் வரிகளும் உருப்படியானது என உணர்த்திய இவர்களுக்கு என் நன்றிகள்.
சென்னையை சேர்ந்த எனது மாணவர் தினகரன் சந்திப்பில் கலந்துகொண்டார். ஒரு எதிர்ப்பார்ப்பு இல்லாத அன்புடன் இணைய எழுத்து மூலமே இணைந்த அந்த சந்திப்பு மிகவும் உன்னதமானது என நினைக்கத் தோன்றியது.
இரண்டரை மணிநேர சந்திப்புக்கு பிறகும் சந்திப்பை தவறவிட்டவர்களிடம் எத்தனையோ அழைப்புகளும் மின்னஞ்சல்களுக் எனக்கு வந்தது. நண்பர்களே விரைவில் சந்திப்போம்..
நான் காத்திருக்கிறேன்..”ஆயிரத்தில் ஒருவனாக...”
சந்திப்பை பற்றி இணைய சுட்டிகள் எழுதிய பதிவின் சுட்டிகள் :-
சுட்டி1
சுட்டி 2
எனது புகைப்பட கருவி அரபு நாட்டில் வாங்கப்பட்டதால் அதில் எடுத்த அனைத்து புகைப்படமும் ‘ஷேக்’ ஆகிவிட்டது. பலாபட்டறை எடுத்த அனைத்து புகைப்படமும் நன்றாக இருந்தது. அவர் பதிவில் கண்டுகளியுங்கள்.

16 கருத்துக்கள்:
//அரபு நாட்டில் வாங்கப்பட்டதால் அதில் எடுத்த அனைத்து புகைப்படமும் சேக் ஆகிவிட்டது.//
இத நம்பி நான் சங்கர்ட போட்டோ வாங்காம விட்டுட்டேன்... எல்லாரும் தம் கட்டி நிக்கும்போதே நினைச்சேன்.
:)
"ஆயிரத்தில் ஒருவன்...!"
Seasonal தலைப்பு...
ரைட்டு
உங்களையெல்லாம் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
"நீங்கள் கொடுத்துவைத்தவர். சுவாமி உங்கள் ஊருக்கேவந்து 'தரிசனம்' அளித்தார். ஆனால் நான், ஊருக்குப்போய் தரிசித்தேன்"
இது கோவியாரின் புலம்பல:-)))))))))
சேக், ஷேக்காகாமல் இருந்தால் நல்லாவா இருக்கும்?
மிக்க நன்றி ஸ்வாமிஜி.
என் கேமராவில் எடுத்த பல படங்களும் ’ஷேக்’ ஆகித்தான் இருந்தது, நன்றாக வந்த சில படங்கள் மட்டுமே பதிவில் போட்டேன், (அதுவும் கூட சுமார்தான் - முதன் முறையாக ஒரு மைனஸ் ஓட்டு வேறு:) )
இத்தனைக்கும் சென்னையில் வாங்கிய சப்பான் காமெரா:).
பிண்டங்கள் கூடிய இடத்து அண்டத்து அதிர்வலையாக இருக்கலாம்...::))
தன்யனானேன்.
மீண்டும் சென்னை வரும்போது நிறைய நண்பர்களுக்காய் நேரம் ஒதுக்கி வரவும்.
I am so disappointed to miss this opportunity.
வெகுநாளாய் காத்திருந்தும் நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன். உங்களை சந்திக்க முடியாமல் போனதற்கு மிகவும் வருத்தப்பட்டேன்.
ஆஹா ! ரங்கன் ராகவனாக மாறிட்டானா !!
உங்கள் பதிவில் ஒரு முறை நீங்கள் வேட்டைக்காரன் படத்தின் பாடலில் வரும் உபநிஷத வரிகளைப பற்றி குறிப்பிடிருந்ததாக ஞாபகம். இது சம்பந்தமான என்னுடைய பதிவு இதோ http://www.virutcham.com/?p=274
திரு எறும்பு,
திரு பலாப்பட்டறை,
சகோதரி துளசி,
திரு செளரி,
திரு பிரபு,
அனைவருக்கும் எனது நன்றிகள்
திரு ரங்கன்,
//ஆஹா ! ரங்கன் ராகவனாக மாறிட்டானா !!//
மன்னிக்கவும். திருத்திவிட்டேன்.
ரங்கனாக இருந்தாலும் ராகவனாக இருந்தாலும் விஷயம் ஒன்றுதானே :)
என்னை ரங்கனாக மாற்றியதற்கு நன்றி சுவாமிஜி - என்ன செய்வது - தன முனைப்பு என்ற நோய்
என்னை விட்டு நீங்க மறுக்கிறதே!
எல்லாம் ஒன்றே என வெறும் உதட்டளவில் மட்டும் நினைக்கக் கூடிய நிலையில்தான் நான் இருக்கின்றேன் - நீங்கள்தான் என்னை மன்னிக்கவேணும்.
Dear Swami Ji,
I am happy that I met you along other bloggers. This is entirely different experience in my life and still could not come out of it.
Yours as usual knowledge sharing, the reason given by Paalaapattari Shankar that why he is blogging,
A very good sense of humor of "Hotel Sankar" Sorry, Cable Sankar sir and Tulasi Madam and also her activeness.
Erumbu Rajagopal questions, Rangan sir sharing about his father knowledge and experiences.
Religion knowledge and discussion of Mr. MMAbdulla.com (Annan)...etc.
Two and half hours are not enough Swami Ji. Thank you for making this wonderful meet and experiences.
Umashankar:-)A
//அரபு நாட்டில் வாங்கப்பட்டதால் அதில் எடுத்த அனைத்து புகைப்படமும் ‘ஷேக்’ ஆகிவிட்டது//
mudiyala..:-()
அய்யா சாமிக்கு,
இந்த சாதாரண (முனு)சாமி வணக்கத்துடன்
எழுதுவது, தங்களை சந்தித்து
நிறைய சந்தேகங்களை பகிர்ந்து தேடல்களை
தொடரவேண்டும் என்று வந்தேன். சில நிகழ்வுகள்
மனதில் மறக்கமுடிவதில்லை. அதில் இந்த சந்திப்பு
ஒன்று. தங்களுடன் அதிக நேரம் பேச வேண்டும் .
மீண்டும் சென்னை விஜயம் எப்போது .தெரியபடுத்தவும்.
நன்றி
தங்கள்
அன்பு நண்பன்.
கோ.முனுசாமி.
சென்னை துறைமுகம்
gmunu_2008@rediffmail.com
96 00 13 26 19.
அன்பின் ஸ்வாமி
ஆயிரத்தில் ஒருவன் - நல்ல தலைப்பு - பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி - சந்திக்க் வேண்டும் - பார்ப்போம்
தினந்தினம் திருமந்திரம் எப்படி வாங்குவது ?
நல்வாழ்த்துகள் ஸ்வாமி
Post a Comment