வேதத்தின் கண்மணிகளுக்கு... ஒரு தனிப்பயணமாக சென்னை வருகிறேன்.
சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் புதன் (20 - ஜனவரி ) மாலை மெரினா கடற்கரையில் சந்திக்கலாம்.
இடம் : காந்தி சிலை அருகில், கலங்கரைவிளக்கத்திற்கு பின்புறம்.
நேரம் : மாலை 5:30.
அங்கே வந்து வரம் கொடுப்பீர்களா என கேட்பவர்களுக்கு தனி கவனிப்பும், மரியாதையை செய்யப்படும். :)
தினம் தினம் திருமந்திரம் புத்தகத்தின் சில பிரதிகள் என்னுடன் வருகிறது. விருப்பம் இருப்பவர்கள் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
உங்களில் ஒருவனாக, நண்பனாக சந்திக்க வருகிறேன்.
தொடர்பு கொள்ள 99441 333 55.
Sunday, January 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
24 கருத்துக்கள்:
எத்தனை மணிக்கு என்று சொல்ல முடிமா சுவாமிஜி ?
அப்படியே "வர" மரியாதையை என்ன என்று சொன்னாலும்
"வாங்கிக்" கொள்ள சௌகரியமாக இருக்கும்.
மீண்டும் கேள்விக்கு மன்னிக்கவும் - மெரினா கடற்கரையில் எங்கு?
சென்னைக்கு நல்வரவு..
நண்பர்கள் எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க ஸ்வாமி!
வரம் வாங்க நான் ரெடி:)
வருக,வருக ஸ்வாமிஜி.உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவேன் என்று நினைக்கிறேன்.
Eager to Meet you Swami
Welcome...
Eager to see you...
Time please..
சந்திப்பிற்காக காத்திருக்கிறேன். மிக்க நன்றி.
சாமி வராரே... சென்னை மக்கள் உஷாரே:-))
அன்பின் ஓம்கார் - சந்திக்க விழைகிறேன் - சென்னை தோதுப்படுமா தெரியவில்லை - பார்ப்போம்
அன்பின் ஓம்கார்
நேரில் சந்திக்க இயலாவிட்டாலும் தினந்தினம் திருமந்திரம் அனுப்பி வையுங்களேன்
நல்வாழ்த்துகள் ஓம்கார்
//சென்னையில் ஸ்வாமி ஓம்கார்...!//
தலைப்பு கவர்சியாக இல்லை.
"ஸ்வாமி ஓம்கார் சென்னை விஜயம்"
என்றிருக்க வேண்டும் !
:)
//தினம் தினம் திருமந்திரம் புத்தகத்தின் சில பிரதிகள் என்னுடன் வருகிறது. விருப்பம் இருப்பவர்கள் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.//
நான் மென்நூல்(ஈபுக்) தான் படிப்பேன். rapid shareல் யாராவது சேர்ந்திருந்தால் லிங்க் அனுப்புங்கள்.
:)))))))))
சுவாமி ஒம்கார் அவர்களுக்கு வணக்கம்,
தங்களை இனிதே அகமகிழ்வோடு, சென்னை வரவேற்கிறது.
நானும் அன்புடன் தங்களை வரவேற்கிறேன்.
என்றும் அன்புடன்
சிறுதுளி
சுவாமி நீங்கள் சென்னை போன்ற நகர்கள் வருவது என்றால் தயவு செய்து விடுமுறை நாட்கள் வரவும் ஏன் என்றால் எங்களுக்கு விடுமுறை கிடைப்பது அர்து என் மனம் கவலைபடுகிறது .
சுவாமி என நீங்களே எழுதி கொள்வது கூச்சமாக இல்லையா....சுவாமி
எனது செய்தியை கேட்டு வருவதாக கூறிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
சந்திக்க நானும் ஆவலாக உள்ளேன்.
திரு ஆர்.கே.சதீஸ்குமார்,
//சுவாமி என நீங்களே எழுதி கொள்வது கூச்சமாக இல்லையா....சுவாமி//
சுவாமி என கூறவில்லை ஸ்வாமி என்றே எழுதி இருக்கிறேன் :)
வலைதளத்தின் இடப்பக்கம் கவனிதீர்களா எப்பொழுதும் ஸ்வாமி ஓம்கார் என்று இருக்கிறது?
வலைதளம் ஆரம்பிக்கும் பொழுது ஸ்வாமி ஓம்கார் என எழுதும் பொழுதே எனக்கு வெட்கமாக இருக்கவில்லை..!
நீங்கள் சதீஸ்குமார் என எழுதும்பொழுதெல்லாம் வெக்கப்படுவீர்களோ? அப்படியானால் நானும் வெட்கப்பட முயற்சிக்கிறேன்.. :)
வர முயற்சிக்கிறேன் சாமி!
//வர முயற்சிக்கிறேன் சாமி!//
யுவகிருஷ்ணாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள், எப்படி தப்பிப்பது என்று. (ஸ்வாமி, சுவாமி பிரச்சனை).
ஆனால் ஐயா! என்னால் திருப்பூரிலிருந்து சென்னை வந்து பார்க்கமுடியாததால், ஒரு நாள் திருப்பூர் வாருங்கள், கவனித்துக்கொள்கிறேன்.
திரு ஆர்.கே.சதீஸ்குமார்,
அப்போ ஸ்வாமி நாதன், ஸ்வாமிதுரை,ஸ்வாமிமலை இப்படி பெயர் உள்ளவர்களெல்லாம் தங்கள் பெயர்களை எழுதிக் கொள்ள கூச்சப்பட வேண்டுமா? இல்ல அவர்களெயும் கூச்சமில்லையா என்று கேட்பீர்களா?
ஸ்வாமி, இதெற்கெல்லாம் நீங்களே பதில் சொல்ல வேண்டுமா? சுப்பாண்டி போதாதா? சுப்பாண்டி என்ன ஆனார் ஒருவேளை ஆயிரத்தில் ஒருவன் பார்க்க போயிருக்கிறாரா?
ஸ்வாமி, சென்னை பயணம் இனிதாய் அமைய இறைவனை வேண்டுகிறேன். நேரில் வந்தால் தான் வரம் அருள்வீர்களா?
ஸ்வாமி சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..:))
சென்னையில் சுவாமியை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றாலும் அமைதியான சந்திப்பு. ஒருபுறம 'பலமான' பட்டறையும் மறுபுறம் 'கனமான' கேபுளும் தங்கள் அழ்ந்த கருத்துக்களால் சந்திப்பு இனிதானது. பித்ரு தித்யைப் பற்றிய சுவாமியின் கருத்து ஒரு புதிய கோணத்தில் அமைந்திருந்தது. எதிர் காலங்களில் இது போன்ற சந்திப்பு இன்னும் நிறைய இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன்.நன்றி.
Post a Comment