அன்பு சாமிக்கு,
உங்களுடன் இருக்கும் சுப்பாண்டி எழுதிக்கொள்வது.
சிலவிஷயங்களை உங்களுடன் நேரில் பேச முடியாது என்பதால் இந்த மின்னஞ்சல்.
முதலில் இந்த லிங்கைப் படிக்கவும்.
சர்வரோக நிவாரணம் லிங்க் - [ உலக நலன் கருதி லிக் சென்சார் செய்யப்பட்டுள்ளது ]
படிச்சாச்சா???
ஒ.கே இப்ப டீலிங் ஸ்டார்ட்.
நீங்க என்னைய பெரிய எழுத்தாளர் ஆக்கிட்டீங்கனா, நானும் இதுமாதிரி உங்களைப்பற்றி எழுதுவேன்ல?? ... யோசிங்க சாமி!!
நீங்களும் என் வாழ்க்கையில் அதிசயம் செஞ்சீங்கனு பலர் கிட்ட போயி சொன்னா நாலு காசி சம்பாதிக்கலாம்.
ஸ்வாமி ஓம்கார் ஆசிர்வதிச்சதால குருடனுக்கு காது கேட்கிறது, ஊமைக்கு கண் தெரிகிறது, முடவனுக்கு பாடும் ஆற்றல் கிடைத்தது என கட்டுரை எழுதலாம்.
குருடனுக்கு காது கேட்கும் என்றும்,ஊமைக்கு கண் தெரியும் - இதில் அதிசய வெங்காயம் ஒன்னும் இல்லைங்கிறது படிக்கிற சுவாரசியத்தில் தெரியாது. ஹாப்பாயில் ஆசாமிங்க நம்பிடுவாங்க.
லிங்கம் எடுப்பது, விபூதி வரவழைப்பது ஓல்டு பேசன் ஸ்வாமி. நாமும் இது போல புதிதாக முயற்சி செய்வோம். என்னைப் பெரிய எழுத்தாளராக்க நீங்க வரம் தந்து ஆசிர்வதமெல்லாம் பண்ண வேண்டாம்.
அப்பப்ப எனக்கு சம்திங் வெட்டினாலே போதும் :)
அளவில்லா எதிர்பார்ப்புடன்,
சுப்பாண்டி
---------------------------------------------------------------------------------------------
அளவில்லா எதிர்பார்ப்பு கொண்ட சுப்பாண்டிக்கு,
ஒரு கதை... :)
வங்காள இளவரசி ஒருவர் விவேகானந்தரிடம் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என கேட்டாளாம். அதற்கு விவேகானந்தர், எதற்கம்மா இப்படி ஒரு விருப்பம் உங்களுக்கு என கேட்டார்.
உங்களை போன்ற அழகும் அறிவும் கொண்ட குழந்தை வேண்டும் அதனால் தான் விருப்பப்படுகிறேன் என்றாளாம் இளவரசி.
நானும் நீங்களும் திருமணம் செய்துகொண்டால் அழகும் அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும் என நிச்சயம் கிடையாது. சில நேரங்களில் குழந்தை வேறு மாதிரியும் பிறக்கலாம்.
குழந்தை கருவுற்று பெற்று எடுப்பதற்கு கால தாமதமும் ஆகும். அதனால் என்னையே உங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அம்மா என கூறிய விவேகானந்தர் இளவரசியில் காலில் விழுந்தார்.
இப்போ கருத்து... :)
உங்களை பெரிய எழுத்தாளர் ஆக்கி அப்புறம் என்னை பற்றிய அதிசங்களை நீங்கள் எழுதி சம்பாதிப்பதை விட... அனைத்து நோய்க்கும் ஒரே மருந்தாக சர்வரோக நிவாரணியானந்தாவை பற்றி நீங்கள் எழுத துவங்கினாலேயே உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.
உடனே இலக்கியத்தில் பழுத்தப் பழத்தின் ’ஜூஸ்’ என்ற புனைபெயரில் எழுதி சம்திங் பார்க்கவும்.
அதிசயத்தை மக்கள் எதிர்பார்க்கும் வரை இவர்கள் போன்றவர்கள் இருந்தே தீருவார்கள். ப்ரதிபக்ஷ பாவனையில் கூறவேண்டுமானால் இவர்கள் இருப்பதாலேயே பிறர் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பது நமக்கு தெரியும்.
என் சார்ப்பாக அவரிடம் சென்று ஒரு வரம் கேளுங்கள்... அது என்னவென்றால்..
“கடவுளே... வரம் கொடுப்பதை நிறுத்தி வாழக் கற்றுக்கொடு..!”
தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்
33 கருத்துக்கள்:
ஸ்வாமி -
மிக அழகான/அருமையான கதை. அதை நீங்கள் சொன்னவிதமும் அருமை.
\\“கடவுளே... வரம் கொடுப்பதை நிறுத்தி வாழக் கற்றுக்கொடு..!”\\
நல்லா சொன்னீங்க..
புரிஞ்சது ’சார்’ :))
சாரே, புரிய வேண்டியவங்களுக்கு புரியுமா??
உங்கள் பணி கண்டிப்பாக மென்மேலும் தொடர வேண்டும்.
என் உச்சி மண்டைல கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருங்குது
:)
“கடவுளே... வரம் கொடுப்பதை நிறுத்தி வாழக் கற்றுக்கொடு..!”
மிகவூம் அருமையான வரிகள் எனக்கு தெரிந்த்வரி யாரும் சொல்லாத வார்த்தை
//முடவனுக்கு பாடும் ஆற்றல் கிடைத்தது என கட்டுரை எழுதலாம்.
//
இசைபுயல் அப்துல்லா எங்கிருந்தாலும் வரவும்!
சுவாமி,
//வரம் கொடுப்பதை நிறுத்திவிட்டு வாழக் கற்றுக் கொடு//
மிகச் சரியான வார்த்தைகள்.
சும்மா குடுக்கிறத வாங்கித் தின்னுட்டு ஒன்னும் கிடைக்கலன்னா மைக்க நீட்டிக்கிட்டு வர்ற டிவி காரன் முன்னாடி எல்லாரையும் திட்டுறவங்க தானே நாமெல்லாம். மீன் கிடைக்கிறவரைக்கும் சாப்பாடு. இல்லன்னா கூப்பாடு. ஆனா தூண்டில மட்டும் எவனாச்சும் குடுத்தா தூக்கியடிச்சுருவோம். இதான் சாமி இன்னைக்கு ட்ரெண்ட்.
அப்பறம் அந்த சர்வரோக நிவாரணம் குறித்து பேசுறதுக்கு முன்னாடி சுவாமிகள்ட ஒரு சின்ன வேண்டுகோள். நான் சிங்கப்பூர்ல இருக்கப்ப நீங்க இந்தியால இருந்துகிட்டே எனக்கு காட்சி குடுக்கனும்னு வெண்டிக்கிறேன்.
:)
Enna sami ippadi solitenga . Nanum Sarva Roga nivaranam pera letter podalamnu ninichen :(
Anputan
Singai Nathan
//அப்பறம் அந்த சர்வரோக நிவாரணம் குறித்து பேசுறதுக்கு முன்னாடி சுவாமிகள்ட ஒரு சின்ன வேண்டுகோள். நான் சிங்கப்பூர்ல இருக்கப்ப நீங்க இந்தியால இருந்துகிட்டே எனக்கு காட்சி குடுக்கனும்னு வெண்டிக்கிறேன்.
//
கம்ப்யூட்டர் முன்னாடி உக்காருண்ணே. இந்தியாலேந்தே ஸ்கிரீன்ல வருவாரு சாமி :)
எனக்கும் கிர்ர்ர்ர்ர்ர்.....:))
ஹூம் !!! என்னெத்த வாழ என்னெத்த கத்து என்னெத்த கொண்டு !!!
நானும் சுமார் 2 லக்ஷம் வருஷமா முயற்சி பண்ணிகிட்டுதான் இருக்கேன்.
முடியலையே. வரம் கேட்டு கேட்டு ரொம்ப பழகிப் போச்சு சுவாமி.
திரு பரிசல்,
திரு சிவா,
திரு ராஜகோபால்,
திரு பிரபு,
திரு ராஜேஷ்,
திரு சிங்கை நாதன்,
திரு பலாபட்டறை,
உங்கள் வருகைக்கு நன்றி.
அப்துல்லா அண்ணே..
சுப்பாண்டி உங்களை விசாரிச்சதா சொல்லச் சொன்னார். :)
திரு ஜோசப் வாள்,
//அப்பறம் அந்த சர்வரோக நிவாரணம் குறித்து பேசுறதுக்கு முன்னாடி சுவாமிகள்ட ஒரு சின்ன வேண்டுகோள். நான் சிங்கப்பூர்ல இருக்கப்ப நீங்க இந்தியால இருந்துகிட்டே எனக்கு காட்சி குடுக்கனும்னு வெண்டிக்கிறேன்.//
வீடியோ கான்பரன்ஸிங்க்கான தொகையை காணிக்கையாக்கு மகனே..
என்றும் உனக்கு காட்சி அளிப்பேன் :)
//
உடனே இலக்கியத்தில் பழுத்தப் பழத்தின் ’ஜூஸ்’ என்ற புனைபெயரில் எழுதி சம்திங் பார்க்கவும்.
//
கலக்கல் ஸ்வாமி..
எனக்கு காலையில் பல்துலக்கும் பொழுது எத்தினி முறை பிரசை பற்களின் மீது வைத்து தேய்க்கவேண்டும் என்று மறந்துவிட்டது...
உடனே கடிதம் எழுதினேன் என்ன ஆச்சரியம் இனி பல்துலக்கும் பழக்கமே வேண்டாம் என்று கனவில் கூறி அதை மெய்பிக்க கடிதத்தில் பதிலும் கூறினார், நீங்களும் இந்த மாதரி எதையாவது நிறுத்த விரும்பினால் பகவானுக்கு கடிதம் எழுதுங்கள். அல்லது மொன்னையில் ச்சே ச்சே பண்ணையில் பத்தாம் தேதி நடைபெறும் சுவாமியின் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுங்கள்.
-பரம பார்திபரென்றுயானந்தா சீடன் ( 2010 முடியும் வரை (டீலிங் முடிகிறது, ரினிவல் பண்ணினால் அடுத்தவருடமும்))
காரு நவானந்தா
ஸ்வாமி, இந்த தலைப்பை பார்த்த உடனே எனக்கு ஒரு ஆச்சர்யமாக இருந்தது. இரண்டு நாட்கள் முன்பு தான் நான் இந்த கட்டுரையை நீங்கள் கூறிய அந்த எழுத்தாளர் வலைதளத்தில் படித்தேன்.
இன்று உங்களிடம் அதற்கான விளக்கத்தை படிக்கின்றேன் .
//“கடவுளே... வரம் கொடுப்பதை நிறுத்தி வாழக் கற்றுக்கொடு..!”// ரசித்தேன் ஸ்வாமி.
//நீங்களும் என் வாழ்க்கையில் அதிசயம் செஞ்சீங்கனு பலர் கிட்ட போயி சொன்னா நாலு காசி சம்பாதிக்கலாம். //
காசு சம்பாதிக்கிரதர்க்காக அவர் இதை எழுதிஉள்ளார் என்பதை இனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஸ்வாமி.
யாரது எனக்குத் தெரியாம இன்னொரு சுப்பாண்டி
( சுப்பாண்டி போட்டோ ரொம்ப அருமை )
ரெண்டு கையால இந்தப்பக்கம் வரவேண்டாம் எண்ணு சொன்னாப் போறாதா காலால வேற காட்டணுமா
திரு கல்வெட்டு,
உங்கள் பின்னூட்டத்தை வரிக்கு வரி ரசித்தேன்.
அந்த வலைதளத்தின் முகவரி கொடுத்து சிலருக்கு தேவையற்ற உதாரணங்களை காண்பிக்கக்கூடாது என்பதற்காகவே அதை பதிவில் தவிர்த்துள்ளேன்.
உங்கள் பின்னூட்டத்தில் அது இருப்பதால் வெளியிட முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
உங்கள் பின்னூட்டம் வெளிவர எதற்கும் வரம் கேட்டு வைய்யுங்கள்
ஒம்கார்,
நான் சர்வலோக பாஷாணம் குடித்து உள்ளேன். மேலும் ஆர்டரின்பேரில் நித்தம் ஒரு வரம் கொடுக்கும் ஆனந்த கம்பெனியில் எனக்கு தெரிந்த ஒரு சாரின் மூலம் அப்ளிகேசன் போட்டுள்ளேன்.
இன்னும் 3 வாரத்தில் உங்கள் பதிவின் வழியாக நீங்கள் பரலோகம் அனுப்பிய எனது பின்னூட்டம் அதே பதிவில் தானாகத் தோன்றும்.
இது சவால்.
இது நடக்காவிடில் நான் எழுதிய 360 டிகிரியில் முக்கால் டிகிரி போனால் என்ன வடை? என்ற பின் அட்டை நவீனமாகத் தயாரிக்கப்பட்ட இலக்கியவியாதி புத்தம் உங்களுக்கு இனாமாக அனுப்பி வைக்கப்படும்.
சர்வலோக பாஷாணம் நமக !
நல்லா சாப்பிடுக !!
சாப்பிட்டபின் ஓரமாக நகருக!!!
அடுத்த கிளையண்ட் அருகில் வரவும் !!!!
//காசு சம்பாதிக்கிரதர்க்காக அவர் இதை எழுதிஉள்ளார் என்பதை இனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஸ்வாமி.//
இது ஒரு நீண்ட கால திட்டமாக இருக்கலாம். இதில் இருக்கும் சுலப பணத்தையும் அதிக பட்ச மரியாதையையும் தெரிந்து கொண்டு துனையை அப்படியாக்கும் திட்டமாகவும் இருக்கலாம். ஆனாலும் இந்த நிலைமைக்கு வருவதற்கு ஆனந்தர் நிறைய உழைத்திருக்கிறார். அது கண்ணுக்குத் தெரியவில்லை போலும். ஆனால் 30 மணி நேரம் உழைப்பவருக்கு இது ஒரு விஷயமே இல்லை.
என் தூரத்து உறவினர் ஒருவினர் ஒருவருக்கு நகச்சுத்து. நான் உங்களை கோவையில் சந்தித்தபின்பு அவருக்கு போன் செய்தபோது.... என்ன ஆச்சரியம்... நம்பமாட்டீர்கள்... .அவருக்கு நகச்சுத்து போயே போச்....
ஸ்வாமிகள் சிங்கை விஜயம் எப்பவோ? சாரதா லாட்ஜ் ரூம் நம்பர் 32 புக் பண்ணிடலாமா?
சாட்டையடி ஸ்வாமி..... :)))))
நேத்து புத்தக கண்காட்சில பதிவர் சந்திப்பு நடந்தது. நான் எதிர்பார்க்காத ஒரு அதிசயம். உங்க சீடர் சுப்பாண்டிய பார்த்தேன். எங்கையோ பராக்கு பாத்துட்டு நின்றிருந்த சுப்பாண்டியை ஒரு பதிவர்தான் அறிமுக செய்து வைத்தார். அவருக்கு நன்றி.
;))
நம்ம சாந்த ஸ்வாமியையே சாமி ஆட வச்ச பழச்சாறு வாழ்க.. :)
//“கடவுளே... வரம் கொடுப்பதை நிறுத்தி வாழக் கற்றுக்கொடு..!” //
க்ரேட் ஸ்வாமி..
”கலைஞரே அடுத்தவன் பணத்தில் ஓசியில் கொடுப்பதை நிறுத்தி உழைத்து சம்பாதிக்க வாய்ப்பு கொடுங்க”
யாரையோ பகடி பண்ணறீங்கன்னு தெரியுது. யாருன்னு தெரியலை. நல்லதுதான் போல இருக்கு!
கிடக்கட்டும்.
:-))
ஏற்கனவே சித்தர் அது இதுவென்று ஏகப்பட்ட பிரச்சனையில் சிக்கியிருந்தார். போதாக்குறைக்கு இது வேறு.
தினமும் 10000 பேர் பார்வையிடும் வலை தளத்தை நடத்திக்கொண்டு இப்படி எழுதும்போது படிக்கும் அவரின் வாசகர்களை நினைத்து கவலையாகத்தான் இருக்கிறது.
இப்பொழுது சர்வரோக நிவாரணி வரை வந்துவிட்டார். அடுத்து என்னவாக இருக்கும் தெரியுமா? விக்கிரவாண்டி என்னும் ஊரில் ஒரு பெரியவர் ஆவிகளுடன் பல்லேலக்கா டான்ஸ் ஆடுகிறாராம்.
பல்லேலக்கா பல்லேலக்கா.
ஆனால் ஓம்கார் ஐயா! உங்கள் மேல் சற்று வருத்தம் தான். நீங்கள் கொஞசம் ஒத்துழைத்தால் அவரது வலைப்பூவில் உங்கள் படமும் இடம்பெற்றிருக்கும் :-))
அன்பின் ஓம்கார்
அருமை அருமை - கதை அருமை
அவரு வூட்டுக்கும் போய்ட்டு வந்துடறேன்
நல்வாழ்த்துகள் ஓம்கார்
inuum ore varudhathil juice writer
anandathai varuthu eduppathu ennavo nitchayam!!
//“கடவுளே... வரம் கொடுப்பதை நிறுத்தி வாழக் கற்றுக்கொடு..!” //
ம்கும், "கடவுள்" நல்லா சுகபோகமாக வாழுவதற்குத்ததன் வரம் கொடுப்பதே
Lovely satire that makes you THINK :)
To receive follow-up comments, I am subscribing
Post a Comment