வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம் மி
நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே மிமி
தேவர்களின் தலைவன் வணங்கும் திருவடியை கொண்டவரும், சந்திரனை போன்ற ஒளி பொருந்திய யஜ்ந்ஞோபவீதம் கொண்ட கருணை மிகுந்தவரும், யோகிகளால் வணங்கப்படும் யோகியர்களின் தலைவனும், உடலில் ஆடைகள் இன்றி திகம்பர நிலையில் காசி மாநகரில் இருக்கும் கால பைரவரை நான் வணங்குகிறேன்.
இறைவனை மூல சக்தியாக கண்டால் ஒன்று தான். ஆனால் இறை சக்தி செயல்படும் பொழுது பல்வேறு சக்தியாக மாற்றமடைகிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் அனுக்களால் ஆனது. அனு என்பது இதன் மூலம். ஆனால் அனைத்து பொருளும் ஒன்று போலவே இருப்பது இல்லை அல்லவா?
”கால பைரவ்” என வட மொழியில் கூறப்படும் காலபைரவர் என்ற இறை சக்தி மூல சக்தியின் பரதிபிம்பம் என்றாலும் தனித்துவமானது. காசி என்ற நகரத்தின் முழுமையான கடவுள் கால பைரவர். ஞானத்தின் வடிவமாகவும் ஞானிகளுக்கு எல்லாம் முதல் ஞானியாகவும் இருக்கும் இறைவனே கால பைரவன்.
அகோரிகள் தங்களையே இறைவனாக வணங்குபவர்கள். ஆனாலும் அவர்கள் தங்களை காலபைரவனாகவே வணங்குகிறார்கள். காலத்தை கடந்து நிற்பவர்களும், ஞானத்தை உணர்ந்து இருப்பவர்களும் கால பைரவர்கள் தான்.
நாய் காலபைரவரின் வாகனம் என்பார்கள். என்றும் விழிப்புணர்வுடன் இருக்கும் தன்மை நாயாக உருவகப்படுத்தபடுகிறது. ஆடையில்லாமல் இருப்பதே கால பைரவரின் தன்மை என்றாலும் சில கோவில்களில் கருப்பு ஆடை அணிவிக்கிறார்கள்.
கருப்பு என்ற உடை நிறங்கள் அற்ற தன்மையை சுட்டிகாட்டுவதால் அவ்வாறு கருப்பு உடை அணிவிக்கப்படுகிறது. இந்த கருத்தை நினைவில் கொள்ளுங்கள் பின்னால் இதற்கு வேலை இருக்கிறது.
கால பைரவரின் தன்மை அறியாமையை ஒழித்து ஞானத்தை வணங்குவதாகும். ஆணவம் மற்றும் மாயை என்ற மயக்கத்தில் இருப்பவர்களுக்கு தகுந்த நிலையில் உணர்வுகொள்ள செய்து ஞானத்தை வழங்குவார். ஆனால் காலபைரவரிடம் சாத்வீகமான அனுகுமுறையை எதிர்பார்க்க முடியாது. அவரின் ஒவ்வொரு செயலும் அதிரடியாகவே இருக்கும்.
ஒரு சந்தையில் ஒருவர் அனைவரையும் அழைத்து ஒரு செய்தி சொல்லுகிறார் என கொள்வோம். அந்த செய்தியை அனைவரும் கூடி கேட்பார்களா என கூற முடியாது. இதே ஒருவர் சில சாகசங்களை மக்கள் முன் செய்து அதிரடியாக ஒரு செய்தியை கூறினால் பாமர மக்களுக்கு அந்த செய்தி சென்று அடையும். கால பைரவர் ஞானம் வழங்கும் நிலை இந்த இரண்டாம் வகையை சார்ந்தது.
அகோரிகளின் ஆதி குரு காலபைரவர். அகோரிகள் தங்களை காலபைரவ ரூபமாகவே நினைக்கிறார்கள். அதனால் அகோரிகளின் சில செயல்பாடுகள் மக்களின் அறியாமையை அதிரடியாக சுட்டிகாட்டுவது போல இருக்கும். சிலர் அதில் அருவருப்படைவார்கள் சிலர் அகோரிகளை விட்டு ஓடிவிடுவார்கள்.
சில வருடங்களுக்கு முன் நான் காசி பயணத்தில் கண்டதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அருவெறுப்பு அடையக்கூடியவர்கள் அடுத்த பத்தியை கடந்து செல்லுவது நல்லது.
கங்கை கரையில் நான் அமர்ந்திருக்கும் பொழுது நான் இருக்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி ஒரு அகோரி அமர்ந்திருந்தார். வெளி ஊரிலிருந்து வரும் சிலர் அகோரியை கடந்து செல்லும் பொழுது வணங்கிவிட்டு சென்றார்கள். அவரும் அதை தவிர்த்து வேறுபக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டார். ஆனாலும் மக்கள் விடுவதாக இல்லை. சிலர் அவரை வணங்குவதை பார்த்த மேலும் சிலர் அந்த அகோரியை வணங்க துவங்கினார்கள். ஆனால் அனைவர் முன்னிலையில் யாரும் சற்று எதிர்பாராத சூழலில் அருகில் இருந்த மலத்தின் ஒருபகுதியை கைகளில் எடுத்து சுவையாக உண்ணத் துவங்கினார் அந்த அகோரி. அவ்வளவுதான் அங்கே ஒரு ஈ காக்கா இல்லை. வணங்கத்தக்க ஒருவர் மலம் தின்றுகொண்டிருந்தால் நம் மக்கள் புனிதராக பார்க்குமா? சொல்லி புரியவைப்பதில்லை அகோரிகள்...!
ஒளரங்கசீப் காலத்தில் செல்வம் கொள்ளை என்பதை தாண்டி மத திணிப்பு மற்றும் மதப்போர்கள் நடந்துகொண்டிருந்தது. காசியை இஸ்லாமிய புனித நகரமாக மாற்ற முயற்சி செய்துவந்தார் ஒளரங்கசீப். ஒருபுறம் கடினமான போர் தந்திரம் மற்றும் பிரம்மாண்டமான போர் படை என ஒளரங்கசீப் இருந்தாலும் மக்கள் ஒற்றுமை மற்றும் அவர்களின் குழப்பம் விளைவிக்கும் செய்கை ஆகியவற்றால் முகலாய சக்ரவர்த்தியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
காசியில் சந்துகளை கட்டி குழப்பம் விளைவித்தனர். சிலர் எங்கு பார்த்தாலும் சிவலிங்கங்களை அமைத்து அதை வணங்கினார்கள். இதனால் ஒளரங்கசீப் குழப்பம் அடைந்தார். முடிவில் சில சூழ்சிகளும் தந்திரங்களை செய்து விஸ்வநாதர் கோவிலை கண்டுபிடித்து முற்றிலும் சிதைத்தார். அங்கே இந்த சுயம்பு சிவலிங்கத்தை சுக்குநூறாக்கினார்.
விஸ்வநாதர் கோவில் சிதைக்கவருகிறார்கள் என்றும் கைமீறி போகிறது என்பதையும் தெரிந்துகொண்ட சிலர் சுயம்பு லிங்கத்தை எடுத்து கோவிலுக்கு அருகில் இருக்கும் கிணற்றில் வீசிவிட்டார்கள். சுயம்பு லிங்கம் இருந்த இடத்தில் வேறு ஒரு பாணலிங்கம் வைக்கப்பட்டது.
ஒளரங்கசீப் சிதைத்தது சுயம்புலிங்கத்தை அல்ல..!
சிதைத்தது மட்டுமல்லாமல் விஸ்வநாதர் கோவில் இருந்த இடத்தில் பெரிய மஸ்ஜித் கட்டி தொழுகை நடத்தினார் ஒளரங்கசீப். இன்று விஸ்வநாதர் கோவில் என மக்கள் வழிபடும் இடம் முன்பு விஸ்வநாதர் கோவில் இருந்த இடம் அல்ல. முன்பு மூலஸ்தானத்தை பார்த்து இருந்த நந்தி இப்பொழுது மசூதியை பார்த்து நிற்கிறது.
ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட படம்.விஸ்வநாதர் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதி. புகைப்படத்தின் வலது கோடியில் சிதிலம் அடைந்த கோவில் கோபுரம் தெரியும்.
நந்திக்கு அருகில் இருக்கும் கிணற்றில்தான் இன்றும் விஸ்வநாதர் இருக்கிறார். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை பல முறை சிதைத்து மறுபடியும் மறுபடியும் கட்டபட்டது விஸ்வநாதர் கோவில். முகலாய பேரரசு வீழ்ந்ததும் தற்சமயம் இருக்கும் விஸ்வநாதர் கோவில் வடிவம் பெற்றது. இன்றும் அந்த கேணிக்கும், மசூதிக்கும் துணை ராணுவ பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. அரசியலில் இன்றளவுக்கு சிவன் முக்கிய துருப்பு சீட்டு இல்லை. இருந்தால் ராம ஜென்ம பூமி என்பதற்கு பதில் நம் ஆட்கள் சிவ ரவுத்திர பூமி என கூவ துவங்கி இருப்பார்கள்.
விஸ்வநாதர் கோவிலில் இருக்கும் கேணியை ஞானக்கேணி என கூறுகிறார்கள். இதில் இருக்கும் நீர் தீர்த்தமாக குடித்தால் ஞானம் கிடைக்கும் அறிவு பெருகும் என நம்பிக்கை நிலவுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விஸ்வநாதர் கோவிலை பூஜிப்பவர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இவர்கள் பாண்டாக்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வரும் மக்களிடம் பணம் பறிப்பது, மேலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என காட்டிக்கொள்வது போன்ற துவேஷங்களை செய்து வந்தனர்.
கங்கையில் குளித்துவிட்டு சிறிது நீரை எடுத்து வந்து விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வது பக்தர்களின் வழக்கமாக இருந்தது. அதற்கு மிகப்பெரிய வரிசையாகவும், நீர் அபிஷேகம் செய்வதே ஆன்மீகத்தின் முக்கிய நிலை என்றும் மக்கள் நம்பத்துவங்கினார்கள். இவ்வாறு அறியாமை பெறுக விஸ்வநாதர் கோவிலை பூஜை செய்துவந்தவர்களும் காரணமாக இருந்தார்கள்.
மக்களின் அறியாமையை அதிரடியாக போக்கும் தன்மை கொண்டவர்கள்தான் அகோரிகள் என்று சொன்னேன் அல்லவா? அதற்கு வேளை வந்தது. ஞான கேணியில் இருக்கும் விஸ்வநாதரை கண்டுகொள்ளாமல் மக்கள் தங்கள் விஸ்வநாதரை பூஜிக்கிறோம் என்ற அகந்தை மற்றும் அறியாமையில் இருப்பதை கண்ட அந்த அகோரி கூட்டமாக இருந்த விஸ்வந்தாரர் கோவிலுக்குள் சென்று அந்த காரியத்தை செய்தார்.
அனைவர் முன்னிலையிலும் திடீரென சிறுநீரை நேராக சிவலிங்கத்தின் மேல் செலுத்தினார். அனைவரும் அறுவெறுப்படைந்து வெளியேரினார்கள். தனது கையில் இருக்கும் சங்கை எடுத்து மிகவும் சப்தமாக ஒலி எழுப்பி பிறகு கூறினார்....
உங்களுக்குள் இருக்கும் விஸ்வநாதரை வணங்கு....
உன் ஞானம் என்ற கங்கையால் அபிஷேகம் செய்..
இவ்வாறு கூறிவிட்டு ஒடி மறைந்தார் அந்த அகோரி. அனைவரும் உணரத்துவங்கினார்கள்.
அகோரிகளின் குழுவை அகடா என கூறுவார்கள். அகோரிகளின் இந்த குழுவை தவிர அகோரிகளின் ஆற்றல் பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். அகோரிகள் தங்களின் ஆற்றலை பிறருக்குள் செலுத்தி அவர்களை கருவியாக்கி சமூகத்தை தூய்மையாக்குவார்கள்.
காசி மாநகரம் சென்ற பலருக்கு அகோரிகளின் ஆற்றல் மாற்றபட்டாலும், முக்கியமாக சிலருக்கு இப்படி மாற்றம் செய்யபட்டு அவர்கள் கருப்பு உடையில் நம் சமூகத்தை வலம் வந்தார்கள். ஒருவர் பாரதி மற்றொருவர் பெரியார்...! கருப்பு என்பது சமூகத்திற்கு எதிர்ப்பு காட்ட வேண்டும் என்பது மட்டுமல்ல காலபைரவரின் நிறம் அது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
காசி நகரமே காலபைரவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் காசி நகருக்கு சென்று திரும்பும் எவரும் ஏதோ ஒருவிதத்தில் தங்களுக்குள் மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர்வார்கள்.
அகோரிகளின் அதிரடிக்கு மேலே சில உதாரணங்கள் கூறினேன். இதைவிட ஆதிசங்கரருக்கே ஒரு அகோரி ஆப்பு வைத்தார். வாருங்கள் கங்கையின் சலனத்தை ரசித்தவாறே அந்த சம்பவத்தை கூறுகிறேன்...கேளுங்கள்..
சிரிப்பு டிஸ்கி: விஸ்வநாதர் கோவில் கிணற்றின் பெயரை ஜம்புள் செய்தால் என்னை பிறர் செல்லமாக கூப்பிடும் பெயர் இருக்கும் :)
[படங்கள் உதவி : விக்கிபிடியா]

- ஆதிசங்கரர், கால பைரவ அஷ்டகம்
------------------------------------------------------

ஞானகேணி பழைய படம்.கேணியின் வலது பக்கம் மசூதி,
இடது பக்கம் கோவில் என இரண்டுக்கும் மையத்தில் அமைந்துள்ளது.

(...சுவாசிப்பேன்)
சிரிப்பு டிஸ்கி: விஸ்வநாதர் கோவில் கிணற்றின் பெயரை ஜம்புள் செய்தால் என்னை பிறர் செல்லமாக கூப்பிடும் பெயர் இருக்கும் :)
[படங்கள் உதவி : விக்கிபிடியா]
25 கருத்துக்கள்:
//முகலாய பேரரசு வீழ்ந்ததும் ஆயிரம் வருடங்களுக்கு முன்புதான் தற்சமயம் இருக்கும் விஸ்வநாதர் கோவில் கட்டப்பட்டது. //
முகலாய பேரரசு வீழ்ந்தே 150-160 ஆண்டுகள் தானே ஆகிறது.அதற்குள் ஆயிரம் ஆண்டுகள் என்று கூறுவது தவறு.
ஒருவேளை ஸ்வாமி தற்சமயம் இருப்பது 2860ஆம் ஆண்டிலோ?
அற்புதமான பல அறிய தகவல்கள் ஸ்வாமி. மிக்க நன்றி.
//கருப்பு என்ற உடை நிறங்கள் தன்மையை சுட்டிகாட்டுவதால் அவ்வாறு கருப்பு உடை அணிவிக்கப்படுகிறது.//
புரியவில்லை ஸ்வாமி, சற்று விளக்க முடியுமா? "நிறங்கள் தன்மையை சுட்டிகாட்டுவதால்" என்றால் என்ன? மற்ற நிற ஆடைகளில் இருந்து எது எவ்வாறு வேறுபடுகின்றது?
// விஸ்வநாதர் கோவிலை கண்டுபிடித்து முற்றிலும் சிதைத்தார் ஒளரங்கசீப்//
ஆனால் இந்த கோவிலை முதலில் கட்டியவர் யார் ஸ்வாமி?
//ஆனால் அனைவர் முன்னிலையில் யாரும் சற்று எதிர்பாராத சூழலில் அருகில் இருந்த மலத்தின் ஒருபகுதியை கைகளில் எடுத்து சுவையாக உண்ணத் துவங்கினார் அந்த அகோரி.//
இந்த செயலை சிறு குழந்தைகளும் செய்வது தானே...
//காசி மாநகரம் சென்ற பலருக்கு அகோரிகளின் ஆற்றல் மாற்றபட்டாலும், முக்கியமாக சிலருக்கு இப்படி மாற்றம் செய்யபட்டு அவர்கள் கருப்பு உடையில் நம் சமூகத்தை வலம் வந்தார்கள். ஒருவர் பாரதி மற்றொருவர் பெரியார்...!//
இந்த வரியைப் படித்தபோது எழுந்துநின்று கைதட்டவேண்டும் போல் இருந்தது ,உங்கள் அறிவிற்கும் ஆற்றலிற்கும் தலைவணங்குகின்றேன்.
காசியைப்பற்றி எழுதும்போது எனக்குப் பிடித்த தலைப்பான் அகோரிகள் பற்றி அறியமுடியாமல் போய்விடும் என்று கவலைப்பட்டேன் ,அக்கவலையைத் தீர்த்துவைக்கிறீர்கள்.
எங்களிற்குத் தெரியாத எவ்வளவு விடையங்கள் எம்மதத்தில் உள்ளன என்று உணரும்போது வெட்கமாக இருக்கிறது.
சராசரி மனித ஆயுளில் இந்த விடையங்களில் ஒருதுளியையேனும் உங்களின் மூலமாகப் பருகமுடிவதைஇட்டு ஓரளவு நிம்மதியடைகிறேன்.
அகோரிகள் எப்படுபட்டுச் சொன்னாலும் எம் புலணுணர்வுக்கப்பாற்பட்ட விடையங்கள் எமக்குப் புரிவதில்லையே.
கறுப்பு காலபைரவரின் நிறம்
சரி
என்னைப்போல் கன்னங்கரிய நிறத்தில் இருப்பவர்களுக்கும் காலபைரவரிற்கும் ஏதாவது தொடர்பு உண்டா ஸ்வாமி
இப்படிக்கு
சுப்பாண்டி
சுவாமிஜி,
அருமையான கருத்துக்கள். படங்களும் நன்று. அகோரிகள் பற்றி சொல்லும் உண்மைகள் இதுவரை நான் கொண்டிருந்த எண்ணங்களை மாற்றிவிட்டது. கபாலிகர்களும் இவர்களும் ஒன்றா?. ஞானி ஓஷோ சொன்னது போல் நிஜமான சக்தி உறைவிடங்கள் நாம் தற்போது வழிபடும் இடங்களுக்கு அருகில் எங்கோ மறைந்து தன்னை காததுக்கொள்ளும் என்பது உங்கள் எழுத்தின் மூலமும் கண்டேன். இன்னும் உங்களிடமிருந்து நிறைய ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
திரு வெற்றி,
ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துவிட்டு சுகந்திரம் கொடுத்தது ஆக மொத்தம் 360 வருடங்கள் ஆகிவிட்டது.
அக்பர் துவங்கி ஒளரங்கசீப் வரைதான் முகலாய மன்னர்கள் பேரரசாக ஆட்சி செய்தார்கள்.பிறகு அவர்கள் சிற்றரசாக அவர்களுக்குள் இருக்கும் போட்டி பொறாமையால் சிதறுண்டு போனார்கள் என்பது வரலாறு.
முடிந்தால் கூகுளில் தேடி பாருங்கள்.
//ஒருவேளை ஸ்வாமி தற்சமயம் இருப்பது 2860ஆம் ஆண்டிலோ?//
நான் 2860ல் இருந்தேன் என்றால் 1850 வருடத்திற்கு முன் கட்டபட்டது என கூறி இருப்பேன்.
திரு சிவா,
//கருப்பு உடை அணிவிக்கப்படுகிறது.//
புரியவில்லை ஸ்வாமி, சற்று விளக்க முடியுமா? "நிறங்கள் தன்மையை சுட்டிகாட்டுவதால்" என்றால் என்ன? மற்ற நிற ஆடைகளில் இருந்து எது எவ்வாறு வேறுபடுகின்றது?//
பதிவு எடிட் செய்யப்படும் பொழுது ஒரு வார்த்தை தவறுதலாக விட்டுபோனது. இணைத்துவிட்டேன். சரிபார்க்கவும்.
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு கேஎஸ்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
//என்னைப்போல் கன்னங்கரிய நிறத்தில் இருப்பவர்களுக்கும் காலபைரவரிற்கும் ஏதாவது தொடர்பு உண்டா ஸ்வாமி//
என்னை மறைமுகமாக சுட்டிகாட்டுவதற்கு நன்றி :))
கன்னங்கரிய நிறத்திலிருப்பவருக்கும் பைரவருக்கும் வேண்டுமானால் தொடர்பு உண்டு :)
//KS said...
கறுப்பு காலபைரவரின் நிறம்
சரி
என்னைப்போல் கன்னங்கரிய நிறத்தில் இருப்பவர்களுக்கும் காலபைரவரிற்கும் ஏதாவது தொடர்பு உண்டா ஸ்வாமி
இப்படிக்கு
சுப்பாண்டி
//
ஸ்வாமி ஓம்காரும் கால பைரவர் தான்.
:)
ஞான கேணி > கேன ஞானி !!!
போச்சுடா சாமி ! இதான் பேரா ?
திரு சிவசுப்ரமணியன்,
//கபாலிகர்களும் இவர்களும் ஒன்றா?.//
கபாலிகர்கள் என்பவர்கள் மனிதர்களை கொன்று தின்னும் கூட்டம். ஆன்மீகவாதிகள் அல்ல.
அகோரிகள் என்பவர்கள் ’நாத்’ என்ற சித்த பரம்பரையில் வருபவர்கள்.
//அடித்த பத்தியை கடந்து செல்லுவது நல்லது. //
அடுத்த?? பத்தி எப்படி அடிக்கும்னு யோசிச்சேன்?
//கடந்து செல்லுவது நல்லது//
எல்லாத்தையும் கடந்தா ஞானம் வரும்னு சொல்றீங்க??
;) சுப்பாண்டி மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுட்டேன் போல??
;)
பைரவர் பற்றிய புத்தகங்களும், செய்திகளும் மிக குறைவாக இறுக்கிறதே? தனியே எழுதுவீர்களா??
பிடிக்கும் பிடிக்காதேன்ற நிலைகளுக்கப்பாற்பட்டு மிக பெரிய காரியம் எழுத ஆரம்பித்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.இறை முதல் இல்லாதது வரை எல்லாவற்றையும் பதிவிட்டு பொதுவில் வைப்போம் கலங்கி தெளிந்த பின் நிச்சயம் நல்ல நீர் கிட்டும் வரும் சந்ததிகளுக்கு. :)
திரு ராஜகோபால்,
//அடுத்த?? பத்தி எப்படி அடிக்கும்னு யோசிச்சேன்?//
பத்தியை நான் அடிச்சது தானே :)
எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு :)
திரு பாலா,
//பிடிக்கும் பிடிக்காதேன்ற நிலைகளுக்கப்பாற்பட்டு மிக பெரிய காரியம் எழுத ஆரம்பித்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.இறை முதல் இல்லாதது வரை எல்லாவற்றையும் பதிவிட்டு பொதுவில் வைப்போம் கலங்கி தெளிந்த பின் நிச்சயம் நல்ல நீர் கிட்டும் வரும் சந்ததிகளுக்கு. :)//
உங்கள் பின்னூட்டமே கவிதையா இருக்கு :) நன்றி.
ஒரு சந்தையில் ஒருவர் அனைவரையும் அழைத்து ஒரு செய்தி சொல்லுகிறார் என கொள்வோம். அந்த செய்தியை அனைவரும் கூடி கேட்பார்களா என கூற முடியாது. இதே ஒருவர் சில சாகசங்களை மக்கள் முன் செய்து அதிரடியாக ஒரு செய்தியை கூறினால் பாமர மக்களுக்கு அந்த செய்தி சென்று அடையும். கால பைரவர் ஞானம் வழங்கும் நிலை இந்த இரண்டாம் வகையை சார்ந்தது.//
நல்ல எடுத்துக்காட்டு,ஸ்வாமிஜி.
நிறையத் தகவல்கள்,மர்ம நாவலைப் போலச் செல்கிற்து தொடர்.
ஆர்வத்தைத் தூண்டும் ஆன்மீகத் தொடர்.
சுவாரஸ்யமாக போகிறது, ஸ்வாமி.பகிர்ந்தமைக்கு நன்றி.
//ஆதிசங்கரருக்கே ஒரு அகோரி ஆப்பு வைத்தார்.//
தாங்கள் கூறுவது "புலையன் வேடத்தில் வந்த சிவப்பெருமான்" சம்பவத்தையா?
//அக்பர் துவங்கி ஒளரங்கசீப் வரைதான் முகலாய மன்னர்கள் பேரரசாக ஆட்சி செய்தார்கள்.பிறகு அவர்கள் சிற்றரசாக அவர்களுக்குள் இருக்கும் போட்டி பொறாமையால் சிதறுண்டு போனார்கள் என்பது வரலாறு.
முடிந்தால் கூகுளில் தேடி பாருங்கள். //
அப்படி என்றால் கூட ஏறத்தாழ 300 வருடங்கள் தான் ஆகிறது.
***
விஸ்வநாதர் கோவில் கிணற்றின் பெயரை ஜம்புள் செய்தால் என்னை பிறர் செல்லமாக கூப்பிடும் பெயர் இருக்கும் :) ***
:-))))
பாரதியை சித்தனாகப் பார்ப்பதுண்டு - ஆனால் பெரியார் !!! - சிரமம்தான் - open mind எனக்கு மிகவும் தேவை என்று புரிகிறது - ok - முயற்சிக்கிறேன்.
அபச்சாரம் அபச்சார்ம்
ஸ்வாமி நான் உங்களைக் குறிப்பிடவில்லை என்னைத்தான் குறிப்பிட்டேன் ,என்னுடைய படத்தைப் போட்டால் உண்மை தெரியும்
( ஆனால் பயந்துபோய் பலர் உங்கள் பதிவுப்பக்கமே வராமல் போகக்கூடிய அபாயம் இருப்பதால் அந்தப் பாவத்தைச் செய்யவில்லை )
(உண்மையில் உங்களை எவ்வளவு மதிக்கிறேனென்பது உங்களுக்குத் தெரியும். கனடாவிற்கு வரும்போது அறிவியுங்கள் )
///கருப்பு என்ற உடை நிறங்கள் அற்ற தன்மையை சுட்டிகாட்டுவதால் அவ்வாறு கருப்பு உடை அணிவிக்கப்படுகிறது.///
அற்புதம் சாமி, ஆனா காசியை பத்தி சன் டிவி போட்ட நிகழ்ச்சில முகலாயர் பத்தி கொஞ்சம் கூட காட்டாமல் மறைத்து விட்டார்கள். போலி செக்யூலரிச வியாதிகள். இன்னும் நிறைய காசியை பத்தி தெரிஞ்சுக்கனுன்னு ஆசை. நிறைய சொல்லுங்க. ஆனந்தமாய்க் கேட்பேன். நன்றி.
www.hayyram.blogspot.com
//தாங்கள் கூறுவது "புலையன் வேடத்தில் வந்த சிவப்பெருமான்" சம்பவத்தையா?//
புலையன் வேடத்தில் வரவில்லை, புலையன் தான் வந்தான், பரப்பிரம்மே அனைத்தும் என்னும் ஆதிசங்கரருக்கு உருவ வழிபாட்டுச் சின்னமான சிவபெருமான் எங்கிருந்து வந்தான் ? புலையனை சிவபெருமானாக இட்டுக்கட்டியது ஆதிசங்கரரை அவதாராமாகக் கட்டமைக்கக் கட்டப்பட்ட இட்டுக்கட்டு, ஆதிசங்கரின் மூல நூலில் கூட புலையனை சிவ வடிவம் என்றெல்லாம் குறிக்கவில்லை, சங்கரர் பற்றி எழுதியவர்கள் தான் 'புலையனால் சங்கரருக்கு ஞானமா ? இருக்க முடியாதே' என்கிற கற்பனையில் அவ்வாறு திரித்தார்கள்.
அன்பின் ஓம்கார்
நல்லதொரு இடுகை - அரிய தகவல்கள் அடங்கிய இடுகை - அகோரிகள் பற்றி அறிய வைக்கும் இடுகை - கால பைரவர் பற்றிய செய்திகள்
பலப்பல செய்திகள்
நல்வாழ்த்துகள்
சுவாமி தொடர் சிறப்பாக போகிறது.. அகோரிகள் பற்றிய செய்திகள் சுவாராசியமாக உள்ளது.
Post a Comment