Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, October 24, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 4

வேதகால வாழ்க்கைக்கு தேவையான இயற்கை அங்கங்களை விரிவாக பார்ப்போம். முதல் அங்கமாகவும் முக்கிய அங்கமாகவும் திழ்வது தாவரம்.

தாவரம் :

முதல் இயற்கை பகுதியை பற்றி விரிவாக பார்க்க ஒன்றும் இல்லை. அதன் பெயரே அனைத்தும் சொல்லிவிடுமே?

......................தா.....வரம்..!

பிரபஞ்ச ஆற்றலை பார்த்து நாம் கேட்பது போல பெயர் அமைந்திருப்பது வினோதம் தானே? உலகில் முதலில் தோன்றிய உயிரினங்களில் தாவரத்திற்கே முதலிடம். விஞ்ஞான பரிணாம வளர்ச்சி எடுத்துக்கொண்டாலும் அதில் தாவரமே முதலில் தோன்றியதாக சொல்லுகிறார்கள். தாவரம் முதலில் உருவானதற்கான காரணம் மிகவும் எளிமையானது. முதலில் தாய் கருவானால் தானே குழந்தை உருவாக முடியும்?

பள்ளியில் தாவரவியல் என்று சொல்லிக்கொடுக்கும் பாடம் மூலம் நமக்கு மரங்களை பற்றி தெரிந்து கொண்டிருப்போம். மரம் என்ன செய்யும் என கேட்டால் ஆக்ஸிஜனை வெளிவிட்டு கார்பன் - டை - ஆக்ஸைடு உள்ளே எடுக்கிறது என கூறுவோம். உண்மையில் மரம் ப்ராண வாயுவை மட்டுமா தருகிறது? ப்ராணனையே தருவது மரங்கள் தான்.

பிரபஞ்ச ஆற்றல் பூமியை அடைந்ததும் அவை தாவரங்களால் ஈர்க்கப்படுகிறது. பின்பு பிரபஞ்ச சக்தி ப்ராண சக்தியாக மாற்றப்படு பிற உயிர்களுக்கு வழங்குகிறது. சக்தி மாற்றம் செய்யும் இடமாக அமைவதால்தான் இதை கேந்திரம் (Transformer) என்கிறோம்.

ப்ராணன் என்றால் என்ன என முன்பு பார்த்தோம். பிரபஞ்ச சக்தி என அடிக்கடி கூறுகிறேனே அது என்ன என பார்ப்போம். அப்பொழுது தான் தாவரங்களின் அற்புதம் புரியும்.

பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியிலிருந்து உருவாகும் ஆற்றல் மிகவும் அதிவேகமாக பிரபஞ்சம் முழுவதும் பரவுகிறது. ஒளியின் வேகத்தைவிட இதன் வேகம் மிக அதிகம். அப்படி பிரபஞ்சத்தில் பரவும் ஆற்றல் சூரியமண்டலத்திற்கும் வந்து அடைகிறது. சூரிய குடும்பத்தின் பிற பகுதிகளுக்கு செல்லுவதற்கும் பூமிக்கு இவை வருவதற்கும் பல வேறுபாடுகள் உண்டு.

பிரபஞ்ச ஆற்றல் பிரபஞ்ச பொருட்களை ஊடுருவி செல்லுகிறது. அதாவது ஒரு கிரகத்திலோ அல்லது விண் கற்களின் மேல் பிரபஞ்ச ஆற்றல் படும்பொழுது அவற்றின் உள்ளே புகுந்து வெளியேறுகிறது. இந்த செயல் பூமி என்ற கிரகத்திற்கும் பொருந்தும். ஆனால் பிரபஞ்ச ஆற்றல் பூமியில் உள்ள உயிர்கள் மேல் விழும் பொழுது மட்டும் ஊடுருவி செல்லுவதில்லை என்பது மிகவும் வியக்கதக்க விஷயம். உயிர் பொருட்களின் உள் செல்லும் ஆற்றல் அத்துடன் நின்று விடுகிறது. என்ன ஒரு ஆச்சரியமான பிரபஞ்ச இயக்கம் பார்த்தீர்களா?

பிரபஞ்ச ஆற்றல் என்ற Cosmic Ray பற்றி நவீன அறிவியல் அறிந்து கொள்ள விஞ்ஞான உலகம் தலையை உடைத்து கொண்டிருக்கிறது. பிரபஞ்ச ஆற்றல் எங்கிருந்து வருகிறது ? எதனால் உயிர் பொருட்களை ஊடுருவி செல்லுவதில்லை என பல கேள்விகள். ஒரு கேள்விக்கு விடை கிடைத்தாற்போல இருந்தால் ஒரு புறம் சிக்கல் மேல் சிக்கல்.

Cosmic Ray Lab என உலகின் பல இடங்களில் ஆய்வகங்கள் நிறுவி சூப்பர் கம்யூட்டரின் உதவியுடன் 24 மணி நேரமும் பிரபஞ்ச கதிர் வீச்சை பதிவு செய்கிறார்கள். பிரபஞ்ச ஆற்றல் புரோட்டான் என்ற வடிவில் வருவதாக கண்டறிந்து, அவற்றை அளக்கும் கருவியும் கண்டறியபட்டுவிட்டது. பூமியின் நிலத்திற்கு மேல் புறமும், பூமியை தோண்டி ஆழத்திலும் பிரபஞ்ச சக்தியை அளக்கும் கருவியை பதித்து தினமும் பதிவு செய்கிறார்கள்.

மழை பொழிவது போல
தினமும் பல்லாயிர ஒளி மழை நம்மை நோக்கி பொழிந்து கொண்டே இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த ஆய்வுக்காக பலகோடிகள் ஒதுக்கபட்டுள்ளது. உலகளாவிய தன்மையில் பல நாடுகளிலும் கடலிலும் ஆய்வகங்கள் அமைக்கபட்டிருக்கிறது. ஆனாலும் பிரபஞ்ச ஆற்றலின் மூலம் சரியாக கண்டுபிடித்தப்பாடு இல்லை. சிலர் சூரியனில் இருந்து வருகிறது என்கிறார்கள். சிலர் சூப்பர் நோவா என்ற நட்சத்திரம் வெடித்து அதனால் வருகிறது என்கிறார்கள்.

ஏதோ வேதகால வாழ்க்கை என்று ஆரம்பித்தீர்கள் இப்பொழுது சூப்பர் நோவா, காஸ்மிக் ரே என கூறுகிறீர்களே இது எப்படு உங்களுக்கு தெரியும் என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். உங்களுக்கு எந்த செய்தியை கூறினாலும் அதை நான் உணராமல், ஆய்வு செய்யாமல் கூறமாட்டேன். அதன் படி இத்தகைய ஆய்வகங்களுக்கு சென்று சாஸ்திரத்திற்கும் நவீன விஞ்ஞானத்திற்கும் உள்ள தொடர்பை பல வருடங்களாக ஆய்வு செய்து வருகிறேன்.
ஊட்டியில் அமைக்கப்பட்டுள்ள காஸ்மிக் ஆய்வகத்தின் முன் நான்.


பிரபஞ்ச ஆற்றலை கண்களால் காண முடியாது. சில கருவியின் துணை கொண்டு காணலாம் என கூறினேன். ஆன்மீக ரீதியாக ஒருவர் உயர்வடையும் பொழுது அவர்களுக்கு இந்த மழை பொழிவை போன்ற பிரபஞ்ச ஆற்றலின் சக்தி புலப்படும். இதை ஒவ்வொரு கலாச்சாரத்தை சேர்ந்த ஞானிகளும் பல்வேறு விதமாக விளக்கம் அளித்துள்ளனர். சிலர் அமிர்தம் பொழிகிறது என்றும், சிலர் இறைவன் அருள் பொழிகிறான் என்றும் விளக்கினார்கள். சூஃபி ஞானிகள் தங்கள் கண்ட பிரபஞ்ச அலையை பாடல் வடிவில் மொழி பெயர்த்தார்கள்.

பலகோடி செலவு செய்து நவீன விஞ்ஞானம் கண்டறிய முயற்சிக்கும் விஷயத்தை வேதகால வாழ்க்கை எளிமையாக விளக்கிவிடும். பாருங்கள் தாவரம் என்ற ஒரு இயற்கையின் உறுப்பை விளக்க துவங்கி எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?

(...வேதம் ஒலிக்கும்)

23 கருத்துக்கள்:

நிகழ்காலத்தில்... said...

\\தாவரம் என்ற ஒரு இயற்கையின் உறுப்பை விளக்க துவங்கி எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?\\

அதுவும் ஒரு காரணமாகத்தான் :))

பொறுமையாக காத்திருக்கிறேன்

Mahesh said...

ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா போகுது... தினம் ஒரு பகுதி வருமா?

புன்னகை said...

வணக்கம் ஸ்வாமி

ஒரு செழிப்பான தாவரத்தைக் கண்டவுடன் மனம் மகிழ்வது உண்மையே ,தாவரங்களை அண்டி இருக்கும்போது வாழ்வு உயிர்ப்பாக இருப்பதாக உணர்கிறோம் என்பது மறுக்கமுடியாதது.ஆனால் அதற்குள் இவ்வளவு விடையங்கள் இருப்பது இதுவரைநாம் சிந்திக்காதது.
அரிய கட்டுரைக்கு நன்றிகள்.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
( cosmic ray physics இல் phd செய்த நண்பரொருவருடன் பேசியதில் உங்கள் கருத்தையே பிரதிபலித்தார் , ஆச்சரியமே மேலிடுகிறது )

ஷண்முகப்ரியன் said...

பதிவு பச்சைப் பசேல் என்று பசுமையுடன் விளங்குகிற்து.

வைகறை மகிழ்ச்சி,ஸ்வாமிஜி.

Unknown said...

Swamiji,
Sorry for writting in english, since i donot have tamil font, and not to rights to install in office computer.

you are very very correct, politicians in City banned the Cow grow up, telling it is not good for environment. but Cow dung and urine is good for killing germs. But Man in city doing pollution like anything in wall and road side.
we have to go back and take few good things.

Unknown said...

......................தா.....வரம்..! super

அது ஒரு கனாக் காலம் said...

நீங்கள் எங்களுக்கு ஒரு வரம் ...தாவரத்திற்கு இத்தனை பெருமை உண்டா ? அது தான் மனம் எப்பொழுதும் எங்காவது செடி கொடி உள்ள ஊருக்கு போனால் அடக்க முடியாத இன்பம் வருகிறது ..நன்றி உங்கள் பதிவுக்கு

Manohar said...

காஸ்மிக் ரேஸ் (பிரபஞ்ச ஆற்றல்)பற்றிய விளக்கம் வியப்பாக உள்ளது, மேலும் தெறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புன்னகை,

உங்கள் ஆய்வு மனப்பான்மைக்கு பாராட்டுக்கள். அந்த நண்பரை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தம்பிராஜ்,
திரு பிரபு,
திரு சுந்திரராமன்,
திரு மனோஹர்,


உங்கள் வருகைக்கு நன்றி.

Unknown said...

Swamiji,

yes true, even when i go for relatives village, I also feel very peace mind on seeing trees and plants and very calm.

எம்.எம்.அப்துல்லா said...

நானும் ஒரு மரத்தின் கொட்டைமூலமாக உணர்ந்தேன் :)

Rajagopal.S.M said...

// எம்.எம்.அப்துல்லா said...

நானும் ஒரு மரத்தின் கொட்டைமூலமாக உணர்ந்தேன் :)//

அறிஞர்கள் எப்பொழுதும் வித்யாசமாய் சிந்திபவர்கள்..
நீர் அறிங்கனையா...
:-))))

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..

//நானும் ஒரு மரத்தின் கொட்டைமூலமாக உணர்ந்தேன் :)//

என்னமோ சொல்லறீங்க ஒன்னும் புரியல.

ஆனா ஒன்னு சிலருக்கு மரத்தின் கொட்டையா தெரியும். சிலருக்கு கொட்டைக்குள் பல மரம் இருக்கிறது புரியும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜ கோபால்,

உங்கள் வருகைக்கு நன்றி

Unknown said...

uyigal uruvanathin karanam enna

Bharath said...

ஆம். தாங்கள் சொல்வது போல் சற்று வித்தியாசமான தகவலை எங்கோ படித்த நியாபகம்.

அதாவது, குறிப்பிட்ட ஒரு மரம், குறிப்பிட்ட ஒரு நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும். நமது நட்சத்திரதிற்க்கான மரத்தின் நிழலில் சில மணி நேரம்(atleast 1hr) செலவிடுகையில், நம் உடலில் பிரச்சினை ஏதேனும் இருப்பின் சரி செய்வதோடு உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்குமாம்.

ஜோதிடத்தில், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம், மிருகம், பட்சி என வகுத்து இருப்பதற்கும் இதற்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ ?!!

என்ன சொல்கிறீர்கள்... ஸ்வாமிஜி ?

BTW, Thanks for your Blogs... :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.பாரத்,
//ஜோதிடத்தில், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம், மிருகம், பட்சி என வகுத்து இருப்பதற்கும் இதற்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ ?!!

என்ன சொல்கிறீர்கள்... ஸ்வாமிஜி ?
//

சம்பந்தம் இருக்கும் போல. இந்த இணையதளத்தில் கூட அதை பற்றி சொல்லி இருக்கிறார்கள் பாருங்களேன்.
www.pranavapeetam.org

:)

Siva Sottallu said...

// சிலர் சூப்பர் நோவா என்ற நட்சத்திரம் வெடித்து அதனால் வருகிறது என்கிறார்கள் //

சுவாமி, சில வாரத்திற்கு முன்பு நான் "History" channel "The Universe" என்ற தொடரை பார்க்க நேர்ந்தது. நாலடைந்து வெடிக்கும் நட்சத்திரங்கல்லுக்கு தான் சூப்பர்நோவா என்கிறார்கள்.
மனித உடலில் உள்ள "High elements" எல்லாம் இந்த மாதிரி சூப்பர்நோவா Explosion நால் வந்தது என்றார்கள்.

இதை தான் Carl Sagan, "We are made of Star Stuff" என்று கூறினார். அதை இங்கே அவரே மிக அழகாக விளக்கியிருக்கிறார்.

http://www.youtube.com/watch?v=iE9dEAx5Sgw

வானில் நாம் காணும் நட்சத்திரம் எல்லாம் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை நட்சத்திரம் (நமது சூரியன் உட்பட) என்றும், முதல் தலைமுறை நட்சத்திரம் முதிர்ந்து வெடித்து (Supernova) வானில் பரப்பிய அந்த கதிர்களால் தான் இந்த உலகமும் உயிர்களும் தோன்றின என்கிறார் அவர்.

ஸ்வாமி, வேதகால வாழ்க்கை என்பது எதோ ஒரு குறிப்பிட்ட காலத்தை குறிப்பிடுவதோ போல் உள்ளதே, இதை வேதமுறை வாழ்க்கை என்று கூறலாமே...

*இயற்கை ராஜி* said...

:-)