Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, September 29, 2009

நானும் வரம் தரப்போகிறேன்...!

என் இமயமலை பயணத்தின் இடையே கங்கையாற்றின் கரையில் இளைப்பாருவதற்காக அமர்ந்தேன். கங்கை பிரவாகமாக சென்று கொண்டிருந்தது. கண்டிப்பாக ஆழமும் வேகமும் அதிகம் என அதன் போக்கை வைத்து பார்க்கும் பொழுதே தெரிந்தது.

சில நாட்களாக வெளியுலகில் இருந்து துண்டிக்கபட்டிருந்தேன். சரி நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள என் மடிக்கணினியை (Laptop) திறந்து இணைய இணைப்பை இணைத்தேன். அது கம்பி இல்லா அகண்ட அலை சேவை. (wireless broadband) சரியாக தொடர்பு கிடைக்கவில்லை. மடிக்கணியை அங்கே இங்கே அசைத்தேன்.. தொடர்பு விட்டு விட்டுவந்தது.. சிறிது சாய்வாகவும் ஒரு மரத்தில் அருகில் சென்றால் ஓரளவு அலைவரிசை கிடைத்தது. ஒரு பக்கமாக சாய்ந்து மரத்தின் அடியே அமர்ந்து கொண்டேன்.. என் கால்கள் இரண்டும் கங்கை ஆற்றின் உள்ளே வைத்திருந்தேன். பயணத்தால் களைத்திருந்த உடலுக்கு கால்களில் குளிர் நீர் படுவது இதமாக இருந்தது.

சில இணைய பக்கங்களுக்கு சென்று உலாவி விட்டு கணினியை மூடி கிளம்ப எத்தனிக்கும் பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது. கைத்தவறி என் கணினியை கங்கையாற்றில் விழுந்துவிட்டது...!


நினைத்துபாருங்கள் எப்படி இருக்கும் எனக்கு?... செய்வது அறியாமல் திகைத்தேன்.. ஆற்றின் வேகத்திற்கு இந்நேரம் என் மடிக்கணினி வங்காள விரிகுடாவில் கலந்திருக்குமோ என்றெல்லாம் மனதில் எண்ணம் வந்து சென்றது. நல்ல வேளை வலைபக்கத்தை பார்த்த பிறகு மூடிவிட்டேன். இல்லையென்றால் அதில் மீன்கள் மாட்டியிருக்குமே என்று ஒருபக்கம் குழப்பம். அதுவும் அந்த பதிவரின் வலைபக்கம் வேறு. அதில் மாட்ட கூட வேண்டாம். மீன்கள் அதை பார்த்தாலே இறந்துவிடுமே என ஒரு வஞ்சக எண்ணமும் தலைதூக்கியது...

எத்தனை எத்தனை தகவல்கள் அதில்.. எதிர்கால உலகை மேம்படுத்த என சிந்தனைகளை அதில் வடித்துவைத்திருந்தேனே? மக்களை உய்விக்கும் அந்த எண்ண சிதறல்கள் எப்படி மீண்டும் நான் உருவாக்குவேன் என மனவருத்தத்தில் இருக்கும் பொழுது...கங்கை ஆற்றின் மேல் ஒரு புகைமண்டலம் உருவாகியது.....

புகைமண்டலத்தின் நடுவில் ஒரு தேவதை வெளிப்பட்டு கண்கள் கூசும் ஒளியுடன் என்முன் நின்றாள். தேவதையை நீங்கள் பார்க்க வேண்டுமே.... அப்பப்பா... திரைப்பட பாடலில் தேவதை என வர்ணிக்கும் சினிமா நடிகைகளுடன் இந்த தேவதையை ஒப்பிட்டால் அடுத்த ஜென்மத்திலும் நான் தமிழகத்தின் வாக்காளனாகவே பிறக்க நேரிடும்.

தேவதையின் அழகில் மூழ்கி இருக்கும் பொழுது தம்பூராவின் கடைசி தந்தியை மீட்டிய ஒலியில்
தேவதையின் குரல் ஒலித்தது..

“கவலைபடாதே மானிடா... உன் கவலையை போக்கவே நான் வந்திருக்கிறேன். உன் மடிகணினி இது தானே” என பிங்க் நிறத்தில் இருக்கும் சோனி வாயோ மடிகணினியை கண்பித்தாள் தேவதை. அதன் தற்சமய விலை 3800$.

நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்... பிறகு “இல்லை” என்றேன்.

சில வினாடிகளில் மீண்டும் ஒரு மடிக்கணினியை காண்பித்து இதுவா என்றாள். அது 4700$ விலைகொண்ட டெல் கணினி. தேவதையே எனக்கு சாமி டாலர் வாங்வே பணம் இல்லாத பிச்சைக்காரன். நான் எப்படி சோனியும் , டெல்லும் வாங்குவேன்? என்றேன்.

சில நொடிகளுக்கு பிறகு என் லினோவா டப்பாவை தேவதை காண்பித்தாள். நான் ‘ஆம்’ என்றேன்.

“மானிடா உன் நேர்மையை மெச்சினேன்” என்று என் கையை நீட்ட சொல்லி எனக்கு மூன்று கணிப்பொறியையும் கொடுத்தாள் தேவதை.

“தேவதையே உனக்கு அறிவு கிடையாதா? உங்கள் தேவதை பரம்பரையில் முன்னோர்கள் விறகு வெட்டியிடம் செய்தது என்னவோ அதையே நீயும் செய்கிறாயே? மூன்று மடிக்கணியையும் வைத்து நான் என்ன செய்ய? இருக்கும் ஒரு கணினியை வைத்தே உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை” என்றேன்.

“ தேவதை பரம்பரை பற்றி கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் யார் முன் தோன்றினாலும் அவர்கள் நான் கொடுக்கும் மூன்று பொருளை வாங்கி செல்லுவார்கள். நீ தான் அதிகப்பிரசங்கி போல இருக்கிறாய்”

“தேவதையே நான் அதிகப்பிரசங்கி என்பது ஊருக்கே தெரியும், ஆனால் விறகு வெட்டி போல வெகுளி அல்ல. நான் புத்திசாலி அதனால்தான் அப்படி கேட்கிறேன்.”

“சரி உனக்கு இவை எல்லாம் வேண்டாம் என்றால் மூன்று வரம் தருகிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்”

“நீ வரம் தருவது இருக்கட்டும். நான் மீண்டும் சொல்லுகிறேன். வரம் கொடுத்துவிட்டு பின்னால் சங்கடப்பட கூடாது”

“அற்ப மானிடனே. நீரில் விழுந்த மடிகணினியை எடுக்க தத்தளித்தாய். இப்பொழுது எனக்கே அறிவுரை சொல்லுகிறாயா? ”

“தேவதைகளுக்கு அழகு இருக்கும் அளவுக்கு..... அ.......அனுசரணை இருக்காது என கேள்வி பட்டிருக்கிறேன்..இன்று தான் நேரில் பார்க்கிறேன். நான் வரங்களை யோசித்து கேட்க விரும்புகிறேன். இப்படித்தான் ஒரு எறும்பு யோசிக்காமல் வரம் கேட்டு மாட்டிகொண்டது”

“எப்படி கொஞ்சம் விவரமாக சொல்லேன்”

“மனிதர்கள் தங்களை வாழவிடுவதில்லை என எறும்பு ஒன்று கடவுளை பார்த்து தவம் இருந்தது. கடவுள் அதன் முன் தோன்றினார். என்ன வரம் வேண்டும் கேள் என்றார். மனிதர்கள் மேல் இருந்த கோபத்தில் எறும்பு கேட்டது. நான் கடித்தவுடன் சாகவேண்டும்.

கடவுள் தந்தேன் என மறைந்தார். வரத்தை சோதித்து பார்க்க மனிதனிடம் சென்று அந்த
எறும்பு கடித்தது. மனிதன் கோபத்தில் அதை “சத்” என அடித்து தூர வீசினான். வரமும் பலித்தது, கடித்தவுடன் எறும்பு செத்தது. யார் சாகவேண்டும் என வரம் வாங்கவில்லை அல்லவா?. இப்படி நான் அல்லல்பட கூடாது என்பதால் யோசித்து கேட்கிறேன் என்றேன். ”

என் தத்துவ கதையை கேட்டு டயர்டான தேவதை. பெருமூச்சு விட்ட பின் கூறியது.

“அதிகம் பேச்சு ஆண்களுக்கு அழகல்ல. முதல் வரம் தர நான் தயார். கேள்”


“ கேட்கும் வரங்களை கண்டிப்பாக கொடுப்பேன் என வாக்கு கொடு. நான் கேட்கிறேன்.”

“என் தேவதை பரம்பரையின் மேல் ஆணை. கேள்”

“ம்......உனக்கும் எனக்கும் நடந்த இந்த சம்பாஷணைகளை நான் ஒரு கதையாக எழுத போகிறேன். அதை அனைவரும் படிக்க வேண்டும்”

“தந்தேன். இரண்டாவது வரம்”

“உலகில் பலர் வரம் கொடுக்கிறேன் பேர்வழி என சுயநலத்தை தூண்டி பிறரின் எதிர்பார்ப்பு எனும் நெருப்பில் குளிர்காய்கிறார்கள். அவர்களை பற்றிய தெளிவு மக்களுக்கு கொடுக்க வேண்டும்”

“அவர் அவர் அழிவுக்கு அவர் அவரே காரணமாக இருப்பார்கள். நான் என்ன செய்ய வேண்டும்? இருந்தாலும் நீ கேட்ப்பதால் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் என வரம் தருகிறேன்”

“மூன்றாவது வரம்... மூன்றாவது வரம்....”

“மானிடனே கேள் என்ன தயக்கம்,?”

“எனக்கு மீண்டும் மூன்று வரங்கள் வேண்டும். இதுவே என் மூன்றாவது வரம்”

சிறிது வினாடி யோசித்த அந்த தேவதை.. “சரி. தந்தேன்” என்றது.

நானும் இமயமலை சாரலில் இருந்து வரம் கேட்கிறேன் பேர்வழி என அந்த தேவதையை கூட்டிவந்து விட்டேன். இப்பொழுது எல்லாம் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட தேவதையிடம் வரம் கேட்பது என்றாகிவிட்டது. இரண்டு வரங்கள் கேட்டு விட்டு மூன்றாவதாக மீண்டும் மூன்றுவரம் கேட்டுவிடுவேன். கணிப்பொறி மென்பொருள் போல Do. Loop என திரும்ப திரும்ப தேவதை வரம் கொடுத்து என்னிடம் மாட்டிக்கொண்டது. தேவதை இப்பொழுது தான் உணருகிறது. இவனிடம் வசமாக சிக்கிவிட்டோம் என்று. இனி தேவதை பரம்பரையில் யாரும் புத்திசாலிகளுக்கு வரம் தர மாட்டார்கள்...!

உங்களுக்கு ஏதாவது வரம் வேண்டுமா? இரண்டு வரம் கேளுங்கள்... மூன்றாவது வரம் என்ன என்பது உங்களுக்கே தெரியுமே..

47 கருத்துக்கள்:

Unknown said...

முதல் வரம் ஓம்கார் ஊமையா போகவேண்டும்
தேவதை எனக்கு எப்போவெல்லாம் தேவையே அப்போ வரம் தர வேண்டும்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜெய்சங்கர்,

வாழ்க நீர் எம்மான் :)

வழக்கம் போல பதிவை படிச்சுட்டு பின்னூட்டம் போட்டீங்களா?

விரல் விளங்க கூடாது என வரம் வாங்கி இருக்க வேண்டும்.
ஊமையானாலும் பதிவு போட்டு உலகை திருத்துவேன் என கடமை
உணர்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வடுவூர் குமார் said...

எனக்கு அந்த " Do Loop" வரம் வேண்டும். :-))

துளசி கோபால் said...

எனக்கு ஒரே ஒரு வரம் போதும் ஸ்வாமி.

என் சோம்பல் தொலையணுமுன்னு கேட்கணும்.

இந்தியா வந்தபிறகு உடம்பெல்லாம் ஒரே சோம்பல். சூடு சூடு சூடு. வேர்வை பெருகிக் கடலாக ஓட வேலை ஒன்னும் செய்யமுடியாமல் தவிக்கிறேன். போதாதகுறைக்குப் பகல்தூக்கம் வந்து பீடிக்கிறது(-:

எம்.எம்.அப்துல்லா said...

நடத்துங்க :)

SRI DHARAN said...

எந்த வரமாக இருந்தாலும் அது சுபவரமாக இருக்க வேண்டும் ஸ்வாமிஜி ( இது எப்டி இருக்கு? )

கண்ணகி said...

ஸ்வாமி, தாங்கள் மிகவும் வித்தியாசமான மாடர்ன் சாமியார்தன்??

Raju said...

என் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவ வேண்டும். அதற்கு தேவையான ஆரோக்கியம், நிரந்தர தொழில் மற்றும் அழகான ஒரு சொந்த வீடு வேண்டும்!

:-)

Unknown said...

//ஊமையானாலும் பதிவு போட்டு உலகை திருத்துவேன் என கடமை
//

உலகம் அதை பார்த்துக்கொள்ளும். நீ உன்னை தெரிந்து கொள்
ரமண மகரிஷி.

*இயற்கை ராஜி* said...

தேவதையை நாங்கெல்லாம் படுத்துன பாடு போதாதுன்னு நீங்களும் ஆரம்பிச்சிடீங்களா ஸ்வாமிஜி

Unknown said...

தவிர ஸ்வாமிஜி
ஆன்மாக்களின் தேகாத்ம புத்திக்கான காரணம்.?
(எல்லாம் ஆத்மா என்றால் நான் ஏன் அதை உணரவில்லை)

ஆன்மாக்கள் ஏன் மானிட பிறப்பு எடுத்து மயங்குகிறார்கள்?

எனக்கு இதன் பதில் தெரியவில்லை . தாங்கள் பதில் தாருங்கள்
என் மெயில்
jaisankarj@gmail.com

Siva Sottallu said...

நல்ல கற்பனை கதை ஸ்வாமி.

// “எனக்கு மீண்டும் மூன்று வரங்கள் வேண்டும். இதுவே என் மூன்றாவது வரம்” //

ரசித்தேன் ஸ்வாமி.

தேவதை உங்களிடம் infinite loop இல் மாடிக்கொண்டதோ?

என் முதல் வரம்: நான் கேட்கும் வரங்கள் எல்லாம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். :-)

என் இரண்டாவது வரம்: முதலில் கேட்ட வரம் முடியட்டும்...

Mahesh said...

ஹ்ம்ம்.. வலைல மீன் சிக்கிடுமோன்னு பயந்தீங்க.... தேவதையே மாட்டிகிச்சு.... இனிமே வாரா வாரம் "வரக்"கதைகள்தான்....

கோவி.கண்ணன் said...

போயும் போயும் படத்துக்கு ஒரு வெள்ளைக்கார தேவதைத் தான் கிடைத்ததா ?

:)

Unknown said...

//போயும் போயும் படத்துக்கு ஒரு வெள்ளைக்கார தேவதைத் தான் கிடைத்ததா ?
//
வெள்ளைக்கார தேவதை லாப்டாப் குடுத்தா வாங்க மாட்டீங்களா

Anonymous said...

ச்சே என்ன தேவதை இந்த அம்மா! ஒரு ஆப்பிள் லேப்டாப் தரவேண்டியதுதானே! $4700 வில் கிட்டத்தட்ட 6 டெல் லேப்டாப் வாங்கிவிடலாம்!

//ஊமையானாலும் பதிவு போட்டு உலகை திருத்துவேன் என கடமை//
பதிவு போட்டால் மட்டும் திருந்திவிடுமா? திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. ஆனால் அதற்காக பதிவு போடாமல் இருந்துவிடாதீர்கள்!

//போயும் போயும் படத்துக்கு ஒரு வெள்ளைக்கார தேவதைத் தான் கிடைத்ததா ?//
பின்ன இதுக்காக நயன்தாரா அல்லது நமிதாவிற்கு இறக்கை மாட்டி, அந்த படத்தை போடமுடியுமா! எல்லாம் கூகிள் ஆண்டவரின் செயல்!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வடுவூர் குமார்,
சகோதரி துளசி கோபால்,

உங்கள் வருகைக்கும் வரத்திற்கும் நன்றி :)

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..

நானா நடத்தரேன் அவன் நடத்தரான் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஸ்ரீதர்,

//எந்த வரமாக இருந்தாலும் அது சுபவரமாக இருக்க வேண்டும் ஸ்வாமிஜி ( இது எப்டி இருக்கு? )//

எப்படி இப்படி எல்லாம். கலக்கல் போங்க...

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி வாத்துக்கோழி,

//ஸ்வாமி, தாங்கள் மிகவும் வித்தியாசமான மாடர்ன் சாமியார்தன்??//
சின்ன திருத்தம்
நான் அல்ட்ரா மாடன் என சொல்லுங்கள் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜூ,
//என் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவ வேண்டும். அதற்கு தேவையான ஆரோக்கியம், நிரந்தர தொழில் மற்றும் அழகான ஒரு சொந்த வீடு வேண்டும்!

:-)//

எப்பொழுதும் சந்தோஷம் நிலவினால் சந்தோஷம் எப்படி இருக்கும் என தெரியாமல் போர் அடித்துவிடாதா?

உங்கள் வரங்களை தேவதை அளிப்பதாக சொன்னாள் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜெய்சங்கர் ஜகதீசன்,

//உலகம் அதை பார்த்துக்கொள்ளும். நீ உன்னை தெரிந்து கொள்
ரமண மகரிஷி.//

உலகம் என்பது தனியாக ஒன்றும் இல்லை. அஹம் ஜகத்.

- சங்கரர்..

(உலகம்)நான் என்னை தெரிந்து கொண்டேன். அங்குதான் வந்தது பிரச்சனையே.. :)

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி இயற்கை,

நீங்கள் தேவதையிடம் கேட்ட வரம் இன்னும் எனக்கு காதில் ஒலிக்கிறது :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//
தேவதை உங்களிடம் infinite loop இல் மாடிக்கொண்டதோ?
//

ஆம். தேவதை ctrl+Alt+del தேடிக்கொண்டிருக்கிறது :)

Unknown said...

//சூட்சும உடலின் மார்பில் இரு விடற்கடை வலப்புறத்தில் இருப்பது இதயம்.
//
அதை உணர்தலே தன்னை உணர்தல்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

//ஹ்ம்ம்.. வலைல மீன் சிக்கிடுமோன்னு பயந்தீங்க.... தேவதையே மாட்டிகிச்சு.... இனிமே வாரா வாரம் "வரக்"கதைகள்தான்..../

யாரையோ மனசுல வைச்சுட்டு படிச்சீங்க போல :) ச்சேச்சே அப்படி எல்லாம் இல்லை.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

//போயும் போயும் படத்துக்கு ஒரு வெள்ளைக்கார தேவதைத் தான் கிடைத்ததா ?
//

போகலைனாலும் அந்த படம்தான் கிடைக்கும். நம்மூர்ல எங்க தேவதையை நம்புராங்க

ஷண்முகப்ரியன் said...

கங்கைக் கரையில் காவி அணிந்த ஸ்வாமி மடிக் கணிணியைத் திறந்து வைத்திருக்கும் விஷுவல் நன்றாக இருந்தது,ஸ்வாமிஜி.

Itsdifferent said...

அக்கறையுடன் ஒரு யோசனை. இந்தியாவில் இருக்கும் நிறைய நண்பர்கள் (IT-அல்லாதோர்) நிறைய பேர், தங்கள் கணினியில் இருந்து நிறைய விஷயங்கள் எதாவது ஒரு விதத்தில் இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு யோசனை சொல்வேன்: எல்லா விதமான documents-ஐயும் கூகிள் documents இல சேமித்து வைக்கலாம். அல்லது zoho என்ற ஒரு வெப்சைட் உள்ளது அங்கும் சேமிக்கலாம். confidentiality பற்றி கவலை இருந்தால், USB flash drive அல்லது USB external hard டிரைவ் களில் சேர்த்து வைக்கலாம்
(சுவாமி இதில் எதாவது ஒன்று செய்திருந்தால் தேவதை தன்பாட்டுக்கு வரம் கொடுத்து மக்களை மாக்கான் ஆக்கி கொண்டிருந்திருக்கும். ).

வெற்றி-[க்]-கதிரவன் said...

தேவதைமாதறி ஒரு பொண்ண கண்ணாலம் கட்டிக்கணும் இதுதான் எனக்கு வேண்டிய வரம் -:)

வெற்றி-[க்]-கதிரவன் said...

ithu eppadi -:)

Itsdifferent said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.
நான் said...

there is always only one கிறுக்கன் ......now i understand it may be two.......i think u have one mental disease, so called bloggomania...so only the curiosity to write anything on the web possiblie..
hi hi hi ...by கிறுக்கன்

நான் said...

there is so many quetions about our religion...please concentrate and answer them..

sasi said...

சுவாமிஜி.....ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.... உண்மையிலெ ரொம்ப எனக்கு பிடித்திருக்கிறது...

பித்தனின் வாக்கு said...

நல்ல கற்பனை சுவாமிஜி, ஆமா எங்க இந்த கனவு கண்டிங்க சொல்லுங்க நாங்களும் அங்க போய் தூங்கறம்.

குசும்பன் said...

//அதுவும் அந்த பதிவரின் வலைபக்கம் வேறு. அதில் மாட்ட கூட வேண்டாம். மீன்கள் அதை பார்த்தாலே இறந்துவிடுமே//

அந்த க வரிசையில் ஆரம்பிச்சு ஸ் வரிசையில் முடியும் பதிவர்தானே சாமி?:)))

நாமக்கல் சிபி said...

Do... Loop வரமா!

குட் குட்!

சூப்பர்!

நிகழ்காலத்தில்... said...

தொடர்பதிவுக்கு காரணமான தேவதை தங்களிடம் பட்டபாடு எனக்கு பிடித்திருந்தது,

தங்களின் நாசூக்கான மறுப்பு இதில் விசேசம் :))

இதேபோல் அவசியமான விசயங்களின் தங்களின் மறுப்பு இந்த ஸ்டைலில் இருந்தால் நன்றாக இருக்கும்

நேரடியான மறுப்பு எங்களைப் போன்றவர்களுக்கானது.:))

தங்களைப் போன்ற இறையின் கருவி நான் என உணர்ந்தவர்களுக்கானது அல்ல !!

வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

அருமை சுவாமி

சுரேகா.. said...

ஸ்வாமீ !

சான்ஸே இல்லை!

டூ..லூப் ...பின்னிட்டீங்க!

யப்பா...சிரிச்சு சிரிச்சு..அடுத்தவேளை பசி இப்பவே வந்துடுச்சு!

வரம் என்ன கேக்கலாம்?

:))

Ashwinji said...

ஓம் சிவோஹம்.

அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com

Thamira said...

சுவாரசியம்.!

सुREஷ் कुMAர் said...

ஜி.. நீங்க இருப்பது RS pura'த்திலா..

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார்

வழக்கமாக நான் இடும் மறுமொழிகளில் இப்படித்தான் பதிவர்களை அழைப்பேன். தங்களையும் சக பதிவராக நினைத்தே அழைக்கிறேன்.

முதல் முறையாக வருகிறேன் என நினைக்கிறேன்.

விதியை மதியால் வெல்லலாம் என்பதனை அழகாகக் கூறி இருக்கிறீர்கள்.

படித்தேன் ரசித்தேன்

எனது மறுமொழிகள் அனைத்திலும் இறுதியில் நல்வாழ்த்துகள் என முடிப்பது வழக்கம். இங்கு என்ன செய்வது.

இறைவனின் நல்வாழ்த்துகள் உரித்தாகுக

Amuthan Sekar said...

Very nice Swamiji...