ஏறுவரிசை - இறங்குவரிசை
--------------------------------------
அசோகர்
போர்
உயிர்பலி
போதனை
புத்தர்
ஞானம்
புத்தம் சரணம் கச்சாமி
யாழ்ப்பாணம்
சோதனை
ரச பாணம்
மக்கள்
ராஜபக்ஷே
புத்தம் ரத்தம் கச்சாமி..!
கருணை
-------------
எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!
போதனை
---------------
நான் வேறு உடல் வேறு.
இரண்டும் ஒன்றல்ல.
ஆனால் அடிபட்டால்
எனக்குத்தான் வலிக்கிறது..!
அதிகப்பிரசங்கம்
-------------------------
இன்று மெளனமாய் இருப்பது
எப்படி என வகுப்பு எடுத்தேன்.
அதில் நான் பேசியது
....................................!
முரண் முக்தி
--------------------
இறவாநிலை பற்றி
பிரசங்கம் செய்த யோகி
இதற்கு முன் ஒருமுறை கூட
இறந்ததில்லை.
அவதார புருஷன்
-------------------------
கல்கி அவதாரத்தை
மக்கள் எதிர் நோக்கினார்கள்
வந்ததோ வராகம்...!
நவயுக வேதாந்த விவாதம்
---------------------------------------
அஹம் பிரம்மாஸ்மியை
பிரித்து மெய்ந்தார்
சங்கரானந்தா சரஸ்வதி.
மாண்டூக்கிய உபநிஷத்தை
மடக்கி பிடித்தார்
மந்திராகிரி ஸ்வாமிகள்.
நான் விடுவேனா என் பங்குக்கு
பிரம்மசூத்திரத்தில் சூப் வைத்தேன்.
கடைசியில் அனைவரும்
ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.
ஐங்கரன்
-------------
பிளாஸ்டராப் பாரிசில் இருந்தாலும்
நான் இந்தியாவில் தான் கரைகிறேன்.
அடுத்தவருடம் எனக்கு
சிவப்பு வர்ணம் பூச
ஊர்வலத்தில் சிலர் ரத்தம்
சிந்துகிறார்கள்.
என்னில் கரையாமல்
என்னைகரைத்தென்ன பயன்?
காமன் மேன்
------------------
திரைப்படத்தை பார்த்து
இசம் பற்றி பேசுபவர்கள்...
தங்கள் வீட்டில் ரசம் கூட
வைத்தது இல்லை..!
பி.கு. மேற்கண்ட வரிகள் ஜீ மெயில் ஸ்டேட்டஸ் மெசேஜாக நான் வைத்திருந்த வரிகளின் தொகுப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
17 கருத்துக்கள்:
/எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!
//]]
சுவாமி இதுவும் சூப்பர்
//எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!//
என்க்கான பதில் மாதிரி இருக்கிறது
சொம்மா சொல்ட்டி சொல்ட்டி அடிக்கிறீங்கோ சாமியோவ் :))
-:)
ஸ்வாமி-ஜி எல்லாமே அருமை.
//போதனை
---------------
நான் வேறு உடல் வேறு.
இரண்டும் ஒன்றல்ல.
ஆனால் அடிபட்டால்
எனக்குத்தான் வலிக்கிறது..!//
My pick.
//கருணை
-------------
எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!//
சிந்திக்க வைத்தது ஸ்வாமிஜி,
நான் வேறு உடல் வேறு.
இரண்டும் ஒன்றல்ல.
ஆனால் அடிபட்டால்
எனக்குத்தான் வலிக்கிறது.
golden words
//திரைப்படத்தை பார்த்து
இசம் பற்றி பேசுபவர்கள்...
தங்கள் வீட்டில் ரசம் கூட
வைத்தது இல்லை..!//
டாப்பு நண்பரே...
//கல்கி அவதாரத்தை
மக்கள் எதிர் நோக்கினார்கள்
வந்ததோ வராகம்...!
//
டாபிக்கல்....
//கடைசியில் அனைவரும்
ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.
//
ப்ராக்டிகல்....
//என்னில் கரையாமல்
என்னைகரைத்தென்ன பயன்?
//
ஃபிலசாஃபிகல்....
'கல்கி அவதாரத்தை
மக்கள் எதிர் நோக்கினார்கள்
வந்ததோ வராகம்...!'
Super
//கல்கி அவதாரத்தை
மக்கள் எதிர் நோக்கினார்கள்
வந்ததோ வராகம்...!'
//
நல்லா பாருங்க உங்க சிஷ்யனா இருக்கப்போவுது
//கருணை
-------------
எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!//
காவித் துணியுடன் என்ற வார்த்தை சேர்த்தா தான் முழுமையாகுது சாமி.. :)) கருப்பு மாதிரி வேற நிற துணிகளுடன் கொலை செய்தாலும் பாதகமில்லை.. :)
////திரைப்படத்தை பார்த்து
இசம் பற்றி பேசுபவர்கள்...
தங்கள் வீட்டில் ரசம் கூட
வைத்தது இல்லை..!////
விசம் மட்டுமே வைக்கத் தெரிந்தவர்களிடம் ரசம் எதிர்பார்பப்து உங்கள் தவறு. :)
திரு சங்கர்,
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு ஜெய்சங்கர்,
நீங்கள் இட்ட இரு பின்னூட்டத்தின் வாயிலாக நான் தெரிந்துகொண்டது நீங்கள் வார்த்தைகளை புரிந்து கொள்ளவில்லை என்பது.
உங்கள் வருகைக்கு நன்றி.
அப்துல்லா அண்ணே..
இது எல்லாம் தகுமா :)
நான் என்னைக்காவது வன்முறையை கையில் எடுத்திருக்கேனா?
திரு ஞானபித்தன்,
திரு பாசகி,(சரியான பிக்..!)
திரு ஸ்ரீதர்,
திரு yrskbalu,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திரு நிகழ்காலம் சிவா,
நன்றி
திரு மகேஷ்,
இது பேருதான் ’கல்’ வீசுரதா?
ரசித்தமைக்கு நன்றி.
சகோதரி fieryblaster,
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு கொங்கழகன் சஞ்சய்காந்தி,
//விசம் மட்டுமே வைக்கத் தெரிந்தவர்களிடம் ரசம் எதிர்பார்பப்து உங்கள் தவறு. :)//
இது என்ன கவியரங்கமா? தொடர்ந்து கவிதை சொல்ல...
கலக்குங்க...
உங்கள் வருகைக்கு நன்றி.
//திரு கொங்கழகன் சஞ்சய்காந்தி,//
ஏஞ்சாமி இந்த கொலை வெறி? இன்னைக்கி நான் படையலா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(
மன்னிக்கவும் நான் சரி வர படிக்கவில்லை. சாதாரண கவிதை என்று நினைத்தேன்.
நான் ஒரு மாதம் முன்பு கேட்ட கேள்விகளுக்கு ஏன் விடை இல்லை
Post a Comment