Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, September 23, 2009

நவராத்திரி ஒரு சமூகத்தினரால் மட்டும் ஏன் கொண்டாடப்படுகிறது?


நவராத்திரி மட்டுமல்ல ஏனைய விஷயங்களை இவ்வாறு கேள்வியாக கேட்கப்படுகிறது.

திரு ஸ்ரீதரன் சென்ற பதிவில் கீழ்கண்டவாறு கேள்விகள் கேட்டிருந்தார்.


சுவாமிஜி, இப்பொழுதெல்லாம் நவராத்திரி பூஜை குறிப்பிட்ட சில சமூகத்தினரால் ( பிராமின்ஸ் ) மட்டுமே வீட்டில் கொண்டாடப்படுகிறது. ஒரு எட்டு பத்து வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் அனைத்து சமூகத்தினராலும் நடத்தப்பட்டது என்று ஒரு ஞாபகம் ( வித விதமான சுண்டல் கிடைக்குமே! ) மேலும் வீட்டில் நவராத்திரி பூஜை எப்படி நடத்தவேண்டும் ?

இந்த கேள்வி எல்லாம் என்னிடம் கேட்கலாமா என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார். நவராத்திரி ஆன்மீக சம்பந்தபட்டது தானே? தாராளமாக கேட்கலாம். ஆன்மீக கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். எத்தனையோ பேர் விடையளித்த கேள்வியாக இருந்தாலும் என் விடை உங்களுக்கு சில புதிய கோணங்களை காட்டும். உங்களை சிந்திக்க வைக்கும். இந்த கேள்வியின் பதில் விளக்கமாகவும் நீண்டும் இருப்பதால் தனிபதிவாகவே போட்டுவிட்டேன்.

நவராத்திரி என்பது ஒரு ஆன்மீக ரீதியாகவும்,காலநிலைக்காகவும் மற்றும் கலாச்சாரத்திற்ககவும் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு. வீட்டின் முன் அறையில் படிகள் வைத்து அதில் கீழிருந்து மேலாக பொம்மைகள் அடுக்கி வைப்பார்கள்.

சின்ன ஜீவராசிகள் முதல் படிபடியாக ஜீவராசிகளின் தன்மைக்கு ஏற்ப அடுக்கி உயர் படிகளில் கடவுள் சிலை இருக்கும். அனைத்து ஜீவனும் படிபடியாக முன்னேறி கடைசியில் முக்தி அடைதலை குறிப்பது போல அமையும்.நவராத்திரி விழாவை பயன்படுத்தி அருகில் இருக்கும் வீடுகளுடன் நட்பை பலப்படுத்துவது, பரஸ்பர புரிதல் ஏற்படுத்துவது என்பது நம் கலாச்சாரம். நம் நாட்டில் கலாச்சரத்துடன் இசையும், நாட்டியமும் எப்பொழுதும் கலந்துதே இருக்கும். அதனால் குழந்தைகள் பிறருக்கு தங்கள் கலை அறிவை வெளிப்படுத்தும் ஒரு நாளாக இருக்கிறது.

நவராத்திரி அன்று குழந்தைகள் பெரியவர்கள் பாடுவதையும் கலை நிகழ்ச்சி செய்வதையும் கேள்விபட்டதுண்டா?


இவை எல்லாம் இருக்கட்டும்....

அறிவியல் முன்னேற்றம் அடைய அடைய மனித வாழ்க்கையில் சில விஷயங்கள் தலைகீழாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?

எடிசன் மின்சார பல்ப் கண்டு பிடிக்கும் முன் விளக்குகள் மேல் நோக்கி இருந்தது. அதன் பின் விளக்கு கீழ் நோக்கி ஒளி கொடுக்கிறது. ஆட்டுக்கல் நிலையாக இருந்தது குழவி சுற்றியது அந்தகாலம், குழவி நிலையாக இருந்து ஆட்டுக்கல் சுற்றுவது கிரண்டர் காலம்.

அது போல அந்த காலத்தில் நவராத்திரியில் பொம்மைகள் படியில் அசையாமல் இருக்கும், மக்கள் அதன் முன் ஆடுவார்கள், பாடுவார்கள், பேசுவார்கள்.

இது விஞ்ஞனான காலமல்லவா? தொலைகாட்சி பெட்டி என்ற கொலு பொம்மை ஆடுகிறது பாடுகிறது பேசுகிறது. மக்கள் கொலு பொம்மைகளாக எப்பொழுதும் அதன் முன் அசையாமல் அமர்ந்திருக்கிறார்கள்..!

ஏனைய வேதகாலத்தில் அனேக விஷயங்கள் அனைத்து தரப்பினரும் செய்து வந்தனர். நாளடைவில் அவை யானை பூனையான கதையாக தேய்ந்து வருகிறது. பூணல் போடுவது, மந்திரம் சொல்லுவது, ஆடை அணியும் முறை என அனைத்தும் வேதகாலத்தில் அனைவருக்கும் பொதுவாக இருந்தது. ஆனால் தற்சமயம் பிராமணர்கள் என சொல்லும் குலம் மட்டுமே அதை செய்வதாக சொல்லுகிறோம். எனக்கு தெரிந்தவரை அவர்களில் அனேகர் அவற்றை சரியாக செய்வதில்லை. இன்னும் ஒரு ஐநூறு வருடங்களில் பல கலாச்சார மாற்றம் ஏற்படலாம்.

உங்கள் கொள்ளுப்பேரனோ பேத்தியோ பலவருடம் கழித்து ஒரு ஆன்மீகவாதியிடம் “ஏன் ஒரு சமூகம் மட்டும் தீபாவளி கொண்டாடுகிறார்கள் ?” என கேட்கும் நிலை வரலாம்.

பக்கத்து பிளாட்டில் இருப்பவர் இறந்த பின் துர்நாற்றத்தைவைத்து கண்டு பிடிக்கும் அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் நவநாகரீகமாக கொண்டாடப்படுகிறது. அப்படி இருப்பவர்கள் கொலுவைத்து பிறரை கூப்பிட்டு பாட்டு பாடி ரசனையுடன் கழிப்பார்களா?

சுயநலமான பணத்தேடல் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. ஒன்பது நாள் இதை கொண்டாடினால் என்ன கிடைக்கும் என கேள்வி கேட்கப்படுகிறது. வேலை வேலை என ஓடி குழந்தைகளிடம் கூட பேச முடியாமல் இருக்கும் உலகில் கொலுவைத்து கொண்டாடி ரசனையுடன் வாழ்வார்கள் என எதிர்பார்ப்பது நம் முட்டாள் தனமே.

பெண்களின் கலை ஆர்வத்திற்கும் ஆவர்களின் கைவேலைப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழா நவராத்திரியாகும். ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தின் சமூக நிகழ்வுகளை ஒரு சிறிய இடத்தில் பொம்மைகளாக செய்து வைத்திருப்பார்கள். அதை பார்க்கும் பொழுது அந்த வீட்டு பெண்மணியின் அறிவு மற்றும் திறன் வெளிப்படும்.

இந்த வருடம் ஒரு வீட்டில் பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஒரு பொம்மையாக அமைத்திருந்தார்கள். ஈழ படுகொலையை இன்னொரு பெண் தத்ரூபமாக செய்து அதன் அருகில் அவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி இருந்தாள்.

ஒருவீட்டின் பெண் அறிவாக இருக்கிறாள் என்றால் அந்த வீடு சுபிக்‌ஷமாக இருக்கும் என்பதன் அடையாளம். பலவீடுகள் அப்படி இருந்தால் அந்த சமூகம் ஆரோக்கியமாக இருக்கிறது என அர்த்தம்.

இனி வரும் காலத்திலாவத் பெண்கள் நவராத்திரி கொண்டாட்டத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான சமூதாயத்தை ஏற்படுத்துவார்கள் என பிரார்த்தனை செய்வோம்.

23 கருத்துக்கள்:

புன்னகை said...

நன்றி ஸ்வாமி
சில இடங்களில் கேள்வி கேட்டால் கேட்டவரை மட்டம்தட்டும் பதில் அல்லது சிந்திக்காதே என்று வலியுறுத்தும் பதில் வருகிறது ,
உங்களின் பொறுமைக்கும் தெளிவிற்கும் எனது நன்றிகள்.

பித்தனின் வாக்கு said...

its good and swamiji, different explanation and accepted one

Manohar said...

சுவாமிஜி,
நல்ல தெளிவான பதில், நவராத்திரி அறிவியல் பூர்வமாகவும் கொண்டாடபடவேண்டிய அல்லது உணரப்படவேண்டிய ஒரு நிகழ்வுதானே? அதை எப்போ சொல்லுவிங்க?

Mahesh said...

அருமையான விளக்கம் ஸ்வாமிஜி...
அருமை !!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புன்னகை,
உங்கள் வருகைக்கு நன்றி.

திரு பித்தன்,
உங்கள் வருகைக்கு நன்றி.

திரு மனோ,

அறிவியல் பூர்வமான தன்மை இல்லாமல் நம் கலாச்சாரத்தில் ஒன்றும் இல்லை. நவராத்திரியும் அறிவியல் பூர்வமானது. அதை அறிய பல விஷயங்களை தொடவேண்டும்.

உங்கள் வருகைக்கு நன்றி.

திரு மகேஷ்,
உங்கள் வருகைக்கு நன்றி.

essusara said...

எல்லாவற்றையும் அறிவியலோடு இணைத்து பார்க்கும் தன்மை தற்பொழுது அதிகமாகி வருகிறதே. அறிவியல் உண்மை இருந்தால் மட்டுமே நான் ஏற்று கொள்வேன் , இல்லை என்றல் அது மூட நம்பிக்கை வகையில் சேர்த்து விடுகிறார்களே சுவாமி .இது உண்மையில் நலம் பயக்குமா என்ற ஐயம் உள்ளது .அறிவியலையும் உடைத்து கொண்டு சில நிகழ்வுகள் அவ்வபோது நடந்து கொண்டுதான் இருக்கிறதே ?

அறிவியலும் ,ஆன்மிகமும் இணையும் புள்ளியாக எதை கருதுகிறிர்கள் சுவாமி ?

கோவி.கண்ணன் said...

//சுவாமிஜி, இப்பொழுதெல்லாம் நவராத்திரி பூஜை குறிப்பிட்ட சில சமூகத்தினரால் ( பிராமின்ஸ் ) மட்டுமே வீட்டில் கொண்டாடப்படுகிறது.//

ஆச்சாரா அனுஷ்டானத்தோடு இருந்துண்டு விராமீன் சாப்பிடாதவர் மட்டும் தான் நவராத்ரி பூசை நடத்தனும் என்று யாராவது கிளப்பிவிட்டு இருக்கவேண்டும். அதனால் தான் பிராமின்ஸ் மட்டும் பூசை செய்றா(ர்) போல

குலசேகரன் said...

அவர் கேட்ட கேள்வி - ஏன் பார்ப்பனகுலத்தாரால் மட்டுமே இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது ?

உங்கள் பதில்: ஆதிகாலத்தில் எல்லாரும் கொண்டாடினார்கள். தற்போது இவர்கள் மட்டும் கொண்டாடுகிறார்கள்.

மற்றவர்கள் விட்டதற்கு, தற்கால கலாச்சாரமாற்றங்களே கார்ணம் என்கிறீர்கள். அஃது பார்ப்பனர்களைப் பாதிக்கவில்லை என்பதுபோலாகிறது. இல்லையில்லை...அவர்களையும் பாதிக்கிறது...இன்னும் சில காலத்திற்குப் பின்னர் அவர்களும் விட்டுவிடுவர் என சொல்கிறீர்கள். இல்லையா?

தற்கால கலாச்சாரமாற்றங்கள் இன்னும் குக்கிராமங்களுக்கும், சிற்றூர்களுக்கும் வரவில்லை. அவ்வூர்களில் பார்ப்பனர்கள் சிலரே. ஆனால் அவர்கள் கொலுவைத்துக் கொண்டாடுவதுண்டு. மற்றவர் செய்வதில்லை. மற்றவர் ஏன் கொண்டாடவில்லை?

பட்டணமாகட்டும், கிராமமாகட்டும், கலாச்சார மாற்றமாகட்டும், இல்லாமலும்போகட்டும், ஏன் பார்ப்பன்ர் மட்டும் இப்பண்டிகையை கொலுவைத்துக் கொண்டாடுகின்றனர். மற்ற்வர் செய்வதில்லை என்பதற்கு பதில் இல்லை.

என் பதில் என்னவென்றால், பார்ப்பனர்களின் கலாச்சாரம் இந்துமத்ததையொட்டி நெருங்கி வந்த ஒன்றாகும். இந்துமதமே பார்ப்பனர்கள் கலாச்சாரமாகும். இந்துமதம் இல்லையென்றால் பார்ப்பனர் இல்லை. அவர்கள் இன்றும் விடவில்லை. மற்றவரும் அவரிடமிருந்து (ஒருசிலவற்றைத்தவிர) எதையும் பெற்றுக்கொள்ளவைல்லை.

’அவர்’ தனி. ’இவர்’ தனி.

எனவே, இவர், கொலுவைத்து நவராத்திரியைக்கொண்டாடுவது பார்ப்பன் கலாச்சாரம் என தான் காணும் ஒரு உண்மையைச் சொல்வது என்ன தவறு?

இது மட்டுமல்ல; எவ்வளவோ மதச்செயல்கள் பார்ப்பனரின் கலாச்சாரமாகவே போனது என்பது தமிழ்மக்களின் வாழ்க்கையை உற்றுனோக்குபவருக்கு புலனாகும்.

பார்ப்பனர்கள் தத்தம் தனிப்பட்ட வாழ்க்கையில் பிறமக்களோடு ஒட்டவில்லை. தனித்தே நிற்கிறார்கள். அதை அவர்கள் கட்டிக்காத்து வருகிறார்கள். யூதர்களைப்போல.

SRI DHARAN said...

சுவாமிஜி தங்களது பதிலைப் போல இனி வருங்காலத்தில் நடக்குமா? என்பது ஐயமே! மிக்க நன்றி சுவாமிஜி!

தாரணி பிரியா said...

எனக்கு கொலு வைக்க ரொம்ப ஆசை. ஆனா வீட்டுல முன்னாடி பெரியவங்க முதல்ல ஆரம்பிச்சு இருந்தா தான் நம்ம வைக்க முடியுமுன்னு சொல்லி வைக்க விட மாட்டேங்கறாங்க. நான் முதல்ல ஆரம்பிச்சு வெக்கறேன். எனக்கு பின்னாடி தலை முறை அதை தொடரட்டுமுன்னு சொன்னாலும் வேண்டாம் சொல்லறாங்க :(

Siva Sottallu said...

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஸ்வாமி.

// அறிவியல் முன்னேற்றம் அடைய அடைய மனித வாழ்க்கையில் சில விஷயங்கள் தலைகீழாகும் என்பது உங்களுக்கு தெரியுமா? //

எனக்கு தெரிந்த ஓன்று, உணவை மேஜை மீது அமரவைத்து மனிதர்கள் நின்று சாப்புகிறார்கள்.

இதை விஞ்ஞான வளர்ச்சி என்பதா இல்லை கால மாற்றம் என்பதா தெரியவில்லை.

அறிவிலி said...

கேள்விக்கு பதில் டைரெக்டா இல்லியே ஸ்வாமி.

அறிவுள்ள பெண்கள் கொலு வைக்கிறார்கள் அப்படின்னு வெச்சுக்கலாமா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு essusara ,


//அறிவியலும் ,ஆன்மிகமும் இணையும் புள்ளியாக எதை கருதுகிறிர்கள் சுவாமி ?///

விழிப்புணர்வு நிலை என்பதே அப்புள்ளி.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,
உங்கள் வருகைக்கு நன்றி.

திரு கள்ளபிரான்,

நான் என்ன உ.போ.ஒ விமர்சனமா எழுதினேன் ? :)) பார்பானீயம், யூதர்கள் இனவாதம் என என்னனவே சொல்லுகிறீர்கள். எனக்கு தெரியாத விஷயங்களை நிறைய சொன்னீர்கள்.

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி தரணிப்ரியா,

நீங்கள் தாராளமாக ஆரம்பிக்கலாம். மனமும் குணமும் இருந்தால் எதுவும் தடையில்லை.

சிறிய அளவில் மூன்று படிகளுடன் சில பொம்மைகளுடன் துவங்குங்கள். பிறருக்கு உதாரணமாகவே இருந்து பழகிய நாம் இதில் விதிவிலக்காக இருக்கலாமா... ? :)

வரும் விஜய தசமி அன்று மனதில் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள் அடுத்தவருடம் கொலுவைப்பது என...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அறிவிலி,

கேள்விக்கு பதில் எப்படி இருக்கவேண்டும் என கட்டமைப்பு எல்லாம் கிடையாது. கேள்வி கேட்டவர் அதை உணர்ந்தால் போதும். பிறர் காலம் கடந்து உணரலாம். அவ்வளவே.

நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை நான் சொல்ல வேண்டும் என்பதால் உங்களுக்கு அப்படி தெரியலாம்.

//அறிவுள்ள பெண்கள் கொலு வைக்கிறார்கள் அப்படின்னு வெச்சுக்கலாமா?//

என் பதிலில் அதை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

அறிவு, சுயநலமற்ற மற்றும் கலைத்திறன் உள்ள பெண்கள் கொலுவைப்பார்கள். பிறர் மெகாசீரியல் பார்ப்பார்கள்.

senapathi said...
This comment has been removed by the author.
துளசி கோபால் said...

அருமையான பதில் ஸ்வாமி.

நம்வீட்டுக் கொலுவுக்கும் வந்து போகணுமுன்னு கேட்டுக்கொள்கின்றேன்.

http://thulasidhalam.blogspot.com/2009/09/1.html

Mahesh said...

//அறிவு, சுயநலமற்ற மற்றும் கலைத்திறன் உள்ள பெண்கள் கொலுவைப்பார்கள். பிறர் மெகாசீரியல் பார்ப்பார்கள்.
//

ஸ்வாமி... நீங்க ஜோக்குக்காக சொல்லியிருக்கலாம்... ஆனா இன்னிக்கு இருக்கற பொருளாதார, இட, குடும்ப நெருக்கடிகளுக்கு இடையில செய்ய ஆசையும், அறிவும், கலைத்திறனும் இருந்தும் கூட செய்ய முடியாம பல பேர் இருக்காங்க. அதுவும் கசப்பான உண்மை,.

விஜய் said...

விஸ்வகர்மா சமூகத்தினரும் காலம் காலமாக கொலு வைத்து வருகின்றனர்.

Anonymous said...

அருமையாக விளக்கினீர்கள் சுவாமி!

வால்பையன் said...

பொந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை சடங்குகள்!?