Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, September 17, 2009

தசமஹா வித்யா

தசமஹா வித்யா
- சக்தியின் வடிவங்கள்.

பிரபஞ்ச ரகசியங்களில் பல விஷயங்கள் மனித நிலையில் உணர முடியாது. பிரபஞ்சமும் உயிர்களும் தோன்றுவதும், அழிவதும் ஏன் என்பதும் - அவை எவ்வாறு ஏற்படுகின்றது என்பதும் விடுவிக்க முடியாத முடிச்சாகவே இருக்கிறது. மனித அறிவால் உணரமுடியாத விஷயங்களை தெய்வீக நிலையால் உணரலாம். மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு மாற்றமடைவது எளிதான விஷயமா? பல பிறவிகளாகவும் பல யுகங்களாகவும் பலர் முயற்சி செய்து கிடைக்காத விஷயத்தை நம்மால் பெறமுடியுமா என உங்கள் கேள்விகள் விரிவடைந்து கொண்டே செல்வதை நான் அறிவேன். உலகின் மும்முதல் பணி என அழைக்கப்படும் படைத்தல் - காத்தல் - அழித்தல் இவற்றை தெரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த பணிகளை செய்பவராக மாறினால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.

தெய்வீகமான முப்பணிகளை செய்யும் ஆற்றல் பெற்றவுடன் உங்களின் நிலை முழுமையை பெறும். இந்த நிலையே முக்தி அல்லது பிரம்மஞானம் என கூறப்படுகிறது. மேற்சொன்ன வார்த்தைகளை கூர்ந்து கவனியுங்கள். முப்பணிகளை செய்ய "ஆற்றல்" அவசியம். இந்த ஆற்றலே "சக்தி" என அழைக்கப்படுகிறது.

நடைமுறையில் ஆற்றல் என்ற சொல்லும், சக்தி என்ற சொல்லும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இவை இரண்டும் வெவ்வேறானது. ஆற்றலுக்கு அழிவில்லை. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றலாம் என விஞ்ஞான ரீதியாக குறிப்பிடுபவை "ஆற்றல்" என கூறலாம். தோற்றமும், முடிவும் அற்ற எங்கும் எல்லா பொருட்களிலும் வியாபித்து இருக்கும் ஓர் வஸ்து "சக்தி" எனலாம். இதை எளிய உதாரணம் மூலம் தெரிந்துகொள்வோம். வயது முதிர்ந்த ஒருவர் இளைஞகளைப் போல ஓட்ட பந்தயத்தில் கலந்துகொண்டார் என்றால் அவருக்கு இளைஞர்களைப் போல ஆற்றல் உண்டு எனலாம். ஓர் இடத்தில் இல்லாதது மற்றொரு இடத்தில் இருப்பதால் ஆற்றல் அழிவதில்லை. இடமாற்றம் அடையும் எனும் கூற்று கூறப்படுகிறது.


தனது குழந்தையின் மேல் தாய் காட்டும் பாசம் அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு காரணமாகிறது. இந்த தாய்மை உணர்வு பெண்களுக்கு ஏற்பட எந்த தூண்டுதலும் கிடையாது. தாய்மை எனும் உணர்வு எல்லா தாய்மார்களுக்கும் பொதுவானது மற்றும் ஏற்றத்தாழ்வு இருக்காது. இதனால் தாயுணர்வு இங்கு சக்தியாக மாறுகிறது. வெவ்வேறு வயதில் தாய்மை அடைந்தாலும் தாய்மை எனும் சக்தி மாறாது. ஆற்றலுக்கு மாறும் தன்மை உண்டு. ஆனால் சக்தி மாற்றம் அடைந்தாலும் சக்திநிலை மாற்றம் அடையாது. ஆங்கிலத்தில் Energy, power என்று பொதுவாக கூறப்பட்டதால் ஆற்றல், சக்தி என்ற வார்த்தைகள் பொதுவாகவே அர்த்தம் கொள்ளப்படுகிறது.


இவற்றை விளக்க காரணம் முப்பணிகளை செய்யும் தெய்வீக நிலைக்கு " சக்தி " அவசியம். சக்தி நிலை இல்லை என்றால் எதுவும் இயங்காது. உடனே சிவம் பெரிதா, சக்தி பெரிதா எனும் பட்டிமன்றத்தை துவங்க வேண்டாம். இரு நிலைகளும் இருந்தால் மட்டுமே செயல் நடைபெறும். சிவம் என்பது உடல், சக்தி என்பது உயிர். இதில் எது இருந்தால் நல்லது என கூறமுடியுமா? இரண்டும் இணைந்த நிலையே சக்தி நிலை என கூறப்படுகிறது.


பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்து செயலுக்கும் ஒரே சக்தி காரணமாக இருக்கிறது. இந்த மாபெரும் சக்தியே மஹாசக்தி என கூறப்படுகிறது. இந்த சக்தி இல்லாத பிரபஞ்சத்தை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. காரணம் அந்த கற்பனையை செய்வதும் செய்ய தூண்டுவதும் இந்த மஹாசக்தியே ஆகும்.

இந்த மஹாசக்தி தனது நிலையை பத்து விதமாக வெளிப்படுத்துகிறது. பத்து விதமான மஹாசக்தியை தசமஹாசக்திகள் என அழைக்கலாம். இந்த மஹாசக்திகளை அறிந்துகொள்ளும் முறை "தசமஹாவித்யா" என்றழைக்கப்படுகிறது. 'வித்யா' எனும் வார்த்தை இங்கு ஞானம் எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் மந்திரசாஸ்திரம் பற்றி விவாதித்தோம். சென்ற மாதத்தில் யந்திர சாஸ்திரம் பற்றி விளக்கி இருந்தேன். யந்திர - மந்திர மற்றும் தந்திர எனும் மூன்றாக பிரிக்கப்பட்ட சாஸ்திரத்தில் தசமஹாவித்யா என்பது தந்திர சாஸ்திரத்தின் ஓர் பகுதியாகும். தந்திர சாஸ்திரம் என்றதும் அனைவரும் தவறான மதிப்பீட்டையே வைத்திருக்கிறார்கள். "தந்த்ரா" எனும் சொல்லுக்கு உயர்நுட்ப முறை என்று அர்த்தம். யந்திர மற்றும் மந்திரசக்தி துணை கொண்டு ஓர் இலக்கை அடையும் முறையே தந்த்ரா என புரிந்துகொள்ளுங்கள். இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இது எல்லாம் வழக்கத்தில் உள்ளதா அல்லது பயன்படுமா என நீங்கள் கேட்கலாம்.

கணிப்பொறி இயந்திரம் ஒர் செயல்படாத பொருள். அதன் உதிரி பாகங்களை பிளந்து பாருங்கள் ஒன்றும் இருக்காது. மேலும் அவை சிலிகா எனும் மண், செப்பு கம்பிகளை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உயிரற்ற கருவிகள் மனிதன் இடும் கட்டளைக்கு செயல்பட்டு பல விதங்களில் மனித வாழ்வை உயர்த்துகிறது. இதே தத்துவத்தின் உயர்நிலை வடிவம் தான் தந்த்ரா.


கணிப்பொறியை நம்பும் மனிதன் கண்ணால் பார்க்காத காரணத்தால் தந்த்ர சாஸ்திரத்தை நம்புவதில்லை. இங்கே இந்த நிலை என்றால் வெளிநாட்டில் இதைவிட கீழ்நிலையில் தந்த்ரா உணரப்படுகிறது. ஆண் - பெண் பாலின தொடர்பு மூலம் உயர்நிலையை அடையும்முறை என சில இந்திய ஆன்மிக வாதிகளால் கூறப்பட்டதால் மேல் நாட்டினர் தந்த்ரா என்றதும் ஆன்மீக உயர்வை அடையாமல் பாதாளத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.


தந்த்ரா பல வழிகளில் கையாளப்பட்டாலும் யாருக்கும் பாதிக்காத நிலையில் இருந்து ஆன்ம உயர்வுக்கு மட்டுமே பயன்படும் பகுதிதான் தசமஹாவித்யா. தந்த்ராவை எளிமையாக புரிந்துகொள்ள இதைவிட வேறுபகுதி இல்லை. அதே நேரத்தில் இந்த எளிய வழியின் மூலம் ஏற்படும் விளைவு பிரமாண்டமானது. Technology எனும் ஆங்கில வார்த்தை ஓரளவு தந்த்ரா என்னும் வார்த்தையை மொழிபெயர்க்கும். [Science] அறிவியல் ஆராய்ச்சி என்றால் வளர்ச்சி அடையக்கூடிய முற்றுபெறாத அறிவு எனலாம். உயர்நுட்பம் Technology என்றால் வளர்ச்சி அடையக்கூடிய முற்றுப்பெற்ற முழுமையான அறிவியல் என்று பெயர். இதைப்போல மெய்ஞானத்தின் திறவுகோல் என்பது தந்த்ரா.


நவராத்திரி துவங்கும் இவ்வேளையில் தந்திர முறையில் செயல்படும் தசமாஹாவித்ய பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.


(தொடரும்)

31 கருத்துக்கள்:

DHANA said...

நன்றி சுவாமிஜி

DHANA said...

நன்றி சுவாமிஜி

Thirumal said...

ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்
நன்றி...

Siva Sottallu said...

தந்த்ரா, Technology என்பதை விட Technique என்னும் சொல் பொருத்தமாக இருக்குமா ஸ்வாமி.

தசமஹா வித்யா, நான் இதுவரை அறிந்திராத, கேள்விபட்டிராத ஒரு விஷயத்தை அறிய ஆவலாக இருக்கிறேன் ஸ்வாமி.

snkm said...

தங்களின் கருத்துகளை படிக்க ஆவலாக உள்ளோம்!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு DHANA,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு திருமால்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா ,

//தந்த்ரா, Technology என்பதை விட Technique என்னும் சொல் பொருத்தமாக இருக்குமா ஸ்வாமி.//

நான் டெக்னாலஜி என கூற சில காரணம் உண்டு. அதை விளக்குகிறேன்.

நீங்கள் கணினிதுறை சார்ந்தவராக இருந்தால் உங்களுக்கு என் விளக்கம் எளிமையாக புரியும்.

கணினி என்பது டெக்னாலஜி.
மனித வாழ்க்கையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் எதுவும் டெக்னாலஜி என கூறுவார்கள். மேலும் ஒரு உதாரணம் - சாட்டிலைட் என்பது ஒரு டெக்னாலஜி.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் மனித வாழ்க்கை டெக்னாலஜிக்கு முன்னும் பின்னும் பன்மடங்கு வேறுபட்டிருக்க வேண்டும்.

டெக்னிக் என்பது ஒருவித யுக்தி. சார்லஸ் பாபேஜ் என்பவர் கண்டறிந்த கணிப்பொறிக்கும் தற்காலத்தில் இருக்கும் கணிப்பொறிக்கும் வித்தியாசம் அதிகம். இருந்தாலும் அவர் காலத்தில் டெக்னாலஜி துவங்கி இக்காலம் வரைக்கும் இருக்கிறது...ஆனால் அதில் பல டெக்னிக்குகள் வளர்ந்துவிட்டன.

முதல் சாட்டிலைட் அனுப்பபட்டதும், சந்திராயனும் சாட்டிலைட் தான் டெக்னாலஜி ஒன்று என்றாலும் டெக்னிக் ஒன்று அல்ல...!

அது போல தந்திரா என்பது ஒரு டெக்னாலஜி. அதில் தசமஹா வித்யா என்பது ஒரு டெக்னிக்.
தசமஹா வித்யா போன்று தந்திராவில் நிறைய டெக்னிக்குகள் உண்டு.

ஓரளவு உங்களின் புரிதலை திருத்திவிட்டேன் என நினைக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சங்கரநாயணன் (snkm),
உங்கள் வருகைக்கு நன்றி.

krish said...

சக்திக்கும் ஆற்றலுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கியது அருமை.

ers said...
This comment has been removed by a blog administrator.
புன்னகை said...

சரியான நேரத்தில் சரியான ஆரம்பத்திற்காக என்னுடைய தாழ்மையான நன்றிகள்.
தங்களுடைய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

Anonymous said...

சுவாமி, தசமகாவித்யா ஸ்ரீவித்யா இந்த இரண்டுமே ஒன்று தானா? அல்லது வெவ்வேறா? தந்தர முறை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன், அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவல். விஞான பைரவ தந்தர எனும் நூல் இந்த முறையை சார்ந்தது தானா? அனந்த லகிரி மற்றும் சௌந்தர்யா லகிரி இதுவும் தந்தர தானா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிருஷ்,
திரு புன்னகை,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தினேஷ் பாபு,
//சுவாமி, தசமகாவித்யா ஸ்ரீவித்யா இந்த இரண்டுமே ஒன்று தானா? அல்லது வெவ்வேறா? தந்தர முறை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன், அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவல். விஞான பைரவ தந்தர எனும் நூல் இந்த முறையை சார்ந்தது தானா? அனந்த லகிரி மற்றும் சௌந்தர்யா லகிரி இதுவும் தந்தர தானா?//


நிறைய படிச்சுட்டீங்களோ :)

தசமஹாவித்யாவின் ஒரு உள்கட்டமைப்பு தான் ஸ்ரீவித்யா.

செளந்தரிய லகரி, ஆனந்த லகரி ஆகியவையும், விஞ்ஞான பைரவ தந்த்ராவும் தந்திர முறைகளின் வகைகள்.

திரு சிவாவிற்கு சொன்ன விளக்கத்தை மீண்டும் இங்கே சொல்லுகிறேன்.

தந்திரா என்பது டெக்னாலஜி, செளந்தரிய லகரி, விஞ்ஞான பைரவ தந்த்ரா எல்லாம் டெக்னிக்குகள்.

உங்கள் வருகைக்கு நன்றி.

நிகழ்காலத்தில்... said...

//அது போல தந்திரா என்பது ஒரு டெக்னாலஜி. அதில் தசமஹா வித்யா என்பது ஒரு டெக்னிக்.
தசமஹா வித்யா போன்று தந்திராவில் நிறைய டெக்னிக்குகள் உண்டு.//


எளிமையா புரியுது சாமி !

--புரியாத பொன்னுச்சாமி

கோவி.கண்ணன் said...

இந்தப் படத்தில் நான் புரிந்து கொள்வது இயற்கை அன்னை (சக்தி) பரம்பொருளுக்கு (ஈஸ்வரனுக்குக்) கட்டுப்பட்டவளல்ல என்பதைத் தான். இயற்கை காலம் இடம் மாறுத்தலாக முழுக்க முழுக்க தன்னிச்சையானது என்பதாக எனது புரிதல்

Siva Sottallu said...

// ஓரளவு உங்களின் புரிதலை திருத்திவிட்டேன் என நினைக்கிறேன். //

தெள்ளத்தெளிவாக (Crystal Clear) ஆகா விளக்கி விட்டிர்கள் ஸ்வாமி. மிக்க நன்றி.

நீங்கள் யூகித்தது போல் நான் கணினிதுறை சார்ந்தவநாக இருப்பதால் மிக எளிதில் புரிந்துகொண்டேன் ஸ்வாமி.

Anonymous said...

//நிறைய படிச்சுட்டீங்களோ :)//

பிரச்சனையே அதுதான் சுவாமி, ஒழுங்கா படிச்சா கேள்வி இருக்காது. சும்மா மேலோட்டமா கேள்வி பட்டா இப்பிடி கண்ணா பின்னா என்று கேள்வி வரும்!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புரியாத பொன்னுசாமி,

உங்களுக்கே புரிந்துவிட்டது என்றால் என் விளக்க மிகமிக தெளிவானது என அர்த்தம் :)

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

படத்தை பற்றிய கருத்து ஓரளவே சரி.
உண்மையான விஷயம் என்ன வென்றால்..

சிவ நிலை என்பது நம் யோக நிலையை குறிக்கும், காளி என்பவள் ஆணவத்தின் சொரூபம். எப்பொழுதும் நம் யோக சக்தியும் , ஞானமும் ஆணவத்தின் காலடியில் கிடக்கிறது என்பதே அது குறிக்கிறது.

காளியை(ஆணவத்தை) நீங்கள் வசமாக்கினால் அந்த சிவனை(ஞானத்தை) நீங்கள் காப்பாற்றலாம்.

உங்களுக்கு அந்த பதிவில் படம் மட்டும் தான் தெரிந்ததா :) ? பல வரிகள் எழுதி இருக்கேன் அதை பற்றியும் கருத்து சொல்லுங்க :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தினேஷ் பாபு,

//பிரச்சனையே அதுதான் சுவாமி, ஒழுங்கா படிச்சா கேள்வி இருக்காது. சும்மா மேலோட்டமா கேள்வி பட்டா இப்பிடி கண்ணா பின்னா என்று கேள்வி வரும்!//

உண்மைதான். காலி குடமும், நிறைகுடமும் தளும்பாது :)

பித்தனின் வாக்கு said...

சுவாமி இந்த வித்தையை எப்படி கற்பது,எவ்வாறு செய்வது,என்ன பண்ண வேண்டும் என்றும் விளக்கமாக கட்டுரை எளுதினால் நாங்கள் படிப்பதுடன் அதனை செய்யவும் வசதியாக இருக்கும். ஆதாலால் உங்கள் கட்டுரை ஒரு கட்டுரையாக இல்லாமல் எங்களுக்கு ஒரு குருவாக வழிகாட்டுமாறு அமையுங்கள். இது கண்டிப்பாக வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் என நம்புகின்றேம். தங்களின் பணி சிறக்கட்டடும்.

எம்.எம்.அப்துல்லா said...

// கோவி.கண்ணன் said...
இந்தப் படத்தில் நான் புரிந்து கொள்வது இயற்கை அன்னை (சக்தி) பரம்பொருளுக்கு (ஈஸ்வரனுக்குக்) கட்டுப்பட்டவளல்ல என்பதைத் தான். இயற்கை காலம் இடம் மாறுத்தலாக முழுக்க முழுக்க தன்னிச்சையானது என்பதாக எனது புரிதல்

//

நம்ப சவுரியம்தாண்ணே. நமக்கு எப்படி புரியுதோ அப்படித்தான் அது :)

sasi said...

ரொம்ப நாளா உங்களை காணவில்லை.... ஏன் சுவாமிஜி...

Unknown said...

அருமையான பதிவு சுவாமிஜி. மேலும் தொடர என் தாழ்மையான வேண்டுகோள்.

Siva Sottallu said...

// காளியை(ஆணவத்தை) நீங்கள் வசமாக்கினால் அந்த சிவனை(ஞானத்தை) நீங்கள் காப்பாற்றலாம். //

சில மாததுக்கு முன்பு நான் காளி கோவிலுக்கு சென்றபொது இந்த கேள்வி (காளி ஏன் சிவனை மிதிக்கிறாள்) எனக்குள் தோன்றியது, அதற்கு விடை இன்று உங்கள் தயவால் கிடைத்தது. நன்றி ஸ்வாமி.

senapathi said...

நன்றி சுவாமிஜி

sarul said...

வணக்கம் ஸ்வாமி

//உங்கள் கட்டுரை ஒரு கட்டுரையாக இல்லாமல் எங்களுக்கு ஒரு குருவாக வழிகாட்டுமாறு அமையுங்கள்.//

நானும் அதை எனது தாழ்மையான் வேண்டுகோளாக முன்வைக்கிறேன்

seethag said...

தந்த்ரம் என்ராலே கேரளத்து
ஜீ பூம்பா தன் ஞாபகம் வருது ஸ்வாமிஜி.ஒருமுறை ஒரு மந்திரவாதி ஒருவர் குடிப்பழக்கம் விடுவதர்க்காக வைத்தியத்திர்க்க்உ வந்திருந்த்தார்.அவர் சொல்வதைக் கேட்டு பயமாக இருந்தது.அவர் குடும்பத்தில் யாரும் உருப்பட்டிருக்கவில்லை.

நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் நல்ல பயன் தரும் ஸ்வாமிஜி. மிகுந்த நன்றி.

விஜய் said...

இந்து மதம் எங்கே போகிறது எழுதிய தாத்தாசாரியர்க்கே வெளிச்சம்.