நடப்பது நல்லதற்கே.
சென்ற வருடம் இதே நாளில் தான் அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்றது. ஆமாம் நான் இந்த வலைப்பக்கத்தை துவங்கினேன். எந்த ஒரு திட்டமோ, கட்டமைப்போ இல்லாமல் நமக்கு தெரிந்த உண்மையை பிறருக்கு சென்று கொடுக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது. ஆன்மீகம் - ஜோதிடம் என்ற பெயரில் மனதில் ஏற்படும் சுயமாயத்தோற்றத்தை கிழித்து நிதர்சனத்தை புகுத்தும் முகமாக பயணித்துவருகிறேன். ஜோதிடத்திற்காக துவக்கபட்டது, நீ எப்படி ஜோதிடம் தவிர பிற விஷயங்களை எழுதலாம் என கேட்டதால் சாஸ்திரத்திற்காக தொடருகிறது. அகோரிகள், ஸ்ரீ சக்ர புரி போன்ற தொடர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிவுகளாக அமைந்தது.
முதலில் குரு கதைகள் எழுத மட்டுமே வந்த நான், இந்த வலைதளத்தால் அந்த குருகதைகளை மிகவும் தாமதமாக எழுதுகிறேன். சாஸ்திரம் பற்றிய திரட்டு என்னை அதிகமாக ஆக்கிரமித்தது.
வலைதளத்தில் எழுதுவதில் இருக்கும் சில நன்மை தீமைகள் உண்டு.
நன்மை : எனது பிம்மத்தை மனதில் கொள்ளாமல் நடுநிலையாக விமர்சனம் வருவது. தாங்கள் படித்தவிஷயத்தை என்னிடம் பேசும் பொழுது நினைவுபடுத்துவது.
தீமை : மிக முக்கியமாக சென்று சேர வேண்டும் என எழுதிய பதிவுகளை மக்கள் சீண்டாமல் போவது. ”மொக்கை” பதிவுகள் அதிகமாக மக்களை கவர்வது.
ஒரு வருடத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன்? இந்த வலைதளம் பற்றிய நிறை-குறைகளைமுடிந்தால் பின்னூட்டத்தில் பதியுங்கள்...!
ஹேப்பி பர்த் டே வேதிக் ஐ...!
சென்ற வாரம் வட இந்திய புனித ஸ்தலங்களுக்கு சென்று இருந்தேன். சுப்பாண்டியும் என்னுடன் பயணித்தான். ரிஷிகேஷ் சென்றதும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கங்கையை சுட்டிக்காட்டி“ஸ்வாமிஜி ரிஷிகேஷில் ஆறு இருக்கும்னு சொன்னீங்க, இங்க ஒன்னுதான் இருக்கு. ஏமாத்திட்டீங்களே ஸ்வாமி..” என்றான். நான் ஒன்றும் பேசவில்லை. தியானம் செய்யும் முன் மனசை கெடுத்துக்கலாமா? பொறுமையாக சென்றுவிட்டேன்.
ரிஷிகேஷில் இருந்து நாற்பது கி.மீ தூரத்தில் தேவ ப்ரயாக் என்ற ஊர் உண்டு. பாகீரதி என்ற பெயரில் ஓடும் நதியும், அல்காநந்தா என்ற நதியும் இணைந்து சங்கமித்து இங்கிருந்து தான் கங்கை என்ற பெயரில் நதி உருவாகிறது. இரு நதியும் சங்கமிக்கும் இடத்திற்கு சென்றதும் சுப்பாண்டியை பார்த்து, “சுப்பு இங்க பாரு பாதி ஆறு ஓடுது” என்றேன். சுப்பாண்டி என்னை குழப்பத்துடன் பார்த்தான்.
”பாகீரதியும், அல்காநந்தாவும் இணைந்து கங்கையாக மூணா ஓடுது அப்போ ஆறுல பாதிதானே?” என்றேன். என்ன செய்யறது நாமளும் சில நேரத்தில சுப்பாண்டி ஆக வேண்டி இருக்கு.....!
ஒரு பிரபல பதிவர் சாட்டில் (உரையாடியில்) வந்து, “நீங்க எல்லாம் என்ன எழுதறீங்க. ஒருத்தர் பாருங்க ருத்திராட்ஷம் பற்றி அருமையா எழுதி இருக்கார்” என அதன் சுட்டியைக் கொடுத்தார். அங்கே சென்று பார்த்த எனக்கு அதிர்ச்சி. காரணம் இந்த வலைதளத்தில் வந்த ருத்திராட்ஷம் பற்றிய கட்டுரையை அப்படியே காப்பி செய்து அங்கே பேஸ்ட் செய்திருந்தார் அந்த புண்ணியவான்.
அவருக்கு தனி மடலில் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிறகு அதை நீக்கி விட்டார். வேறு யார் எல்லாம் இதில் இருக்கும் தகவல்களை பயன்படுத்துகிறார்களோ தெரியவில்லை.
அது இருக்கட்டும்... தகவலை ஒருவர் சொல்லாமல் எடுப்பதைகாட்டிலும், எனது கட்டுரையை பிற வலைதளத்தில் வந்த பிறகுதான் "அருமையா எழுதி இருக்கார்னு சொல்ல வேண்டுமா?” நீங்க எல்லாம் முழுமையா என் கட்டுரையை படிக்கிறீங்களா தங்கங்களே?
இன்னொரு பதிவர் ஒரு படி மேல போயி, ஸ்ரீ சக்ர புரி காப்பிரயிட்குள்ள வருமா? என்றார். ஏன் என கேட்டேன். “அது தான் நீங்க எழுதலயே?” என்றார். ஸ்ஸ்....பா..... இந்த வலையுலக பிரபலங்கள் தொல்லை தாங்க முடியலப்பா...
ஒரு கவிஞர் எழுதிய முற்போக்கு கவிதையை என்னிடம் காட்டினார் எனது மாணவர். கவிதையின் வரிகள் முழுமையாக நினைவில்லை, அதன் சாராம்சம் இதுதான். சிவனின் திருவிளையாடலில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு ஒன்று உண்டு.
முதியவளுக்கு பதிலாக தான் வேலை செய்வதாக கூறி, அவளிடம் இட்லியை சாப்'பிட்டு', வேலை செய்யாமல் உறங்கிவிடுவார் சிவன். அரசன் வந்து அவரை தண்டிக்க பிரம்பால் முதுகில் அடிக்க, உலக உயிர்கள் அனைத்திற்கும் முதுகில் பிரம்படி விழும். இந்த நிகழ்வை பற்றி அந்த கவிஞர் கவிதையில் எழுப்பி இருந்த கேள்வி என்னவென்றால் ,” பிரம்படி மட்டும் அனைவருக்கும் கிடைத்தது, இட்லி சிவனுக்கு மட்டும் ஏன் கிடைத்தது? அதுவும் அனைவருக்கும் சென்று இருக்க வேண்டும் அல்லவா?” (யாருக்காவது அந்த கவிதை வரிகள் தெரிந்தால் சொல்லலாம்)
கவிதை ஸ்வாரஸ்யமாக இருக்க நிகழ்வுன் சாரத்தை விட்டுவிட்டார்கள். என் மாணவனிடம் சொன்னேன், “சூரியன் ஒளிரும் பகல்வேளையில் திடீரென இருள் சூழ்தால் அதிசயம், சூரியன் மீண்டும் மீண்டும் ஒளிர்ந்தால் அதிசயம் அல்ல. அது போல உலக உயிர்களுக்கு என்றும் உணவை அளித்துவருபவன் ஈஸ்வரன். அதனால் அவன் உண்டு அனைத்து உயிர்களுக்கும் நிறைவு ஏற்படுவது எப்பொழுதும் நடந்தவண்ணம் இருக்கிறது. ஆதாவது பகல் போல. பிரம்படி என்பது திடீரென இரவு வருவது போல. அதனால் தான் ஒரு கணம் அனைவருக்கும் உணர முடிந்தது. மேலும் இதில் இருக்கும் உள் கருத்தை தெரிந்துகொள், நீ இறைவனுக்கு எதை கொடுக்கிறாயோ, அது உனக்கும், உன் சுற்றதிற்கும் பன்மடங்காக திருப்பி கொடுக்கப்படுகிறது. அது பிரம்படியாக இருந்தாலும்....” என்றேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?
அந்த ஈ மிகவும் பரபரப்பாக இருந்தது. குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு கைகளை பிசைந்து கொண்டும் இருந்தது. காரணம் ஈயின் துணைவிக்கு இன்று பிரசவம். சில நிமிடம் பரபரப்புடனேயே கழிந்தது. பிறகு நர்ஸ் வந்து “வாழ்த்துக்கள். உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு” என்றாள்.
குழந்தையை பார்க்க உள்ளே சென்ற ஈக்கு ஒரே அதிர்ச்சி. அனைவரும் குழந்தையை வணங்கி பூஜை செய்து கொண்டிருந்தனர். காரணம் என்ன தெரியுமா?
அது “ஈ-சன்”
சென்ற வருடம் இதே நாளில் தான் அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்றது. ஆமாம் நான் இந்த வலைப்பக்கத்தை துவங்கினேன். எந்த ஒரு திட்டமோ, கட்டமைப்போ இல்லாமல் நமக்கு தெரிந்த உண்மையை பிறருக்கு சென்று கொடுக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது. ஆன்மீகம் - ஜோதிடம் என்ற பெயரில் மனதில் ஏற்படும் சுயமாயத்தோற்றத்தை கிழித்து நிதர்சனத்தை புகுத்தும் முகமாக பயணித்துவருகிறேன். ஜோதிடத்திற்காக துவக்கபட்டது, நீ எப்படி ஜோதிடம் தவிர பிற விஷயங்களை எழுதலாம் என கேட்டதால் சாஸ்திரத்திற்காக தொடருகிறது. அகோரிகள், ஸ்ரீ சக்ர புரி போன்ற தொடர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிவுகளாக அமைந்தது.
முதலில் குரு கதைகள் எழுத மட்டுமே வந்த நான், இந்த வலைதளத்தால் அந்த குருகதைகளை மிகவும் தாமதமாக எழுதுகிறேன். சாஸ்திரம் பற்றிய திரட்டு என்னை அதிகமாக ஆக்கிரமித்தது.
வலைதளத்தில் எழுதுவதில் இருக்கும் சில நன்மை தீமைகள் உண்டு.
நன்மை : எனது பிம்மத்தை மனதில் கொள்ளாமல் நடுநிலையாக விமர்சனம் வருவது. தாங்கள் படித்தவிஷயத்தை என்னிடம் பேசும் பொழுது நினைவுபடுத்துவது.
தீமை : மிக முக்கியமாக சென்று சேர வேண்டும் என எழுதிய பதிவுகளை மக்கள் சீண்டாமல் போவது. ”மொக்கை” பதிவுகள் அதிகமாக மக்களை கவர்வது.
ஒரு வருடத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன்? இந்த வலைதளம் பற்றிய நிறை-குறைகளைமுடிந்தால் பின்னூட்டத்தில் பதியுங்கள்...!
ஹேப்பி பர்த் டே வேதிக் ஐ...!
---------------------------------------------------------------------
கோளாறு...!சென்ற வாரம் வட இந்திய புனித ஸ்தலங்களுக்கு சென்று இருந்தேன். சுப்பாண்டியும் என்னுடன் பயணித்தான். ரிஷிகேஷ் சென்றதும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கங்கையை சுட்டிக்காட்டி“ஸ்வாமிஜி ரிஷிகேஷில் ஆறு இருக்கும்னு சொன்னீங்க, இங்க ஒன்னுதான் இருக்கு. ஏமாத்திட்டீங்களே ஸ்வாமி..” என்றான். நான் ஒன்றும் பேசவில்லை. தியானம் செய்யும் முன் மனசை கெடுத்துக்கலாமா? பொறுமையாக சென்றுவிட்டேன்.
ரிஷிகேஷில் இருந்து நாற்பது கி.மீ தூரத்தில் தேவ ப்ரயாக் என்ற ஊர் உண்டு. பாகீரதி என்ற பெயரில் ஓடும் நதியும், அல்காநந்தா என்ற நதியும் இணைந்து சங்கமித்து இங்கிருந்து தான் கங்கை என்ற பெயரில் நதி உருவாகிறது. இரு நதியும் சங்கமிக்கும் இடத்திற்கு சென்றதும் சுப்பாண்டியை பார்த்து, “சுப்பு இங்க பாரு பாதி ஆறு ஓடுது” என்றேன். சுப்பாண்டி என்னை குழப்பத்துடன் பார்த்தான்.
”பாகீரதியும், அல்காநந்தாவும் இணைந்து கங்கையாக மூணா ஓடுது அப்போ ஆறுல பாதிதானே?” என்றேன். என்ன செய்யறது நாமளும் சில நேரத்தில சுப்பாண்டி ஆக வேண்டி இருக்கு.....!
----------------------------------------------------------------------
பிரதி வலது :) (Copy Right)ஒரு பிரபல பதிவர் சாட்டில் (உரையாடியில்) வந்து, “நீங்க எல்லாம் என்ன எழுதறீங்க. ஒருத்தர் பாருங்க ருத்திராட்ஷம் பற்றி அருமையா எழுதி இருக்கார்” என அதன் சுட்டியைக் கொடுத்தார். அங்கே சென்று பார்த்த எனக்கு அதிர்ச்சி. காரணம் இந்த வலைதளத்தில் வந்த ருத்திராட்ஷம் பற்றிய கட்டுரையை அப்படியே காப்பி செய்து அங்கே பேஸ்ட் செய்திருந்தார் அந்த புண்ணியவான்.
அவருக்கு தனி மடலில் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிறகு அதை நீக்கி விட்டார். வேறு யார் எல்லாம் இதில் இருக்கும் தகவல்களை பயன்படுத்துகிறார்களோ தெரியவில்லை.
அது இருக்கட்டும்... தகவலை ஒருவர் சொல்லாமல் எடுப்பதைகாட்டிலும், எனது கட்டுரையை பிற வலைதளத்தில் வந்த பிறகுதான் "அருமையா எழுதி இருக்கார்னு சொல்ல வேண்டுமா?” நீங்க எல்லாம் முழுமையா என் கட்டுரையை படிக்கிறீங்களா தங்கங்களே?
இன்னொரு பதிவர் ஒரு படி மேல போயி, ஸ்ரீ சக்ர புரி காப்பிரயிட்குள்ள வருமா? என்றார். ஏன் என கேட்டேன். “அது தான் நீங்க எழுதலயே?” என்றார். ஸ்ஸ்....பா..... இந்த வலையுலக பிரபலங்கள் தொல்லை தாங்க முடியலப்பா...
---------------------------------------------------------------------------
யாவர்குமாம் இறைவனுக்கு ஒர் இட்லி..!ஒரு கவிஞர் எழுதிய முற்போக்கு கவிதையை என்னிடம் காட்டினார் எனது மாணவர். கவிதையின் வரிகள் முழுமையாக நினைவில்லை, அதன் சாராம்சம் இதுதான். சிவனின் திருவிளையாடலில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு ஒன்று உண்டு.
முதியவளுக்கு பதிலாக தான் வேலை செய்வதாக கூறி, அவளிடம் இட்லியை சாப்'பிட்டு', வேலை செய்யாமல் உறங்கிவிடுவார் சிவன். அரசன் வந்து அவரை தண்டிக்க பிரம்பால் முதுகில் அடிக்க, உலக உயிர்கள் அனைத்திற்கும் முதுகில் பிரம்படி விழும். இந்த நிகழ்வை பற்றி அந்த கவிஞர் கவிதையில் எழுப்பி இருந்த கேள்வி என்னவென்றால் ,” பிரம்படி மட்டும் அனைவருக்கும் கிடைத்தது, இட்லி சிவனுக்கு மட்டும் ஏன் கிடைத்தது? அதுவும் அனைவருக்கும் சென்று இருக்க வேண்டும் அல்லவா?” (யாருக்காவது அந்த கவிதை வரிகள் தெரிந்தால் சொல்லலாம்)
கவிதை ஸ்வாரஸ்யமாக இருக்க நிகழ்வுன் சாரத்தை விட்டுவிட்டார்கள். என் மாணவனிடம் சொன்னேன், “சூரியன் ஒளிரும் பகல்வேளையில் திடீரென இருள் சூழ்தால் அதிசயம், சூரியன் மீண்டும் மீண்டும் ஒளிர்ந்தால் அதிசயம் அல்ல. அது போல உலக உயிர்களுக்கு என்றும் உணவை அளித்துவருபவன் ஈஸ்வரன். அதனால் அவன் உண்டு அனைத்து உயிர்களுக்கும் நிறைவு ஏற்படுவது எப்பொழுதும் நடந்தவண்ணம் இருக்கிறது. ஆதாவது பகல் போல. பிரம்படி என்பது திடீரென இரவு வருவது போல. அதனால் தான் ஒரு கணம் அனைவருக்கும் உணர முடிந்தது. மேலும் இதில் இருக்கும் உள் கருத்தை தெரிந்துகொள், நீ இறைவனுக்கு எதை கொடுக்கிறாயோ, அது உனக்கும், உன் சுற்றதிற்கும் பன்மடங்காக திருப்பி கொடுக்கப்படுகிறது. அது பிரம்படியாக இருந்தாலும்....” என்றேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?
-----------------------------------------------------------------------
ஆன்மீக கடி ஜோக்அந்த ஈ மிகவும் பரபரப்பாக இருந்தது. குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு கைகளை பிசைந்து கொண்டும் இருந்தது. காரணம் ஈயின் துணைவிக்கு இன்று பிரசவம். சில நிமிடம் பரபரப்புடனேயே கழிந்தது. பிறகு நர்ஸ் வந்து “வாழ்த்துக்கள். உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு” என்றாள்.
குழந்தையை பார்க்க உள்ளே சென்ற ஈக்கு ஒரே அதிர்ச்சி. அனைவரும் குழந்தையை வணங்கி பூஜை செய்து கொண்டிருந்தனர். காரணம் என்ன தெரியுமா?
அது “ஈ-சன்”
27 கருத்துக்கள்:
ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துகள்!
வாழ்த்துகள்! சுவாமிஜி
வாழ்த்துகள்! சுவாமிஜி
வாழ்த்துக்கள் சுவாமிஜி
Wish you(Vedic Eye) many more happy Returns!!!Vedic Eye sometimes வேடிக்கையாகவும் இருக்கு
ஸ்வாமி... அதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிடுச்சா? வலைப்பூவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் !!
நல்ல வேளை... அலகாபாத் போய் "மூணாறு" எங்கன்னு கேக்கலை.. :)
அது இருக்கட்டும்... அந்தர்வாஹினி சரஸ்வதியை எப்பிடி சுப்பாண்டிக்கு புரிய வைப்பீங்க? இங்க சுப்பாண்டி யாருன்னு உங்களுக்கு சொல்லணுமா? ஹி.. ஹி,.,
முதலில் ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துகள் சாமி
******************
//சென்ற வருடம் இதே நாளில் தான் அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்றது. ஆமாம் நான் இந்த வலைப்பக்கத்தை துவங்கினேன் //
ஹையா அப்ப நான் உங்களுக்கு ரொம்ப சீனியர் (அல்பம்..அல்பம்..)
:)
*************************
//அது உனக்கும், உன் சுற்றதிற்கும் பன்மடங்காக திருப்பி கொடுக்கப்படுகிறது. அது பிரம்படியாக இருந்தாலும்....” என்றேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?
//
நல்லா சாமாளிச்சு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
**************************
//நீங்க எல்லாம் முழுமையா என் கட்டுரையை படிக்கிறீங்களா தங்கங்களே?
//
முழுமையா ஒற்றை பார்வையில் படிக்கிற அளவுக்கு அவ்வளவு திறமை எனக்கு இல்லை சாமி. ஒவ்வொரு வரியா மொத்த கட்டுரையும் படிக்கிறேன் :)
******************
//குழந்தையை பார்க்க உள்ளே சென்ற ஈக்கு ஒரே அதிர்ச்சி. அனைவரும் குழந்தையை வணங்கி பூஜை செய்து கொண்டிருந்தனர். காரணம் என்ன தெரியுமா?
அது “ஈ-சன்”
//
ஹா...ஹா..ஹா..
நான் ஒன்னு சொல்றேன்.
வெங்கடாஜலபதியும்.ஜீஸசும் கிளாஸ்மேட்ஸ். ரெண்டு பேரும் பரிச்சை எழுதினாங்களாம். ஜீஸஸ் படிக்காம வந்துட்டு வரிக்கு வரி வெங்கடாஜலபதியைப் பார்த்து காப்பி அடிச்சு எழுதினாராம். ரிசல்ட் வந்தப்ப வெங்கடாஜலபதி ஃபெயில். ஜீஸஸ் பாஸ்.
அதிர்ந்துபோன வெங்கடாஜலபதி “எப்பிடிடா மாப்ள இப்படின்னு??” கேட்டப்ப ஜீஸஸ் கூலா சொன்னாராம், “ஜீஸஸ் நெவர் ஃபெயில்ஸ்”.
:)
ஸ்வாமிக்கு ஒரு வயது ஆச்சு !
(108 டோட ஒண்ணு சேர்ந்தாச்சு)
//ஒரு வருடத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன்? இந்த வலைதளம் பற்றிய நிறை-குறைகளைமுடிந்தால் பின்னூட்டத்தில் பதியுங்கள்...!//
ஸ்வாமி சொல்லப் போனால் மந்திரம் போட்டு ஒரு லிங்கம், மோதரம், விபூதி எதாவது எடுத்துக் கொடுத்துவிட்டு தான் இந்தக் கேள்வி கேட்டு இருக்கனும். எதுவுமே செய்யவில்லை :)
தீமை : மிக முக்கியமாக சென்று சேர வேண்டும் என எழுதிய பதிவுகளை மக்கள் சீண்டாமல் போவது. ”மொக்கை” பதிவுகள் அதிகமாக மக்களை கவர்வது.//
படைப்பாளிகளுக்கே உரிய சாபம் தான் படைததவை தவிர,தான் ரசித்தவை தவிர மற்ற படைப்புக்களை மொக்கை என்று கருதுவது.
அந்த சாபத்திலிருந்து தாங்களும் தப்பவில்லை என்பது அறிந்து மகிழ்ச்சி.ஸ்வாமி ஆனாலும் விதியில் இருந்து தப்ப முடியாது என்று மீண்டும் நிரூபணமானது!
ஒரு வருட எழுத்துக்கு வாழ்த்துக்கள் ஸ்வாமிஜி.
உங்கள் பதிவுகளைப் பற்றி என்னுடைய கருத்து, கங்கையிலும் அவ்வப்போது குப்பைகள் வரும்.அவற்றைத் தள்ளி விட்டு நீராடுவதுதான் முறை.
நன்றி,ஸ்வாமிஜி.
ஈ சன்னா? நீங்களுமா சுவாமி?, பரவாயில்லை தாங்கிக்கிறேன்.
மற்றபடி ஓராண்டுகளாக தொடருவதற்கு வாழ்த்துக்கள்.
//ஒரு வருடத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன்? இந்த வலைதளம் பற்றிய நிறை-குறைகளைமுடிந்தால் பின்னூட்டத்தில் பதியுங்கள்...!//
பதிவு கிடக்கட்டும் விடுங்க... உங்க ப்ளாக ஒரு வருசமா படிகிறோமே, எங்களை பத்தி என்ன நினைகிறீங்க ???
;-)
வாழ்த்துக்கள் சுவாமிஜி
ore nerathil aasanagavum thozhanaghavum irukkum engal iniya
samikku vazhthukkal.
முதல் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் vedic eye
ஸ்வாமிஜி.. சுப்பாண்டிய ஒரு பிளாக் ஆரம்பிக்க சொல்லுங்க.. நிறைய கேள்விகள் பாக்கி இருக்கு அவர் கேக்க:))))
வாழ்த்துக்கள்... சுவாமி..
அவனவன் பெயருக்கு ப்ளாக் ஆரம்பித்துவிட்டு சும்மா இருக்கிறான்...தாங்கள் ஒரு ஆன்மிக சொற்பொழிவே நடத்தி 'துன்பியல்' என்கிறீர்கள்...எல்லாம் மாயை...
-தி.மலை கதிரவன்
வலையுலக பதிவு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகள், என் ஆன்மீக பயணத்திற்கு மிக முக்கியமான பதிவாக அமைந்திருக்கிறது. தற்செயலாக கண்ட உங்கள் பதிவு, எனக்கு இன்று அது தற்செயலாக தெரியவில்லை.
ஆன்மீக கடி ஜோக் தாங்கல. எப்பிடி எப்பிடி எல்லாம் கேலம்புரைங்கப்ப!
வாழ்த்துகள் ஸ்வாமிஜி.
நகைச்சுவையாகவும், மிகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுகிறீர்கள்.
இட்லி ரசித்தேன், ஈ-சன் நகைத்தேன்.
Happy Birthday and Many more happy returns of this day Swamy.
கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் என் உள்ளார்ந்த நன்றிகள்.
உங்களின் ஆதரவால் எனது அரும்பணி இறையருளால் தொடரும்.
இன்று முதல் என்பெயரை சுப்பாண்டி என்று மாற்றப் போகிறேன் ,ஒரு சுப்பாண்டியின் தொல்லையே தாங்கமுடியவில்லை என்றால் வேண்டாம் ,
வாழ்த்துகள்! சுவாமிஜி. உங்களது ஸ்ரீ சக்ரபுரி தொடர் மிகவும் நன்றாக இருந்தது.
வணக்கம் ஸ்வாமி,
நான் தங்கள் கட்டுரைகளை படிப்பவன். உங்கள் பார்வை சற்று வேறுபட்டு தீர்க்கமாக எல்லாவற்றையும் அலசுகிறது. மிகவும் நன்று. உங்கள் ஸ்ரீ சக்ரபுரி தொடர் மிக நன்று. இனியும் இது போல் தொடர வேண்டும் என்பது என் அவா.
வாழ்த்துக்கள். உங்கள் சீரிய பணி மேன்மேலும் தொடர, எங்கள் ஆதரவு கண்டிப்பாக உண்டு.
Most of the writings in tamil blog, make judgements or derive conclusions, thereby misguiding the reader. In most cases, I have seen you, to make the observations, state the facts and leave the judgement/decisions/conclusions to the reader. I like that very much. Please continue.
சுவாமிஜி அவர்களின் பதிவுகள் தொடரவும் ஓராண்டு நிறைவிற்கும் வாழ்த்துக்கள்
Thank you very much Swamiji for giving this wornderful awareness blogspot.
Umashankar.A
Post a Comment