Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, April 21, 2009

அக்‌ஷய திரிதியையும் அலுமினிய பாத்திரமும்

நமது பண்டிகை கொண்டாட்டங்களில் அனைத்தும் சூரியன் மற்றும் சந்திரனின் தன்மையை சார்ந்த திதிகள் எனும் அமைப்பில் இருக்கிறது. அமாவாசை, பெளர்ணமி போக பிற திதிகளும் நாம் விரத நாட்களாகவோ, வழிபாட்டு தினமாகவோ கடைபிடிக்கிறோம். உதாரணமாக சஷ்டி, சதுர்த்தி மற்றும் ஏகாதசி ஆகியவை திதிகளில் அதிகம் கொண்டாடப்படுகிறது. விரத தினங்கள் என்றும் சொல்லலாம். திரியோதசி திதி 13ஆம் திதியாக வருகிறது. அன்று ப்ரதோஷம் கொண்டாடப்படுகிறது.

சூரியன் நமது ஆன்மாவையும், சந்திரன் மனதையும் குறிக்கும். திதிகள் சூரியன் மற்றும் சந்திரனின் நகர்வால் ஏற்படுவதால் குறிப்பிட்ட திதிகளில் அன்று நமது ஆன்மாவும், மனமும் எளிதாக ஒருமுகப்படுகிறது.

வருடம் முழுவதும் சதுர்த்தி, ஷஷ்டி,திரேயோதசி திதிகள் கொண்டாடப்பட்டாலும் “திரிதியை” திதி மட்டும் கொண்டாடப்படுவதில்லை. திதிகளில் மூன்றாம் திதியான திரிதியை ஆன்மீக ரீதியான சிறப்பை பெறுவது சித்திரை மாதம் மட்டும் தான். காரணம் சூரியன் மேஷ ராசியிலும் சந்திரன் ரிஷப ராசியிலும் அமையும் இந்த நிலை வேறு காலத்தில் ஏற்படாது.

சுக்ல பக்‌ஷம் எனும் வளர்பிறை காலகட்டத்தில் மட்டுமே சித்திரை மாதம் திரிதியை
இவ்வகையில் அமையும். தேய்பிறை காலத்தில் முதல் இரு ராசிகளில் சூரிய சந்திரர்கள் அமையமாட்டார்கள்.

இதனால் என்ன சிறப்பு?

சூரியன் தனது சுய ராசியான சிம்மத்திலிருந்து ஒன்பதாம் இடமான மேஷத்தில் அமர்வார். சந்திரன் தனது சுயராசியான கடகத்திலிருந்து 11ஆம் இடத்தில் அமைவார். 9 மற்றும் 11 ஆம் இடங்கள் தர்ம, லாப ஸ்தானங்கள் என ஜோதிடத்தில் சிறப்பாக கூறப்படும் இடம்.

தர்ம, லாப ஸ்தானங்களில் நமது ஆன்மாவான சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் சேருவதால் அன்று செய்யும் தர்ம காரியங்கள் மேன்மை பெரும்.

சூரியன் மற்றும் சந்திர கிரகங்கள் குறிக்கும் தானியமான கோதுமை அல்லது அரிசியை தானம் செய்யும் பொழுது நமது கர்மவினையில் மேம்பாடு எற்பட்டு தீயவினைகள் குறையும் என்பது நம்பிக்கை. தீவினை குறைகிறதோ இல்லையோ பிறர் வாழ்க்கைக்கு சிறிது உதவுவதால் நாம் ஒன்றும் இழக்கப்போவதில்லை.

நிற்க.


ஆனால் தற்சமயம் அக்‌ஷய திரிதியை வியாபார ரீதியாக பயன்படுவது மிகவும் வருத்தப்பட செய்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக மக்களை தங்க நகை வாங்கச் செய்ய சில வியாபாரிகள் செய்யும் யுக்தி அருவருக்க தக்கதாக இருக்கிறது.

நமது சாஸ்திரத்தின் அடிப்படையில் தங்கம் வெள்ளி நீங்கலாக வேறு உலோகங்களை உடலில் அணியக்கூடாது. மேலும் தங்கத்தை உடலின் இடுப்பு வரையிலும், வெள்ளியை இடுப்பு முதல் கால்வரையிலும் அணிய வேண்டும் என்பது விதி. உடலின் சக்தி நிலையை மேம்படுத்த உடலில் ஆபரணத்தை பயன்படுத்திய கலாச்சாரம் இது. வேதியியல் மூலக்கூறு அட்டவணையில் உலோகங்களில் தங்கம் மற்றும் வெள்ளி முதல் இடத்தை பிடிப்பதை கொண்டு இதன் முக்கியத்துவம் அறியலாம். ஆனால் பிளாட்டினம், டைடானியம் என பல உலோகங்கள் உடலின் சக்தி நிலையை தடுமாறச்செய்யும்.

வியாபாரிகள் வியாபாரத்திற்காக செய்கிறார்கள் அது அவர்கள் தர்மம். மக்கள் அவர்கள் பின்னால் செல்கிறார்கள் அது அவர்களின் ஆசை. அனைத்தும் தெரிந்த உலக புகழ் ஜோதிடர்கள் ஏன் இதற்கு துணைபோகிறார்கள் என்பது தெரியவில்லை. சாஸ்திரத்தை சந்தைக்கடையில் விற்கும் இவர்களின் தன்மை காசுக்காக எதையும் விற்பார்கள் என எண்ணத்தோன்றுகிறது.

ஒரு ஜோதிடர் நான்கு வருடத்திற்கு முன்பு தங்கம் வாங்க விளம்பர மாடலாக பயன்பட்டார். தற்சமயம் சுக்ல பக்‌ஷம் திரிதியை என்பதால் வெள்ளை பொருட்களை வாங்க வேண்டும் என விளம்பரம் செய்கிறார். வியாபாரிகளின் தூண்டுதலால் சாஸ்திரத்தை விற்றுவிட்டார் என தெரிகிறது.

வெள்ளை உலோகம் வாங்க வேண்டும் என்றால் வெள்ளி வாங்க சொல்லலாம். பிளாட்டினம் வாங்குங்கள் என குறிப்பிட்டு சொல்லும் தன்மை அவரின் சாஸ்திர அறிவை சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

இவர்கள் மத்தியில் இருந்து ஜோதிடம் சாஸ்திரம் என பேசவே கூசுகிறது. காரணம் இவர்களை வைத்துதான் மக்கள் ஜோதிடர்களை அளக்கிறார்கள். இவர்கள் தான் ஜோதிடர்கள் என கூறி ஜோதிடம் உண்மையா எனும் கருத்தாய்வில் தொலைக்காட்சியில் அழைக்கிறார்கள்.

"ஸ்வாமி ஜாதகம் பார்த்த பின் பரிகாரமே சொல்லவில்லையே.. நீங்கள் சொன்ன பலன் பலிக்குமா? " என மக்கள் கேட்கும் நிலைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். இவர்களை போல வேஷம் போட்டல் மட்டுமே நல்ல ஜோதிடர்கள் என மக்கள் நம்புவார்கள் போல.

ஆதலால் சொல்கிறேன்...

அக்‌ஷய திரிதியை அன்று வெள்ளை உலோகம் வாங்கவேண்டும்.

அலுமினிய பாத்திரங்கள் வாங்குவீர்

அல்லல் இல்லாத வாழ்க்கை பெறுவீர்.

-விளம்பர உதவி கமலா பாத்திர கடை.

30 கருத்துக்கள்:

இராகவன் நைஜிரியா said...

வணக்கம்.

அக்‌ஷய திரிதியை என்பது எனக்கு தெரிந்து, கும்பகோணத்தில், 12 கருட வாகன தரிசனம் உண்டு. அப்போது பெரிய தெரு, சின்ன கடைத்தெரு முழுவதும் உள்ள கடைக்காரர்கள், நீர் மோர், பானகம் வினியோக செய்வார்கள்.

கடந்த சில வருடங்களாகத்தான், தங்க நகை வாங்க வேண்டும், வெள்ளி நகை வாங்க வேண்டும் என்றெல்லாம் விளம்பரம் செய்கின்றார்கள். இதற்கு அட்வான்ஸ் புக்கிங் வேறு.

ஆண்டவனை தொழுவதற்காகவும், தான தருமங்கள் செய்வதற்காகவும் ஏற்பட்ட ஒரு நல்ல நாளை, இது மாதிரி செய்து கெடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

மிக அருமையான, தக்க சமயத்தில் வந்த இடுகை. மிக்க நன்றி.

நிகழ்காலத்தில்... said...

//நமது சாஸ்திரத்தின் அடிப்படையில் தங்கம் வெள்ளி நீங்கலாக வேறு உலோகங்களை உடலில் அணியக்கூடாது. மேலும் தங்கத்தை உடலின் இடுப்பு வரையிலும், வெள்ளியை இடுப்பு முதல் கால்வரையிலும் அணிய வேண்டும் என்பது விதி. உடலின் சக்தி நிலையை மேம்படுத்த உடலில் ஆபரணத்தை பயன்படுத்திய கலாச்சாரம் இது. வேதியியல் மூலக்கூறு அட்டவணையில் உலோகங்களில் தங்கம் மற்றும் வெள்ளி முதல் இடத்தை பிடிப்பதை கொண்டு இதன் முக்கியத்துவம் அறியலாம். ஆனால் பிளாட்டினம், டைடானியம் என பல உலோகங்கள் உடலின் சக்தி நிலையை தடுமாறச்செய்யும்.//

எனக்கு இது புது தகவல்.
இங்கே காலில் கொலுசு, தங்கமோ கவரிங்கோ போடுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். பெண்கள்...!!!
வாழ்த்துக்கள்...

கோவி.கண்ணன் said...

//அக்‌ஷய திரிதியை அன்று வெள்ளை உலோகம் வாங்கவேண்டும்.

அலுமினிய பாத்திரங்கள் வாங்குவீர்

அல்லல் இல்லாத வாழ்க்கை பெறுவீர்.
//

இப்படியெல்லாம் அவங்க பொழப்புல ஒரு ஆற்றின் மணலையே கொட்டினால்...அப்பறம்......கோவையில் ஆட்டோ இருக்கா ?
:)

கோவி.கண்ணன் said...

//சூரியன் நமது ஆன்மாவையும், சந்திரன் மனதையும் குறிக்கும்//

மனம் புத்தி சமஸ்காரம் மூன்றும் சேர இருப்பதே ஆன்மா என்று அறிந்திருக்கிறேன். நீங்கள் மனதையும் ஆன்மாவையும் தனியாக சொல்வது கொஞ்சம் விழிக்க வைக்குது

சின்னப் பையன் said...

மிக அருமையான, தக்க சமயத்தில் வந்த இடுகை. மிக்க நன்றி.

பரிசல்காரன் said...

உங்கள் மீதான பிரமிப்பு இன்னும் அதிகரிக்கிறது.

தேவையான நேரத்தில் சரியான ஒருவரிடமிருந்து வந்த முக்கியமான பதிவு!

ஷண்முகப்ரியன் said...

திருதியை பற்றிய விளக்கம் அருமை ஸ்வாமிஜி.'அலுமினிய பாத்திரம்'அருமையிலும் அருமை.
எல்லாத் துறைகளிலும் உங்களைப் போன்ற துறவிகளின் பங்களிப்பு இருந்தால் இந்த சமூகம் உய்யும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு இராகவன் நைஜிரியா,

உங்கள் வருகைக்கு நன்றி.


திரு அறிவே தெய்வம்,

ஆம் தற்காலத்தில் உண்மை தெரியாமல் கால்களில் அணிகிறார்கள். உடலில் அணியும் அணிகலனுக்கு பின்னால் அனேக விஷயங்கள் இருக்கிறது.

உங்கள் வருகைக்கு நன்றி.

திரு கோவி.கண்ணன்,

அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, மணலை கொட்டினாலும் செயற்கை பீச் என வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.

ஆன்மா வேறு மனம் வேறு. இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்குகிறேன்.



திரு. ச்சின்னப்பையன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

திரு பரிசல்காரன்,

வீட்டில் நகைவாங்க சொல்லும் பொழுது உங்களுக்கு ஆதரவான பதிவை பார்த்த மகிழ்ச்சி போல? :)
உங்கள் வருகைக்கு நன்றி.

திரு ஷண்முகப்ரியன்,

// எல்லாத் துறைகளிலும் உங்களைப் போன்ற துறவிகளின் பங்களிப்பு இருந்தால் இந்த சமூகம் உய்யும்.
//
எல்லா துறையிலும் இருந்தால் அவர்கள் துறைவிகள் ஆகிவிடமாட்டார்களா :) ?

உங்கள் ஆதங்கம் புரிகிறது.

உங்கள் வருகைக்கு நன்றி.

IlayaDhasan said...

//அனைத்தும் தெரிந்த உலக புகழ் ஜோதிடர்கள் ஏன் இதற்கு துணைபோகிறார்கள் என்பது தெரியவில்லை.//
ஒரு வேளை அவங்க ஜாதகம் சரியில்லையோ என்னமோ ! எல்லாம் கிரகம் புடிச்ச
வேளை! :-)

Mahesh said...

நல்ல டைம்லி பதிவு !! கோவியார் போலவே எனக்கும் அதே சந்தேகம். மனதும் ஆன்மாவுக்குள்ளே அடக்கம்தானே?

அமுதா கிருஷ்ணா said...

சில வருடங்கள் கழித்து பழைய அலுமினியம் நல்ல விலைக்கு விற்கலாம்..... நல்ல யோசனை...

YOGANANDAM M said...

//பங்கு சந்தை ஜோதிடம்
இரண்டு நாள் பயிற்சி பட்டறை
ஜோதிடம் மூலம் எளிய முறையில் பங்குசந்தை மேலாண்மை.

இடம் : சவேரா ஹோட்டல் - சென்னை

நாள் : மே மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதி.

நேரம் : காலை 9:30 முதல் மாலை 4 மணி வரை

//

any entrance fee is required for participating this event?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு இளையதாசன்

என்ன கிரகமோ போங்க... :)

உங்கள் வருகைக்கு நன்றி


திரு மகேஷ்,

மனது ஆன்மாவுக்குள் அடங்கும். ஆனால் மனதும் ஆன்மாவும் ஒன்றல்ல.

உங்கள் வருகைக்கு நன்றி.


சகோதரி அமுதா கிருஷ்ணா,

உங்கள் கோபம் தெரிகிறது :).
நகை வாங்க வேறு நாட்கள் இருக்கிறது. பார்த்துக்கொள்ளலாம் விடுங்கள்.

உங்கள் வருகைக்கு நன்றி

திரு யோகானந்தம்,

நுழைவுக்கட்டணம் இருக்கு,

99442 333 55 தொடர்பு கொண்டால் வழிகாட்டுவார்கள்.

ஷண்முகப்ரியன் said...

எல்லா துறையிலும் இருந்தால் அவர்கள் துறைவிகள் ஆகிவிடமாட்டார்களா :)//
மன்னிக்கவும் ஸ்வாமிஜி.இந்தக் கருத்துடன் நான் உடன் பட முடியவில்லை.'காம சூத்திரம்' எழுதிய வாத்சாயனரும் ஒரு துறவிதான்.
துறவு உங்கள் ஆசைகளைத் துறப்பது.சமூகத்தையும்,சக மனிதர்களையுமே துறப்பதல்ல.துற்வு தனிமை அல்ல.
மீண்டும் மன்னிக்கவும்.இது உங்கள் விளையாட்டுத்தானே.

Unknown said...

இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி, ஸ்படிக மாலை அணிவதால் என்ன பயன், நன்மைகள், உடலுக்கு?

பெருசு said...

நல்ல வெள்ளை அறிக்கை.

இதை அப்படியே cntl+c % cntl+v செய்து எல்லா
உடன்பிறந்த பிறவாத தமக்கை+தங்கைகளுக்கும் அனுப்பி விடுகிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

மனதும் ஆன்மாவுக்குள்ளே அடக்கம்தானே?

//

உணர்வுநிலையும்,விழிப்பு நிலையும் ஒன்னா மகேஷ் அண்ணே???

கோவி.கண்ணன் said...

//உணர்வுநிலையும்,விழிப்பு நிலையும் ஒன்னா மகேஷ் அண்ணே???//

உணர்வில் புலன்கள் விழித்திருக்கும், தூக்கத்தில் ஓய்வெடுக்கும். நான் மகேஷ் இல்லை :)

நிகழ்காலத்தில்... said...

\\//உணர்வுநிலையும்,விழிப்பு நிலையும் ஒன்னா மகேஷ் அண்ணே???//

உணர்வில் புலன்கள் விழித்திருக்கும், தூக்கத்தில் ஓய்வெடுக்கும். நான் மகேஷ் இல்லை :)\\

அப்துல்லா கேட்பது மனதின் உணர்வு நிலை, விழிப்பு நிலை பற்றி

நான் மகேஷ் இல்லை - சொல்வது உடலின் உணர்வுநிலை, விழிப்பு நிலை பற்றி

இதற்கு பதில் சொல்ல தகுந்தவர் கோவியார்தான்

அது ஒரு கனாக் காலம் said...

சுவாமி, பணம் உள்ளவர்கள் இது மாதிரி காரணத்தால் பைசாவை வெளியில் எடுப்பது நல்லது தானே, எதையோ வாங்குவார்கள், பின் மாற்றுவார்கள் ... அதனால், நகை செய்பவர்களுக்கும் , விற்பவர்களுக்கும் நல்லது தானே... என்ன, இந்த விளம்பர மாயையினால் , பைசா இல்லாதவர்களும் வாங்க உந்தப்படுகிறார்கள்., அது கண்டிக்கப்படவேண்டியது

krish said...

Swami,
All the ladies are complaining that all the affected husbands conspired to make you to write this. For ladies this is also a reason for buying gold ornaments. Thithai has come as an another excuse. Sindhis buy gold for Deepavali. We had Sindhi family as neighbours and we ended up buying jewels for my entire bonus.

புருனோ Bruno said...

//அக்‌ஷய திரிதியை அன்று வெள்ளை உலோகம் வாங்கவேண்டும்.

அலுமினிய பாத்திரங்கள் வாங்குவீர்

அல்லல் இல்லாத வாழ்க்கை பெறுவீர்.
//

ஹி ஹி ஹி

புருனோ Bruno said...

சாமி ஒரு கேள்வி : கல்வி தொடர்பான முயற்சிகளை இந்த நாளில் துவங்கினால் நல்லதா ??

விளக்குங்களேன்

புருனோ Bruno said...

// மேலும் தங்கத்தை உடலின் இடுப்பு வரையிலும், வெள்ளியை இடுப்பு முதல் கால்வரையிலும் அணிய வேண்டும் என்பது விதி. //

தங்க கொலுசு போடக்கூடாது என்று தெரியும். ஆனால் இந்த விதி இன்று தான் கேள்விப்படுகிறேன்.

நன்றி

--

ராசிக்கல் மோதிரம் வெள்ளியில் போட வேண்டும் என்று கூறுகிறார்களே. அப்படி போடலாம் தானே (கைவிரல் என்பது இடுப்பிற்கு மேல் வருமா, அல்லது நின்ற நிலையில் கையை தொங்க போட்டால் இடுப்பிற்கு கீழ் வருமா)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அப்துல்லா, மகேஷ்,கோவி மற்றும் அறிவே தெய்வம்,

இது என்ன வேதாந்த ஜகல்பந்தியா? :)

தொழிலை ஆரம்பிச்சுட்டீங்க.. நடத்துங்க.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுந்தர ராமன்,

உங்கள் வருகைக்கு நன்றி

திரு க்ருஷ்,

எனது நெருங்கிய நண்பர் உங்கள் வகுப்பை சார்ந்தவர்.
அதனால் உங்கள் வேதனையை அவர் மூலம் பார்த்திருக்கிறேன். :))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புருனோ,

கல்வி தொடங்க வேறு(நிறைய) முஹூர்த்தங்கள் உண்டு.

இந்த நாள் வரியவர்களுக்கு தானம் செய்ய மட்டுமே.


ராசிகல் மோதிரம் அணிவது நமது சாஸ்திரத்தில் இல்லை.

தற்காலத்தில் இவர்களாக உருவாக்கிய வியாபாரம்.

செம்பு கூட கைகளில் அணியலாம் (காப்பு அல்லது வளையம்). ஆனால் வெள்ளி நல்லது அல்ல.

வெள்ளி அணியும் நிர்பந்தம் ஏற்பட்டால் அதைகாட்டிலும் இரு மடங்கு எடை உள்ள தங்கத்தை அதனுடன் அணிய வேண்டும்.

நாம் இந்த சாஸ்திரத்தை விட்டு வெகு தொலைவு வந்துவிட்டோம். முடிந்தால் கூடிய விரைவில் இதை பற்றிய பதிவு எழுத முயற்சிக்கிறேன்

புருனோ Bruno said...

//கல்வி தொடங்க வேறு(நிறைய) முஹூர்த்தங்கள் உண்டு.

இந்த நாள் வரியவர்களுக்கு தானம் செய்ய மட்டுமே.//

நன்றி சாமி

கல்வி பணி துவங்க நல்லமுஹூர்த்தங்கள் எவை என்று ஒரு இடுகை எழுத வேண்டுகிறேன்

புருனோ Bruno said...

//வெள்ளி அணியும் நிர்பந்தம் ஏற்பட்டால் அதைகாட்டிலும் இரு மடங்கு எடை உள்ள தங்கத்தை அதனுடன் அணிய வேண்டும். //
நல்ல பயனுள்ள தகவல் சாமி

//ராசிகல் மோதிரம் அணிவது நமது சாஸ்திரத்தில் இல்லை. //
//நாம் இந்த சாஸ்திரத்தை விட்டு வெகு தொலைவு வந்துவிட்டோம். முடிந்தால் கூடிய விரைவில் இதை பற்றிய பதிவு எழுத முயற்சிக்கிறேன்//

கண்டிப்பாக எழுதுங்கள் எதிர்பார்க்கிறோம்

Paleo God said...

அருமை.


//

வெள்ளையா இருக்கறவங்களுக்கு அட்சய திருதியை அன்னிக்கு பெசலா எதுனா எக்ஸ்ட்ரா பலன் கிடைக்குமா சாமி?