எனது மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுப்பாண்டி. அவரை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. காரணம் இவ்வளவு நாள் என்னுடன் இருக்கிறார், நானே அவரை புரிந்துக்கொள்ள முடியவில்லை. காரணம் அவரை முட்டாள் என நினைத்து கேள்வியை கேட்டால் புத்திசாலித்தனமான பதில் கூறுவார். சரி அறிவாளி என நினைத்து கேள்வியை கேட்டால் முட்டாள் தனமாக பதில்வரும். தன்னையும் குழப்பி பிறரையும் குழப்புவதில் மாபெரும் வித்தகர் சுப்பாண்டி. என்னுடன் இருந்து எனக்கு உதவிகள் செய்வதில் அவருக்கு பிரியம். அதனால் என்னுடன் எப்பொழுதும் ஒட்டிகொண்டே இருப்பார்.
அவருடன் சென்ற வாரம் டில்லிக்கு விமானத்தில் பயணம் செய்தேன். சுப்பாண்டிக்கு இது முதல் விமான பயணம். நாங்கள் விமானத்தில் ஏறியதும் ஜன்னல் ஓர சீட்டுக்காக பாய்ந்தார் சுப்பு. ஆனால் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டதால் ஒருவர் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தார். நான் நடுவிலும், நடக்கும் பாதைக்கு அருகில் சுப்பாண்டியும் உட்கார நேர்ந்தது.
எனக்கு அருகில் இருந்தவர் அரசியல் புள்ளியை போல தோற்றத்தில் இருந்தார்.. ஆம் நான் நினைத்தது சரிதான் கையில் கட்சியின் மோதிரம் பெரியாதாக அணிந்திருந்தார்.
வந்து அமர்ந்ததும் சுப்பாண்டி அலைபேசியை எடுத்து தனது வீட்டில் இருப்பவர்களுக்கு விமானத்தின் உள் பகுதியை நேரடி வர்ணனை செய்ய துவங்கினார். நான் அவரை சமாதனப்படுத்தி பிறகு பேசு என சொல்லிவிட்டு, கேட்டேன் “ விமானம் மேலே பறக்கும் பொழுது மொபைல் போனில் பேச முடியாது ஏன் தெரியுமா?”. உடனே சுப்பாண்டி, “ எப்படி ஸ்வாமி பேச முடியும்? அங்கே தான் டவர் இருக்காதே..!” என்றான்.
இதை கவனித்துக்கொண்டிருந்த அரசியல்வாதி, “ அப்போ எப்படிங்க பைலட்க்கு சிக்னல் கிடைக்கும்? ” என்றார். நான் சொல்ல முற்படும் முன் சுப்பாண்டி “ டவர்தான் இருக்காது சாட்டிலைட் இருக்கும் சார். நாம சாட்டிலைட் போன் வச்சிருந்தா நாமும் பேசலாம்”. எனக்கே ஆச்சரியம் இவனுக்குள்ள இப்படி ஒரு அறிவானு.. அதை அரசியல்வாதியின் பார்வையும் உறுதி செஞ்சுது.
சில நிமிடம் கரைஞ்சுது...அந்த அரசியல்வாதிகிட்ட, “ சார்...... ஏன் சார் நீங்க ஜன்னல் ஓரம் உட்கார்ந்து இருக்கீங்க, காத்தாட பயண செய்யறதுக்கா?” என்றான் சுப்பாண்டி. இவ்வளவு அறிவானு பார்த்த அதே அரசியல்வாதி இவனையெல்லாம் கூட வைச்சுருகியேனு என்னை பார்த்தார்.
பிறகு என்னை பார்த்து கேட்டார். ஒரு ஆசிரம பெயரை குறிப்பிட்டு “சாமி ..............-ல இருந்து வரீங்களா?” என்றார்.
“இல்லை நாங்கள் வேறு ஒரு அமைப்பை சேர்ந்தவங்க.”
“ நீங்க என்ன சாமி செய்யறீங்க?” என்றார். இவ்வாறு கேட்பவர்களுக்கு விளக்கி மார்கெட்டிங் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனவே அவரிடம், “ஆன்மீக வாழ்க்கையில் இருக்கோம்” என சொல்லி அமைதியாக முயற்சித்தேன்.
“ஆன்மீகம்னா என்ன சாமி” என திடீரென கேட்க, சுப்பாண்டி குறுக்கே பாய்ந்து "அரசியல்ன என்ன? அப்படீனா சொல்ல முடியுமா சார் அதுமாதிரி தான் இது” என்றான். கண்களால் அவனை அடக்கிவிட்டு, “எல்லா இடத்திலும் இறைவனை காண்பது ஆன்மீகம்” என ஓரளவு எளிமையாக கூறினேன்.
“புரியலையே சாமி. எல்லா இடத்திலும்-னா?” என்றார். அதே நேரத்தில் விமான பணிப்பெண் விமான பாதுகாப்பு பற்றிய செய்திகளை கூற தயாரானார்.
நான் தொடர்ந்தேன், “அங்க பாருங்க அந்த பொண்ணு சொல்லும் விஷயத்தை, விமானத்தில் எப்படி விபத்து , பாதுகாப்பு பத்தி சொல்லுது. இதே ஆன்மீகவாதி இதை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பான். அந்த பொண்ணுக்கு பதிலா அங்கே கடவுளை வைச்சு பார்க்கனும். அவங்க சொல்லுறதுக்கு நான் வாய்ஸ் கொடுக்கறேன் பாருங்க”.
அரசியல்வாதியும், சுப்பாண்டியும் கவனிக்க துவங்கினார்கள்.
[விமான பணிப்பெண் சொன்னதும் - நான் சொன்னதும் கீழே]
“லேடிஸ் அண்டு ஜெண்டில்மேன்”
“எனது பிரிய ஆன்மாக்களே...”
“ இந்த பெல்ட்டை இவ்வாறு அணிய வேண்டும். இந்த பகுதியை மேலே எடுத்தால் திறந்துவிடும்”
“ஆன்மாக்கள் ஆகிய உங்களை பிறப்புடன் இணைப்பதும், பிறப்பற்ற நிலைக்கு மேம்படுத்துவதும் நான் தான்”
“விமானத்தில் சூழ்நிலைகாரணமாக ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்றால் மேலே இந்த பட்டனை அழுதினால் ஒரு முகமூடி வரும் அதை அணிந்து சுவாசம் செய்யலாம்”
“உங்கள் உடலின் சுவாசமாகவும், ப்ராணனாகவும் நானே இருக்கிறேன். அதன் இணைப்பு மேலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது”
“விபத்து காலத்தில் விமானம் நீரில் விழுந்தால் , உங்கள் சீட்டின் அடியுல் உள்ள இந்த கவசத்தை அணிந்து காற்றை அதில் நிறைத்தால் நீரில் மிதக்கலாம்”
“உங்களுக்குள் இருக்கும் பரமாத்மாவாகிய என்னை உணர்ந்து, என்னை கவசமாக அணிந்தால், ஸ்ம்சாரம் எனும் சாகரத்தில் விழுத்தாலும் மூழ்காமல் மிதக்கலாம்”
“விமானத்தின் வாசல் நான்கு புறமும் உண்டு. கீழே இருக்கும் ஒளிப்பட்டை அதற்கான வழியை உங்களுக்கு காட்டும்”
“நான்கு திசையிலும், ஒவ்வொரு அடியிலும் உன்னுடன் நான் இருந்து காப்பேன்”
”நன்றி”
“எனது ஆசிகள்”
ஆச்சரியமாக பார்த்தார் அரசியல்வாதி. “சாமி விமானத்துல வர அம்மணிகளை நான் வேறமாதிரி பார்ப்பேன். உங்க நால நான் இன்னிக்கு வித்தியாசமா பார்க்க கத்துகிட்டேன். நானும் ஆன்மீகமா இருக்க முயற்சி செய்யறேன் சாமி”.
இதற்கு மேல் பேசினால் பகவத்கீதையோ புராணமோ பேசி கழுத்தறுப்பான் என நினைத்தாரோ என்னவோ அவர் கண்களை மூடி தூங்கிவிட்டார். விமானம் பறக்க ஆரம்பித்ததும் நானும் கண்களை மூடி அமர்ந்திருந்தேன்.
சிறிது நேரத்திற்கு பிறகு...
“எக்ஸ்க்யூஸ்மீ சார்” என்ற வார்த்தையை கேட்டு கண்திறந்தால் விமான பணிப்பெண் என் முன்னால் நிற்கிறார். என்ன என்பது போல நான் பார்க்க, “வெஜ் சாண்ட்விச் 80 ரூபாய் கொடுங்கள்” என்றார்.
நான் வாங்கவில்லையே என்றவாரே திரும்ப, சுப்பாண்டி வெஜ்சாண்ட்விச்-ஐ ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். விமான பணிப்பெண்ணுக்கு காசை கொடுத்துவிட்டு, சுப்பாண்டியிடம் கேட்டேன், “இங்க விலை ஜாஸ்தி இருக்கும்னு தெரியாதா? அதை ஏன் தம்பி வாங்கினே?” என்றேன்.
அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்,
“கடவுளே சாண்டுவிச் கொடுக்கும்போது வேண்டாம்னு எப்படி ஸ்வாமி சொல்லறது?”
டிஸ்கி : எனக்கும் சுப்பாண்டிக்கும் இது போல ஏகப்பட்ட விஷயம் நடந்திருக்கு, சுப்பாண்டியை பத்தி நிறைய எழுதவா? பின்னூட்டத்தில் சொல்லுங்க.

47 கருத்துக்கள்:
நானே சுப்பாண்டிக்கு அசிஸ்டெண்டா ஆயிட்டா உங்க கூட இதுமாதிரி எல்லாம் வரலாம் போல இருக்கே ..
\\“எல்லா இடத்திலும் இறைவனை காண்பது ஆன்மீகம்” என ஓரளவு எளிமையாக கூறினேன்.\\
ஓரளவு அல்ல, முழுமையாகவே அவ்வளவுதான்
வாழ்த்துக்கள். சுப்பாண்டி போன்றவர்கள் நம் சிந்தனையை தூண்டுபவர்கள். எனவே தொடருங்கள்
//அறிவே தெய்வம் said...
\\“எல்லா இடத்திலும் இறைவனை காண்பது ஆன்மீகம்” என ஓரளவு எளிமையாக கூறினேன்.\\
ஓரளவு அல்ல, முழுமையாகவே அவ்வளவுதான்
வாழ்த்துக்கள். சுப்பாண்டி போன்றவர்கள் நம் சிந்தனையை தூண்டுபவர்கள். எனவே தொடருங்கள்
//
ஓரளவோ, முழுமையோ அல்ல, உங்களுக்கு தெரிந்ததைக் கூறினேன் என்று சொல்லி இருக்க வேண்டும்
:)
ஏனென்றால் ஓரளவு, முழுமை இவையெல்லாம் வெறும் அளவு கோல்தான் யாரும் முடிவு செய்ய முடியாது.
அந்தப்படத்தில் உள்ளது போல் பெண் சாமி பணிப்பெண்ணாக வந்தால் ஒரு பயலும் ப்ளைட்டு ஏறமாட்டான். அந்தம்மா காப்பி கப்பை மட்டும் தான் வச்சிருக்கு. பலர் ப்ளைட்டில் ராவா அடிக்க வருவாங்க
\\ஓரளவோ, முழுமையோ அல்ல, உங்களுக்கு தெரிந்ததைக் கூறினேன் என்று சொல்லி இருக்க வேண்டும்
:)\\
எனக்கு தெரிந்தவரை முழுமையாக- சரியா!!!
தங்களின் அளவுகோலை வைத்து எங்கெங்கு இறைவனை காணமுடியாது என்று தங்களுக்கு தெரிந்தவரை ஒரு பதிவே இட்டு விடுங்களேன்
கோவியாரே!! சிந்தனைதானே நம்மை உயர்த்தும்.
//அறிவே தெய்வம் said...
//தங்களின் அளவுகோலை வைத்து எங்கெங்கு இறைவனை காணமுடியாது என்று தங்களுக்கு தெரிந்தவரை ஒரு பதிவே இட்டு விடுங்களேன்
கோவியாரே!! சிந்தனைதானே நம்மை உயர்த்தும்.
//
இங்கு எங்கேயும் காண முடியாது, இது பூலோகம் ஆன்மாக்கள் மனிதர்களாக வாழும் உலகில் கடவுளுக்கு என்ன வேலை ? இங்கே எங்கே காணமுடியும், வாய்ப்பே இல்லை
:)
உங்களை நீங்கள் முழுமையாக 'நான் ஒரு ஆன்மா' என்று உணர்ந்து உங்கள் செயல்களில் மாற்றம் ஏற்பட்டு, உடல் இச்சைகளை மறந்தால் நீங்கள் கடவுளை காணலாம், அதுவும் கண்களால் இல்லை. ஆன்ம உலகத்தில் உணர்வால் மட்டுமே.
போதுமா பிரசங்கம் !
:)
என்னைய கிளப்பி விடாதிங்க சாமி !
சுப்பாண்டி = Mr. X
நேற்று ஒருவரை பார்த்து பேசிக்கொண்டு இருக்கும் போது உங்களைப் பற்றிய பேச்சு வந்த போது,உங்களை 50 வயது குரூப்பில் சேர்த்துவிட்டேன்,பிறகு தான் அவர் உங்கள் உண்மை வயதை சொன்னார்.அதிர்ந்துவிட்டேன்.
நகைச்சுவையாகவும், புரியும்படியும் கூறுகிறீர்கள். மிக்க நன்றி.
//சுப்பாண்டியை பத்தி நிறைய எழுதவா? பின்னூட்டட்தில் சொல்லுங்க.
//
டபுள் ஓ.கே :)
சுப்பாண்டி சூப்பர்
\\உங்களை நீங்கள் முழுமையாக 'நான் ஒரு ஆன்மா' என்று உணர்ந்து உங்கள் செயல்களில் மாற்றம் ஏற்பட்டு, உடல் இச்சைகளை மறந்தால் நீங்கள் கடவுளை காணலாம், அதுவும் கண்களால் இல்லை. ஆன்ம உலகத்தில் உணர்வால் மட்டுமே\\
சரி, இது குறித்த முந்தய பதிவு ஏதேனும் இருந்தால்
எனக்கு ஓம்கார் வர்றதுக்குள்ள மெயில் பண்ணிடுங்க.
நாம ’கும்மு’வதாக நினைத்து ’கும்மி’விடப் போகிறார் :)
காமடி சூப்பர் ஸ்வாமிஜி.:)
ஆமாம்,விமானப் பணிப் பெண்ணை எப்படி இப்படி?!
யோக சூத்திரத்தில் ஒன்பதாவது சித்தி கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸா?!
//குரூப்பில் சேர்த்துவிட்டேன்,பிறகு தான் அவர் உங்கள் உண்மை வயதை சொன்னார்.அதிர்ந்துவிட்டேன்.//
இதில் ஏதோ பிழை இருக்கிறது. ஒரு வேளை நில நடுக்கமாக இருக்கக் கூடும் விசாரித்துப் பாருங்கள் பாஸ். :)
//உடல் இச்சைகளை மறந்தால் //
இச்சை என்பதும் கொச்சை என்பதும் நாம் காணும் விதத்தில் தானே அமைகிறது? :) காமத்திலும் கடவுளைக் காண முடியுமாம். ஓஷோ சொல்கிறார். நமது பண்பாடுகளோ உடல் இச்சையை தவிர்க்கனும்னு சொல்றாங்க... ஷப்ப்பாஆஆஆ... புரியல.... விக்கி இன்னும் வளரனும்.... இப்போதைக்கு எஸ் ஆகிக்கிறேன்.
ஹாஹாஹா.. முதல் பாதி செமத்தியா சிரிச்சிட்டேன் ஸ்வாமி.. ;))
பணிபெண்சொன்னதற்கு உங்கள் விளக்கம் அருமையோ அருமை.
//அப்பாவியாக முகத்தைவைத்துகொண்டு சொன்னான்,
“கடவுளே சாண்டுவிச் கொடுக்கும்போது வேண்டாம்னு எப்படி ஸ்வாமி சொல்லறது?”//
அட்றா..அட்றா.. :))
சிவகாசி படத்துல விஜய் பேசும் ஒரு வசனம் : “ ஆப்பு கண்ணுக்குத் தெரியாதிடியோவ்..” :)))
இவரைப் பற்றி இன்னும் ஏராளமாக எழுதுங்க ஸ்வாமி.. ரொம்ப சுவாரஸ்யமான மனிதரா இருக்கார். :)
அன்றைய விவாதத்தில் இவர் இல்லையா?
//இங்கு எங்கேயும் காண முடியாது, இது பூலோகம் ஆன்மாக்கள் மனிதர்களாக வாழும் உலகில் கடவுளுக்கு என்ன வேலை ? இங்கே எங்கே காணமுடியும், வாய்ப்பே இல்லை//
ஸ்வாமி பார்த்திங்களா இந்த கோவியாரை.. ஆண்டி டெமோ அடிக்கிறார். கொஞ்சம் கவனிச்சி வைங்க. ;)
திரு தருமி ஐயா,
சுப்பாண்டிக்கு BOSS-ஆ இருந்தாலே தலைசுத்தும், இதுல சுப்பாண்டியை BOSS-ஆ ஏத்துகறாதுக்கு ஒன்னு பெரியமனது வேனும், இல்லை அறிவு இருக்க கூடாது :).
உங்கள் வருகைக்கு நன்றி
திரு அறிவே தெய்வம், திரு கோவி.
தொடங்கீட்டீங்க நடத்துங்க :).
//இங்கு எங்கேயும் காண முடியாது, இது பூலோகம் ஆன்மாக்கள் மனிதர்களாக வாழும் உலகில் கடவுளுக்கு என்ன வேலை ? இங்கே எங்கே காணமுடியும், வாய்ப்பே இல்லை//
என்னை வந்து சந்தித்த பிறகுமா இந்த சந்தேகம் கோவி ? ;)
திரு வடுவூர் குமார்,
யார் அந்த ஒருவர்னு எனக்கு ரகசியமா சொல்லுங்க. :) ?
எனது உண்மையான வயது 108-னு கேட்டவுடன் அதிர்ச்சியா :)
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு சுபாங்கன்,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு அப்துல்லா அண்ணே,
நம்ம மாதிரி ஒருத்தரை பத்தி கேட்டவுடனே ஒரே சந்தோஷம். டபுள் ஓகே வா :)
உங்கள் வருகைக்கு நன்றி
திரு வடிவேலன் ஆர்,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு ஷண்முகப்ரியன் ,
//காமடி சூப்பர் ஸ்வாமிஜி.:)//
நன்றி
//
ஆமாம்,விமானப் பணிப் பெண்ணை எப்படி இப்படி?!
யோக சூத்திரத்தில் ஒன்பதாவது சித்தி கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸா?!//
அவங்களை பார்த்தா எனக்கு 'சித்தி' மாதிரியா தெரியுது?
திரு விக்னேஷ்வரன்,
கோவியாருக்கு பிடிக்காத ஒருத்தர் ஓஷோ..!
காரணம் அவர் பாலின சாமியார்.
அவர் புத்தகத்தை படிச்சா சாமி கண்ணை (மட்டும்) குத்தாதம். ஜாக்கிரதை..
திரு பொடி”என்” சஞ்சய்,
//இவரைப் பற்றி இன்னும் ஏராளமாக எழுதுங்க ஸ்வாமி.. ரொம்ப சுவாரஸ்யமான மனிதரா இருக்கார். :)
அன்றைய விவாதத்தில் இவர் இல்லையா?//
அன்றைக்கு முழுவதும் உங்களை சுத்தி இருந்தது எல்லாமே சுப்பாண்டிகள் தான் :) (சும்மா)
அவர் இருந்தார், மற்றொரு முறை அறிமுகப்படுத்துகிறேன். இந்த பதிவை எனது மாணவர்கள் படிக்கிறார்கள் என்றாலும் , அவரும் படிப்பார் அப்பொழுது தான் உச்சக்கட்ட தமாஷ் காத்திருக்கிறது.
//ஸ்வாமி பார்த்திங்களா இந்த கோவியாரை.. ஆண்டி டெமோ அடிக்கிறார். கொஞ்சம் கவனிச்சி வைங்க. ;)//
கோவியார் ஆண்டியை அடிச்சாலும், அங்கிளை அடிச்சாலும் இந்த ஆண்டிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை :)
உங்கள் வருகைக்கு நன்றி.
ஸ்வாமி... சின்ன வயசுல "பூந்தளிர்"னு ஒரு சிறுவர் புத்தகம் வரும். அதுல "சுப்பாண்டியின் சாகசங்கள்"னு ஒரு சிரிப்பு தொடர் இருக்கும். எனக்கு இவரை அவர் போல நினைச்சு படிச்சப்பறன் சிரிப்பு தாங்கல...:)))
உங்க நகைச்சுவை உணர்வு அலாதியா இருக்கு !!!
நிறைய எழுதுங்க..........
//நேற்று ஒருவரை பார்த்து பேசிக்கொண்டு இருக்கும் போது உங்களைப் பற்றிய பேச்சு வந்த போது//
வடுவூர் குமார் அண்ணா,
இதுல மறைக்க என்ன இருக்கு நாம எங்காவது குண்டு வைக்கப் போறதா பேசினோமோ ?
:)
//நமது பண்பாடுகளோ உடல் இச்சையை தவிர்க்கனும்னு சொல்றாங்க... //
குழந்தையை ஏன் தெய்வத்துக்கு சமம் என்கிறார்கள் ?
மனசுதான், தூய்மையான மனசு தான்.
ஓசோ அமெரிக்கர்களுக்கு அவர்களுடைய சூழலில் எப்படி சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்லி வைத்தார். நாம அதைப் பிடித்துத் தொங்கினால் ஓசோ என்ன செய்வார் ?
காமிடி பண்ணாதிங்க கோவி அண்ணா... யாரும் எதையும் பிடித்துத் தொங்கவில்லை. சரி அதை விடுங்க... பன்றி கறியை கண்ணப்பன் படைத்தாரோ இல்லையோ அது ரெண்டாவது விசயம். இக்கதையை ஆன்மீகத்தோடு தொடர்புபடுத்தி சொல்லக் காரணம் என்ன?
ஒருத்தர் தூய்மைனு சொல்றது இன்னொருத்தருக்கு அசிங்கம்னுபடலாம். இறைத்தன்மையை நல்லதுக்கு மட்டுமே சொல்வது என்றால் சாத்தியமாகாது. இறைந்திருப்பது மனிதன் நல்லவை என வகுத்த ஒன்றிலும் கெட்டது என வகுத்த ஒன்றிலும் இருக்கக் கூடும். நன்மை தீமை என்பது மனிதனின் விதிகளே.
//VIKNESHWARAN said...
காமிடி பண்ணாதிங்க கோவி அண்ணா... யாரும் எதையும் பிடித்துத் தொங்கவில்லை. சரி அதை விடுங்க... பன்றி கறியை கண்ணப்பன் படைத்தாரோ இல்லையோ அது ரெண்டாவது விசயம். இக்கதையை ஆன்மீகத்தோடு தொடர்புபடுத்தி சொல்லக் காரணம் என்ன? //
அது சேக்கிழாரின் சைவ வெறி அரசியல். அதைப் பற்றி நிறைய சொல்லலாம். நந்தனாரையும் தான் உயர்வாகச் சொன்னார், ஆனால் தீட்சிதர்கள் சிலையையே பெயர்த்து வெளியே வீசிவிட்டார்கள். எங்க சைவத்துல எல்லோருமே இருக்காங்க என்று காட்ட சேக்கிழார் எழுதிய கதைகளில் அதுவும் உண்டு. வள்ளலார் சைவர் தானே ? அவர் ஏன் அதை வலியுறுத்தனும். விலங்கை உண்பது பாவ / புண்ணியம் கணக்கிலெல்லாம் வராது. ஒரு உயிர் வாழும் உரிமையைப் பறிக்க நமக்கு உரிமை இல்லை என்பதே புலால் மறுத்தலில் வழியுறுத்துவது. திருவள்ளுவர் காலம் தொடங்கியே சொல்லி வருகிறார்கள். நாவைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் அதற்காக கூறும் சப்பைக் கட்டுகளில் புலால் மறுத்தலை கேலி செய்வதும் சப்பைக் கட்டுவதும் எப்போதும் உண்டு. மனிதன் பலவித உணர்வுகளிலும் பலவீனமானவன். பிறகு எப்படி ஒரு மனிதனை சுதந்திரமானவன் என்று சொல்ல முடியும் ? உங்களுக்கு ஒன்று தேவை என்று அதன் தயவில் வாழ்ந்தால் நீங்கள் அதற்கு அடிமை என்றே பொருள்.
//ஒருத்தர் தூய்மைனு சொல்றது இன்னொருத்தருக்கு அசிங்கம்னுபடலாம். இறைத்தன்மையை நல்லதுக்கு மட்டுமே சொல்வது என்றால் சாத்தியமாகாது. இறைந்திருப்பது மனிதன் நல்லவை என வகுத்த ஒன்றிலும் கெட்டது என வகுத்த ஒன்றிலும் இருக்கக் கூடும். நன்மை தீமை என்பது மனிதனின் விதிகளே.//
நன்மை தீமை என்பது மனிதன் விதிகள் என்பதை விட அதை சுயநல நோக்கில் தீர்மாணிப்பது தான் மனிதத் தன்மையின் விதியாக இருக்கிறது. இயற்கையில் கூட இரவு பகல் போல் இருத்தன்மைகள் உண்டு. ஆனால் அவறில் எது நன்மை என்று பொதுப்படுத்திவிட முடியாது. மனிதன் மட்டுமே தனக்கு லாபமானதை நன்மை என்பான்.
நானும் ஒரு சுபபாண்டி தான், என்ன நான் எப்போதுமே சரி தான்னு நினைக்கிற சுப்பாண்டி, ஆனால் என் மனைவி நான் எப்போதுமே தவறு தான்னு நம்பரா. ( வேற மாத்ரி சொல்லனும்னா ..அசடுன்னு ...ஹி ஹி)
அருமையாக இருந்தது சுவாமி, சுப்பன்டியின் சாகசங்கள்! கண்டிப்பாக இன்னொரு சுப்பாண்டி எபிசொட் எழுதவும்.
ஸ்வாமி ஓம்கார் said...
ஆமாம்,விமானப் பணிப் பெண்ணை எப்படி இப்படி?!
யோக சூத்திரத்தில் ஒன்பதாவது சித்தி கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸா?!//
அவங்களை பார்த்தா எனக்கு 'சித்தி' மாதிரியா தெரியுது?//
மன்னிக்கவும் ஸ்வாமிஜி.இந்த ஜோக் வொர்க் அவுட் ஆகவில்லை.!
ஜோக்குகள் விஷயத்தில் ஞானிக்கும் அடி சறுக்கும்.!!
//அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்,
“கடவுளே சாண்டுவிச் கொடுக்கும்போது வேண்டாம்னு எப்படி ஸ்வாமி சொல்லறது?”//
நல்லா இருக்கே!!!!
//டிஸ்கி : எனக்கும் சுப்பாண்டிக்கும் இது போல ஏகப்பட்ட விஷயம் நடந்திருக்கு, சுப்பாண்டியை பத்தி நிறைய எழுதவா? பின்னூட்டத்தில் சொல்லுங்க.//
எழுதுகோ, நல்லா காமடி கலந்த சிந்தனையா இருக்கு..
யாரப்பா கோவி எனும் சிங்கத்தின் வாலை மிதிச்சது :)
கோவி ஓஷோவை அப்படி மதிப்பிட முடியாது. அவர் அமெரிக்காவுக்கு என எதையும் சொல்லவில்லை. மனிதனுக்காக சொல்லி இருக்கிறார். ஓஷோவை பற்றிய ஆழ்ந்த வாசிப்பு உங்களுக்கு தேவை.
திரு.மகேஷ்,
நான் சின்னவயதில் படித்த பூந்தளிர், டிங்கிள் உள்ள அதே சுப்பாண்டி தான் இது. எனது மாணவருக்கு நான் வைத்தது புனைபெயர் சுப்பாண்டி.
உங்கள் வருகைக்கு நன்றி
திரு சுந்திரராமன்,
திரு மதுரைவீரன்,
திரு ஞானசேகரன்,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு ஷண்முகப்ரியன்,
///மன்னிக்கவும் ஸ்வாமிஜி.இந்த ஜோக் வொர்க் அவுட் ஆகவில்லை.!
ஜோக்குகள் விஷயத்தில் ஞானிக்கும் அடி சறுக்கும்.!!///
ஞானிக்கு தானே அடிசறுக்கும்..!
சும்ம ஒரு இதுக்கு :)
நன்றி
//கோவி ஓஷோவை அப்படி மதிப்பிட முடியாது. அவர் அமெரிக்காவுக்கு என எதையும் சொல்லவில்லை. மனிதனுக்காக சொல்லி இருக்கிறார். ஓஷோவை பற்றிய ஆழ்ந்த வாசிப்பு உங்களுக்கு தேவை.//
ஆழ்ந்த வாசிப்பு என்ற பெயரில் சிவ லிங்கம் ஆண்குறியாகச் சொல்லப்படுவது தான் நம்முடைய ஆழ்ந்த வாசிப்பாளர்களின் திரண்.
:)
திரு கோவி
ஸ்ரீக்ருஷ்ணர் அனேக விஷயங்களை செய்திருக்கிறார். சிலருக்கு அவர் கோபிகளுடன் இருந்தது மட்டுமே நினைவுக்கு வரும்.
தவறு க்ருஷ்ணருடையது அல்ல.
உங்கள் நல்ல மனதுக்கு படியுங்கள் அவரிடம் நிறைய நல்ல விஷயம் (மும்) இருக்கு :)
tamilil type seivathu eppadi
//வள்ளலார் சைவர் தானே ? அவர் ஏன் அதை வலியுறுத்தனும். விலங்கை உண்பது பாவ / புண்ணியம் கணக்கிலெல்லாம் வராது. ஒரு உயிர் வாழும் உரிமையைப் பறிக்க நமக்கு உரிமை இல்லை என்பதே புலால் மறுத்தலில் வழியுறுத்துவது.//
இதற்காக தாம் கடை வைத்தேன் கொள்வார் இல்லைனு சொன்னார். ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். ஒரு மீனவனிடம் நீ மீன் பிடிக்காதே. அது பாவம் என சொன்னால் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியுமா? அவன் வயிற்று பிழைப்புக்கு அதைவிட்டால் வேறு வழி இல்லை அவனுக்கு. எல்லா சித்தாந்தங்களும் எல்லோருக்கும் ஒத்து போகும் என கருதிவிட முடிவதில்லை.
பிள்ளையின் படிப்பை விட கடவுள் பக்தி தான் முக்கியம் என கருத்தும் நம்மாட்களிடம் கடவுளே இல்லை என சொன்னல் என்னவாகும். பெரியாரின் கொள்கைக்கு நேர்ந்தது இது தான்.
நானும் வள்ளலார் நெறிகழகத்தில் உறுபினராக இருக்கிறேன். வள்ளலார் எங்கள் ஜாதி என மார்தட்டிக் கொள்ளும் சில பிள்ளைமார்கள் இன்னமும் பேசக் காண்கிறேன். ஜாதியே இல்லை என்றார் வள்ளலார். இவர்களை எதனால் அடிக்க? நம்மவர்கள் எல்லாவற்றையும் தனக்கு ஏற்றபடி தான் அணுகுகிறார்கள். சுயநலம் என்று கூட சொல்லலாம்.
ஸ்வாமி அசத்துறீங்க ..
உங்கள் பதிவுகள் அனைத்துமே தொடக்கத்தில் இருந்து முடிவு வரை படிக்க சுவாராசியம்
//சுப்பாண்டிக்கு BOSS-ஆ இருந்தாலே தலைசுத்தும், இதுல சுப்பாண்டியை BOSS-ஆ ஏத்துகறாதுக்கு ஒன்னு பெரியமனது வேனும், இல்லை அறிவு இருக்க கூடாது :).//
கவலையே படாதீங்க. I am fully qualified தான்
உங்கள் பதிவுகள் அனைத்துமே தொடக்கத்தில் இருந்து முடிவு வரை படிக்க சுவாராசியம்
// ஒரு மீனவனிடம் நீ மீன் பிடிக்காதே. அது பாவம் என சொன்னால் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியுமா? அவன் வயிற்று பிழைப்புக்கு அதைவிட்டால் வேறு வழி இல்லை அவனுக்கு. எல்லா சித்தாந்தங்களும் எல்லோருக்கும் ஒத்து போகும் என கருதிவிட முடிவதில்லை.//
அது மீன் பிடிக்கிறவர்களுக்கு மற்றவர்களுக்கு என்ன குறைச்சல் ? காட்டுவாசி காடுகளில் ஆடைக் குறைவாகத்தான் இருக்கிறான் என்று சொல்லி நாகரீக நிலையில் வாழ்பவர்களும் நவநாகரீகம் என்ற பெயரில் ஆடைக் குறைப்பதும் ஒப்பீட்டு அளவில் சரியாக இருக்க முடியுமா ? நாவின் ருசி, உணவு பழக்கமாகிவிட்டது அதனால் அசைவம் விட முடியவில்லை என்று சொல்வதே சரியான கூற்று.
//பிள்ளையின் படிப்பை விட கடவுள் பக்தி தான் முக்கியம் என கருத்தும் நம்மாட்களிடம் கடவுளே இல்லை என சொன்னல் என்னவாகும். பெரியாரின் கொள்கைக்கு நேர்ந்தது இது தான்.//
அப்படி யாரும் சொல்ல மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். கோவில் திருவிழாக்கள் தேர்வு நேரத்தில் இருந்தால் பிள்ளைகளின் படிப்புக்குத்தான் முன்னிரிமை கொடுப்பார்கள்.
//நானும் வள்ளலார் நெறிகழகத்தில் உறுபினராக இருக்கிறேன். வள்ளலார் எங்கள் ஜாதி என மார்தட்டிக் கொள்ளும் சில பிள்ளைமார்கள் இன்னமும் பேசக் காண்கிறேன். ஜாதியே இல்லை என்றார் வள்ளலார். இவர்களை எதனால் அடிக்க? நம்மவர்கள் எல்லாவற்றையும் தனக்கு ஏற்றபடி தான் அணுகுகிறார்கள். சுயநலம் என்று கூட சொல்லலாம்.//
வள்ளலார் இவர்களை என் சாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளச் சொன்னார்களா ? அற்ப விளம்பரங்களுக்கும் பெருமைக்கும் வள்ளலார் பெயரை பிள்ளைகள் பாழ்படுத்துவதற்கு வள்ளலார் என்ன செய்ய முடியும் ?
swami neega pona flight spicejeta?
Post a Comment