பஜன், கூட்டு தியானம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி அனைவரையும் இணைத்தது.
இறையருள் நிறைந்த சன்மார்க்க சங்கம் - கோவையில் நடைபெற்ற இவ்விழாவில் ஜோதிடம் மூடநம்பிக்கையா - விஞ்ஞானமா எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் நமது வலையுலகை சார்ந்த திரு பரிசல்காரன் மற்றும் சஞ்சய் இருவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
[இது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி அல்ல :)]
[படத்தில் : பரிசல் , ஸ்வாமி ஓம்கார் , “பொடி” என் சஞ்சய் :) ]
[படத்தில் : பரிசல் , ஸ்வாமி ஓம்கார் , “பொடி” என் சஞ்சய் :) ]
பின்னர் சத்சங்கம் நடைபெற்றது, மக்கள் கேள்விகளுக்கு எனது பதில்கள் இடம்பெற்றன. பின்வரும் காலத்தில் சத்சங்கத்தை இங்கே தொகுப்பாகவோ, வீடியோ காட்சியாகவோ வெளியிடுகிறேன்.
ஜோதிட உற்சவம் எனும் விழா சிறப்பாக இருந்ததன் காரணம் என்ன ? என கேட்டவர்களுக்கு நான் சொன்ன பதில்..
மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டும் என்பதிலிருந்து விளாமல் நிகழ்ச்சியை சிறப்பிக்கவேண்டும் என விலா நோக செயல்பட்டதால் விழா சிறப்பாக இருந்தது.
இன்னிகழ்ச்சியை சிறப்பாக்கிய பரிசல்காரன், சஞ்சய் மற்றும் எனது மாணவ மணிகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
19 கருத்துக்கள்:
I am first
விழா சிறப்பாக அமைந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி,ஸ்வாமிஜி.
வளர்க உங்கள் பணி
வளர்க உங்கள் பணி
எதிர்கருத்தினரை பேசவைப்பதும், அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதுமே சிறந்த மனிதத்துக்கு அடையாளம். அதை அன்று உணர்ந்தோம் ஸ்வாமிஜி. நானும் சஞ்சயும் பேசியதில் தவறிருப்பின் பொறுத்த உங்களுக்கும், உங்கள் மாணவர்களுக்கும் நன்றிகள்.
அன்றைய உங்கள் முடிவுரையை மட்டும் பதிவேற்றலாமே...
அப்புறம்..
இன்றைக்கு குசும்பனுக்கு மணநாள். நல்லவேளை இரண்டு நாள் அவர் பதிவுகள் பக்கம் வரமாட்டார். இந்த ஃபோட்டோ அவர் கண்ணில் படாமலிருத்தல் நலம்!! :-))))))))))
எப்பொழுது எங்கள் ஊரில் இதைப் போன்ற விழா நடைபெரும்...
பெரியவர் பரிசல்காரனை சிந்தாமல் சிதறாமல் வழிமொழிகிறேன். :)
//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
பெரியவர் பரிசல்காரனை சிந்தாமல் சிதறாமல் வழிமொழிகிறேன். :)
//
பெரியவர் பரிசலை வழிமொழிந்த பெரியவர் சஞ்சையை வழி மொழிகின்றேன்.
பெரியவர் பரிசலை வழிமொழிந்த பெரியவர் சஞ்சையை வழி மொழிந்த அப்துல்லாவை வழி மொழிகிறேன்.
அது இருக்கட்டும்... அது என்ன "விளா"மல்....? சும்மா ஒரு 'இது'க்குத்தானே? :)))))))))))
அப்பறம் ஸ்வாமி.... ஓய்ந்தபோது நம்ம திண்ணைல ஒரு 10 நிமிஷம் உக்காந்துட்டுப் போங்க... உங்க பதிவுகளை ஒட்டி ஒரு பதிவு இருக்கு !!
திரு KS,
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு ஷண்முகப்ரியன்,
உங்களை போன்றோர் ஆதரவு விழாவை சிறக்க செய்தது. உங்கள் வருகைக்கு நன்றி.
திரு அது ஒரு கனாக்காலம்,
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு பரிசல்,
மீண்டும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி சொல்லுகிறேன்.
கவலைவேண்டம் இரண்டு நாள் கழித்து குசும்பனுக்கு இந்த படத்தை அனுப்பிவைப்பது என் பொறுப்பு. :)
திரு மதி,
கண்டிப்பாக உங்கள் ஊரில் ஒரு திருவிழா உண்டு.காலம் தான் வேறுபடும். அவ்வளவே.
திரு சஞ்சய்,
பரிசலை வழிமொழிந்தால் உங்கள் பேச்சுக்களை மறைக்கலாம் என நினைக்காதீர்கள் ;).
நீங்கள் பேசிய வீடியோ பதிவு விரைவில் வருகிறது.
திரு அப்துல்லா அண்ணே,
அதை பார்க்க கண்கோடி வேண்டும்.
திரு மகேஷ்,
ஓவராக மொழிந்த்து வழியே இல்லாமல் போகப்போகிறது :)
இல்லாம் ஒரு இதுக்குதான் :)
>>கண்டிப்பாக உங்கள் ஊரில் ஒரு திருவிழா உண்டு.காலம் தான் வேறுபடும். அவ்வளவே.<<
நன்றி ஸ்வாமிஜீ...
மூன்றாவது படத்துக்குக் கீழே 'விழாவை சிறப்பிக்க திரண்ட கூட்டத்தின் ஒரு பகுதியினர்' என்று குறிப்பிடாததைக் கண்டிக்கிறேன்.
கேள்வி பதில்களை பதிவில் இட்டால் பலருக்கும் உதவியாக இருக்கும்
அன்புடன் தொடர் பதிவை எதிர்பார்க்கின்றேன்
இந்த விழாவிற்கு என்னால் வர இயலவில்லை. அடுத்த உத்சவத்திற்கு ஸ்வாமிகள் ஏற்பாடு செய்யும்போது கண்டிப்பாக கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்கு ஸ்வாமிகள் அருள வேண்டுகிறேன்
விழா பற்றி தெரியாமல் இருந்ததற்கு இப்பொழுது வருத்தப்படுகிறேன் சுவாமிஜி
Post a Comment