Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, April 9, 2009

சித்திரை ஒன்று - தமிழ் புத்தாண்டு என சொல்லலாமா?


உலக மக்களின் கலாச்சாரம் எப்பொழுதும் அவர்களின் நாகரீகத்துடன் இணைந்த ஒருவிஷயம். ஒரு சமூகம் எது போல செயல்படுகிறதோ அதை சார்ந்து அவர்களின் காலாச்சாரமும் கொண்டாட்டங்களும் அமைந்துவிடுகிறது. இந்த கருத்துக்கு முரண்பாடான சமூகம் ஒன்று உண்டு என்றால் அது பாரத கலாச்சாரம் மட்டும் தான்.

தங்களின் சந்தோஷத்திற்காகவோ அல்லது சமூகத்திற்காகவோ விழாக்களை கொண்டாடாமல் ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், பிரபஞ்ச நலனுக்காகவும் கொண்டாடினார்கள்.

நமது வாழ்வியல் அடிப்படை மிகவும் மெய்ஞானப்பூர்வமானது. கவனிக்க விஞ்ஞானப்பூர்வமானது அல்ல. காரணம் விஞ்ஞானம் என்பது ஒரு விடையை ஆய்வு செய்ய அறிவு மூலம் முயற்சி செய்வது. விஞ்ஞானியின் அறிவு திறனை மட்டுமே அது சார்ந்தது. நாளை வேறு ஒரு விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பால் முன்னர் கண்டுபிடித்ததை நிராகரிக்கலாம். வானவியலில் விஞ்ஞானம் சார்ந்த விஷயங்கள் எப்பொழுதும் ஒரு கற்பனை சாந்த சமாச்சாரமாகவே இருக்கும். காரணம் சமன்பாடுகள் மூலமும் கொள்கைகள் மூலமே வானவியல் நிரூபணம் செய்கிறது. யார் சென்று பார்த்தார்கள் புதன் சூரியனை சுற்றி வர 88 நாட்கள் ஆகிறது என்று?

வடமொழி சொல் கிரஹா என்றால் ”ஒர் வசிப்பிடம்” அல்லது “ நிலை” (Base) என பொருள்படும். நீங்கள் வசிக்கும் இடம் என்பதால் வீடு என்பது கிரஹம் என அழைக்கப்பட்டது. அதனால் தான் கிரஹ ப்ரவேசம் எனும் சொல் வழக்கத்தில் இருந்தது. வானமண்டலத்தில் நட்சத்திர ஆற்றல் எங்கே கிரகிக்கப்படுகிறதோ அந்த பகுதிக்கு பெயர் கிரஹம்.

பகுத்தறிவாளர்கள் என கூறிக்கொள்பவர்கள், சூரியன் ஒரு நட்சத்திரம் அதை கிரகம் என கூறுகிறார்கள் ஜோதிடத்தில் என சொல்லுவதுண்டு. விஞ்ஞான ரீதியாக ஜோதிடத்தை அனுகும் இந்த பகுத்தறிவாளர்களிடம் ப்ளூட்டோ எனும் கிரகத்தை பற்றி கேட்டால் விஷயம் தெரியும்.

ஐந்து வருடத்திற்கு முன்பு வரை ப்ளூட்டோ ஒரு கிரகம். ஆனால் தற்சமயம் இதை கிரகம் இல்லை என விஞ்ஞானிகள் சொல்லிவிட்டார்கள்.
பகுத்தறிவாளர்கள் இதற்கு என்ன சொல்லுவார்கள்? மெய்ஞான ரீதியான ஜோதிடம் ப்ளூட்டோவை என்றும் பயன்படுத்தியதே இல்லையே?

இதனால் விஞ்ஞானம் கூட பகுத்தறிவின் கீழ் வருமா என சந்தேகம் கொள்ளவேண்டி இருக்கிறது.


மெய்ஞானம், விஞ்ஞானம் போல அல்ல, அது அறிவு நிலையை கடந்தது. நமது கலாச்சாரமும் அதன் கட்டமைப்பும் விஞ்ஞானம் சார்ந்தது அல்ல மெய்ஞானம் சார்ந்தது. நமது நாள்காட்டியை இதற்கு சரியான உதாரணமாக கொள்ளலாம்.

சூரியனை பூமி சுற்றிவருவதால் சூரியனை மையமாக கொண்டு செயல்படும் நாள்காட்டி நம்முடையது. பூமி வட்டபாதையில் சுற்றுவதால் வட்டத்தை பன்னிரண்டாக பிரித்து பயன்படுத்திய முதல் நாள்காட்டி என இதை சொல்லலாம்.

மனிதன் வளர்ச்சி அடையாத காலத்தில் எண்ணிக்கை பத்துடன் நிறுத்திக்கொண்டான். காரணம் அவனது விரல்களில் பத்து விரல்தான் இருந்தது. அப்படிபட்ட மனிதன் கணித்த நாள்காட்டிகளில் பத்து மாதமே இருந்தது. ஜூலியர் சீசர் காலத்தில் இந்திய வானவியல் நிபுணர்களை கொண்டு மேலைநாட்டு நாள்காட்டி மறுசீரமைக்கப்படது. இதற்கு ஜீலியன் காலண்டர் என பெயர். அதைதான் நாம் ஆங்கில நாள்காட்டியாக பயன்படுத்துகிறோம்.


லத்தீன் - கிரேகக மொழியில் எண் வரிசையில் 7,8,9,10 என்பது செப்டா,அக்டா, நவா, டெக்கா என சொல்லுவார்கள். இதையே அவர்கள் மாதத்தின் பெயராக இருந்தது. ஜீலியர் சீசர் காலத்திற்கு பிறகு 7ஆம் மாததிற்கு முன் அவரின் பேரன் அகஸ்டியஸ் பெயரையும் தனது பெயரையும் கொண்ட மாதத்தை இணைந்த்தார்.

அதனால் தான் உலகின் நாள்காட்டிகளில் மிகவும் துல்லியமானதும் சூரிய மண்டலத்தை கொண்டும் கணக்கிடப்படுவதால் நாள்காட்டிகளின் முன்னோடி என நம்மை அழைக்கலாம்.

நம் மக்கள் சூரியன் மேஷ ராசியின் முதல் பாகைக்கு வரும் நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். (மேலும் ஜோதிட ரீதியான தகவலுக்கு இந்த சுட்டியை பயன்படுத்தவும்). ஆனால் அரசியல் காரணங்களால் புத்தாண்டை தை மாதத்தில் மாற்றி அமைத்தது வேதனைக்குரியது.

தமிழ் இனப்பற்றால் திருவள்ளுவர் ஆண்டு என வழக்கத்திற்கு கொண்டு வந்தனர். ஏன் திருவள்ளுவர் என கேட்டால் விடையில்லை. அவரை விட மூத்த தமிழ் இலக்கியவாதிகள் உண்டு. மேலும் திருவள்ளுவர் ஆண்டை திருவள்ளுவர் தினத்தில் துவங்கவேண்டுமா இல்லை சித்திரை ஒன்றாம் தேதியா என குழப்பம் வந்தது. அதனால் புத்தாண்டு தினம் அரசால் மாற்றப்பட்டது. திருவள்ளுவர் தினத்திற்கு பிறகு ஆண்டு துவங்குவதால் திருவள்ளுவர் ஆண்டை கணக்கிட குழப்பம் ஏற்படுவதால் மாற்றம் கொண்டுவந்தார்கள். காரணம் அரசு ஆவணங்கள் திருவள்ளுவர் ஆண்டை பயன்படுத்துவதால் இந்த மாற்றம் அவசியமானது. கிருஸ்து பிறந்த தினம் கூட ஜீலியன் நாள்காட்டியால் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டது.

அதனால் தான் இந்த ”ஆண்டு மாற்றம்” புரட்சியை எந்த எதிர்கட்சியும் எதிர்க்கவில்லை.மதம் சார்ந்த கட்சிகள் கூட இதை எதிர்க்கவில்லை. எதிர்த்தார்கள் என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இதே திருகுவலி வரும்.

திருவள்ளுவர்க்காக வருடத்தின் முதல் நாளை மாற்றம் செய்யலாம் ஆனால் சூரியனின் பயணத்தை ராசிமண்டலத்தில் மாற்றம் செய்ய முடியுமா? அரசு ஆவணத்திற்காக மாற்றினோம் என சொன்னால் கூட தப்பில்லை, 60 வருடம் என்பதே நகைப்புக்குரியது என அந்த புரட்சியாளர் கூறும் கருத்து சற்றே வருத்ததிற்குரியது.

அவருக்கு பாராட்டு கூட்டம் நடக்கும் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்கும் அசந்தர்ப்பம் ஏற்பட்டது. புதிய உடை என நிர்வாணமாக செல்லும் ராஜாவின் கதை ஞாபகம் வந்தது. அவரை பாராட்ட இரு சொற்பொழிவாளர்கள், ஒரு கவிஞர் மற்றும் இலக்கியவாதி. ஒவ்வொருவரும் இதற்காக தான் அவர் புத்தாண்டை மாற்றினார் என சொல்லும் காரணம் புரட்சியாளருக்கே தெரியாமா என சந்தேகம்தான்.

தை மாதம் என்றும் , சித்திரை மாதம் எனவும் கூறும் மாதத்தின் பெயர்கள் எப்படி வந்தது? இவை அனைத்தும் தமிழ் பெயரா? என சிந்திக்க வேண்டும்.

நமது மாதங்கள் அனைத்தும் சந்திரனை சார்ந்து நிர்ணயிக்கபட்டது. ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி அந்த மாதத்தின் தொடக்க நாளாக சந்திராம்ச மாதத்தில் பின்பற்றப்படுகிறது. பெளர்ணமி முதல் அமாவாசை வரை மீண்டும் பெளர்ணமி வரை ஒரு மாதம் என வழங்கப்பட்டது.

பெளர்ணமி என்பது என்ன என தெரிந்து கொள்வது நல்லது. சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே ஏற்படும் பாகை திதி என்னும் தன்மையில் அழைக்கப்படுகிறது. இதில் குறைந்த பாகை வித்தியாசத்தில் இருக்கும் நிலை அமாவாசை. எதிர் திசையில் இருந்தால் பெளர்ணமி.



முதல் மாதம் பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் அமைவதால் அம்மாததிற்கு சித்திரை என பெயர். அடுத்த மாதம் விசாக நட்சத்திரத்தில் அமைவதால் வைகாசி மாதம் என வழங்குகிறோம்.
நட்சத்திர பெயர்கள் அனைத்தும் வடமொழி பெயர்கள் தான்.

தமிழ் வருடத்தில் வடமொழி மாதங்கள் இருக்கலாமா? யாராவது சொற்பொழிவாளரோ இலக்கியவாதியோ சொல்லுங்கள். புரட்சியாளர் மாதங்களின் பெயரை மாற்றட்டும். இவர் ஜீலியர் சீசர் போல ஒரு பேர குழந்தையை வைத்து சிரமப்பட வேண்டியது இல்லை. அவர் குடும்ப சூழலில் 12 பெயர் தாராளமாக தேரும்.

சித்திரை ஒன்றாம் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதில் எனக்கும் உடன்பாடில்லை. சூரியன் சந்திரன் மூலம் அமையும் நாள்காட்டி தனியொரு மதத்திற்கோ, இனத்திற்கோ அல்லது மொழிக்கோ சொந்தமானது அல்ல. மெய்ஞான ரீதியான விஷயம் அனைவருக்கும் பொதுவானது. உலகில் எங்கே யார் சொன்னாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆகவே இந்த நாளை மெய்ஞானத்தின் புத்தாண்டாக கொண்டாடுவோம்.

இன மொழி மதம் கடந்த மெய்ஞானவெளியின் துகள்களாய் சஞ்சரிப்போம்.

மெய்ஞான புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

ஸ்வாமி ஓம்கார்
சர்வதாரி
பங்குனி 27


57 கருத்துக்கள்:

ஷண்முகப்ரியன் said...

அருமையான விளக்கம் ஸ்வாமிஜி.

இராகவன் நைஜிரியா said...

தெரியாத பலவிஷயங்களை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

Mahesh said...

ஸ்வாமி... நல்ல கருத்துகள்.... பல விஷயங்களில் என் எண்ண ஓட்டமும் உங்கள் கருத்துகளுடன் ஒத்துப் போவதாலேயே உங்கள் எழுத்து மீது ஒரு ஈர்ப்பு....

அது ஒரு கனாக் காலம் said...

சில நாட்கள் முன்பு டீவியில் இது பற்றி பார்க்க நேர்ந்தது , உங்கள் விளக்கம் மிகவும் அருமை

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,
திரு இராகவன்,
திரு மகேஷ்,
திரு சுந்திர ராமன்.

பதிவிட்டதும் ஒரு மணி நேரத்தில் உங்கள் பின்னூட்டங்கள். அனைவருக்கும் நன்றிகள்.

மதி said...

பதிவு கொஞ்சம் காரசாரமக இருக்கிறது...

அனைவருக்கும் மெய்ஞான (தமிழ்/சித்திரை/இந்து)புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மதி.

கல்வெட்டு said...

//தமிழ் வருடத்தில் வடமொழி மாதங்கள் இருக்கலாமா? யாராவது சொற்பொழிவாளரோ இலக்கியவாதியோ சொல்லுங்கள். புரட்சியாளர் மாதங்களின் பெயரை மாற்றட்டும். இவர் ஜீலியர் சீசர் போல ஒரு பேர குழந்தையை வைத்து சிரமப்பட வேண்டியது இல்லை. அவர் குடும்ப சூழலில் 12 பெயர் தாராளமாக தேரும்.//



உங்களுக்குத் தெரியவில்லை என்பதற்காக இல்லை என்று சொல்ல வேண்டாம். இவைதான் தமிழ் மாதங்கள். நடைமுறையில் ஏன் இல்லை என்பற்கு என்னிடம் பதில் இல்லை.

சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை

கீழே உள்ள பதிவுகள் மேலும் சில தகவல்களைத் தரலாம்

பொங்கல்தான் புத்தாண்டா?
http://penathal.blogspot.com/2008/01/blog-post_24.html


எது தமிழ்ப் புத்தாண்டு? ----பேரா.பெஞ்சமின் லெபோ, பிரான்சு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=1038&Itemid=59

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கல்வெட்டு,

நான் தெரியாத விஷயங்களை இல்லை என சொல்லுவதில்லை. கடவுள் உற்பட.

எனக்கு இலக்கிய அறிவு இல்லாததால் தமிழ் மாதம் பெயர்கள் தெரியவில்லை. தமிழில் மாதங்களுக்கு பெயரே இல்லை என நான் சொல்லவில்லை. பயன்படுத்துவதில்லை என்றே சொல்லி இருக்கிறேன்

//சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை//

மேலும் நீங்கள் கூறிய தமிழ் மாத பெயரிகளில் கும்பம்,மீனம், மேழம்,கடகம்,கன்னி, துலை ஆகியவை ஜோதிடம் சார்ந்த ராசியின் பெயர்கள்.

கேரள சகோதரர்கள் பன்னிரு மாதத்தின் பெயர்களை முழுமையான ராசிகளின் பெயராகவே பயன்படுத்துகிறார்கள். கேரள கலாச்சாரம் தமிழினத்திலிருந்து வந்ததே என்பது அனைவருக்கும் தெரியும்.

ராசிகளின் பெயர்கள் அனைத்தும் வடமொழி சொல்லே. மேஷா என்பதன் தமிழ் மருவி மேஷம். அர்ஜூணா என்பது அர்ஜுனன் என்றும் க்ருஷ்ணா என்பது கிருஷ்ணன் ஆனது போல ராசிகளின் பெயர்கள் தமிழ்வழியில் சொல்லுகிறார்கள்.

வடமொழியில் உள்ள ஜோதிட குறிச்சொல்களான ராசிகளின் பெயர்களை பகுத்தறிவாளர்களும் தமிழ் புரட்சியாளர்களும் பயன்படுத்தலாம என்பதே எனது கேள்வி.

கோவி.கண்ணன் said...
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் said...

//திருவள்ளுவர்க்காக வருடத்தின் முதல் நாளை மாற்றம் செய்யலாம் ஆனால் சூரியனின் பயணத்தை ராசிமண்டலத்தில் மாற்றம் செய்ய முடியுமா? அரசு ஆவணத்திற்காக மாற்றினோம் என சொன்னால் கூட தப்பில்லை, 60 வருடம் என்பதே நகைப்புக்குரியது என அந்த புரட்சியாளர் கூறும் கருத்து சற்றே வருத்ததிற்குரியது.
//

ஸ்வாமி, புரட்சியாளர்கள், பகுத்தறிவு வாதிகள் என்று பல இடங்களில் இங்கே (குறை) கூறி இருக்கிறீர்கள், பரிந்துரைக்கு வித்திட்டவர்கள் பலர் அதில் மறைமலை அடிகாளர் என்கிற சைவரும், பரிதிமார் கலைஞர் எனப்படும் சூரிய நாரயண சாஸ்திரியும் அடங்குவர். இவர்கள் நாத்திகர்கள் கிடையாது. தமிழ் பற்றால், தமிழுக்கு இருக்கும் சிறப்பைப்பையும் பயன்படுத்துவது சரி என்பவர்களை நாத்திகர்களாகவும் பகுத்தறிவாளர்களாகவும் பார்க்கும் பார்வைக்கு எதாவது மருந்து கொண்டுதான் குணப்படுத்த முடியும். நான் உங்களைச் சொல்லவில்லை :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

மொழிஆய்வாளர்களுக்கும் , பகுத்தறிவாளர்கள் என தன்னை சொல்லிகொள்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மேலும் நாத்திகர்கள் என யாரையும் இங்கே நான் கூறுவில்லை.

ஆத்திகர்கள் மேல் உள்ள அதே அளவு அன்பு எனக்கு நாத்திகர்கள் மேலும் உண்டு. ஆனால் நாத்திக வேஷத்தில் இருக்கும் ஆத்திகர்களை எனக்கு ஆகாது.

தங்கள் பெயர் வரலாற்றில் வரவேண்டும் என்பதற்காக ஒரு சமூகத்தை அசிங்கப்படுத்தும் தன்மையை சூசகமாக சொல்லி இருக்கிறேன் அவ்வளவே.

மொழியை வளர்க்க எத்தனையோ ”சீர் வளர் சீர்” ஆட்கள் இருக்கிறார்கள் அவர்கள் நாத்திகர்கள் கிடையாது. இவர்களால் மொழியோ அல்லது வேறு ஏதாவதோ வளர்ந்ததா என்றால் இல்லை.

நல்விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லிகிறேன்.

புருனோ Bruno said...

சிறிது மாறுபடுகிறேன்

சித்திரை 1 - கொல்லம் புத்தாண்டு
தை 1 - திருவள்ளுவர் புத்தாண்டு
ஜனவரி 1 - கிரேகிரியன் புத்தாண்டு

இதில் கிரேகிரியன் புத்தாண்டை ஆங்கில புத்தாண்டு என்று அழைப்பது போல் எந்த புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று அழைக்க வேண்டும்

--

தமிழக அரசு ஆணை கொல்லம் புத்தாண்டின் முதல் நாளை மாற்ற வில்லை

தமிழக அரசு ஆணை திருவள்ளுவர் புத்தாண்டின் முதல் நாளை மாற்ற வில்லை

--

புருனோ Bruno said...

சக ஆண்டு (இந்தியாவின் அதிகார பூர்வ நாள்காட்டியின்) முதல் நாள் - அதாவது இந்திய புத்தாண்டு என்று தெரியுமா

இந்திய அரசு கூட கொல்லம் ஆண்டை கடைபிடிக்க வில்லை

கொல்லம் ஆண்டை தவிர வேறு ஒரு ஆண்டுமுறையை (சக வருடம்) கடைபிடிக்கும் உரிமை இந்திய நடுவண் அரசிற்கு உள்ளது

கொல்லம் ஆண்டை தவிர வேறு ஒரு ஆண்டுமுறையை கடைபிடிக்கும் உரிமை ஆந்திர மாநில அரசிற்கு உள்ளது

கொல்லம் ஆண்டை தவிர வேறு ஒரு ஆண்டுமுறையை (திருவள்ளுவர் ஆண்டு) கடைபிடிக்கும் உரிமை தமிழக அரசிற்கு மட்டும் இல்லையா

ராமகுமரன் said...

தமிழ் பற்று என்பதை தமிழ் மொழி கற்பிப்பதில் கொண்டு வரட்டும், இன்று உயர்கல்வி படித்த பல பேர் சில ஆண்டுகள் கழித்து எனக்கு தமிழ் எழுத படிக்கவே மறந்துவிட்டது என்று சொல்லும் அவல நிலை நம்மிடத்தில் உள்ளது. தன் பெயர் வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகள் செய்யும் அராஜகங்களில் இதுவும் ஒன்று. வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இப்படியொரு சுயநலமிக்க அரசியல்வாதிகள் இருக்க மாட்டார்கள். பன்னெடுங்காலமாக நாம் கடைப்பிடிக்கும் புத்தாண்டை மாற்றியமைக்கும் தகுதி என்ன இருக்கிறது இவர்களுக்கு. அதிகாரம் கையில் இருந்தால் மக்களை மாக்கள் என்று நினைக்கும் மமதை தான் இவர்களிடத்தே இருக்கிறது. சூரிய நாள்காட்டியை உபயோகிக்கும் எல்லா மாநிலங்களிலும் (கேரளம், வங்காளம், சிங்களம் ) புத்தாண்டு ஏப்ரல் 14 தான் இதனை தன்னிச்சையாக மாற்ற இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது. எதற்கெடுத்தாலும் தமிழறிஞர்கள் சொன்னார்கள் என்று சொல்கிறார்கள் தமிழறிஞர்கள் சொல்கேட்டு மூன்றாம் வகுப்புவரை தமிழ் வழி கல்வி என்ற அரசு உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தது பெரும்பாலும் தமிழர்களே. இன்று இவர்களது அரசு எத்தனை தமிழறிஞர்களை உருவாக்குகிறது. எத்தனை பேர்களுக்கு தமிழ் இலக்கணம் பற்றி தெரியும். கண்மூடித்தனமாக நம் பண்டைய மரபுகளை எதிர்ப்பது என்ற விஷயத்தில் மாவோயிஸ்டுகளுக்கும், நக்ஸலைட்டுகளுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழுக்கு உள்ள சிறப்பு நம் சூரிய நாள்காட்டியே ஆகும், இங்கிருந்து தான் கேரளாவிலும், பின்னர் வங்காளத்திலும் அதை கடைப்பிடிக்க தொடங்கினார்கள். இந்தியாவின் மற்ற‌ இந்து (பகுத்தறிவுஜீவிகள் கூற்றுப்படி பாசிச) நாட்காட்டிகள் அனைத்தும் சந்திரனை பின்பற்றி கணிக்கப்பட்டவை, தமிழுக்கு மிக சிறப்பு சேர்க்கும் இந்த நாட்காட்டியை விடுத்து புதிதாக ஒரு புத்தாண்டு என்று சொல்லவது, தன் மனைவியின் அழகை அறிய முடியாத குருடன் ஜஸ்வர்யா ராயை கைப்பிடிக்க நினைத்த கதையாக் இருக்கிறது.

புருனோ Bruno said...

சக ஆண்டு (இந்தியாவின் அதிகார பூர்வ நாள்காட்டியின்) முதல் நாள் - அதாவது இந்திய புத்தாண்டு என்று தெரியுமா

மார்ச் 22 (லீப் வருடங்களில் மார்ச் 21) !!! ஏப்ரல் 15 அல்ல !! (1956 முதல் இது தான் இந்திய புத்தாண்டு) இதை அறிமுகப்படுத்தப்பட்டது நேருவின் ஆட்சியில்.

புருனோ Bruno said...

தமிழர்களுக்கு எப்படி திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாள் புத்தாண்டோ அதே போல் தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டும் உகாதிதான். அது ஏப்ரல் 14 அல்ல (உகாதி ஏப்ரல் 3,4,5,6,7 வரலாம்)

புருனோ Bruno said...

இது தவிர ”இந்து புத்தாண்டு” என்று பாசகவினரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அது கூட ஏப்ரல் 14 கிடையாது.

http://www.rediff.com/news/mar/31cong.htm
Hindu new year’s day which is being observed on April 8 and 9.

http://www.rediff.com/news/apr/09flip.htm
The Hindu New Year’s Day fell on April 8 this year. The Bharatiya Janata Party celebrated appropriately.

புருனோ Bruno said...

ஆக பாரதிய ஜனதா கூட ஏப்ரல் 14லை கொண்டாத போது, ஏதோ ஏப்ரல் 14ஐ தமிழ் புத்தாண்டு என்று கூறாவிட்டால் தெய்வ குற்றம் வந்து விடும் என்று சில “அறிஞர்கள்” ஊடகங்களில் பரப்புவது கண்டு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை

இந்தியாவிற்கு தனி புத்தாண்டு இருக்கிறது
இந்து புத்தாண்டு என்று தனியாக இருக்கிறது
தெலுங்கு புத்தாண்டு என்று தனியாக இருக்கிறது

இவ்வளவும் இருக்கும் போது தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடினால் அது தவறு கொல்லம் ஆண்டு தான் முக்கியம் என்று கூறுகிறார்களே, ஏன் ????

சத்தியமாக புரியவில்லை.

புருனோ Bruno said...

//பன்னெடுங்காலமாக நாம் கடைப்பிடிக்கும் புத்தாண்டை மாற்றியமைக்கும் தகுதி என்ன இருக்கிறது இவர்களுக்கு. //

மன்னிக்கவும் புத்தாண்டு மாற்றி அமைக்கப்படவில்லை

கொல்லம் முதல் நாள் அதே சித்திரை 1 தான்
திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாள் அதே தை 1 தான்

புரிகிறதா

புருனோ Bruno said...

//சூரிய நாள்காட்டியை உபயோகிக்கும் எல்லா மாநிலங்களிலும் (கேரளம், வங்காளம், சிங்களம் ) புத்தாண்டு ஏப்ரல் 14 தான்//

இந்திய அரசு எந்த நாட்காட்டியை பயன்படுத்துகிறது தெரியுமா :) :) :)

புருனோ Bruno said...

சித்திரை 1 - கொல்லம் புத்தாண்டு
தை 1 - திருவள்ளுவர் புத்தாண்டு
ஜனவரி 1 - கிரேகிரியன் புத்தாண்டு

இதில் கிரேகிரியன் புத்தாண்டை ஆங்கில புத்தாண்டு என்று அழைப்பது போல் எந்த புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று அழைக்க வேண்டும் ???

---

பின் குறிப்பு

அலோபதி ஆங்கில மருத்துவம் - சித்தா தமிழ் மருத்துவம் ஆனது போல்

கிரேரியன் ஆண்டு ஆங்கில ஆண்டாக மாறியபோது தவறுதலாகவே கொல்லம் ஆண்டை தமிழ் புத்தாண்டாக பழக்க வழக்கத்தில் மாற்றிவிட்டார்கள்

தற்பொழுது திருவள்ளுவர் ஆண்டை தமிழ் ஆண்டாக கருத கூறுகிறார்கள். அவ்வளவு தான்

ராமகுமரன் said...

இந்திய அரசின் நாட்காட்டி மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு மட்டும்தான் உபயோகம், ஒவ்வொரு மாநிலமும் அவரவர் நாட்காட்டியை உபயோப்படுத்துகின்றனர்

http://en.wikipedia.org/wiki/Indian_calendar

அது ஒரு கனாக் காலம் said...

போற போக்கை பார்த்தால் திரு புருனோ 100 ஐ எட்டி விடுவர் போல் நல்ல காலம் , Dr No வின் காலத்தைப்போல் நீண்ட பின்னோட்டம் இல்லை ( DR NO -) இவர் யார் என்று தெரிய வில்லை என்றல் திரு கோவியை கேட்கவும் .

திரு புருனோ இந்த சுட்டியில் , உள்ளது போல்

http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs


வெளிநாட்டு விற்ப்பன்னர்கள் சொன்னது போல் ..........100 முறை செய்யக்கடவுது

sundaresan p said...

வணக்கம் ஸ்வாமி

சூரியனை ஏன் கிரகம் என்று சொல்கிறார்கள் என்பதற்கு நீங்கள்
கொடுத்த பதில் அருமை!

Muthu said...

andukalai patri
nalla thagavalkal konda pathivu

makkalai poruthavarai
avarkal palakam maravailai
ithunala periya pathipillai

urupidiya ethu pannalenalum
nalu peru avungala pathi pesurta mathiri ethachum pannanumula athan perusu calendara
mathiruchu...ninga tension agathinga ji

intha mathiri ningalum nanum ,mathavangalum
medaleyum pesanumkurathu
udan pirapukalin nogam
athu nalavey niraveriduchu

matram mattum marathathu nalai ku persu perula kuda oru andu arambikalam :)

கோவைகத்துக்குட்டி said...

வணக்கம் சுவாமிஜி,

நட்சத்திரத்தில் வரும் ரேவதி தமிழ் பெயராகத்தான் தோண்றுகிறது. சில உதாரணங்கள் பார்வதி இதில் பார் என்றால் உலகம் என்றும் வதி என்றால் தேவி என்றும் இன்னும் பல பெண் பால் விகுதியை கொண்டு முடியும். (அமராவதி, புனிதவதி, வதி என்பது பெண்பால் விகுதி பதி என்பது ஆண்பால் விகுதி). தமிழில் இருந்து வடமொழி வந்திருக்கலாம் அல்லது வடமொழியில் இருந்து தமிழ் வந்திருக்கலாம். இதிலிருந்துதான் வந்தது என கூறுவது வாதத்திறமைக்கு உதவும். முதலில் ஏதாவது ஒரு மொழிதான் தோண்றியிருக்க வேண்டும்.

தமிழ் புத்தாண்டின் தேதியை மாற்றியது அரசின் சாதணைகளில் ஒன்று. இன்னும் பல ஆண்டுகள் கழித்து ஏப்ரல் 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டின் முதல் தேதியாக வரலாம். அரசு,வங்கிகள்,தணியார் நிறுவனங்கள் மார்ச் 31ஆம் தேதியுடன் வருட கணக்கு முடிந்து ஏப்ரல் 1ஆம் தேதி புது கணக்கு தொடங்குவதால்!.(23ஆம் புலிகேசியில் மண்ணன் அவரது உருவப் படத்தை வரைவது போன்றது). நடைமுறையில் உள்ள நமக்கு தெரிந்த (தமிழ்) பொதுவான புத்தாண்டை கொண்டாடுவோம்.

அன்புடன்,
செல்லி

புருனோ Bruno said...

//ஒவ்வொரு மாநிலமும் அவரவர் நாட்காட்டியை உபயோப்படுத்துகின்றனர்//

தகவலுக்கு மிக்க நன்றி

அப்படி இருக்க (அதாவது நடுவண் அரசு கொல்லம் ஆண்டு முறையை கடைபிடிக்க வில்லை, பிற மாநிலங்களில் பலர் இதை கடை பிடிக்க வில்லை) - அவரவர் நாட்காட்டியை ஒவ்வொரு மாநிலமும் பயன் படுத்தும் போது தமிழகம் மட்டும் திருவள்ளுவர் நாட்காட்டியை பயன் படுத்தக்கூடாது என்று ஏன் கூறுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை.

புருனோ Bruno said...

//தமிழ் புத்தாண்டின் தேதியை மாற்றியது அரசின் சாதணைகளில் ஒன்று.//

தமிழ் ஆண்டின் தேதியை யாரும் மாற்றவில்லை.

தமிழ் ஆண்டு என்னவென்பதை தான் மாற்றியிருக்கிறார்கள்

// இன்னும் பல ஆண்டுகள் கழித்து ஏப்ரல் 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டின் முதல் தேதியாக வரலாம். அரசு,வங்கிகள்,தணியார் நிறுவனங்கள் மார்ச் 31ஆம் தேதியுடன் வருட கணக்கு முடிந்து ஏப்ரல் 1ஆம் தேதி புது கணக்கு தொடங்குவதால்!.//

நீங்கள் கூறுவது நிதியாண்டு.

அதாவது திருவள்ளுவர் ஆண்டு தமிழ் ஆண்டு என்பதை மாற்றி நிதி ஆண்டு தமிழ் ஆண்டு ஆக வேண்டும் என்று கூறுகிறீர்கள்.

ஆக தமிழனுக்கு தனி அடையாளர் இருப்பதில் உங்களுக்கு விருப்பமில்லையா :) :) :)


//நடைமுறையில் உள்ள நமக்கு தெரிந்த (தமிழ்) பொதுவான புத்தாண்டை கொண்டாடுவோம்.//

உங்களுக்கு தெரிந்த நடைமுறை தவறென்றால் சரியான நடைமுறையை பின்பற்றலாமே. !!

ராமகுமரன் said...

கோயில்களில் சித்திரை விஷு அன்று சிறப்பு பூஜைகள் செய்யக்கூடாது , பஞ்சாங்கம் படிக்க கூடாது என்று வாய்மொழி உத்தரவு போடப்பட்டதே அதற்கு என்ன சொல்கிறீர்கள். நாளடைவில் சித்திரை அன்று கொல்லம் ஆண்டு பிறப்பு என்று ஒன்று இருந்தது என்பதை மக்கள் மறக்க செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சி தானே அது. மேலும் கொல்லம் என்பது ஊர் பெயர் மட்டுமல்ல , கொல்லம் என்ற சொல்லே மலையாளத்தில் ஆண்டு என்பதை தான் குறிக்கும் , பழந்தமிழிலும் அப்படி இருந்திருக்கலாம். நாம் ஆண்டு என்பதற்கு உபயோகித்த சொல்லையே ஒரு தனி ஆண்டாக ஆக்கிவிட்டீர்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மக்கள் கொண்டாடும் நாளை தான் புத்தாண்டு என்று வைத்திருக்கிறார்களே தவிர, ஏதோ ஒரு நாளை அல்ல. உதாரணத்திற்கு உகாதி பண்டிகை தெலுங்கு மக்கள் அனைவரின் புத்தாண்டு. இதில் வேடிக்கை என்னவென்றால் தெலுங்கு புத்தாண்டிற்கு மதிப்பளித்து விடுமுறை அளிக்கும் தமிழக அரசு, தமிழ் மக்களின் மனதை புரிந்து கொள்ளாமல் எதேசாதிகாரத்தனமாக நடந்து கொண்டிருப்பது தான். பெரும்பான்மையான மக்கள் அனுசரிக்கும் ஒரு பழக்கத்தை தன்னிச்சையாக மாற்றி அமைப்பது என்பது அரசு அதிகாரத்தின் துஷ்பிரயோகம் என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை

Geekay said...

ஸ்வாமிஜி,
உங்கள் விளக்கம் மிகவும் அருமை!!

புருனோ Bruno said...

//உதாரணத்திற்கு உகாதி பண்டிகை தெலுங்கு மக்கள் அனைவரின் புத்தாண்டு.//

ஆக தெலுங்கு மக்கள் அனைவரும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கடைபிடிக்க வில்லை

அவர்களுக்கு என்று தனியா அடையாளம் வைத்துள்ளார்கள்

அப்படித்தானே

கோவி.கண்ணன் said...
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் said...

//நட்சத்திரத்தில் வரும் ரேவதி தமிழ் பெயராகத்தான் தோண்றுகிறது. சில உதாரணங்கள் பார்வதி இதில் பார் என்றால் உலகம் என்றும் வதி என்றால் தேவி என்றும் இன்னும் பல பெண் பால் விகுதியை கொண்டு முடியும். (அமராவதி, புனிதவதி, வதி என்பது பெண்பால் விகுதி பதி என்பது ஆண்பால் விகுதி). தமிழில் இருந்து வடமொழி வந்திருக்கலாம் அல்லது வடமொழியில் இருந்து தமிழ் வந்திருக்கலாம். இதிலிருந்துதான் வந்தது என கூறுவது வாதத்திறமைக்கு உதவும். முதலில் ஏதாவது ஒரு மொழிதான் தோண்றியிருக்க வேண்டும். //

தமிழில் இருந்து வடமொழியும் வரவில்லை, வடமொழியில் இருந்து தமிழும் வரவில்லை, மக்கள் கலந்ததால், இரண்டிலும் கலந்த சொற்கள் ஏராளம் உண்டு, அதுபோல் ஏற்றுக் கொண்ட சொற்கள் பல உண்டு. கலந்த என்பதன் பொருள் இங்கே, ஒரு சொல்லுக்கு பதிலாக மற்றொன்றை பயன்படுத்துவது. எடுத்துக்காட்டு பயன், இதற்குப் பதிலாக பலர் 'உபயோகம்' என்ற வட சொல்லை பயன்படுத்துவர். அதே போல் 'மீன்' என்ற சொல்லை வடமொழியில் மச்ச என்பதற்குப் பதில் 'மீன' என்று பயன்படுத்துவார்கள். ஏற்றுக் கொண்ட சொற்கள் என்பதற்கும் நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு, ஒரு சொல் அந்த மொழியில் இல்லை என்றால் அதை அப்படியே எடுத்தாள்வது.

ரேவதி என்பது தமிழ்பெயர் கிடையாது, தமிழர்களில் சிலர் வைத்துக் கொள்ளும் பெயர். பார்வதியும் தமிழ் கிடையாது, தமிழில் மலைமகள் என்பார்கள், அமராவதி தமிழில் இதன் பொருள் தொன்றுதொட்டு இருப்பவர். அமர என்றால் எப்பொழுது இருப்பது, அதற்கு இன்னொரு வடமொழி பொருள் 'நித்ய' அமராவதி என்றாலும் நித்யா என்றாலும் ஒன்றுதான். வாழ்பவள், எப்போதும் இருப்பவள் என்ற பொருள் வரும். ஆனால் இவை தமிழ் சூழலில் அப்படி ஒரு இறைவியை கட்டமைக்கவில்லை என்பதால் அந்த பெயர் வழக்கும் தமிழில் இல்லை. எனவே அமராவதி என்கிற பெயரை அப்படியே பயன்படுத்துகிறார்கள். பார்வதியும் அப்படித்தான். பார்வதி என்றால் உலகம்மை என்றும் சொல்லலாம். பார் விகுதி பார் என்கிற வட சொல் உலகம் என்கிற தமிழ்சொல்லை ஒத்தது.

முதலில் மொழி ஒன்று தான் தோன்றி இருக்க முடியும் என்பது வெறும் நம்பிக்கைதான். அதற்கு எந்தவித சான்றுகளும் இல்லை. அந்தந்த நாடுகளில் காட்டுவாசிகள் அனைவருமே அவர்களுக்கென தனித் தனி மொழியைத் தான் பேசுகின்றனர். அது நாகரீக வளர்ச்சி பெற்றவர்களின் மொழியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

krish said...

Swami and my friends. Now we have 3 new years and Vadai Payasam on 14th April, Sakkarai Pongal on 13or 14 January and Cakes and Wine and parties on 1St January. Ultimately everything converges to celebrations. We should not have any issues.

சென்னை பித்தன் said...

ராசியின் வடமொழிப் பெயர்கள் வேண்டாமென்றால்,இப்படி வைத்துக் கொள்ளலாமா?--ஆடு,மாடு,இருவர், நண்டு,அரிமா,கன்னி,துலாக்கோல்,தேள், வில்,சுரா,குடம்,கயல்!

புருனோ Bruno said...

//சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை//

//ஆடு,மாடு,இருவர், நண்டு,அரிமா,கன்னி,துலாக்கோல்,தேள், வில்,சுரா,குடம்,கயல்!//

பல ஆண்டுகளாகவே இந்த சொற்கள் பயன்பாட்டில் உள்ளன

ஆமேடம், எருது, நண்டு, கன்னி, சுறா இவ்வைந்தில் கருநாகம் புகுந்திடவே பூமேடம் ஆளும் ராஜயோகம் என்று கூறுவார்கள்

கோவி.கண்ணன் said...

//ஆமேடம், எருது, நண்டு, கன்னி, சுறா இவ்வைந்தில் கருநாகம் புகுந்திடவே பூமேடம் ஆளும் ராஜயோகம் என்று கூறுவார்கள்//

ஆகா மருத்துவரே...புகுந்து கலக்கு கலக்குன்னு கலக்கிறிங்க, உங்களுக்கு தமிழ்மணம் விருது, மொழிகுறித்தான கட்டுரைக்கும் கிடைத்தது மிகப் பொருத்தமானது

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புரூனோ அவர்களுக்கு,

உங்கள் பின்னூட்டம் கண்டேன் - மகிழ்ச்சி.

ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்து தர்க்கம் செய்ய விரும்ப வில்லை. உண்மையில் அரசு விடுமுறை நாட்களில் புத்தாண்டு மாற்றம் செய்யபட்டுள்ளது. மேலும் கோவில்களில் அதை கொண்டாட தடை செய்யும் வாய்மொழி உத்தரவு தரப்பட்டுள்ளது.

அதை எதிர்த்து செய்த பதிவு இது.
ஜோதிடத்தை கற்றவன் என்ற முறையில் ஒரு ஜாதகத்தை கணிக்கும் பொழுது கொல்லம் முதல் பல ஆண்டு கணிதத்தை பயன்படுத்துபவன்.

அதிக கணிதவியல் மற்றும் ஜோதிட நுட்பங்களை சொல்லி குழப்ப கூடாது என்பதால் எளிமையாக இதை கூறினேன்.


மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் பஞ்சாங்கம் வெளியிடுகிறது. “ ராஷ்டிரிய பஞ்சாங்கம்” அதில் அனைத்து வருடத்திற்கும் முக்கியதுவம் கொடுக்கபட்டுள்ளது. (விலை 15 மட்டுமே - அருமையான பஞ்சாங்கம்)

ஆந்திராகாரர்கள் உகாதி கொண்டாடுகிறார்கள் தமிழன் தனியாக ஒரு புத்தாண்டு கொண்டாட கூடாதா என கேட்கிறீர்கள் :)

உகாதி ஆகட்டும் இந்தியாவில் வழங்கப்படும் வேறு ஆண்டு கணக்கு ஆகட்டும் அதில் விஞ்ஞான தன்மை பின்புலத்தில் இருக்கிறது.


மத்திய அரசின் நாள்காட்டி(சக) அயனாம்சம் எனும் கணிதம் இல்லாத சயன நிலை கிரகத்தை கொண்டது. உகாதி சந்திராம்ச நாள்காட்டி.
இங்கே மட்டும்தான் எந்த கிரக குறியீடும் இல்லாத திருவள்ளுவர்க்கான நாள்காட்டி.

கேரளாவிலோ, ஆந்திராவிலோ ஒரு புலவர் பெயரை சொல்லி நாள்காட்டியை மாற்ற சொல்லுங்கள் பார்ப்போம்.அந்த முதல்வரின் கதியை சிந்தித்து பர்க்க முடியாது. நம் ஆட்களுக்குதான் ”ஒன்று” கிடையாதே. யார் எதை மற்றினாலும் பிரக்ஞ்சை இல்லாமல் இருப்பார்கள்.

பொருத்திருந்து பார்ப்போம், “தர்மம் மறுபடி வெல்லும் ”

வர்மா said...

பகுத்தறிவு என்ற பெயரால் ஜாதகத்தை அழிக்கமுயல்வதை அனுமதிக்கமுடியாது.ஜாதகத்தைப்படிக்காமலே தவறுஎன்பது முட்டாள்தனமானது.

பட்டாம்பூச்சி said...

// புதிய உடை என நிர்வாணமாக செல்லும் ராஜாவின் கதை ஞாபகம் வந்தது.//
அதே அதே :).

புருனோ Bruno said...

//இங்கே மட்டும்தான் எந்த கிரக குறியீடும் இல்லாத திருவள்ளுவர்க்கான நாள்காட்டி.//

அப்படியா

திருக்கணித அல்லது வாக்கிய பஞ்சாங்கப்படி சூரிய உதயம் தாமதமாக வரும் நாள் எது

திருக்கணித அல்லது வாக்கிய பஞ்சாங்கப்படி சூரிய அஸ்தமணம் சீக்கிரம் வரும் நாள் எது

திருக்கணித அல்லது வாக்கிய பஞ்சாங்கப்படி சூரிய உதயம் தாமதமாக வரும் நாள் எது

திருக்கணித அல்லது வாக்கிய பஞ்சாங்கப்படி பகல் குறைவான நேரம் உள்ள நாள் எது

சூரியனின் திசை மாற்றம் நிகழ்வது என்று

புருனோ Bruno said...

//மேலும் கோவில்களில் அதை கொண்டாட தடை செய்யும் வாய்மொழி உத்தரவு தரப்பட்டுள்ளது.//

சித்திரை முதல் நாளை, கொல்லம் ஆண்டின் முதல் நாளை கொண்டாட எந்த தடையும் இல்லை

அந்த தினத்தை தமிழ் புத்தாண்டாக கருதத்தான் தடை

இரண்டிற்கும் வேறுபாடு உண்டு சாமி

புருனோ Bruno said...

//கேரளாவிலோ, ஆந்திராவிலோ ஒரு புலவர் பெயரை சொல்லி நாள்காட்டியை மாற்ற சொல்லுங்கள் பார்ப்போம்.அந்த முதல்வரின் கதியை சிந்தித்து பர்க்க முடியாது.//

உகாதி தான் ஏற்கனவே இருக்கிறதே

அது சரி

இந்திய புத்தாண்டை மாற்றியது நேரு. இந்திய அரசிற்கு என்று தனியான நாட்காட்டியை நேரு கொண்டுவந்ததை ஏற்றுக்கொண்டார்களே

இந்துக்களுக்கு என்று தனியான நாட்காட்டியை வாஜ்பாய் அரசு கொண்டுவந்ததை ஏற்றுக்கொண்டார்களே

ஏன் தமிழனுக்கு தனி அடையாளம் வருவதற்கு மட்டும் இத்தனை விமர்சணம்

புருனோ Bruno said...

சாமி

திருவள்ளுவர் ஆண்டு என்ற சித்தாந்தம் எந்த வருடத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது தெரியுமா :) :) :)

புருனோ Bruno said...

நீங்கள் பெரியவர். உங்களுடன் தொடர் வாதம் புரியும் அளவிற்கு எனக்கு அறிவோ அனுபவமோ கிடையாது. ஏதோ எனக்கு தெரிந்ததை கூறினேன் :) :)

//இங்கே மட்டும்தான் எந்த கிரக குறியீடும் இல்லாத திருவள்ளுவர்க்கான நாள்காட்டி.//

சாமி ஒரே ஒரு கேள்வி

அயனாம்சம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் பட்சத்தில் தை முதல் தேதிக்கு எந்த சிறப்பு இல்லை என்ற உங்கள் வாதம் சரியா என்று உங்கள் ஜாதக அறிவை சாட்சியாக வைத்து உங்கள் மனசாட்சியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் (அல்லது அயனாம்சம் எனும் கணிதம் இல்லாத சயன நிலையில் டிசம்பர் 23 சிறப்பு இல்லாததா)

அவ்வளவுதான்

புருனோ Bruno said...

//. வேதத்தின் கண் என அழைக்கப்படும் ஜோதிடத்தை தெளிவான கண் கொண்டு காணுவதற்கான விழிப்புணர்வை ஊட்டும் நோக்கில் இத்தளம் செயல்படுகிறது //

//தை முதல் தேதி மட்டும்தான் எந்த கிரக குறியீடும் இல்லாத திருவள்ளுவர்க்கான நாள்காட்டி.//

:( :(

புருனோ Bruno said...

/தை முதல் தேதி மட்டும்தான் எந்த கிரக குறியீடும் இல்லாத திருவள்ளுவர்க்கான நாள்காட்டி.//

Sankranthi, or Sankranti (Sanskrit: मकर संक्रान्ति), is a festival that signifies the beginning of the harvest season for the farmers of Indian Sub-Continent. This is a harvest festival celebrated not only all over India but other South East Asian Countries as well.

Makara Sankranti has special geo-agri-economical significance to people of Indian Sub-Continent. Makara Sankaranti is about transition of Sun into Capricorn on its celestial path. This is significant considering the Winter Solstice marks the beginning of the gradual increase of the duration of the day. Traditionally, this has been one of many harvest days.

The day on which the sun begins its journey northwards is referred to as Makara Sankranti. இது தான் தை முதல் நாள் Sankramana means "to commence movement". Hence, the name Makara Sankranti is given to one of the largest, most auspicious, but varied festivals in the Indian subcontinent. It usually falls in the middle of Januaryஎனக்கு தெரிந்து மிக மிக குறைந்த ஜோதிட அறிவின் படி மகர சங்கராந்தி அல்லது தை முதல் நாள் அதிக சிறப்புக்களை உடையது

Makar means Capricorn and Sankranti is transition. There is a sankranti every month when the sun passes from one sign of the zodiac to the next. There are twelve signs of the zodiac, and thus there are twelve sankrantis as well. Each of these sankrantis has its own relative importance but two of these are more important - the Mesh (Aries) Sankranti and the most important, the Makar (Capricorn) Sankranti. Transition of the Sun from Sagittarius to Capricorn, during the winter solstice in the northern hemisphere is known as Makar Sankranti. From this day begins the six-month long Uttarayana, considered very auspicious for attaining higher worlds hereafter. While the traditional Indian Calendar is basically based on lunar positions, but sankranti is a solar event, so while dates of all festivals keep changing, the english calendar date of Makar Sankranti is always same, 14 January. Makar Sankranti is celebrated in the Hindu Calendar month of Magha. There is another significance of this day - after this day the days start becoming longer and warmer and thus the chill of winter declines.

புருனோ Bruno said...

//தை முதல் தேதி மட்டும்தான் எந்த கிரக குறியீடும் இல்லாத திருவள்ளுவர்க்கான நாள்காட்டி.//

1. The Puranas say that on this day Sun visits the house of his son Shani, who is the swami of Makar Rashi. These father & son do not ordinarily get along nicely, but inspite of any difference between each other Lord Sun makes it a point to meet each other on this day. Father in fact himself comes to his son’s house, for a month. This day symbolized the importance of special relationship of father & son. It is the son who has the responsibility to carry forward his fathers dream and the continuity of the family.

புருனோ Bruno said...

//தை முதல் தேதி மட்டும்தான் எந்த கிரக குறியீடும் இல்லாத திருவள்ளுவர்க்கான நாள்காட்டி.//

2. From Uttarayana starts the ‘day’ of Devatas, while dakshinayana is said to be the ‘night’ of devatas, so most of the auspicious things are done during this time. Uttarayana is also called as Devayana, and the next half is called Pitrayana.

புருனோ Bruno said...

//தை முதல் தேதி மட்டும்தான் எந்த கிரக குறியீடும் இல்லாத திருவள்ளுவர்க்கான நாள்காட்டி.//

3. It was on this day when Lord Vishnu ended the ever increasing terrorism of the Asuras by finishing them off and burying their heads under the Mandar Parvat. So this occasion also represents the end of negativities and beginning of an era of righteous living.

புருனோ Bruno said...

//தை முதல் தேதி மட்டும்தான் எந்த கிரக குறியீடும் இல்லாத திருவள்ளுவர்க்கான நாள்காட்டி.//

4. The great savior of his ancestors, Maharaj Bhagirath, did great Tapasya to bring Gangaji down on the earth for the redemption of 60,000 sons of Maharaj Sagar, who were burnt to ashes at the Kapil Muni Ashram, near the present day Ganga Sagar. It was on this day that Bhagirath finally did tarpan with the Ganges water for his unfortunate ancestors and thereby liberated them from the curse.

புருனோ Bruno said...

//தை முதல் தேதி மட்டும்தான் எந்த கிரக குறியீடும் இல்லாத திருவள்ளுவர்க்கான நாள்காட்டி.//

5. Another well-known reference of this day came when the great grandsire of Mahabharata fame, Bhishma, declared his intent to leave his mortal coil on this day. He had the boon of Ichha-Mrityu from his father, so he kept lying on the bed of arrows till this day and then left his mortal coil on Makar Sankranti day. It is believed that the person, who dies during the period of Uttarayana, becomes free from transmigration. So this day was seen as a sure-shot Good Luck day to start your journey or endeavors to the higher realms beyond

புருனோ Bruno said...

//தை முதல் தேதி மட்டும்தான் எந்த கிரக குறியீடும் இல்லாத திருவள்ளுவர்க்கான நாள்காட்டி.//

Sankranti is celebrated all over Southeast Asia with some regional variations:
In North India,
Himachal Pradesh - Lohri
Punjab - Lohri
Uttar Pradesh - Sankranti
In East India,
Bihar - Sankranti
Assam - Bhogali Bihu
West Bengal - Makara Sankranti
orissa - Makara Sankranti
Manipur - Sankranti
In Western India
Gujarat and Rajasthan - Uttarayan (Kite flying festival)
Maharashtra - संक्रान्त Sankranti
In Central India
Madhya Pradesh - Sankarnti
In South India,
In Andhra Pradesh - సంక్రాంతి Makara Sankranti
In Tamilnadu - Pongal
In Karnataka - ಸಂಕ್ರಾಂತಿ Sankranthi
Makara Vilakku Festival in Sabarimala Temple
Other parts of India as Makara Sankranti
In Nepal,
Tharu people - Maghi
Other people - Maghe Sankranti or Maghe Sakrati
In Thailand - สงกรานต์ Songkran
In Laos - Pi Ma Lao
In Myanmar - Thingyan

புருனோ Bruno said...

//உகாதி ஆகட்டும் இந்தியாவில் வழங்கப்படும் வேறு ஆண்டு கணக்கு ஆகட்டும் அதில் விஞ்ஞான தன்மை பின்புலத்தில் இருக்கிறது.

மத்திய அரசின் நாள்காட்டி(சக) அயனாம்சம் எனும் கணிதம் இல்லாத சயன நிலை கிரகத்தை கொண்டது. உகாதி சந்திராம்ச நாள்காட்டி.
இங்கே மட்டும்தான் எந்த கிரக குறியீடும் இல்லாத திருவள்ளுவர்க்கான நாள்காட்டி.//

உகாதியை போல் தை முதல் நாளிற்கு பின்னாலும் பல விஞ்ஞான மற்றும் பல மெய்ஞான மற்றும் பல ஆன்மிக காரணங்கள் இருக்கின்றன என்பதில் யாருக்காவது மாற்று கருத்து உள்ளதா

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புருனோ,

//இங்கே மட்டும்தான் எந்த கிரக குறியீடும் இல்லாத திருவள்ளுவர்க்கான நாள்காட்டி//

இங்கே கிரக குறியீடு என நான் சொல்லுவதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆண்டின் துவக்கம் என்பதை குறிக்கும் தன்மையை நான் கூறுகிறேன்.

முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் அடிஎடுத்து வைப்பதை கொண்டாடாமல் 10ஆம் ராசியான மகரத்தின் ஆரம்பத்தை கொண்டாட செய்வது புத்திசாலிதனமா?

உத்திராயண ஆரம்பத்தை “பொங்கள்” ”சங்கிராந்தி” “ மகரசங்கரமம்” என முன்பே கொண்டாடி வருகிறோம்.

நீங்கள் மட்டுமல்ல புரட்சியாளருக்கு பாராட்டு சொன்ன சொற்பொழிவாளர்கூட இதே உத்திராயணம் பல்லவியை பாடினார். உத்திராயணம் மற்றும் தட்சிணாயணம் என்பது சூரியனுக்கு ஏற்படும் நிகழ்வு அல்ல, பூமியின் சாய்மானம் (declination).

நேரு சொன்னார் வாஜ்பாய் சொன்னார் என்று எதையும் நான் கொண்டாடுவதில்லை. எனது பதிவில் இதை தான் கொண்டாடவேண்டும் என திணிப்பு எதையும் செய்யவில்லை.

மேலும் கொல்லம் ஆண்டு என்பது ஜோதிட ரீதியான கணிதம். ஜோதிட ரீதியான கணிதம் எப்படி அனைவருக்கும் பொதுவானதோ அதை அனைத்து இன மொழிகாரர்கள் எப்படி ஏற்று கொள்கிறார்களோ அது போல கொல்லம் ஆண்டை நாமும் முன்பு பயன்படுத்திவந்தோம்.

ஆனால் விஷயம் தெரிந்த நீங்கள் உங்கள் மறுமொழியில் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறீர்களே தவிர அறிவுப்பூர்வமானது அல்ல.

தூங்குபவர்களை எழுப்பித்தான் எனக்கு பழக்கம் :)

இத்துடன் எனது உரையை முடித்துக்கொள்கிறேன் :)

புருனோ Bruno said...

//மேலும் கொல்லம் ஆண்டு என்பது ஜோதிட ரீதியான கணிதம். ஜோதிட ரீதியான கணிதம் எப்படி அனைவருக்கும் பொதுவானதோ அதை அனைத்து இன மொழிகாரர்கள் எப்படி ஏற்று கொள்கிறார்களோ அது போல கொல்லம் ஆண்டை நாமும் முன்பு பயன்படுத்திவந்தோம். //

கொல்லம் ஆண்டு என்பது ஜோதிட ரீதியானது. உண்மை
கொல்லம் ஆண்டு என்பது அனைவருக்கும் பொதுவானது. உண்மை
கொல்லம் ஆண்டை அனைத்து இன மொழிகாரர்கள் ஏற்று கொள்கிறார்கள். உண்மை
அது போல கொல்லம் ஆண்டை நாமும் முன்பு பயன்படுத்திவந்தோம். உண்மை

அது ஏப்ரல் 14
--

இப்படி அனைவருக்கும் பொதுவான ஒரு முறையை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் இந்திய அரசு தனக்கென்று தனியான ஒரு முறையை (சக ஆண்டு) அறிமுகப்படுத்தியது. அந்த தனித்துவத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். பயன்படுத்துகிறார்கள். (நீங்கள் உட்பட) யாரும் எதிர்க்கவில்லை

இப்படி அனைவருக்கும் பொதுவான ஒரு முறையை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி இந்துக்களுக்கு என்று தனியான ஒரு முறையை (இந்திய புத்தாண்டு)அறிமுகப்படுத்தியது. அந்த தனித்துவத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். பயன்படுத்துகிறார்கள். (நீங்கள் உட்பட) யாரும் எதிர்க்கவில்லை

இப்படி அனைவருக்கும் பொதுவான ஒரு முறையை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் தெலுங்கு பேசுபவர்களுக்கு என்று தனியான ஒரு முறையை (உகாதி) அறிமுகப்படுத்தியது. அந்த தனித்துவத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். பயன்படுத்துகிறார்கள். (நீங்கள் உட்பட) யாரும் எதிர்க்கவில்லை

அப்படி இருக்கும் போது தமிழர்களுக்கு என்று தனித்துவம் அறிமுகப்படுத்துவது தவறா என்று கேட்டேன்

அதற்கு நீங்கள் தவறென்று கூறவில்லை

அப்படி இருக்கும் போது தமிழர்களுக்கு என்று தனித்துவம் அறிமுகப்படுத்துவதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டேன்

அதற்கு நீங்கள் கூறிய காரணம் உகாதியும், சக ஆண்டும் விஞ்ஞான முறையில் அமைந்தது. தை முதல் நாளிற்கு எந்த பின்புலமும் இல்லை என்ற காரணத்தை மட்டுமே கூறினீர்கள்தை முதல் நாளின் அருமை பெருமைகளை நான் பட்டியலிட்டு உள்ளேனே

புருனோ Bruno said...

// உத்திராயணம் மற்றும் தட்சிணாயணம் என்பது சூரியனுக்கு ஏற்படும் நிகழ்வு அல்ல,//

இப்படி கூறினால் சாமி சித்திரை 1 கூட சூரியனுக்கு ஏற்படும் நிகழ்வு அல்ல :):):)

விஞ்ஞானப்படி சித்திரை 1, தை 1 இரண்டுமே பூமிக்கு ஏற்படும் நிகழ்வு தான்

ஜோதிடப்படி சித்திரை 1, தை 1 இரண்டுமே சூரியனுக்கு ஏற்படும் நிகழ்வு தான்

எனக்கு தூங்குபவர்களை எழுப்பியும் பழக்கம் :)
தூங்குவதை போல் நடிப்பவர்களை எழுப்பியும் பழக்கம் :)
//முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் அடிஎடுத்து வைப்பதை கொண்டாடாமல் 10ஆம் ராசியான மகரத்தின் ஆரம்பத்தை கொண்டாட செய்வது புத்திசாலிதனமா?//

மன்னிக்கவும் சாமி. உங்கள் கேள்வியே தவறு.

முதல் ராசியான மேஷத்தில் சூரியன் அடி எடுத்து வைப்பதை கொல்லம் புத்தாண்டாக கொண்டாடுவதற்கு எந்த தடையும் இல்லை என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன்.

அதை தமிழ் புத்தாண்டாக கருத வேண்டாம். எப்படி இந்திய புத்தாண்டு என்பது தனியோ, இந்து புத்தாண்டு என்பது தனியோம் தெலுங்கு புத்தாண்டு என்பது தனியோ அதே போல் தமிழ் புத்தாண்டு என்பது தனி என்பது தான் விஷயம்

மீண்டும் முதலில் கூறியதை திரும்ப கூறுகிறேன்
கொல்லம் புத்தாண்டு ஏப்ரல் 14
தமிழ் புத்தாண்டு சனவரி 14

ஏப்ரல் 14 அன்று தாராளமாக புத்தாண்டு கொண்டாடலாம். கொண்டாடுவோம்.ஆனால் அதை தமிழ் புத்தாண்டு என்று அழைக்க வேண்டாம். அது பொது புத்தாண்டு, ஜோதிட புத்தாண்டு, கொல்லம் புத்தாண்டு என்று பெயர் வைத்துக்கொள்ள தடை இல்லை. தமிழ் புத்தாண்டு என்று கூறவேண்டாம் என்பது தான் விஷயமே