ஞானம் அடைவது என்பதை பற்றி பேச
நான் ஞானம் அடைந்திருக்க வேண்டும்.
நான் ஞானம் அடைந்தவன் என நீங்கள் உணர
உங்களுக்கும் ஞானம் இருக்க வேண்டும்.
எனக்கு ஞானம் இருக்கிறது என்பதை அறியும்
ஞானம் உங்களுக்கு இருந்தால்,
ஞானம் அடைவதை பற்றி நாம் ஏன் இங்கே பேச வேண்டும் ?

-ஸ்வாமி ஓம்கார்
--------------------------------------------------------------------------
சென்ற பதிவில் பின்நவீனத்துவம் எனும் தலைப்பில் ஒரு இடுக்கை இருந்தது.
அந்த கட்டுரையை படித்த பலர் பின்னூட்டங்கள் மூலமும், மின்னஞ்சல் மூலமும் சில கருத்துகளை சொன்னார்கள். அதன் சாராம்சம் "அதில் எங்கே பின்நவீனம் இருக்கிறது? விடுகதை போல் அல்லவா இருக்கிறது.? "
உண்மையில் பின்நவீனத்துவம் எனும் கருத்தை பழிப்பவன் இல்லை நான். நான் சொல்லவந்த கருத்தை நீங்கள் ஊன்றி படிக்க நான் தேர்ந்தேடுத்த தலைப்புதான் அது. நான் இலக்கியம் செய்வேன் என நீங்கள் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான். எனக்கு இலக்கியம் எல்லாம் செய்யத் தெரியாது...லேக்கியம் வேண்டுமானால் செய்வேன்.
ஞானம் எனும் கருத்து மிகவும் மலிந்த விஷயமாகிவிட்டது. கடைக்கு சென்றால் எனக்கும் ஒரு கிலோ வாங்கிவா என சொல்லும் அளவுக்கு மலிந்துவிட்டது. மாத பத்திரிகையில் விளம்பரங்கள் உங்களை ஞானியாக்குகிறோம் என்று கூவி கூவி அழைக்கிறார்கள். சரி...ஞானம் அடைந்தால் என்ன ஆகும் என கேட்டால், கடன் தொல்லை தீரும், தொழில் மேன்மை நடக்கும் என பதில் வருகிறது.
தன்னை யோகி என்று அழைத்துக்கொள்ளுபவர்களோ தங்களின் சுயசரிதை புத்தகத்தில் 1980ல் இன்ன மாதம் இன்ன தேதியில் ஞானம் அடைந்தேன் என்கிறார்கள். எதிர்காலத்தில் விசிடிங் கார்டிலோ அவர்களின் யோகபயிற்சி பள்ளியிலோ இப்படி எழுதினாலும் எழுதுவார்கள்.
ஆன்மீகம் என்பது கடைசரக்கே. அதிலும் ஞானம் என்பது வார்த்தையால் சொல்லமுடியாத அளவுக்கு அசிங்கமாகிவிட்டது. நமது கலாச்சாரம் பலயோகமுறைகளை கொண்டது. யோகம் என்பது பிரம்ம சொரூபத்துடன் வேறுபாடு இல்லாமல் கலப்பது. ஹடயோகம், கர்ம யோகம், பக்தி யோகம், ராஜயோகம், ஞான யோகம் என பல யோக முறைகள் இருக்கிறது. உடல், மனம், ஆன்மா அனைத்தையும் வருத்தி தன்னை இறைவனுடன் ஐக்கியப்படுத்திகொள்ளும் முறைகள் ஹட,கர்ம,பக்தி மற்றும் ராஜ யோக முறைகள். ஆனால் இதை தவிர்த்து எந்த செயலும் இல்லாமல், தனது ஞானம் கொண்டே இறைவனுடன் கலப்பது ஞானயோகம்.
எந்த செயலும் தேவை இல்லை என சொல்லிவிட்டு, ஞானம் ”அடைவது” , “கலப்பது” என பல செயல்பற்றி சொல்லுகிறேன், உண்மையில் இவை செயல்கள் அல்ல. ஞானம் என பிரத்யோகமாக அடைய எதுவம் இல்லை. அனைவரும் ஞான நிலையிலேயே இருக்கிறார்கள். அதை உணர்வதில்லை.
கஸ்தூரிமான் தனது வால்பகுதியில் கஸ்தூரி இருப்பது தெரியாமல் அந்த வாசனை காட்டில் எங்கே இருக்கிறது என தேடி அலையுமாம். கடைசியில் சோர்வுற்று அமரும்பொழுது அதன் கஸ்தூரி இருக்கும் இடம் அதற்கு தெரியவரும். அது போல ஞான நிலையிலேயே இருக்கிறோம் என அறியாமல் செயல் செய்ய வேண்டி இருக்கிறது.
ஞான யோகிகள் தாங்கள் பிரம்ம சொரூபம் என்றும், உலகம் பொய்யானது, தனது இருப்பே மெய்யானது என எண்ணுகிறார்கள். ஞான யோகிகளின் நிலையை உணரவும். ஞான யோகத்தை பின்பற்றி ஞானத்தை உணரவும் தோன்றிய நூல் “யோகவாஸிஷ்டம்”.
ராமாயண காலத்தில் ( த்ரிதாயுகம்) நடப்பதாக வர்ணிக்கபட்டுள்ளது. பகவத் கீதை போன்ற நூல் அல்ல இது. ஸ்ரீ ராமனின் குருவான வஸிஷ்டர் தனது மாணக்கனுக்கு ஞானம் அடைய வேண்டி உபதேசிக்கிறார். உபதேசித்தவுடன் தான் பிரம்மம் என ஸ்ரீராமன் உணருகிறான்.
என்ன வேடிக்கை பார்த்தீர்களா? கடவுளாக இருந்தாலும் இங்கே வந்தால் தான் யார் என்பதை மறந்துவிடுகிறார்கள். நம்மை பற்றி யோசியுங்கள். 32000 சுலோகம் கொண்டது இந்த நூல் பல ஞானிகளால் எளியவடிவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காலம் மற்றும் தேசம் எனும் இரு கொள்கைகள் எவ்வளவு தவறானது என சுட்டிகாட்டி விளக்குகிறார் வஸிஷ்டர். நீங்கள் இரவில் தூங்குகிறீர்கள் அப்பொழுது கனவில் வரும் செயல்கள் அனைத்தும் உண்மை போலவே இருக்கிறது. உங்களை வேறு உலகில் எடுத்து செல்லுகிறது. கண் விழித்தவுடன் அந்த உலகம் மறைந்து வேறு உலகம் கண்களில் தெரிகிறது. எது உண்மை?
கண் விழித்தது என்பது கனவாக இருந்து நினைவு என்பது பொய்யாக இருந்தால்?
நமது உணர்வு நிலையை தூக்கத்திலிருந்து நாம் எட்டியவுடன் நமக்கு முதலில் மூளையில் வரும் செய்தி இரண்டு. இன்ன நேரத்தில் நான் விழித்திருக்கிறேன், இன்ன இடத்தில் இருக்கிறேன். இதில் ஏதேனும் ஒன்று சரியாக செயல்படவில்லை என்றால் உங்களால் இயல்பாக இருக்க முடியாது.
காலம் என்பது உங்களுக்குள் புகுத்தப்பட்ட மாயை. இடம் என்பதும் அது போன்றதே.
நமது வாழ்க்கையிலும் ஏதோ சில நிமிடம் நம்மை அறியாமல் ஞானத்தை சுவைத்ததுண்டு.
சில தருணங்களை சுட்டி காட்டுகிறேன்.
மதிய நேரத்தில் தூங்கி மாலை நேரத்தில் எழுத்தவுடன் மனதில் காலை நேரமாக இருக்குமோ என நினைத்து பல் தேய்க்க முயற்சி செய்ததுண்டா? பிறகு மாலை நேரம் என தெரிந்ததும் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
இரவு நேர நீண்ட பயணங்களில் திடீரென முழிப்பு வந்ததும் எந்த ஊரில் பயணிக்கிறோம் அறிய என முயற்சி செய்யாமல் இருந்ததுண்டா? ஜன்னல் வழியே பார்த்தால் உங்களுக்குள் என்ன உணர்வீர்கள் ?
இது போல வஸிஷ்டர் ஸ்ரீராமனுக்கு சில கதைகளை சொல்லி அவரின் அறியாமையை தவிடுபொடியாக்குகிறார். ஸ்ரீராமன் உணர்வு நிலையில் இருந்து ஞானவெளியில் தூக்கிவீசப்படுகிறார்.
காலம் என்பது கற்பனையே. அந்த கற்பனைதான் ஞானம் அடைய தடையாக இருக்கிறது.
உங்களுக்கு முப்பது வயதாகிறது என சொல்லிகிறோம். அல்லவா? இது எப்படி வந்தது? பிறந்து முப்பது வருடம் ஆகியது, 365.25 நாட்கள் சேர்ந்து 24 மணி நேரம்.
24மணி நேரம் ஒரு நாள் என்பது ஏன் நாம் அமைத்துக்கொண்டோம்? ஒரு பகல் ஒரு இரவு இருப்பது ஒரு நாள் என அனைவரும் எடுத்த ஒருமித்த முடிவு. இதையே 12 மணி நேரம் ஒரு நாள் என முடிவு செய்தால் உங்களுக்கு 60 வயதாகிவிட்டது. இதே ஒரு நாள் 48 மணி நேரம் என கொண்டால் உங்களுக்கு பதினைந்து வயது தான்.
காலகணிதம் எனும் அடிப்படியில் நான் 60வயதில் இறந்து மறுபிறவி எடுக்கிறேன் என கொண்டால், மேற்கண்ட விளக்கத்தில் ஒரு நாள் 12 மணி நேரம் என்றால் இந்த நேரம் நான் அடுத்த பிறவியில் இருக்க வேண்டும். ஒரு நாளுக்கு 60 மணி நேரம் எனக்கொண்டால் இந்த நேரம் நான் எனது முற்பிறவியில் இருப்பேன்.
ஒருவரின் அடுத்த பிறவி மற்றும் முந்தைய பிறவி என அனைவரும் நம்புவது காலத்தை வைத்துதான். உண்மையில் நாம் இறந்துவிடவில்லை என நினைப்பதும், அடுத்த பிறவி என்பது காலத்தை பொருத்தது.
இந்த கருத்தை வஸிஷ்டர் விளக்க கூறும் கதை அபாரமானது. கடைசியில் ஸ்ரீராமர் புரிந்துகொண்டதும் வஸிஷ்டர் கூறுகிறார், “ஸ்ரீ ராமா அங்கே பார், ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசிக்கிறார், இங்கே பார் மச்சவதாரம் நிகழ்கிறது. அனைத்தும் ஒருங்கே நிகழ்கிறது. நீ அதை அறியவில்லை”
அதனால் தான் சொல்லுகிறேன் ஞானம் அடைவது எளிது. காலம் எனும் கட்டை உடைத்து வெளியேறுங்கள். அனைத்தும் காணும் “அதனுடன்” ஒன்றாகிவிடுவீர்கள்.
வலையுலக பாணியில் சொன்னால், இந்த பதிவை எழுதும் நான் உங்களின் அடுத்த பிறவியாக இருக்கலாம். இதற்கு பின்னூட்டம் இடும் நீங்கள் எனது அடுத்த பிறவியாகவோ, முந்தைய பிறவியாகவோ இருக்கலாம்.
படித்தபின் இறுக்கமாக உணர்ந்தால் இதை சொடுக்குங்கள் சுட்டி :)

“ஞானி Since 1980".

உங்களுக்கு இந்த கட்டுரை பிடித்தால் இதை சொடுக்குங்கள் சுட்டி :)படித்தபின் இறுக்கமாக உணர்ந்தால் இதை சொடுக்குங்கள் சுட்டி :)
36 கருத்துக்கள்:
//“ஞானி Since 1980".
//
சாமி நம்ப பதிவர் குசும்பன்கிட்ட அனுமதி கேட்டு அவர் பெயரை நீங்க வச்சுக்கங்க.
அடக்க முடியாத சிரிப்புடன்,
அப்துல்லா.
அடாடா.... இந்த எளிமையான எழுத்துக்காகவே அடிக்கடி உங்கள் பதிவைப் படிக்கணும்....
//ஞானி Since 1980//
:))))))))))))))))))))))
//இந்த பதிவை எழுதும் நான் உங்களின் அடுத்த பிறவியாக இருக்கலாம். இதற்கு பின்னூட்டம் இடும் நீங்கள் எனது அடுத்த பிறவியாகவோ, முந்தைய பிறவியாகவோ இருக்கலாம். //
aaaaha.........
எனக்கு ஞானம் இருக்கிறது என்பதை அறியும்
ஞானம் உங்களுக்கு இருந்தால்,
ஞானம் அடைவதை பற்றி நாம் ஏன் இங்கே பேச வேண்டும் ?
-ஸ்வாமி ஓம்கார்
சரியே ஸ்வாமிஜி.
இந்த தலைப்பை பற்றி நிறைய எழுதுவிர்களா சுவாமி...
1.ஒருவர் தன் இருப்பு (ஞானம் )நிலையை உணவேண்டும் என்றால் குருவை சார்ந்துதான் இருக்க வேண்டுமா? 2.சமுதாயத்தை விட்டு வெளியில் வந்து யோகத்தில் ஈடுபட வேண்டுமா? 3.திருமணம் இதற்க்கு மிக பெரிய தடையா ....?
தயவு செய்து எனக்கு புரிய வைக்கவும்... இதை பற்றி யோசிக்கும் பொது குழப்பமாக உள்ளது...
வணக்கம் ஐயா
காலமே ஞானமா,வியப்பாக இருக்கிறது வாசீஸ்டர் ராமரை பார்த்து
அதோ கிரீஷ்னர் பகவத்கீதையை உபதேசிகிறார் என்கிறார்.இதை எங்கும் படித்தது
இல்லை.ஆனால் ஒன்று உங்கள் பதிவை நான் படித்து புரிந்து கொள்வதற்கே
ஒரு நாள் ஆகிறது.
வணக்கம் ஐயா
காலமே மாயையா ! ,வியப்பாக இருக்கிறது வாசீஸ்டர் ராமரை பார்த்து
அதோ கிரீஷ்னர் பகவத்கீதையை உபதேசிகிறார் என்கிறார்.இதை எங்கும் படித்தது
இல்லை.ஆனால் ஒன்று உங்கள் பதிவை நான் படித்து புரிந்து கொள்வதற்கே
ஒரு நாள் ஆகிறது.முதல் பிண்னோட்டத்திலே தவறாக எழுதிவிட்டேன்
அதான் மறுபடியும் பின்னுடம் இட்டேன்.
//எனக்கு ஞானம் இருக்கிறது என்பதை அறியும்
ஞானம் உங்களுக்கு இருந்தால்,
ஞானம் அடைவதை பற்றி நாம் ஏன் இங்கே பேச வேண்டும் ?//
அதானே...
அன்புடன்,
ஞானி
திரு.அப்துல்லா அண்ணே,
இது போல பல காயங்கள் என்னுள். அதை நகைச்சுவையாகத்தானே வெளியே சொல்ல முடியும் :) ?
இன்னும் நான் முழுமையா வெளிப்படுத்தவில்லை. அதற்கும் ஒரு நேரம் வராமலா இருக்கும் ?
ஸ்வாமி ஓம்கார்
Enlighten since 1901
திரு. மகேஷ்,
உங்கள் வருகைக்கு நன்றி.
சகோதரி சசிரேகா,
புரிஞ்சுச்சா?
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு ஷண்முகப்ரியன்,
உங்கள் வருகைக்கு நன்றி.
சகோதரி இந்திரா,
////இந்த தலைப்பை பற்றி நிறைய எழுதுவிர்களா சுவாமி...
//
எனது கருத்துக்களின் பின்புலத்தில் எப்பொழுதும் ஞானம் பற்றிய கருத்துக்கள் இருக்கவே செய்யும்.
//1.ஒருவர் தன் இருப்பு (ஞானம் )நிலையை உணவேண்டும் என்றால் குருவை சார்ந்துதான் இருக்க வேண்டுமா? //
குருவை சார்ந்து என்னும் உங்கள் சொல்லாடலில் ஒருவித ”அடிமைத்தனமாக இருக்கவேண்டுமா” எனும் கருத்து வெளிப்படிகிறது. குரு என்பவறை பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் எண்ணங்கள் மாறும்.
யாரொ ஒருவர் குருகீதை எனும் வலைதளத்தில் குரு கதைகளை எழுதுகிறார்கள். அதை படியுங்கள் :)
www.gurugeethai.blogspot.com
//2.சமுதாயத்தை விட்டு வெளியில் வந்து யோகத்தில் ஈடுபட வேண்டுமா?//
ஒவ்வொருவருக்கு ஆன்மீக வழிகாட்டுதலும், வாழ்க்கையும் வித்தியாசமாக அமையும். பிறர் செய்வதை நாம் செய்வது என்பது ஆன்மீகத்தில் எடுபடாது. ஆன்மீகத்தை பெற அனைத்தையும் துறப்பது சரியா தவறா என்பது அவர் அவர் இயல்பை பொருத்தது.
// 3.திருமணம் இதற்க்கு மிக பெரிய தடையா ....?
//
திருமணம் ஒரு தடையல்ல. இதுவும் அவரவர் கர்மாவை சார்ந்தது.
திரு சுந்தர்,
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு விக்னேஷ்வரன்,
//அன்புடன்,
ஞானி//
யாரு இவர்? தாஜ்மஹால் முன்னாடி மியூஜிக் போடுவாரே அவுரா?
\\ஆனால் இதை தவிர்த்து எந்த செயலும் இல்லாமல், தனது ஞானம் கொண்டே இறைவனுடன் கலப்பது ஞானயோகம்.\\
இது சரி...
\\அனைவரும் ஞான நிலையிலேயே இருக்கிறார்கள். அதை உணர்வதில்லை.\\
\\நமது வாழ்க்கையிலும் ஏதோ சில நிமிடம் நம்மை அறியாமல் ஞானத்தை சுவைத்ததுண்டு.
சில தருணங்களை சுட்டி காட்டுகிறேன்.
மதிய நேரத்தில் தூங்கி மாலை நேரத்தில் எழுத்தவுடன் மனதில் காலை நேரமாக இருக்குமோ என நினைத்து பல் தேய்க்க முயற்சி செய்ததுண்டா? பிறகு மாலை நேரம் என தெரிந்ததும் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
இரவு நேர நீண்ட பயணங்களில் திடீரென முழிப்பு வந்ததும் எந்த ஊரில் பயணிக்கிறோம் அறிய என முயற்சி செய்யாமல் இருந்ததுண்டா? ஜன்னல் வழியே பார்த்தால் உங்களுக்குள் என்ன உணர்வீர்கள் ?\\
எல்லாமே வேடிக்கையா இருக்கும், ஒட்டாம இருக்கும். அந்த நிலைதான் ஞானமா?
சரியா எனக்கு புரியவில்லையே நண்பரே!!!
சுவாமிஜி உங்கள் பதிப்பை படக்கமுடியவில்லை (ுகத ிக ீ )இந்தமாதிரி எழுத்துத் தெரியுது நான் படிக்க என்ன செய்ய வேண்டும்.பதில்
:)
சூப்பர் பதிவு !
தூங்குவது போல் சாக்காடு என்று வள்ளுவர் மிக எளிதாக அழகாகச் சொல்லி இருக்கிறார்.
விலங்குகளைவிட மரணம் பற்றி நன்கு தெரிந்த மனிதன் பேராசையின் சிகரமாக இருக்கிறான், அதன் அடிப்படைக் காரணம், சுயநலம், அந்த சுயநலத்தின் அடிப்படைக் காரணம் உலகத்தின் மீதும் பிறர்மீதும் நம்பிக்கை இன்மை.
காலம் ,ஞானம் பற்றிய உங்கள் பதிவு சிந்தனைக்குரியதாக இருக்கிறது.
தொடரவும்.
அன்புடன்
essusara
“பலனில் இச்சையற்றுக் கர்ம்ம் புரி” என்கிறது கர்மயோகம்,
“இதரப் பொருள்களை விரும்பாதே கடவுளை விரும்பு” என்கிறது பக்தியோகம்.
“இறைவனிடமிருந்து பிரிந்து நீ ஜீவனாகிச் சிறுமைப் பட்டு விட்டாய் அவனிடம் மீண்டும் போய்ச் சேர்” என்கிறது இராஜ யோகம்.
“நீ அவனை அறி” என்கிறது ஞானயோகம்.
இந்த நான்கிலும் “நான்” ஓருவன் இருந்துக் கொண்டே நிஷ்காமிய கர்ம்ம் புரிய வேண்டும் “நான்” ஓருவன் இருந்துக் கொண்டே இறைவனை நேசிக்க வேண்டும்,பிரிந்து வந்தவனாகிய நான் ஓருவன் இருந்தே அவனைப்போய்ச் சேரவேண்டும் இறைவனை அறியாத “நான்” ஓருவன் இருந்தே அவனை அறியமுற்படவேண்டும்,இவ்வாறு இந் நான்கு யோகங்களிலும் “நான் இவன்”
அல்லது ‘நான்இது’ என்ற ஓரு தனிப்பட்ட (ஜீவ) இருப்பு அவசியப் படுகிறது.இந்த நான் இல்லாமல் எந்த யோகமும் செய்ய முடியாது
“இந்த நான் யார்? பதில் சுவாமிஜி
//ஞானம் அடைவது என்பதை பற்றி பேச
நான் ஞானம் அடைந்திருக்க வேண்டும்.//
உண்மைதான்... ஞானம் வேண்டும்..
தப்பா நினைக்காதிங்க..
உங்களை ஏன் சுவாமி என்று சொல்ல வேண்டும்?.. சுவாமி என்று அழைப்பதால் என்ன பொருள்?... அப்படி அழைக்க என்ன செய்ய வேண்டும்?..
அப்படி அழைக்காவிட்டால் என்ன தவறு?
தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கலாம்
//ஆ.ஞானசேகரன் said...

அவரோட இயற்பெயர் ஸ்வாமி ஓம்கார், உங்களை ஏன் ஞானசேகர் என்று கூப்பிடனும் என்று யாராவது கேட்டால் நீங்க என்ன சொல்லுவிங்க ?
:)
திரு. கோவி.கண்ணன்,
உங்கள் வருகைக்கும் உள்ளம் திறந்த கருத்துக்கும் நன்றி.
திரு அறிவே தெய்வம்,
எனது சிலவரி கட்டுரையை வைத்து இதுதான் ஞானம் என் முடிவுக்கு வராதீர்கள்.
இதை ஒரு துளியாக வைத்து முயற்சி செய்யுங்கள்.
நன்றி
திரு essusara,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு.hai_cha70,
உங்கள் கேள்வி தெரிந்து கொள்ளும் நோக்கில் இருப்பதாக புலப்படவில்லை. உங்களுக்கு தெரிந்து கொள்ளுவதை காட்டும் நோக்கில் இருக்கிறது.
உங்கள் கருத்துக்களை உங்கள் வலைபூவில் பதித்து அதன் சுட்டி கொடுங்கள் கட்டாயம் படிக்கிறேன்.
நன்றி.
திரு.ஞானசேகரன்,
//தப்பா நினைக்காதிங்க..
உங்களை ஏன் சுவாமி என்று சொல்ல வேண்டும்?.. சுவாமி என்று அழைப்பதால் என்ன பொருள்?... அப்படி அழைக்க என்ன செய்ய வேண்டும்?..
அப்படி அழைக்காவிட்டால் என்ன தவறு?
தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கலாம்//
எனது வலைதளத்தில் எங்குமே என்னை இப்படித்தான் அழைக்கவேண்டும் என கூறியது இல்லை.
பலகாலமாக பல பெயர்களை தாங்கிய எனக்கு, தற்சமயம் இந்த உடலுக்கு அளிக்கபட்ட பெயர் அது.
ஆன்மீக நிலையின் ஒரு நிலைதான் “ஸ்வாமி”
தனது ஆன்மாவை தானே உணர்ந்தவன் “ஸ்வயம் - ஆமி”
என்னை எப்படி வேண்டுமானலும் அழையுங்கள். தவறல்ல. உங்களுக்கு விருப்பமான பெயரில் கூட என்னை அழைக்கலாம். என் என்றால் என்னை எதிலும் அடையாளபடுத்த விரும்பாதவன்.
உங்கள் கேள்விக்கு நன்றி.
அருமையான பதிவு ... எல்லாம் புரிந்தது போல, ஒன்றுமே புரியாதது போல
*****
5 star pathivu.
//என்னை எப்படி வேண்டுமானலும் அழையுங்கள். தவறல்ல. உங்களுக்கு விருப்பமான பெயரில் கூட என்னை அழைக்கலாம். என் என்றால் என்னை எதிலும் அடையாளபடுத்த விரும்பாதவன்.
உங்கள் கேள்விக்கு நன்றி//
மிக்க நன்றி....ஸ்வாமி ஓம்கார் அவர்களே. பல இடங்களில் ஸ்வாமி (சாமி) என்று அழைப்பது எனக்கு மனதில் சங்கடங்களை கொடுக்கும்... அதன் பொருளை கொஞ்சம் மதிப்பதால்.. எல்லொரையும் அப்படி அழைப்பதை நான் வெறுக்கவும் செய்கின்றேன்.. சாதிய அடிப்படையிலும் இந்த சாமி என்ற அழைப்பு உள்ளதும் ஒரு காரணம்... நான் விவேகானந்தர் தபோவனத்தில் படித்தவன் சுவாமி நித்தியானந்தா அடிகள் அடிக்கடி எங்கள் பள்ளிக்கு வருவார்கள்... நான் நம்பிக்கையில்லாதவன் என்றாலும் மதிப்பவன்.... உங்களின் பதில் உங்கள் மேல் மரியாதையும் அன்பையும் கொடுக்கின்றது... நன்றி..........
http://astro2009hari70.blogspot.com/
ஞானி Since 1980
/ஸ்வாமி ஓம்கார்
Enlighten since 1901/
அடிச்சு ஆடறீங்க ஸ்வாமிஜி!!
ஜோதிட கல்வியை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு வாசகன்
//வஸிஷ்டர் கூறுகிறார், “ஸ்ரீ ராமா அங்கே பார், ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசிக்கிறார், இங்கே பார் மச்சவதாரம் நிகழ்கிறது. அனைத்தும் ஒருங்கே நிகழ்கிறது. நீ அதை அறியவில்லை”//
சுவாமி ஒரு சின்ன சந்தேகம்."கிருஷ்ணர் கீதையை உபதேசிப்பது" ஒரு நிகழ்வு என்று பார்க்கும் போது அங்கே காலம் உருவாகிவிடுகிறது.அப்போதே அந்நிகழ்வை கால உணர்விலே பார்க்கிறோம் எனில் எல்லாம் ஒரே சமயத்தில் எப்படி நிகழும்.பிளீஸ் காலத்தை பற்றி கொஞ்சம் உங்கள் பதிவிலோ மெயிலிலோ விளக்குவீர்களா.
" Did you understand about "ENLIGHTMENT"
"VILAKU UN ULLAY OLIKIRATHA"
unga yezhuththu nadai elimaya karuththukkall padikum pothu manasula yetho cinthanaya thundura maathiri irukkuji \
nantri - sun x+
Post a Comment