சென்ற வாரம் ஜோதிட உற்சவம் நிகழ்ச்சி அருமையாக நடந்தது என அறிவீர்கள். அதன் ஒரு நிகழ்ச்சியாக ஜோதிடம் மூடநம்பிக்கையா ? விஞ்ஞானமா? எனும் தலைப்பில் கருத்தாய்வு நடந்தது.
மூடநம்பிக்கை என்ற தலைப்பில் பரிசல்காரன் மற்றும் சஞ்சய் இருவரும் பேசினார்கள். விஞ்ஞானமே என எனது மாணவர்கள் பேசினார்கள். காரசாரமான விவாதம் என்று சொல்ல எனக்கு மனது வரவில்லை :) நீங்கள் இரு பகுதிக்கு நடுவில் இருந்தால் தெரியும் அந்த கஷ்டம் :)
விவாதத்தினிடையே எனது மாணவர்கள் சிலர் தொடர்ந்து குறிக்கிட்டவண்ணமே இருந்தார்கள். பரிசலால் தொடர்ந்து பேச முடியவில்லை...
எனக்கோ உள்ளூர பயம். ஏன் தெரியுமா?
பதிவர்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள அந்த வாசகத்தை பரிசலோ, சஞ்சயோ சொல்லிவிடுவார்களோ என ஒரு பயம்.
அது என்ன வாசகம் என தெரியாதா ? (கிழே பாருங்கள்)
“சைலண்ஸ்... பேசிக்கிடிருக்கேன்ல..”
------------------------------------------------------
ஆரஞ்சு கலர்ஆன்மீக வாழ்க்கையில் இருப்பதால் காவி உடை அணிவது எனது வழக்கம். ஏன் இந்த உடை என ஒரு முழ பதிவை பின்னர் இடுகிறேன். இப்பொழுது விஷயம் அதுவல்ல.
எனது நண்பர்களும், மாணவர்களும் எனக்கு ஏதாவது பரிசு பொருள் கொடுத்தாலும் காவி நிறத்தில் இருக்குமாறு பார்த்துகொள்ளுவார்கள். ஏன் என தெரியவில்லை அவர்களே அதை முடிவு செய்துவிடுவார்கள். காவி நிறம் என்பது வேறு நாளடைவில் அவர்களுக்கு காவி நிறம் கிடைக்காத தால், முடிவில் ஆரஞ்சு நிறத்தை காவியாக முடிவு செய்தார்கள். ஆரஞ்சு நிற பொருட்கள் எண்ணிடம் சேர ஆரம்பித்தது. கடைசியில் சிலர் கொடுத்த உடைகளும் ஆரஞ்சு வண்ணத்தில் வர ஆரம்பிக்க ஆரஞ்சு எனது நிறமானது.
எனது மாணவர் ஒருவர் என்னிடம் வந்து “ஏன் ஸ்வாமி நீங்க ஆரஞ்சு கலர்ல டிரஸ் போடறீங்க” என்றார் வெகுளியாக, நானோ (கார் அல்ல :) ) ஆரஞ்சு கடுப்பில் இருந்தேன். அவரை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு சொன்னேன்...
“நீங்க அஞ்சாறு கலர்ல டிரஸ் போடும்போது நான் ஆரஞ்சு கலர்ல டிரஸ் போடக்கூடாதா?”
------------------------------------------------------
ஸ்வாமி ஓம்கார் சென்னை விஜயம் :)
மே மாதம் முதல் வாரத்தில் நான் சென்னை வருகிறேன். சென்னையை சேர்ந்த பதிவர்களை சந்திக்க விருப்பம். எப்படி சந்திப்பது என எனக்கு சில யோசனைகள் சொன்னால் ஏற்றுக்கொள்வேன்.
மே 3ஆம் தேதி ஞாயிறு அன்று சந்திக்கலாம், விடுமுறை நாள் என்பதால் அனைவருக்கும் ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன்.
சென்னையில் பொதுஇடம் ஏதாவது ஒன்றில் சாதாரண சந்திப்பாக இருந்தால் நல்லது. என்னை கேட்காமல் காமராஜர் அரங்கத்தை புக் செய்ய வேண்டாம் :)
எங்கே சந்திக்கலாம் எப்பொழுது சந்திக்கலாம் என்பதை எனது தனிமடலில் கூறுங்கள்.
அலைகடலன உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
------------------------------------------------------
கவிதை இல்லாமல் முடிக்க கூடாது என சம்பிரதாயம். :)என்னை வணங்கும் ஊர்
கைவண்டி இழுப்பவர்
ஸ்கூட்டரில் செல்பவர்
பஸ்டிரைவரும் கண்டக்டரும்
அலுவலகம் போகும் பெண்மணியும்
பைக்கில் போகும் இளைஞனும்
நடந்து செல்லும் முதியவரும்
என்னை பார்த்து பயபக்தியுடன்
வணங்கினார்கள். கைதொழுதார்கள்.
நான் ஞானம் அடைந்துவிட்டேனா?
என் தலையில் ஒளி வட்டம் தெரிகிறதா?
எனக்கு ஏன் இந்த மாற்றம்?
பூரிப்படைந்து பின்னால் பார்த்தேன்.
முச்சந்தி வினாயகர் கோவில்.
------------------------------------------------------------------
சூடுவைக்காத மீட்டர்இந்த வலைப்பதிவில் பின் தொடர்பவர்கள் 102 பேர் என காட்டுகிறது மீட்டர். எழுத துவங்கிய குறுகிய காலகட்டத்தில் இப்படி அமைந்தது கண்டு மகிழ்ச்சி.
பின் தொடர்பவர்களுக்கு சர்வ மங்களம் கிடைக்கட்டும்.
பின் தொடாராதவர்கள் சர்வ மங்களம் கிடைக்க முயற்சி செய்யட்டும் :)
27 கருத்துக்கள்:
புது வருஷ புத்தம் புது பஞ்சாங்கம் !!
சொந்தக் கவிதையா? அருமையா இருக்கு !!
பதிவு போட்ட பிறகு நாங்க ஒன் டூ திரி சொல்லுவோம் அப்புறம் தான் பின்னூட்டம் போடனும். :) பதிவு போட போடவேவா :)
நன்றி மகேஷ் .
அதெல்லாம் கிடையாது.... எங்க ரீடர்ல "ஜூட்"னு வந்தாச்சுன்னா ஆரம்பிச்சுடுவோம்.... :))))
ஸ்வாமிஜி.. எனக்கு தோணவேயில்லை. இருந்த சூழலும் ஆரோக்கியமான விவாதமும் காரணமாக இருக்கலாம். என்னைவிட இந்த மாதிரி இடங்களில் கலாய்ப்பதில் தேர்ந்த சஞ்சயே அன்று அமைதியாக இருந்தபோது நான் அமைதி காத்ததில் ஆச்சர்யமேதுமில்லை!
பதிவு ஜனரஞ்சகமாக இருந்தது.சென்னையில் சந்திப்போம் ஸ்வாமிஜி.
//சென்னையில் பொதுஇடம் ஏதாவது ஒன்றில் சாதாரண சந்திப்பாக இருந்தால் நல்லது. என்னை கேட்காமல் காமராஜர் அரங்கத்தை புக் செய்ய வேண்டாம் :)
//
ஆஹா நேரு ஸ்டேடியம் மனசுல வராதது பகவான் செய்த கிருபையா ? :)
//என்னை வணங்கும் ஊர்//
நெல்லுக்கு பாய்ந்த்து கொஞ்சும் புல்லுக்கும் பாய்ஞ்ச மாதிரி
வனக்கம் ஓம்கார் சுவாமிஜி,
"என்னை வணங்கும் ஊர்" மிக அருமை.
சொந்தம? இல்ல அசலா?
உமாசங்கர்.ஆ
இந்த விழாவிற்கு என்னால் வர இயலவில்லை. அடுத்த உத்சவத்திற்கு ஸ்வாமிகள் ஏற்பாடு செய்யும்போது கண்டிப்பாக கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்கு ஸ்வாமிகள் அருள வேண்டுகிறேன்
இந்த விழாவிற்கு என்னால் வர இயலவில்லை. அடுத்த உத்சவத்திற்கு ஸ்வாமிகள் ஏற்பாடு செய்யும்போது கண்டிப்பாக கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்கு ஸ்வாமிகள் அருள வேண்டுகிறேன்
இந்த விழாவிற்கு என்னால் வர இயலவில்லை. அடுத்த உத்சவத்திற்கு ஸ்வாமிகள் ஏற்பாடு செய்யும்போது கண்டிப்பாக கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்கு ஸ்வாமிகள் அருள வேண்டுகிறேன்
சென்னையில் கிருஸ்துவர்களின் புனிதத் தளமான சாந்தோம் பகுதியில் ஸ்வாமி ஓம்கார் அவர்கள் இஸ்லாமியரான அப்துல்லாவின் இல்லத்தில் தங்குகின்றார் என்பதனை மிகவும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
திரு பரிசல்,
சும்மா ஒரு நகைச்சுவைக்காக சொன்னது. உங்கள் பேச்சுக்களை மீண்டும் மீண்டும் கேட்டவண்ணம் இருக்கிறேன்.
திரு ஷண்முகப்ரியன்,
கண்டிப்பாக சந்திப்போம்.
உங்கள் வருகைக்கு நன்றி
திரு கோவி.கண்ணன்,
:) முதலில் ரிப்பன் பில்டிங் தான் நினைவுக்கு வந்தது.
உங்கள் வருகைக்கு நன்றி
திரு மர்மயோகி,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு உமாசங்கர்,
அக்மார் சுத்த ஸ்வாமி ஓம்காரின் தயாரிப்பு
பிரதிவலது முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. :)
(copyright - reserved)
திரு கே.பழனிசாமி,
கண்டிப்பாக அடுத்தமுறை சந்திப்போம்.
அப்துல்லா அண்ணே...
ஏன் ஏன் இது எல்லாம்? :)
தேர்தல் நேரத்தில கலவரம் செய்யப்பிடாது :)
சாந்தோம், அப்துல்லா ஓகே. ”இந்து” யாரையாவது கூட்டிவரவா? :)
சைலண்ஸ்... பேசிக்கிடிருக்கேன்ல..”
நல்ல காமடி பன்னுரீங்க ....
கவிதை எங்கயோ கேட்டதுபோல இருக்கு... நல்லா இருக்கு ......
//சாந்தோம், அப்துல்லா ஓகே. ”இந்து” யாரையாவது கூட்டிவரவா? :)
//
ஞானம் பெற்றேன்
:))
ஸ்வாமி அசத்தல் பதிவு
//சாந்தோம், அப்துல்லா ஓகே. ”இந்து” யாரையாவது கூட்டிவரவா?//
கலக்கறீங்க ஸ்வாமி... அப்துல்லா அண்ணன் மனது சுத்தம், ஒரு ஆர்வத்தில் கூறி விட்டார்..
திரு கிரி,
நிங்க தான் அவருக்கு ரெக்கமண்டேசனா :)
அவரே ஞானம் அடைஞ்சுட்டார் :) ஞானம் பெற்ற பிறகு மனம் எப்படி இருக்கும்.?
உங்கள் வருகைக்கு நன்றி
Post a Comment