Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, March 4, 2009

அஷ்டாங்க யோகம்



எட்டுவிதமான யோகத்தில் அப்படி என்ன சிறப்பு?
என்றனர் எதுவும் தெரியாதவர்கள்.

யாம நியம ஆசன பிராணாயமமே முதல் நான்கு படி.
பிரதியாகார தாரணை தியானமுஞ் சமாதியே பின்நான்கு படி.
அதை நீ நன்கு படி.

விளக்க சொன்னால் விளங்க சொல்லுவேன்.

பிறரை கொல்லாதிரு மனதாலும், உடலாலும்.
பிரம்மசரித்திரு, தூய்மையாய் இரு-மனதாலும், உடலாலும்.
இது
யாமம்

மெய் வாய்யில் இறைமை, வாய்யில் எப்பொழுதும் மெய்,
கலவாதிரு, களவாதிரு.
இது நியமம்.

இவ்விரண்டு படிகளை கடந்தாலே நீ ஆவாய் யோகி.

ஆசான் இல்லாத ஆசனம் ஆதாரம் இல்லாத ஆசனம்.
உன்னை வளைக்க உடலை வளை - எலி எனும்
இறைவன் இருக்க உன் உடலே வளை.

மிருகத்தை பார் ஆசனம். மலையை பார் ஆசனம்.
எங்கும் ஆசனம் எதிலும் ஆசனம்.
உன்னை ஆக்கு ஆசனம். அதுவே இறையின் அரியாசனம்.

உனது உயிர் சக்தியை வசமாக்கு- அதுவே பிராணனின் யாமம்.
உனது நவ துவாரத்தில் பயணிக்கும் சக்தியை திறந்து மூடு.
உன் உடல் எனும் புல்லாங்குழலின் துவாரங்கள் வழியே
ஓடும் இசையாக மாறும் உனது உயிர்சக்தி.

இயற்கையின் இசைக்கருவியான உனது உடலில் இல்லதா இசையே இல்லை.
நாதனை உணர நாதத்தை உணரு.

நான்காம்படியை நன்றாக படித்தால் பிற நான்கும் நன்றாகும்.

அஞ்சும் சிங்கங்களாக இருக்கும் ஞானேந்திரியத்தை ஐந்தும் சிங்கங்களாக்கு
பிற உலகில் நில்லாமல் அக உலகில் இருப்பதே ப்ரதியாகாரம்.

நீரில் உள்ள சலனம் எண்ணெயில் இல்லை.
நீர் இல்லா உலகில் எண்ணமில்லா நிலையே தாரணை.

செயல் கடந்து செயல் மறந்து அகம் அகழ்ந்து நின்று,
தானே செய்யாமல் தானே செயல்படுவது தியானம்.

ஆதியானவனுடன் சமமாவதே சமாதி.
நீயே பிரம்மனாம் அது அகம் பிரம்மாஸ்மி-யாம்.
நீயே சத்தியம் அது தத்வமஸி.
நீயே அனைத்துமாம் அதுவே சமாதி.

எட்டா சித்தியாம் அட்டமா சித்தியை அடைய முயலுவது ஏன்?
அட்டாங்க யோகத்தில் இருந்து அண்டத்தை படைத்தவனாகிவிடு.
உன் பிண்டத்தை அண்டமாக்கிவிடு.

14 கருத்துக்கள்:

YOGANANDAM M said...

vanakam swami,


Thavaruthalaga eduthukkollavendam. romba kastama irukku purinchikka.

Yoganandam.

Indira said...

purindha maadhirium irukku, puriyaadha maadhiriyum irukku...

plz.... Explain pannunga...

ஷண்முகப்ரியன் said...

நடையை மாற்றினாலும் தடை எதுவும் இல்லை.
விடை தெரிந்தவர் விரித்திடுவர் தம் சிறகினை.
அடைவது அமைதி எனில் நீயும் பறந்திடுவாய்.
குடை தருகிறார் சாமி வெய்யிலையும் தந்துவிட்டு.
கடை திறந்திருக்கும் போதே வியாபாரத்தை முடித்துக் கொள்.

Mahesh said...

//அட்டாங்க யோகத்தில் இருந்து அண்டத்தை படைத்தவனாகிவிடு.
உன் பிண்டத்தை அண்டமாக்கிவிடு.//

இது பாயிண்ட்.....

sa said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

பொதுவான ஆனால் மிகவும் எதிர்பார்க்கும் இரு கேள்விகள்

1.இலங்கையில் தமிழர்கள் தனி நாடு பெறுவார்களா ?

2.சிரி இரங்கக்கோயிலுக்கும் இலங்கைக்கும் ஏதேனும் தொடர்பு
உள்ளதா ?


தமிழர்களின் தலையான பிரச்சினையில் தங்கள் ஜோதிடம் என்ன‌
சொல்கிறது என்பதை தயங்காமல் அளித்தால் நாங்கள் தெளிவு பெறுவோம்
அய்யா. நன்றி.

jpaw said...

அய்யா தங்கள் பதிவுகள் நம் கலாசாரத்தின் மீது உள்ள ஆர்வத்தை தூண்டும் வண்ணமாக உள்ளது. மிக்க நன்றி.

பரங்கியர் கண்டுபிடித்த!! யோகாசானம் - http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs - Super Brain Yoga. - இது போன்ற திருடர்களை என்ன செய்வது?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு யோகானந்தம், திரு இந்திரா,

பதஞ்சலி யோக சூத்திரம் எனும் மாபெரும் யோக நூலை எளியவடிவில் விளக்கி உள்ளேன்.

அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கவேண்டிய அளவுக்கு நமது சமூகத்தில் பதஞ்சலி யோக சூத்திரம் அவலமான நிலையில் இருக்கிறது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

எனது வலைதளத்தை வாசிப்பவர்களில் உங்களுக்கேனும் புரிந்ததே என நினைத்து மகிழ்கிறேன்.

கடைவிரித்தேன்.. கொள்வார் இல்லை - எனும் கூற்று பட்டினத்தார் சொன்னார். அவர் வியாபார சூழலில் வாழ்ந்தவர் சொல்லலாம்.

ஆனால் என்னை போன்றவர்கள் சொல்ல அருகதை இல்லை. காரணம் ஆன்மீகம் வியாபாரம் அல்லவே..!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வாய்ப்பாடி குமார்,

அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லும் ஆர்வமும் அருகதையும் எனக்கு இல்லை.

//சிரி இரங்கக்கோயிலுக்கும் இலங்கைக்கும் ஏதேனும் தொடர்பு
உள்ளதா ?//

எனக்கும் அரசியலுக்கும் தொடர்பு உண்டா? அதூ போலதான் இதுவும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மென் தமிழன்,

நீங்கள் வன் தமிழனாகலாமா? :) பொருமை.

அமெரிக்காவில் யோகவிற்கு 23 நபர்கள் காப்புரிமை வாங்கி இருக்கிறார்கள். அவர்கள் அனைத்தையும் கண்டு பிடித்தார்களாம்.


ஃபோர்ட் காரை வாங்கி , காரின் வண்ணத்தை மட்டும் மாற்றி அதற்கு காப்புரிமை வாங்கினால் அவர்கள் சும்மா இருப்பார்களா தெரியவில்லை.

கார்ப்ரேட் குருமார்கள் அவர்களிடமிருந்து பணம் கிடைப்பதால், இவர்களுக்கு எதிரான கருத்துக்களை சொல்லுவதில்லை.

Unknown said...

நான் எதிர்பார்த்த பதில்.

நன்றி.

ஆனாலும் பாதிக்கப்படும் மக்களின் நிலை மாறுமா ?
என்று கூட பட்டும் படாமலும் கூறலாம் அல்லவா.

jpaw said...

// நீங்கள் வன் தமிழனாகலாமா? :) பொருமை //
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே. - பாரதி.
இது நம் நாடிர்க்கு மட்டும் தானா என்ற ஆதங்கம் வன்மையை காட்ட வைத்து விட்டது!! :)

எனினும் 'மென்'மை என்து இயல்பல்ல. நான் ஒரு 'மென்'பொருள் வல்லுனன். அதையெ பெயராக வைத்து விட்டேன் :(