Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, March 19, 2009

ஜோதிட கல்வி பகுதி - 6


நட்சத்திர மண்டலம்

முதல் பாடத்தில் கிரகத்தை காட்டிலும் நட்சத்திரங்கள் முக்கியமானது என பார்த்தோம்.

ஒரு கண்ணாடியில் ஒளி விழுவதாக கொள்வோம். கண்ணாடியின் தன்மைக்கும், நிறத்திற்கு ஏற்ப அந்த ஒளி தன்னை மாற்றிக்கொள்ளும். கண்ணாடி சிவப்பு நிறமாக இருந்தால் ஒளியும் சிவப்பாகவும், கண்ணடி தடிமனாக இருந்தால் ஒளி அளவில் குறைவாகவும் இருக்கும் என்பது நமக்கு தெரியும்.

மேற்கண்ட உதாரணத்தில் கண்ணாடி என்பது கிரகத்தையும் , ஒளி என்பது நட்சத்திரத்தையும் குறிக்கும். ஒளி இல்லை என்றால் கண்ணாடியின் தன்மையை உணர முடியாது அது போல, கிரகமும் நட்சத்திரமும் இணைந்து செயல்பட்டுதான் உலகின் செயல்களுக்கு காரணமாக இருக்கிறது.


நட்சத்திரம் என நான் சொல்லுவது ஒரே ஒரு நட்சத்திரத்தை குறிப்பதில்லை. பிரபஞ்சத்தில் என்னிலா கோடி நட்சத்திரங்கள் இருக்கிறது. எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப சில தலைப்புகளில் பிரித்துவிடலாம்.

பிறப்பால் அனைவரும் ஒன்றாக இருந்தாலும் அரசும்,மக்களும் ஜாதீய அடிப்படையில் பிரிவு பெருகிறார்களே அது போல. பிரபஞ்ச நட்சத்திரங்கள் 27 வகையானது என பிரிவுபடுகிறது. கவனிக்க. 27 நட்சத்திரங்கள் அல்ல. 27 வகையான நட்சத்திர கூட்டங்கள்.


ராசிமண்டலம் 360 டிகிரி கொண்டது என்பது நாம் கண்டோம்.
இந்த 360டிகிரியில் 27 நட்சத்திரங்கள் எப்படி அமைகிறது என காண்போம்.

360 டிகிரியில் 27 பிரிவு என கொண்டால் (360 / 27= 13 பாகை 20 கலை ) 13.20 என வரும்.

உதாரணமாக ஒரு பெட்டியில் ஒரு டஜன் குளிர்பான பாட்டில்கள் வைக்கலாம் என்றால், உங்களிடம் நான்கு பெட்டியும் நாற்பது குளிர்பான பாட்டில்களும் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

பள்ளி நாட்களில் கேட்கப்பட்ட கேள்வி போன்று இருக்கிறதா?

முதல் பெட்டியில் [1 முதல் 12]
இரண்டாம் பெட்டியில் [13 முதல் 24]
மூன்றாம் பெட்டியில் [25 முதல் 36]
நான்காம் பெட்டியில் [37 முதல் 40]

என பிரித்து வைப்போம் அல்லவா?


அதே போல ராசி எனும் பெட்டியில் நட்சத்திரம் எனும் குளிர்பான பாட்டில்களை அடுக்குவோம். ஒரு நட்சத்திரத்தின் அளவு 13.20. இதை வரிசையாக ராசிமண்டலத்தில் அடுக்கி வரிசைப்படுத்த வேண்டும்.

ஒரு ராசியானது 30 டிகிரி கொண்டது. எனவே இதில் 13.20 + 13.20 என இரண்டு நட்சத்திரங்கள் வைக்கலாம். அப்படி வைத்த பிறகு 26.40 டிகிரி போக ஒரு ராசியில் மீதம் 3.20 டிகிரி எஞ்சி நிற்கும்,அதில் ஒரு நட்சத்திரத்தின் ஒரு பகுதியை வைத்து மீதியை அடுத்த ராசிக்கு எடுத்து செல்லலாம். அடுத்த ராசியில் நட்சத்திரத்தின் 10டிகிரி வரும்.


இவ்வாறாக ராசிமண்டலம் முழுவதும் 27 நட்சத்திரங்களை வைக்க முடியும்.

நமது வீட்டின் ஜன்னல் வழியே வானத்தை பார்த்தால், வானம் சதுரமாக தெரியும். ஆனால் வானம் சதுரம் அல்ல. அது போல ராசி மண்டலம் மூலம் பார்க்கும் பொழுது நட்சத்திரம் 13.20 பாகை அளவே தெரிகிறது. அதனால் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் 13.20 அளவில் தான் இருக்கிறது என முடிவு செய்ய கூடாது.


ஒன்பது கிரகங்கள் மூன்று நட்சத்திரம் வீதம் 27 நட்சத்திரத்தை ஆட்சி செய்கிறது. 9X3 =27.

கீழ்கண்ட படத்தில் நட்சத்திரங்கள் எப்படி ராசிமண்டலத்தை அமைக்கிறது என காணலாம்.


நட்சத்திர பெயர்கள் நமக்கு தேவை இல்லை. அஸ்வினி முதல் ரேவதி வரை நட்சத்திரங்களை மனப்பாடம் செய்ய தேவை இல்லை. கீழ்கண்ட வரிசையை மனதில் வையுங்கள். நட்சத்திரத்தை ஆளும் கிரகமும் அது எடுத்துக்கொள்ளும் டிகிரியும் மட்டுமே முக்கியம்.

கேது------13.20
சுக்கிரன்----13.20
சூரியன்----3.20 ----10.00
சந்திரன்----13.20
செவ்வாய்---6.40---6.40
ராகு------13.20
குரு------10.00------3.20
சனி------13.20
புதன்-----13.20

கேது முதல் புதன் வரை உள்ள கிரகங்கள் மேஷம் முதல் கடகம், சிம்மம் முதல் விருச்சிகம், தனுசு முதல் மீனம் என மூன்று நிலைகளில் ஒரே அமைப்பில் தான் இருக்கிறது.

இதில் சூரியன், செவ்வாய், குரு என்னும் கிரகங்கள் மட்டுமே இரு பிரிவுகளாக பிரிந்து இரு ராசிகளில் வரும். மற்றவை முழுமையாக ஒரே ராசியில் இருக்கும்.

இன்றைய பாடம் உங்களுக்கு கணிதமாக இருப்பதாக தோன்றலாம், உண்மையில் இது லாஜிக்கலான விஷயமே அன்றி கணக்கு சார்ந்த விஷயம் அன்று. நட்சத்திர மண்டலம் எனும் இந்த விஷயம் மிகவும் முக்கியனானது. இதை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் ஜோதிடத்தை கற்றும் பயனில்லை.

நட்சத்திர மண்டலம் எனும் பாடம் இன்றுடன் முடியவில்லை. அடுத்த பாடத்திலும் தொரும்.

------------------------------------------------------------------------------------------------
கேள்வி நேரம் :
மேற்கண்ட நட்சத்திர மண்டல படத்தில்,மேஷம் முதல் கன்னி ராசி வரை மேலிருந்து கீழாக நட்சத்திரங்களை குறித்தோம். ஆனால் துலாம் முதல் மீனம் வரை கீழிருந்து மேலாக குறிப்பிடப்பட்டுள்ளதே ஏன்?

[கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் உங்கள் புத்திசாலிதனத்திற்கும், கவனிப்பு திறனுக்கும் உள்ள கேள்விகள். பல ஜோதிட புத்தகங்களை படித்து பதில் சொல்லவேண்டிய கேள்வி அல்ல. சிந்தித்து பதில் கூறுங்களேன் ]

-------------------------------------------------
சிரிக்க சில நொடிகள் :

அவள் : என் புருஷன் ஜோதிடரா இருக்கிறதால எனக்கு ஒரே பிரச்சனை.
இவள் : ஏன் என்னாச்சு?
அவள் : எனக்கு ஜல“தோஷம்”-னு சொன்னா மருந்துவாங்கி கொடுக்காம பரிகாரம் செய்ய சொல்லறாரு.

11 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

//அவள் : என் புருஷன் ஜோதிடரா இருக்கிறதால எனக்கு ஒரே பிரச்சனை.
இவள் : ஏன் என்னாச்சு?
அவள் : எனக்கு ஜல“தோஷம்”-னு சொன்னா மருந்துவாங்கி கொடுக்காம பரிகாரம் செய்ய சொல்லறாரு.//

ரொம்ப நல்லாயிருக்கு

நாமக்கல் சிபி said...

உள்ளேன் ஐயா!

Jayakumar said...

கடிகார சுற்று படி அமைந்திருப்பதால்
ஜெயகுமார்

Mahesh said...

வட்டத்துக்குள்ள clockwise 30 டிகிரிக்கு ஒண்ணுன்னு சுத்தி வந்தா அப்பிடித்தானே வரும்.

Geekay said...

உள்ளேன் ஐயா!

Geekay said...

உள்ளேன் ஸ்வாமி!!

krish said...

It is because the stars are considered right side stars and left side stars.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஞானசேகரன், நாமக்கல் சிபி, ஜே, மகேஷ், ஜீ கே, க்ரிஷ்

உங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றி.


ஜெ மற்றும் மகேஷ்,

நீங்கள் சொன்ன பதில் ஓரளவு சரி.


ராசி மண்டலம் ஒரு வட்டம் என்பதால் 0 டிகிரி முதல் 180 டிகிரி (மேஷம் முதல் துலாம் வரை)

மேலிருந்து கீழாகவும்,(துலாம் முதல் மீனம் வரை) பின் கீழிருந்து மேலாகவும் இருக்கும்.

இதை ஆரோகன ராசிகள், அவரோகன ராசிகள் என கூறுவார்கள்.

ஆங்கிலத்தில் அஸண்டிங் சைன், டிஸண்டிங் சைன் என கூறுவார்கள்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

kargil Jay said...

Swamiji,
Thanks a lot for highly pedagogical astrology with highest professional quality.
prostrations,
Jay

essusara said...

swami omkar,

Laknam kanipatharku eyn chandranai kanakil eduthu kolvathillai?

suriyanin nagarvuthan lagnam endral nam rasi kattathil lagnathodu eyn suriyanai serkamal antha mathathirkuriya katathil suryanai vittu vidugirom ?lagnam thaniyaga podugirom?

kundaka mandaka yosikirono???

swami thelivu paduth vendukireyn.

anbudan,
essusara

வடுவூர் குமார் said...

அவ்வப்போது ஜோசியத்தொடர் மீது ஆர்வம் வந்து பிறகு காணாமல் போய்விடுகிறது,இதற்கு முன்னால் பலர் எழுதிய தொடரை படிக்கும் போது நட்சத்திரம்/ராசிகளை கொண்டு ஒரு அட்டவணை போட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.இந்த பதிவில் அதையும் அழகாக போட்டு கொடுத்துவிட்டீர்கள்.
திரும்ப ஆர்வம் வருகிறதா என்று பார்ப்போம்.