Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, January 10, 2009

ஜின்ஜினகாலஜி - ஓர் தொலைகாட்சி நிகழ்ச்சி

முன்னுரை :

நவநாகரீக மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அலாதியானது. எத்தனையோ ஆலஜிக்களுக்கு அவர்களின் நம்பிக்கை கரங்கள் நீட்டுகிறார்கள்.ஆலஜி என்றால் என்ன என புரியவில்லையா? அத்தாங்க நியூமாராலஜி, நேமாலஜி, கிராபாலஜி என எத்தனையோ கருமாந்திரங்கள் இருக்கிறதே.

(எனக்கு தெரிந்த ஒருவர் இருதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார் அவரின் ECG யை பார்த்து டாக்டர் கூட 45 டிகிரியில் உங்க ஹார்ட் பீட் வேலைசெய்யனும் சொல்ல , தலை தெரிக்க ஓடிவந்திருக்கிறார் ;) )




டீவியை ஆன் செய்தால் போதும் வாடகை கோட் சூட் அணிந்து கொண்டு இவர்கள் செய்யும் காமெடி தாங்கவில்லை. ஒருத்தர் கல்லை போட சொல்லுகிறார், இன்னொருத்தர் பெயர் மாற்ற சொல்லுகிறார், இன்னொருவரோ கையில் எதோ " T " போல வைத்து கொண்டு ஆட்டுகிறார். இதை விட கொடுமை ஒருத்தர் மணிபர்ஸை எங்கே வைக்க வேண்டும் என சொல்லுகிறார். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் this is bit too much...

இந்த அனைத்து ஆலஜிக்கலையும் ஓர் ஆய்வு செய்து சில கருத்துக்களை சேகரித்துள்ளேன். இந்த உட்டாலக்கடி ஆய்வு இவர்களில் யார் சிறந்தவர்கள் என சொல்லுவதற்கு இல்லை. இவர்களுக்கு போட்டியாக நானும் ஓர் ஆலஜியை கண்டுபிடித்துள்ளேன். அதை இந்த மனித சமுதாயம் பின்பற்றி பயன்பெறுமானால் , எனது கண்டு பிடிப்புக்கு நோபல் பரிசு கிடைக்கலாம். பிறகு மனித சமுதாயம் என்ன ஆகும்னு மட்டும் கேட்காதீங்க. அதை நான் இன்னும் ஆய்வு செய்யலை.



சரி நிகழ்ச்சிக்கு போகலாமா?

ஜின்ஜினகாலஜி

பல கோவில்கள், சித்தர்களின் படத்துடன் பெயர் பட்டியல் போட்டுவிட்டு நிகழ்ச்சி துவங்குகிறது.

ஜின்ஜினகாலஜி என்னும் புதிய முறையை நீங்கள் யாரும் கேள்விபட்டிருக்க முடியாது. காரணம் அது நான் கண்டுபிடித்த முறை.

உலகிலேய முதல் ஜின்ஜினகாலஜி மாமேதை, ஜின்ஜினகாலஜியின் தந்தை என என்னை கூப்பிடுவாங்க.

ஜின்ஜினகாலஜி-னா என்னனு கேட்கறிங்க தானே?
என்ன அவசரம்? பொருமையா இருந்து அழிஞ்சு போங்களேன்.

ஜின்ஜினகாலஜினா ஒருவரோட பெயரை மாற்றாமல் அவரின் பெயரில் சில எழுத்துக்களை மட்டும் மாற்றி அவரை உலக புகழ் அடையவைக்கும் உன்னதமான விஞ்ஞானம் தான் ஜின்ஜினகாலஜி .

சில எழுத்துக்களை மட்டும் மாற்றினால் உலக புகழ் அடையலாமா உங்களுக்கு சந்தேகம் வந்தால் நீங்க வேற சானலை பாருங்கள். என்னய்யா என்னையா இம்சை பண்ணுறீங்க?


எனனோட 60 வருட ஆராய்ச்சியில் பெயரில் வட மொழி எழுத்துக்கள் இருந்தால் அவர்கள் பிரபலமானவங்களா இருப்பங்கனு கண்டுபிடிச்சிருக்கேன்.

(60வருட ஆராய்ச்சியா? உங்களுக்கு வயசு முப்பதோ நாற்பதோ இருக்ற மாதிரி தெரியுதே சந்தேகமா? நான் ஓவர்டை செஞ்சேன். இதையெல்லம் கண்டுக்க பிடாது....)

உதாரணமா உங்க பெயர் செந்தில் குமாருனு வெச்சுக்குங்க. உங்க பெயரை “ஷெந்தில்” குமாருனு மாத்திக்கனும் அவ்வளவுதான். அதுக்கப்பறம் பாருங்க உங்க வாழ்க்கையில் ஜின்ஜினகாலஜி எப்படியல்லாம் மாத்த போகுதுனு தெரியும்.

ஜ வரிசைனு சொல்ல கூடிய ஜ,ஜா,ஜி,ஜு,ஜெ,ஜே. அப்பறம் ஸ்ரீ, ஹ, ஷ இருக்கற வட மொழி சொல்லை எதாவதது ஒன்னை உங்க பேரு கூட சேத்திக்குங்க.

அப்புறம் உங்களை சாதரண மனிதனா இல்லாமல் உலக புகழ் மனிதனா தான் பார்க்க முடியும்.

என்னிடம் தொலைபேசியில் கருத்துகேட்டு பெயர் மாத்தினவங்க அட்ரஸ் இல்லாம போயிருக்காங்க. தப்பா நினைச்சுக்காதீங்க, ஒரு அட்ரஸ்லிருந்து இன்னொரு அட்ரஸுக்கு மாறி போயிருக்காங்க. குடிசைலிருந்து பங்களாவுக்கு மாற வேண்டாமா?

இன்னும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரலைனு நினைக்கறேன்.. இதோ சில பிரபலங்களின் பெயர்களை உங்களுக்காக சொல்லறேன், அதில் இருக்கும் வடமொழி எழுத்தால அவங்க எப்படி உச்சத்துக்கு போனாங்கனு உங்களுக்கு தெரியும்.
(”உச்சத்துக்கு” என வாசிக்கவும் ;) )



அரசியலில் பிரபலமானவங்க பெயரை எடுத்துக்கலாம், எம்.ஜியார், காமரார், ராஜாஜி இவங்க எல்லாம் எப்படி பெரும்தலைவர்கள் ஆனார்கள் தெரியுமா? எல்லாம் ஜின்ஜினகாலஜி தான்.

சினிமா நடிகர்கள் எடுத்துக்குங்க..(அதுக்காக அவங்களை தூக்க வேண்டாம்).

அந்தகாலத்துல சிவாஜி கணேசன் முதல்,
ஜினி, கமல் ஹாசன் -னு பயணப்பட்டு அஜித், விய் வரைக்கு ஜின்ஜினகாலஜி இல்லாமல் யாரும் பிரபலமானதா சரித்தரமே இல்லை.

இருங்க மேற்கொண்டு இந்த கருத்தை சொல்லறதுக்கு முன்னாடி ஒரு நேயர் தொலைபேசியில் அழைக்கிறார் அவர்கிட்ட பேசுவோம்..

நேயர் : சார் நான் ஈரோட்டிலிருந்து ராமசாமி பேசறேன்...

ஜின்ஜினகாலஜிஸ்ட் : ஐயா மன்னிச்சுகுங்க....நான் இல்லீங்க , ஏதோ பிளைப்புகாக இதை செஞ்சுக்கிட்டு இருக்கேன்னுங்க.

நேயர் : சார் என்ன சொல்லறீங்க? நான் ராமசாமி சாதாரண விவசாயி.

ஜின்ஜினகாலஜிஸ்ட் : மனதுக்குள் (அட கண்றாவி பிடிச்சவனே, ஊர் பேரோட உன் பெயரை சொல்லி ஏண்டா கிலி எற்படுத்தறீங்க..) அது ஏதோ கிராஸ்டாக். உங்களுக்கு என்ன பிரச்சனைனு சொன்னீங்க ?

நேயர் : என் பொண்ணுக்கு கல்யாணம் தள்ளி போயிக்கிட்டே இருக்கு. கடன் பிரச்சனை வேற. இதுக்கு என்ன தீர்வுங்க?

ஜின்ஜினகாலஜிஸ்ட் : உங்க பேரு ராம சாமினு இருக்கறது தான் பிரச்சனை, இனிமேல் உங்க பெயரை “ ராம ஷாமி”-னு பேருவையுங்க.

நேயர் : இப்படி பேரு மாத்தினா கடன் பிரச்சனை தீருமா?

ஜின்ஜினகாலஜிஸ்டட் : ராமசாமினு பேருல தான கடன் வாங்கிருப்பீங்க. ராம ஷாமினு மாத்திக்கிட்டா இந்த புது பெயரில் இன்னும் கடன் வாங்கி பழைய கடனை அடைக்கலாம்.

நேயர் : அப்போ புது கடனை என்ன செய்யறதுங்க ?
...... டாங்..... டாங் ....(தொலை பேசி துண்டிக்கப்படுகிறது)

விளம்பர இடைவேளை...

உலகின் முதல் ஜின்ஜினகாலஜிஸ்ட் சந்திக்க வேண்டுமா?

ஜின்ஜினகாலஜிஸ்ட் விஜய அட்டவணை இதோ..

அண்டார்டிக்கா விஜயம்... பிரதி மாதம்...26,27
ஆர்டிக் விஜயம் பிரதி மாதம் 15,30
சகாரா பாலைவன விஜயம் பிரதி மாதம் 29,30 ( பிப்ரவரியில் வரமாட்டாரோ? )

நிகழ்ச்சி தொடருகிறது....


சினிமா நடிகர்களை பத்தி சொன்னேன். நடிகைகளுக்கும் ஜின்ஜினகாலஜி ”அதிகமா” செயல்படுது.
சரோஜாதேவி முதல் ஸ்ரீ தேவி, ஸ்ரீப்ரியா கடந்து இப்போ ஜோதிகா, திரீஷா,ஜெனிலியா வரைக்கும் ஜின்ஜினகாலஜி வர்கவுட் ஆனவங்க பட்டியல் நீளம்.

அப்போ வட மொழி சொல் இல்லதவங்களும் பிரபலம் ஆயிருக்கங்களேனு. ...
உங்களுக்கு இருக்கிற கொஞ்சூண்டு புத்திசாலிதனதை வைச்சுக்கிட்டு நீங்க என்கிட்ட ஒரு கேள்வி கேட்கலாம்.
இதுக்கே உங்களுக்கு ஜின்ஜினகாலஜி வேலை செய்யாது. இதோ என்னோட பதில்...
ஒன்னு அவங்க பிறந்தப்ப வைச்ச பெயரில் வடமொழி சொல் இருக்கும். அதனால ஜின்ஜினகாலஜி பிறக்கும் போதே வர்கவுட் ஆயிடும்.

உதாரணமா சிவாஜி ராவ் ரஜினி யானதால ஜின்ஜினகாலஜி ரெண்டு முறை அவருக்கு வர்க் ஆயிருக்கும்.ராஜாஜி பாருங்க அதே தான் காரணம். பெயரில் இரண்டு முறை ஜின்ஜினகாலஜி செஞ்சா அதிக புகழ் பெறலாம்.

மன்மோகன் சிங், சோனியா காந்திக்கு ஜின்ஜினகாலஜி பிரகாரம் பெயர் இல்லைனு நீங்க கேட்கலாம். அவங்க வட நாட்டில் இருக்கிறதால வட மொழி தேவை இல்லை. மேலும் அவங்களை எல்லோரும் மன்மோகன் “ஜீ”, சோனியா ‘ஜீ” னுதான் கூப்பிடுவாங்க. அதனால வட நாட்டுக்காரங்களுக்கு ஜின்ஜினகாலஜி தன்னால அமைஞ்சுடும்.

இப்போ தெரியுதா? சில பிரபலங்கள் பெயருக்கு முன்னாடி ஏன் ...”விய”னு சேர்த்திருக்காங்கனு?

எழுத்தாளர்களை கூட பாருங்க சுஜாதா, ஜெயமோகன்-னு தங்கள் எழுத்தில் புகழ் பெற்றவர்களை காட்டிலும் ஜின்ஜினகாலஜி மூலமா பிரபலமானவங்கதான் அதிகம்.

பிளாக்கு பிளாக்கு-னு ஏதோ இண்டர்நெட்டில் மக்கள் எழுதறாங்க. அதுல கூட பார்த்திங்கண்ணா.. அதிக வாசகர்கள் கொண்ட பிரபல பதிவர்கள் இருவர்களோட இயற்பெயர்கள் “கிருஷ்ணா”-னு இருக்கு அதனால ஜின்ஜினகாலஜி மூலமா பிரபலம் ஆயிட்டாங்க.


அதனால உலக மக்களே உங்கள் வாழ்க்கை வளமாக்கனும்னா ஜின்ஜினகாலஜி மேல நம்பிக்கை வையுங்க.

உங்க பெயரின் சில எழுத்துக்களை மாற்றி அமைத்தாலே போதும் ஜின்ஜினகாலஜி உங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..

உங்கள் வேலை நேரமா பார்த்து, முதலாளிக்கு உழைக்காமல் ஜின்ஜினகாலஜி பற்றி சிந்தித்து எனக்கு தொலை பேசியில் தொடர்புகொள்ளவும்.

அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்...


நிகழ்ச்சி ஆக்கம் , ஊக்கம், தாக்கம்

ஜின்ஜினகாலஜிஸ்ட்
ஸ்”வாமி ஓம்கார்


டிஸ்கி : இக்கட்டுரை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல, அனைவர் மனதையும் பண்படுத்த எழுதபட்டது.

23 கருத்துக்கள்:

Anonymous said...

ஸ்வாமிஜி,

சூப்பர் காமெடி.ரொம்ப நல்லா வந்திருக்கு.ஆமாம் இந்த டீவில அட்டகாசம் தாங்க முடியல.

Unknown said...

ஓம்கார் அவர்களே,

“ஜின்ஜினகாலஜி” நலல சிரிப்பான பதிவு.ஆ.விகடன் “லூசுப் பையன்”
கணக்கா இருக்கு.

தியாகராஜன் said...

ஸ்வாமி,
நானும் சீக்கிரம் பிரபலமாயிடுவேன்னு நினைக்கிறேன்!!!!!!!!!!!!!!.
ஜின்ஜினகாலஜி படி என்பெயரிலும் வடமொழி எழுத்து உள்ளது "தியாகராஜன்".
மிகச் சிறந்த நகைச்சுவை ஸ்வாமி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஆதித்யா, ரவிங்கர், தியாகரான்,

உங்கள் அனைவருக்கும் ஜின்ஜினகாலஜி முறையில் நன்றி.

உயிரை கொடுத்து எழுதிய காட்டுரைக்கு வராத அளவுக்கு இக்கட்டுரைக்கு வருகைதந்த ( தற்சமயம் வரை 64 நபர்கள் ஒரே நாளில்) அனைவருக்கும் எனது நன்றிகள். :))

ATOMYOGI said...

:-)

Geekay said...

ரொம்ப நல்ல காமெடி ஸ்வாமி.

நாமக்கல் சிபி said...

நல்ல காமெடிப் பதிவு!

இப்படிக்கு,

நாமக்கல் ஷிபி!

(Namakkal Shibi)

Anonymous said...

very nice,cant control my laugh

பரிசல்காரன் said...

ஹையோ ஹையோ..

ஷிரிச்சு ஷிரிச்சு ஒரே குஜாலாக்கீது ஸ்வாமிஜி!

அதுவும் ஈரோட்டு ராமஷாமி மேட்டர் ஜூப்பரு.

அடிக்கடி இப்படி எழுதுங்க.


-கிருஷ்ணகுமார் (எ) பரிஷல்காரன்!

VIKNESHWARAN ADAKKALAM said...

சம்போ மகாதேவா... ஓ சாரி சாரி ஷம்போ மஹாதேவா...

என்ன இது மொக்கை போட ஆரம்பிச்சுட்டிங்க.... நன்கு உள்ளது....

ஷெரி நான் வாஹாரேன்....

டிஸ்கி : இப்பின்னூட்டம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல, அனைவர் மனதையும் பண்படுத்த எழுதபட்டது.

CA Venkatesh Krishnan said...

ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.:))))))))))))))

அப்ப சிவகுமார் ஷிவ்குமார்,

சூர்யா ஷூர்யா

விக்ரம் - விக்ரஹம்???

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அணுயோகி,ஜீ கே மற்றும் நாமக்கல் சிபி, சகோதரி ரேகா,


உங்கள் வருகைக்கு பாரட்டுக்கும் நன்றி.

ரேகா எதையும் கண்ரோல் பண்ணாதீர்கள்... அப்புறம் கண்ரோல் பண்றதை கண்ரோல் பண்ண முடியாம போயிறும்...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு இருள்குமரருக்கு ,

( அத்தாங்க கிருஷ்ண குமார்- பரிதிமாக் கலைஞர் மாதிரி மாத்திருக்கோம்ல..)


உங்கள் வருகையால் ஜின்ஜினகாலஜி புகழ் பிரபல பதிவர் வந்து என்ன பதிவை படித்தார் என சொல்லிக்கொள்ளும் பெயர்பெற்றேன்.

(இன்னொருவர் பாக்கி...!)

நன்றி பரிசல் ஜி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு விக்னேஷ்வரன் அவர்களுக்கு,

உங்கள் வருகைக்கும் , ”ஷம்போ மஹாதேவா”-வுக்கும் நன்றி.

அது என்ன என்னக்கே டிஸ்கி திருப்பி கூறி இருக்கிறீர்கள்? எதாவது உள் நோக்கம்?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு இளைய பல்லவன்...

காமெடி சொன்னா அனுபவிக்கனும், அதென்ன நடிகர் பெயர் வைச்சு ஆராய்ச்சி பண்ணுவீங்க போலிருக்கே?
:))

உங்கள் வருகைக்கு நன்றி.

YOGANANDAM M said...

My yoganandam, kindly suggest me name as per jinjinakalogy.

Yoga

RAHAWAJ said...

நல்ல காமடியா இருக்கு, உண்மையை நல்லா சொல்லி இருக்கிங்க,என்ன செய்வது இன்றைய நிலை அப்படி, சரி சரி எனக்கும் எப்படி பெயர் மாற்றலாமுனு உங்க "ஜின்ஜினகாலஜி" மூலம் பார்த்து சொல்லவும்

வீ. எம் said...

என்னடா இது கருணாநிதி எப்படி புகழடைந்தார், அவரு பேருல ஜின்ஜினகாலஜி இல்லையேனு நெனைச்சேன்.. நீங்க நடத்துன நிகழ்ச்சிய பார்த்து வந்த அறிவை வெச்சு யோசித்தேன்.. ஒரு வேளை கலைஞர்னு பேருக்கு முன்னாடி இருக்கே அதுவானு தோனுசு.. இல்லை இல்லை அது வடமொழி உச்சரிப்பு போல இருந்தாலும் ஞ என்பது தமிழ் தானே.. திரும்பவும் நீங்க கொடுத்த ஞானத்தை வெச்சு யோசிச்ச அப்புறம் தான் புரிந்தது..

கருணாநிதி ஆரமப்ப காலத்துல என்னென்னமோ பன்னாரு பெரிய புகழ் வரல. 1967க்கு அப்புறம் தான் அமைச்சர், முதலமைச்சர் எல்லாம் ஆனாரு.. அந்த ரூட்ல யோசித்தப்ப தான் உண்மை புரிஞ்சுது...

ஸ்டாலின்.. ஆமாம் அவரோட மகனுக்கு ஸ்டாலின்னு பேரு வடமொழி சொல்லுல பேரு வெச்சதுல "பேரன்டல்" ஜின்ஜினகாலஜி ஒர்க் அவுட் ஆகி டாப் கியர் ல போய்ட்டாரு..

அப்படி பார்த்தா 1953ல ஸ்டாலில் பிறந்துட்டாரே அப்புறம் ஏன் கலைஞர் 1967 க்கு அப்புறம் தான் புகழ் அடைஞ்சார்?? கேள்வி வருதுல்ல.. ஆங்.. பதில் இருக்கே..

பொதுவா குழந்தைக்கு 5 - 6 வயது வரைக்கும் என்ன தான் பேரு வெச்சிருந்தாலும், செல்லம், குட்டி, ராசா, பப்பு, பாப்பு இப்படித்தானே கூப்பிடுவோம்.. அதே தான் இங்கேயும்.. கலைஞர் ஸ்டாலிக்கு 10 வயது வரைக்கும் அவரை பப்பு, பாப்பு, தம்பி , செல்லம் இப்படி கூப்பிட்டதால "சிலபல்" ஜின்ஜினகாலஜி வேலை செய்யல.. அப்புறம் அவரு ஸ்டாலின் அப்படினு கூப்பிட ஆரம்பித்தப்புறம் தான் டாப் கியர்

ஆகவே குருஜி சார்பார் நான் கேட்டுகறது, உங்க பேருல ஜின்ஜினகாலஜி செய்ய முடியலனா கூட உங்க பிள்ளைகளுக்க் ஜின்ஜினகாலஜி படி பேரு வெச்சி கூப்பிடுங்க.. அது உங்களை எங்கேயோ எடுதுட்டு போகும்

Unknown said...

இன்று தான் உங்கள் வலைப்பதிவு படிக்க வந்தேன். பல பதிவுகள் சுவாரஸியமா இருக்கு.

"ஜின்ஜினகாலஜி" படிச்சிட்டு சிரிப்பை மறைக்க ரொம்ப சிரமப்பட்டேன் (Damager around)

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவ வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.

வேகமாக வளர்ந்து வரும தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.


நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

கால்கரி சிவா said...

கருநாநிதியின் இயற்பெயர் தக்ஷிணாமூர்த்தி. அதான்

Incredible Monkey said...

கோப பட வேண்டிய விசயம் அழகிய நகைச்சுவையாக வந்து இருக்கிறது.நன்றி.

குசும்பன் said...

அவ்வ்வ்வ் செம கலக்கல் என் பெயரை குஜிம்பன் என்று மாத்திடலாமா? சாகாரா பாலைவனத்துக்கு வரும் பொழுது அங்கிருந்து கப்பல் புடிச்சு அரேபிய பாலைவனத்துக்கு வந்துடுங்க:)
பீஸ் கொடுத்துவிடுகிறேன்!