பெண்களும் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளீர்கள். பெண்கள் சதாசர்வகாலமும் அணிவது சாத்தியப்படுமா? குறிப்பிட்ட சில தினங்களில்பெண்களுக்கு negative energy அதிகமாய் இருந்தால், அப்பொழுதும் கூட பெண்கள்ருத்ராஷம் அணிதல் தகுமா?
பெண்கள் ருத்ராஷத்தை விட துளசிமாலை அணிவது சரியென்று பலர் கூறுகின்றனரே. துளசிமாலையும் எப்பொழுதும் அணிய பயன்படுத்தலாமா?
நான் துளசிமாலை வைத்திருக்கிறேன். சில நேரம் ஜபம் செய்யும் போது மட்டும் எடுத்து ஜபம் செய்துவிட்டு பின் பூஜையறையில் வைத்துவிடுவேன்.
ஜபிக்கப்பட்ட மாலையல்லாது இன்ன பிற மாலைகள் வெறும் அணிகலனுக்கு ஒப்பு என்று கூறியுள்ளீர்கள். இப்படிப் பட்ட ருத்ராஷமோ, துளசிமாலையோ எப்படி பெறுவது.
அவசரமில்லை. நேரம் இருக்கும்போது என் வினாக்களுக்கு விடையளியுங்கள். தொந்தரவுக்கு மன்னிக்க. நன்றி.
சகோதரி சக்திபிரபாவுக்கு,
உங்கள் கேள்வி அனைவருக்காகவும் கேட்கபட்டதாக கொண்டு விரிவான விளக்கத்தை இப்பதிவில் இடுகிறேன்.
பெண்கள் ”ஆன்மீக” பொருட்களை பயன்படுத்த எந்த காலத்திலும் எந்த தடையும் இல்லை. ”மத” பொருட்களை பயபடுத்தவே தடை உண்டு.
நீங்கள் சொல்லுவதை போல “negative energy" தவறு என்றால், அந்த எனர்ஜி இல்லாமல் நானும் நீங்களும் தோன்ற முடியுமா? அது தாய்மையின் அடையாளம். ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல.
அபாணா எனும் பிராண சக்தி அதிகமாக வெளிப்படுவதால் அந்த நிலையைல் பெண்களுக்கு வேலை கொடுக்காமல் ஓய்வு கொடுத்தார்கள். தள்ளி வைக்கவில்லை.
கேரளாவில் பகவதி கோவில்களில் மாதம் மூன்று நாட்கள் அம்மனுக்கு இதே போன்ற சடங்குகள் செய்யபடுவது உங்களுக்கு தெரியுமா? குருதி பூஜை என சொல்லபடும் இந்த பூஜை பரவலாக அனைவரும் அறியாதது. மேலும் சுயம்புவாக இருக்கும் பகவதி அம்மன் பெண்களை போல இயற்கையாகவே இந்த நிலைக்கு ஆட்படுவதாக சொல்லுகிறார்கள்.
மாதவிலக்கு என்னும் சொல்லாடலை நான் வெறுக்கிறேன். மாத ஓய்வு என சொல்லலாம். இக்காலத்தில் பெண்களுக்கு உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக அதிக தளர்ச்சி இருக்கும். அதை காக்க ருத்திராட்சம் அணியலாம். தவறில்லை.
ஆன்மீகத்தில் பெண்களின் உண்மையான நிலை என ஓர் பதிவிட்டு விளக்க எனக்கு எண்ணம் உண்டு. ஆனால் சில காரணத்தால் அதை தவிர்த்து வருகிறேன்.
இறந்த வீட்டிற்கு செல்லும் பொழுது சிலர் அணிய கூடாது என சொல்லுவார்கள். ருத்திராட்சத்தை காக்கும் கடவுளாக பார்க்க வேண்டும். எங்கெல்லாம் உங்கள் உடல்,மனம் மற்றும் ஆன்மா தவறான சக்திக்கு ஆட்படுமோ அங்கெல்லாம் அணியலாம்.
துளசி மாலை அணிவதில் தவறில்லை. அதுவும் சக்திவாய்ந்த பொருள் தான். ருத்திராட்சத்திற்கு மாற்றாக துளசிமாலை என கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. ஆனால் துளசி மாலைக்கு என்று தன் சக்தி உண்டு.
எப்பொழுதும் ஜபம் செய்த மாலையை கழுத்தில் அணிவது நல்லது. ஜபிக்கபட்ட மந்திரங்கள் அதில் நிறைந்திருக்கும். உங்கள் அலைபேசியில் சார்ஜ் செய்து விட்டு, வீட்டில் வைத்திருந்தால் என்ன பலன்?
ஜபம் செய்ததும் மாலையை அணிந்தால் அன்று வித்தியாசமான உள்ளுணர்வு இருப்பதை உணரலாம். முயற்சித்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
ஆன்மீக குரு, ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்ய துவங்கலாம். ஜபம் செய்யும் மந்திரம், மாலை அனைத்தும் அவர்க்ளின் கருத்தாக இருக்கவேண்டும். நாம் முடிவு செய்ய கூடாது.
அடிப்படை மூல மந்திர ஜபம் இவ்வாறு குருவிடம் இருந்து பெற்று மேம்மட்டவுடன், பிற மந்திரங்களை ஜபம் செய்ய நாம் அதிகாரம் பெறுகிறோம். அப்பொழுது நாமாகவே முடிவு செய்யலாம்.

14 கருத்துக்கள்:
வணக்கம் ஸ்வாமிஜி!
***கேரளாவில் பகவதி கோவில்களில் மாதம் மூன்று நாட்கள் அம்மனுக்கு இதே போன்ற சடங்குகள் செய்யபடுவது உங்களுக்கு தெரியுமா? குருதி பூஜை என சொல்லபடும் இந்த பூஜை பரவலாக அனைவரும் அறியாதது. மேலும் சுயம்புவாக இருக்கும் பகவதி அம்மன் பெண்களை போல இயற்கையாகவே இந்த நிலைக்கு ஆட்படுவதாக சொல்லுகிறார்கள்.***
புதிய தகவல்... தகவலுக்கு மிக்க நன்றி.
அணுயோகி,
உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
First time in ur blog , very nice
I bought a 2 face rudrakash for myself and my husband from an ashram...can i wear it with spadigam?I read that we can not wear rudrakasham during night is it so?
//ஆன்மீக குரு, ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்ய துவங்கலாம். ஜபம் செய்யும் மந்திரம், மாலை அனைத்தும் அவர்க்ளின் கருத்தாக இருக்கவேண்டும். நாம் முடிவு செய்ய கூடாது//
அந்த காலத்துல மந்திரம் உபதேசிக்க குருவாக நிறைய பேர் கிடைத்தார்கள்!
இப்ப குருவிற்கு நாங்கள் எங்கே கிடைக்கப் பெறுவது?
(ரொம்ப நாளா எனக்கு ஒருத்தர் சொல்லிக் கொடுக்க மாட்டாரான்னு கவலை என் மனசுல இருக்கு)
மிக அருமையான விளக்கங்கள், ஸ்வாமிஜி. ருத்ராக்ஷத்தின் பரிசுத்தத்தை பாதுகாப்பதற்காக இரவில் படுக்கும் முன் கடவுள விக்ரஹத்தின் முன்பு கழற்றி வைத்து விட்டு காலையில் எழுந்தவுடன் மாட்டிக்கொள்ளும் பழக்கத்தில் உள்ளேன். உடல் வியர்வையால் அசுத்தமாகிவிடுமோ என்கிற பயத்தில் தினமும் குளிக்கும் பொழுது சோப்பால் நன்கு கழுவி பிறகு திருநீர் கொண்டு தடவி விடுகிறேன். இப்படி செய்வது தவறா? நான் அணிந்துள்ள ருத்ராக்ஷம் நேபாலில் காட்மாண்டுவில் உள்ள சிவன் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது. (அறியாமையால்) சோப் போட்டு கழுவியதால் அதன் பலன் தீர்ந்திருக்குமா? மேலும், ருத்ராக்ஷத்தின் சக்தியை மேம்படுத்த நாம் என்ன மந்திரத்தை எப்படி கூற வேண்டும் என்று விளக்குங்களேன்.
சகோதரி ரேகா,
உங்கள் முதல் வருகைக்கு எனது நன்றிகள்.
இரு முக ருத்திராட்சம் தம்பதிகளுக்கு நல்லது. அதைகாட்டிலும் கெளரிஷங்கர் எனும் வகை உண்டு. அது சிறப்பு வய்ந்தது.
இரவில் அணிய கூடாது என சொல்லுவதற்கு காரணம். தாம்பத்திய காலத்தில் ருத்திராக்ஷம் அசுத்தமாக கூடாது என்பதற்காக தான்.
உடலுறவு காலத்தில் உடலின் ப்ராண சக்தி அதிகமாக குறைவு ஏற்படுவதால், அத்தருணத்தில் ருத்திராக்ஷம் செயல் இழக்க வாய்ப்பு உண்டு.
ருத்திரஷத்தை வேறு எந்த பொருளுடனும் இணைக்காமல் தனியே அணிவதே சிறந்தது.
ஸ்படிகம், முத்து, பவளம் என எதையும் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.
திரு நாமக்கல் சிபி,
உங்களுக்கு இத்தகைய எண்ணம் இருப்பதை கண்டு மகிழ்ச்சி.
குருவிடம் மந்திரம் கேட்க வேண்டும் என எண்ணுபவர்களை விட அவர் வாயிலிருந்து லிங்கம், மோதிரம் வேண்டும் என கேட்பவர்கள் தான் அதிகம். :))
உங்கள் உயர்ந்த எண்ணத்திற்கு கண்டிப்பக குரு உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்.
திரு Expatguru,
ருத்திராட்சத்தை எவ்வாறு தூய்மைப்படுத்துவது என பதிவில் சொல்லி இருக்கிறேன்.
அதை போல செய்யுங்கள். ருத்திரக்ஷம் மீண்டும் புத்துயிர் பெரும்.
சோப், powder, கிரீம் போன்றவை ஒருமுறை பட்டாலே ருத்திரக்ஷம் தனது நிலையில் கலக்கமடையும்.
இனி மேல் இது போல பயன்படுத்தாதீர்கள்.
தாம்பத்திய வாழ்க்கையில் இருந்தால் இரவில் அணியாமல் இருப்பது நல்லது.
மந்திரங்கள் குருமுகமாக வரவேண்டும். நாமே மந்திரத்தை ஜபம் பண்ண கூடாது.
மிக்க நன்றி ஸ்வாமிஜி. இது போன்ற விஷயங்கள் உங்களைப் போன்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொண்டால் நம்பிக்கை அதிகம் ஏற்படுகின்றது.
உங்களின் பதிவு என் பல சந்தேகங்களை நீக்கிற்று.
நன்றி.
அது இக்கலியுகத்தில் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி பணம் பண்ணும் எத்தர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால் வந்த விளைவு!
எல்லோரும் அப்படியேவா இருக்கிறார்கள்! ஒரு சில நிஜமான ஆன்மீக வழிகாட்டிகளும்(சாமியார்கள் என்று பொதுவாகச் சொல்லத் தோன்றவில்லை ஏனெனில் அனைவரும் ஒன்று போலவே நோக்கப் படுவதால்) இருக்கத்தான் செய்கிறார்கள் இருக்கும் இடம் தெரியாதவாறு!
அன்புள்ள குருஜி! அவர்களுக்கும்,
நண்பர்கள் அனைவருக்கும்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடன்,
செல்லி
how to write in tamil ?
Dear Swamiji,
Namaskarams.
I am happy to read your article and found it informative.
I have few questions. Pl. clear my doubts:
1. Living in this modern world, I have started getting this fear of losing our traditions and sampardhayams. People are more attracted towards the westernized cultures and losing their original values. Does someday we will lose our values ? How to preserve it ?
2.I was grown in a culture where ladies takes rest during the "3 days" in a month and mostly avoid cooking. I am trying to find the answer for this question.There should be a valid reason for keeping this tradition.Now in this generation what is the right way to live during these "3 days".
Thanks for guiding us.
With respects,
Akila
அருமையான பதிவு சுவாமி
Post a Comment