Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, December 6, 2008

உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா?

பெயர் வைப்பது நமது கலாசாரத்தில் ஓர் கவிதைத்தனமான ஓர் விஷயம். எத்தனையோ காரணம் காரியம் நிறைந்ததாக இருக்கிறது. தம்பதிகள் குழந்தை பிறக்கும் முன்னரே தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு பெயர் வைத்து மகிழ்வதை பார்க்க முடியும். குலதெய்வத்தின் பெயர், மூதாதையர்களின் பெயர், தேச தலைவர்களின் பெயர் என பல வழிகளில் பெயர்வைக்க முற்படுவார்கள்.


மேற்கத்திய நாடுகளில் பெயர்வைப்பது என்பது இந்திய கலாச்சாரம் போன்றது இல்லை. எனது மேல்நாட்டு மாணவர் ஒருவருக்கு Schicklgruber என்ற விசித்திரமான பெயர். ஹிட்லரின் பின்பாதி பெயரும் இவரின் பெயரும் ஒன்று. தமிழில் அதை மொழிபெயர்த்தால் வெளியே சொல்ல முடியாது...! பாரத தேசத்தில் இது போல தேடினாலும் கிடைக்காது.


வடகிழக்கு மாநிலங்களில் சிலருக்கு விசித்திரமான பெயர் உண்டு. பூனை, கிளி என்றெல்லாம் பொருள்பட
பெயர்வைப்பார்கள். நாகத்தை தெய்வமாக வழிபடுவதால் நாகப்பன், நாகராஜ் என பெயர்வைப்பவர்கள் பார்த்திருக்கிறோம். பெயர்களை பொருத்தவரை தெய்வத்தின் பெயர்கள், குருவின் பெயர், புண்ணிய தீத்தத்தின் பெயர்கள், புராண கதாபத்திரங்களின் பெயர்கள் மற்றும் முன்னோர்களின் பெயர் என பெயர்கள் வைக்கும் தன்மையை வகைப்படுத்திட முடியும்.


முதல் குழந்தைக்கு ஆண் என்றால் பெயர்வைக்கும் பொழுது தந்தைவழி தாத்தாவின் பெயரையும், இரண்டாவது ஆண் குழந்தை என்றால் தாய்வழி தாத்தாவின்
பெயரையும் வைப்பார்கள். பெண்குழந்தைக்கும் இதே போல பாட்டி பெயர் வைப்பார்கள். குழந்தையின் பெயரையும் அதன் பெற்றோர்கள் பெயரையும் ஞாபகம் வைத்தால் போதும் பரம்பரையில் அனைவரையும் சொல்ல முடியும். முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் கொடுக்கும் பொழுதும், உயில் சம்பந்தமான சட்ட சிக்கல் வரும் பொழுதும் இவ்வாறு பெயர் வைக்கும் நோக்கத்தின் முக்கியத்துவம் புரியும். தற்சமயம் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் நிலையிலும், ஓர் குழந்தை போதும் என்ற சூழல் வந்த பிறகும் இவ்வழக்கம் மறைந்து வருகிறது. நாட்டுகோட்டை நகரத்தார் மத்தியில் இன்றளவும் பெயர் வைப்பதற்கென்றே ஓர் முறை இருந்து வருகிறது.

தற்பொழுது நியூமராலஜி நேமாலஜி என்ற ஆலஜிகள் அலர்ஜியாய் பரவிவருகிறது. தீபா என்ற பெயர் வைக்க கூடாதாம், அதில் தீ என்ற சொல் வருகிறதாம்
அப்பெயர் கொண்டவர்களின் வாழ்க்கை கருகிவிடும் என நேமாலஜி கூறியவர்கள் பேச்சை கேட்டு பெயர் மாற்றியவர்கள் நான் அறிவேன். இதைவிட ஓர் வேடிக்கை ஒன்று உண்டு. பெயரின் முடிவில் “நிதி” என இருக்கவேண்டுமாம். அப்பொழுது வாழ்க்கையின் பிற்பகுதியில் செல்வ செழிப்போடு இருக்கலாமாம். இப்படிபட்டவர்களுக்கு பிறந்த குழந்தைகள் என்னவெல்லாம் அனுபவிக்க போகிறார்களோ என நினைக்கும் பொழுது வருத்தமாக இருந்தது.


இது இவ்வாறு இருக்க....ஒரு புறம் திருப்பதி,பழனி என்று மட்டும் தான் பெயர்வைக்க முடியுமா மாஸ்கோ என்றும் , ஜெனீவா என்றும் பெயர் வைத்து இரண்டு
ரூபாய் வாங்கிய பகுத்தறிவாளர்கள் கொண்டது நம் தமிழ் நாடு.


மத்திய வர்க்க மக்கள் தங்கள் குழந்தைக்கு விசித்திரமான மற்றும் தனித்துவமான பெயர் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். உதாரணமாக தணிஷ்கா,
த்ரிஷாந்த் என பெயர்வைக்கிறார்கள். இந்த நவீன அம்மாக்கள் தங்கள் குழந்தையின் பெயரை பிறர் கூற கலவரப்படும் பொழுது அவர்களுக்கு டியூஷன் எடுப்பதை பெருமையாக கருதுகிறார்கள். :)

சிலர் புராணங்களை பற்றி தெரியாமலே பெயர் வைப்பதுண்டு. இதற்கு சரியான உதாரணம் ரவிகுமார் என்ற பெயர். ரவி குமார் என்றால் சூரியனின் குமாரர்கள். சூரியனுக்கு சனி மற்றும் யமன் என்று மட்டுமே இரு மகன்கள் உண்டு. கர்ணன் இதில் இடம் பெறமாட்டார். தங்கள் குழந்தையை சனியாகவோ யமனாகவோ கூப்பிடுபவர்களை என்ன சொல்லுவது?

குழந்தை
பிறந்ததும் கம்யூட்டரிடம் தகவல் கொடுத்தால் அந்த இயந்திரம் ஆயிரம் பெயர்களை எடுத்து கொடுக்கும். அதில் நியூமராலஜி, நட்சத்திர பெயர்
எழுத்துக்கள் என அனைத்தும் சரிபார்த்து கொடுப்பதால் அப்பெயர் பட்டியல் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். தங்கள் குழ்ந்தைக்களுக்கு பெயர்வையுங்கள் என சில பெற்றோர்கள் வரும் பொழுது நான் எந்த யோசனையும் இல்லாமல் மறுத்துவிடுவேன்.


இயந்திரத்தையோ அல்லது வேறு மனிதர்களையோ நம்பும் இவர்கள் தங்கள் குழந்தைக்காக எளிமையான மற்றும் சிறப்பான பெயர்கள் வைக்க முடியாதா?
பெற்றோர்கள் மற்றும் அக்குடும்பத்தின் பெரியோர்கள் தவிர வேறு யாருக்கும் குழந்தைக்கு பெயர் வைக்க யோக்கியதை கிடையாது. (அரசியல் தலைவர் உற்பட)


பெயரில் ம, மா என்ற எழுத்தில் துவங்க வேண்டுமா? கூட்டு தொகை இந்த எண் இருக்கலாமா என்பதை காட்டிலும்....அன்பு , பாசம் மற்றும் ஆழ்ந்த
பெற்றோரின் நேசம் மட்டுமே இருக்க வேண்டும். பெயரால் “மட்டும்” உங்கள் குழந்தையின் எதிர்காலம் மாறிவிடாது. அந்த குழந்தை உருவான மற்றும் பிறந்த நேரத்தில் இருக்கும் கிரகங்கள் மட்டுமே அக்குழந்தையின் வாழ்க்கையை முடிவு செய்யும்.

ஜோதிட ரீதியாக பெயர் வைக்கலாமா? ஜென்ம நட்சத்திரத்தில் பெயர் வைத்தால் நல்லது என்கிறார்களே என கேட்பவர்கள் உண்டு. முன்பு நமது நாட்டில் அனைத்து பிரிவினரும் ஜாதகம் கணித்து வைக்கமாட்டார்கள். பெற்றோர்கள் இவ்வாறு செய்து விட்டபின்பு அக்குழ்ந்தை வளர்ந்து பெரியவன் ஆனதும் தனக்கு எதிர்காலம் பார்க்க முயற்சி செய்யும். பிறந்த நேர தகவல்களை குறிக்காததால் ஜாதகம் கணிக்க முடியாமல் ஜோதிடரும் திணருவார். இதற்கான தீர்வுதான் நட்சத்திர ஆரம்ப எழுத்தில் பெயர் வைக்கிறார்கள். பிற்காலத்தில் வயதும் , பிறந்த மாதத்தையும் சொன்னால் போதும் பெயர் மூலம் நட்சத்திரத்தை கண்டறிந்து ஜாதகத்தை கணிக்கலாம்.

கோவிலுக்கு சென்றதும் குருக்கள் உங்கள் பெயரை கேட்டதும், அர்ச்சனை தட்டுடன் ராசி நட்சத்திரம்
சொல்லியவாறே கர்ப்பகிரகத்தினுள் செல்ல முடியும். இதை தவிர நட்சத்திர பெயருக்கு வேறு பயன் இல்லை.


அப்பிறம் எப்படிதான் ஸ்வாமி பெயர் வைப்பது என நீங்கள் கேட்பது புரிகிறது.
என்னிடத்தில் பெயர் தேர்ந்தெடுக்க கேட்பவர்களுக்கு நான் சில யோசனைகள் சொல்வதுண்டு.
அந்த கருத்து உங்களுக்காக இங்கே...

ஆண் குழந்தையாக இருந்தால் விஷ்ணு சகஸ்ர நாமத்திலிருந்தும் பெண் குழந்தையாக இருந்தால் லலிதா சகஸ்ர நாமத்திலிருந்தும் பெயர் எடுத்து வையுங்கள்.
சகஸ்ர நாமம் என்றால் ஆயிரம் பெயர்கள். இறைநிலையின் ஆயிரம் நாமத்திலிருந்து உங்களுக்கு பிடித்த பெயரை தேர்ந்தெடுத்து வைக்கலாம்.

இறைவன் பெயரே சக்தி வாய்ததாக இருக்கும் பொழுது
அப்பெயருக்கு நியூமராலஜி நேமாலஜி தேவையில்லை. ஒவ்வொருமுறையும் குழந்தையை கூப்பிடும் பொழுது சகஸ்ரநமத்தின் ஓர் பகுதியை உச்சரித்த பலன் கிடைக்கும்.

சகஸ்ரநாமத்திலிருந்து பெயர்வைத்தால் குழந்தையில் பெயர் “கர்நாடகமாக” இருக்குமே என எண்ண வேண்டாம். தலாங்கி, ஸர்வமிதா போன்ற நவீன
பெயர்களும் அதில் உண்டு. வேறு மதத்தவர்களுக்கு இது எவ்வாறு பொருந்தும் என கேட்கலாம்.

அல்லாவின் ஆயிரம் நாமங்கள் என்ற நூல் முகமதியர்களுக்கும், பைபிள் பெயர்கள்
மூலமாகவும் அவர்கள் இதே போன்று செய்யலாம்.பெயர்வைக்க மத ரீதயாக நான் பரிந்துறைப்பதாக தோன்றும், உண்மையில் மத ரீதியாக என்பதை காட்டிலும் கலாச்சார ரீதியாக என்பதே உண்மை. மேலும் அனைத்து மதத்திலும் கடவுளின் நாமங்களின் வரிசைகள் வேறுபட்டாலும், ஆயிரம் நாமங்களின் பொருள் ஒன்றுதான்.

குழந்தைகளுக்கு நாம் பெயர் வைக்க இவ்வளவு பிரயாசை கொண்டாலும், அவர்கள் வளர்ந்ததும் அவர்களின் செயலால் சமூகம் ஓர் பெயர்வைக்கும். அப்பெயரே எப்பொழுதும் நிலைத்து நிற்கும். உதாரணம் காந்தி, எம் ஜீ ஆர். குழந்தைகள் சான்றோர் என்ற பெயர் எடுக்கவேண்டுமானால் பெயரை காட்டிலும் குழந்தையின் செயலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவ்வாறு பெயரை பெற குழந்தையை மேம்படுத்துவோம். நல்வழியைக்காட்டுவோம்.


17 கருத்துக்கள்:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்க ஏதோ காமடி பண்ணப் போறீங்களோண்ணு நினைச்சுத்தான் படிச்சேன். ஆனா அற்புதமான கருத்துக்கள். ஒரு ஜோதிட வலைப் பதிவில் ........

இது போன்றெல்லாம்....
சற்றும் எதிர்பார்க்கவில்லை..

பாராட்ட வார்த்தைகளே இல்லை உங்கள் சிந்தனை மிகவும் வரவேற்க தக்கது.

Unknown said...

ஸ்வாமிஜி,

நல்லா இருக்கு. என் வலையில்“சென்னை அபார்ட்மெண்ட் சமவெளி நாகரிகம்”என்ற தலைப்பில் குழந்தைகளுக்குப்“பெயர்”வைக்கும்விஷயம் பற்றிஎழுதியிருக்கிறேன்.படித்து விட்டு கண்டிப்பாக(?) கருத்துச் சொல்லவும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு sureஷ் :) ,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எப்பொழுதும் எதிர்பாராமல் நடப்பதை சொல்லுவது தான் ஜோதிடம். அதனால் தான் இது போன்ற பதிவுகள்.

உங்கள் பாரட்டால் “பெயர்” பெற்றேன். நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரவிசங்கர்,

உங்கள் பதிவு நன்றாக இருந்தது.
இந்த பதிவை எழுத தூண்டியதற்கு உங்கள் பதிவும் ஓர் காரணம்.

நன்றி.

ATOMYOGI said...

வணக்கம்! பதிவு மிக நன்றாக இருந்தது.

***பிறந்த நேர தகவல்களை குறிக்காததால் ஜாதகம் கணிக்க முடியாமல் ஜோதிடரும் திணருவார். இதற்கான தீர்வுதான் நட்சத்திர ஆரம்ப எழுத்தில் பெயர் வைக்கிறார்கள். பிற்காலத்தில் வயதும் , பிறந்த மாதத்தையும் சொன்னால் போதும் பெயர் மூலம் நட்சத்திரத்தை கண்டறிந்து ஜாதகத்தை கணிக்கலாம்.***

எனக்கு இது புதிய தகவல்.. நம்து முன்னோர் எவ்வளவு அற்புதமாய் யோசித்து இருக்கின்றன்ர்!!!!!!!!!!!!!!!!

***சூரியனுக்கு சனி மற்றும் யமன் என்று மட்டுமே இரு மகன்கள் உண்டு. கர்ணன் இதில் இடம் பெறமாட்டார்.***

ஏன் கர்ணன் இடம் பெற மாட்டார்?

தங்களிடம் இருந்து இது போன்ற சிறந்த பதிவுகளை தினமும் எதிர்பார்கிறோம். நன்றி......

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சூரிய வம்சம்.......?

Vinitha said...

உங்கள் கருத்துக்கள் அற்புதம்!

நன்றி!

ஹிந்துக்களுக்கு மட்டும் தான் இது உதவும், மாற்ற ரிலிஜன் ஆட்கள் என்ன செய்ய வேண்டும்?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அணுயோகி,

நமது முன்னோர்களின் யோசனை அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தால் புல்லரிப்பை சொறிந்து கொள்ள நேரம் இருக்காது. விளையாட்டிற்கு சொல்லவில்லை. உண்மைதான். :)

கர்ணன் குந்தியின் மகனே தவிர சூரியனின் மகனல்ல. சூரியனின் அனுமதியோடு பிறந்தவன் எமனும், சனியும் தான்.

நவீன விஞ்ஞானத்தில் ஆணின் உயிர் அனு மட்டும் எடுத்து ஓர் தம்பதிகள் குழந்தை பெறுகிறார்கள். அந்த உயிர் அணு கொடுத்த ஆண் எப்படி அக்குழந்தைக்கு தந்தை ஆக முடியாதோ அது போன்றது தான் கர்ணனின் பிறப்பு.

அவ்வாறு குழந்தை பிறந்தால் என்ன ஆகும் என்பதன் சாட்சியே கர்ணனின் வாழ்க்கை முறை. எளிமையாக கேட்டுவிட்டீர்கள் :))இதை விளக்க ஓர் பதிவே போடலாம்.

உங்கள் வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு sureஷ்,

சூரிய வம்சம் ரவி குமார் அல்ல. விக்ரமன் :)


ஓர் கலாட்டவிற்காக சொன்னேன்.

சூரிய வம்சம் என்பது காளிதாசர் எளிதிய ரகுவம்சம் எனும் காவியம் மூலம் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

சூரியனுக்கு மாயா என ஓர் மனைவி. அவள் மூலம் பிறந்தவர் எமன். சாயா என மற்றோரு மனைவி. அவர் மூலம் பிறந்தவர் சனி.

அது ஓர் சுவாரசியமான கதை போங்கள்...!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வினிதா,

கட்டுரையில் கீழ்கண்ட வரிகள் உள்ளன...
//வேறு மதத்தவர்களுக்கு இது எவ்வாறு பொருந்தும் என கேட்கலாம்.

அல்லாவின் ஆயிரம் நாமங்கள் என்ற நூல் முகமதியர்களுக்கும், பைபிள் பெயர்கள் மூலமாகவும் அவர்கள் இதே போன்று செய்யலாம்.//

கட்டுரையை மேலோட்டமாக தான் படித்தீர்களா?

உங்கள் வருகைக்கு நன்றி

Vinitha said...

மன்னிக்கவும் சுவாமி. ஜோதிட ரீதியாக என்று நான் கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால், மற்ற மதத்தில், அவர்கள் ஜோதிடம் (இந்து / இந்தியன் முறை) நம்பமாட்டார்கள் அல்லவா? அவர்கள் பெயர் வைப்பது...வெஸ்டர்ன், நுமேரோலாஜி, தொழில் முறை, ஜார்ஜ் புஷ் குடும்பம் போல அரச வழி ஜூனியர் சீனியர் என்று...

உங்கள் பதில் தெளிவு கொடுக்கிறது. நன்றி.

தியாகராஜன் said...

///பெண் குழந்தையாக இருந்தால் லலிதா சகஸ்ர நாமத்திலிருந்து் பெயர் எடுத்து வையுங்கள்.///

அனைவரும் பின்பற்றலாம்.
உண்மையிலேயே நல்ல கருத்து.
என் குழந்தைக்கு,சுப்பையா ஆசானின் ஆசியுடன் பத்மாசினி என்று பெயர் சூட்டியுள்ளேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வினிதா அவர்களுக்கு,

ஜோதிடம் இந்துக்களுடையது, இந்தியர்களுடயது என கொள்கை தவறானது.

புவியீர்ப்பு விசையை கண்டறிந்தவர் நீயூட்டன் ஓர் கிருஸ்துவர் என்பதற்காக புவியீர்ப்பு விசை கிருஸ்துவர்களுடையது என சொல்ல முடியுமா?

சூரிய சந்திரர்கள் அனைவருக்கும் பொதுவானவர்களே. கிரகங்கள் சரவணனுக்கு என்ன செய்யுமோ அதை சல்மானுக்கும் செய்யும்.

இந்தியர்களும் ஜோதிட அடிப்படையில் பெயர்வைக்க நான் சொல்லவில்லை. கலாச்சார ரீதியாகவும் கடவுளின் பெயரையும் வைக்க சொன்னேன்.

கடவுளை வணங்க கூட நேரமில்லாத ஃபாஸ்ட் புட் காலத்தில் குழந்தைகளின் பெயராலாவது நாமத்தை ஜெபிக்கலாம் அல்லவா?

இந்திய ராஜபரம்பரையில் நட்சத்திரத்தையே பெயராக வைப்பார்கள். திருவாங்கூர் சமஸ்தான ராஜாக்களுக்கு அவர்களின் பிறந்த நட்சத்திரமே பெயராகி விடும். உதாரணம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்ததால் ”ஸ்வாதி திருநாள்” என்ற மஹாராஜ பெயர்பெற்றார். அதற்கு வலுவான காரணம் உண்டு.

சினிமா நடிகையில் கூட நட்சத்திர பெயர் வைக்கபட்டவர்கள் சிறப்பான பெயர் பெற்றது உங்களுக்கு தெரியும் தானே?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தியாகராஜன்.

உங்கள் வருகைக்கு நன்றி. சிறப்பான பெயர் தேர்ந்தெடுத்தீர்கள்.

அருமையான பொருள் பொதிந்தது.

Rajesh Keyaar said...

உங்கள் கருத்துக்கள் அற்புதம்!

Rajesh Keyaar said...

என் குழந்தைக்கு aditya என்று பெயர் சூட்டியுள்ளேன். (DOB-27.07.2008, Time-6.15am)
சிறப்பான பெயரா சுவாமி.

பட்டாம்பூச்சி said...

நல்ல யோசனை சுவாமி.
நன்றி :)