- போதை ஒரு சுய வதை
பழக்கங்கள் பலவிதம். இதில் தன்னை வருத்தி அதனால் அடுத்தவர்களும் துன்பப்பட செய்யும் பழக்கத்தை தவறான பழக்கம் என கூறலாம். உலகில் இது போன்ற பழக்கங்கள் அதிக அளவில் பெருகிவருகிறது. இது போன்ற போதைப் பழக்கத்தை மூலதனமாக கொண்டு வியாபாரம் நடத்தும் பலரைக் காண்கிறோம். மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய அரசின் கஜானா கூட கசமான அளவு மதுவின் மூலமே றைகிறது. புகைப்பழக்கத்தால் ஒரு நிமிடத்திற்கு 2 நபர்கள் உலகில் இறக்கிறார்கள். இது உலக புற்றுநோய் அமைப்பின் செய்தி. இந்த பக்கத்தை படித்து முடித்ததும் 4 நபர்கள் இறந்திருப்பார்கள் என்பது வருத்தப்படவேண்டிய விஷயம்.
3 ஆம் பாவம் பழக்கவழக்கத்தையும், சமூக கோட்பாடுகளை எதிர்த்து தைரியமாக செயல்படுவதைக் குறிக்கும். 5 ஆம் பாவம் போகத்தை குறிக்கும். 12ஆம் பாவம் தன்னிலை மறப்பதைக் குறிக்கும்.ஆக 3,5,12 ஆம் பாவங்கள் போதையைக் குறிக்கும் பாவங்கள் ஆகும். 3ஆம் பாவத்தின் உபநட்சத்திராதிபதி நின்ற நட்சத்திரம் 3,5,12 ஐ குறிகாட்டினால் போதைப் பழக்கத்திற்கு அடிமை எனலாம். அரசு அங்கீகாரம் செய்த போதை பொருள்களுக்கு சனியும் , அங்கீகாரம் பெறாத பொருள்களுக்கு ராகுவும் தொடர்பு கொள்வார்கள். இதில் நெப்டியூனின் தொடர்பு அதிகப்படியாக போதைக்கு அடிமையானவர்களை காட்டும்.
3,5,12 ஆம் பாவத்துடன் தொடர்பு கொள்ளும் 3ஆம் பாவமானது 1,6 பாவத்துடன் தொடர்புகொண்டால் இந்த பழக்கத்தால் வியாதி ஏற்படும். மாரகபாதக ஸ்தானத்துடன் தொடர்புகொண்டால் இறப்பும் ஏற்படும்.
மேலும் ஜாதக ரீதியாக ஒருவர் எப்படிப்பட்ட போதை பொருளை பயன்படுத்துவார் என தெரிந்துகொள்ள முடியும். இதை விவரித்தால் தவறான பாதையில் செல்பவர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதால் இதை தவிர்க்கிறேன்.
அதிக போதை உற்கொள்வதால் சித்த பிரம்மை ஏற்படும் என்பதை 3 ஆம் பாவம் 8,12 உடன் தொடர்பு காட்டும். போதைப் பழக்கத்திருந்து விடுபடுவதை 1,5,11 ஆம் பாவத்துடன் 3 ஆம் வீடு தொடர்பு கொண்டு மேலும் தசா புக்தி காலம் ஜாதகரை போதை என்ற அரக்கனிடத்திலிருந்து விடுவிக்கும்.
குழந்தை பிறந்ததும் சிலர் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட்டத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். இதற்கு காரணம் 5,11 ஆம் வீடுகள் குழந்தை பிறப்பதையும் காட்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் இப்படி சார்புடையதாக இருக்கும்.
மேலும் யோகா தியானம் முறையில் இதற்கு ஓர் தீர்வு உண்டு. நாம் எதிர்காலத்தில் அமைக்க இருக்கும் நட்சத்திர வனம் இதற்கு ஓர் சக்தி வாய்ந்த மற்றும் எளிய தீர்வாகும்.
போதை என்பது மதுவருந்துவது, புகைபிடிப்பது மட்டும்மல்ல. ஆடை ஆபரணத்தில் மோகம், காம இச்சை கொள்வது மற்றும் எதிர்காலத்தை தெரிந்துகொள்ள பல ஜோதிடரிடம் ஜாதகத்தை எடுத்துகொண்டு அலைவது என இவை அனைத்தும் போதைதான்.
போதை பழக்கம் இல்லாத ஒருவன் தெளிந்த நீரோடை போன்றவன்,நீரோடையின் அடியில் உள்ள பளிங்கு கல்லை அனைவரும் காணலாம்.அதைபோல அவன் மனதில் இருக்கும் கடவுள் தன்மையை அனைவரும் பார்க்க முடியும். போதை பழக்கத்தில் உள்ளவர்கள் கலங்கிய குட்டைக்கு சமம். மனம் தடுமாறும் ஒருவன் கடவுளின் இருப்பிடத்திலிருந்து வெகுதொலைவில் இருக்கிறான் என்பது உபநிஷத்தின் குரலாகும்.
8 கருத்துக்கள்:
ஸ்வாமி முதல் பத்தியும் கடைசி இரண்டு பத்தியும் தான் புரிஞ்சுது..
ஐயா!
#அது என்ன பாவத்தின் உபநட்சத்திராதிபதி?
#ஒவ்வொரு பாவத்தில் நிற்கும் கிரகத்தின் நட்சத்திராதிபதி, உபநட்சத்திராதிபதி யை மென்பொருள் மூலம் காண்முடிகிறது. ஒரு பாவத்தின் நட்சத்திராதிபதி, உபநட்சத்திராதிபதி யை எப்படி காண்பது?)
*** 3ஆம் பாவத்தின் உபநட்சத்திராதிபதி நின்ற நட்சத்திரம் 3,5,12 ஐ குறிகாட்டினால் போதைப் பழக்கத்திற்கு அடிமை எனலாம்.***
#குறி காட்டுவது என்றால் என்ன?
மனம் தடுமாறும் ஒருவன் கடவுளின் இருப்பிடத்திலிருந்து வெகுதொலைவில் இருக்கிறான்
நச் என்று இருக்கிறது........
Swamiji,
Would you please consider doing a series on basic astrology. This help tremedously help people like us who are interested to learn astrology.
I appreciate everything you are doing in this blog to educate us.
திரு கிரி அவர்களுக்கு,
எனது ஓர் கட்டுரையை படித்து விட்டு இந்த கட்டுரையை படித்ததின் விளைவு இது :)
அனுயோகி மற்றும் ம இவர்களின் எண்ணமும் அதே என நினைக்கிறேன்.
அடிப்படை ஜோதிடம் இணையத்தில் கற்று கொடுப்பது சிறிது சிரமமே.
கூடிய சீக்கிரம் இதை பற்றி ஆய்ந்து ஒரு முடிவு சொல்லிகிறேன்.
அது வரை டெக்னிக்கலான கருத்து பதிவை தவிர்கிறேன்.
//மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய அரசின் கஜானா கூட கசமான அளவு மதுவின் மூலமே றைகிறது.//
உண்மைதான். அது அரசின் கையாலாகதனம்தான். ஆனாலும் 'பொது இடத்தில் புகைக்கத் தடை' கொண்டு வந்ததை பாராட்டியாக வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.
http://tamilamudam.blogspot.com/2008/10/blog-post_20.html
நேரம் கிடைத்தால் பாருங்கள்.
கடைசி பத்தி அருமை.
ஸ்வாமி,
//நாம் எதிர்காலத்தில் அமைக்க இருக்கும் நட்சத்திர வனம் இதற்கு ஓர் சக்தி வாய்ந்த மற்றும் எளிய தீர்வாகும்.//
இது என்ன? இது நீங்கள் அமைக்க இருக்கும் ஓர் இடமா? எங்கே என்று தெரிந்து கொள்ளலாமா?. இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன்.
நல்ல கட்டுரை ஸ்வாமிஜி. இதுதான் விழிப்புணர்வு. அப்படியே இன்னும் கொஞ்சம் விளக்கமாக ஜாதக அமைப்புகளை சொல்லி, எப்போது விடுபட முடியும் என்றும் சொன்னால் நன்றாக இருக்கும்.
திரு ராமலஷ்மி,
உங்கள் கருத்துக்கும், இழைக்கும் நன்றி.
உங்கள் கவிதை அருமை.
திரு அமரபாரதி,
கூடிய விரைவில் நட்சத்திர வனம் பற்றிய கட்டுரை பதிவேற்றம் செய்வேன்.
எங்கள் இணையத்தில் அதை பற்றிய சிறு செய்தி உண்டு.
Post a Comment