Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, October 22, 2008

சந்திராயன் - என்ன நடந்தது?

எனது முந்தைய பதிவில் சந்திராயன் செயற்கைகோள் பற்றி ஜோதிட ஆய்வு செய்திருந்தேன்.

அதன் முடிவில் குறிப்பிட்டதை போல 6மணிக்கு மேல் 8 மணிக்குள் செயற்கை கோள் ஏவப்பட்டது. ஜோதிட ரீதியான ஆய்வு சரியாக வந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கால நிலை காரணமாக சிறிது தாமதம் ஆனாலும் செயல் வெற்றியடைந்தது பாராட்டவேண்டிய விஷயம்.

தினமலர் செய்தி : தினமலர்.காம்

சென்னை: உலகே வியக்கும் வகையில் சந்திராயன்-1 செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளது. புதன் கிழமை காலை சரியாக 06- 20 மணிக்கு சந்திராயன்- 1 செயற்கை கோளை ஏந்திய பிஎஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணை நோக்கி பாய்ந்தது. இது குறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், நிலவை நோக்கி் குறிப்பிடத்தக்க பயணத்தைத் துவக்கி இருக்கிறோம்; இன்னும் 15 நாளில் அதன் பயணம் இறுதி கட்டத்தை எட்டும்.

நிலவிற்கு ஆளில்லா செயற்கைக்கோள் அனுப்பும் இந்தியாவின் முதல் முயற்சியான சந்திரயான்-1 திட்டத்தின் "கவுன்ட்-டவுண்' ஸ்ரீஹரிகோட்டாவில் 20ம் தேதி காலை துவங்கியது. 49 மணி நேர "கவுன்ட்-டவுண்' பிறகு திட்டமிட்டபடி இன்று காலை 6.20 மணிக்கு சந்திராயன் - 1 செயற்கோளை தாங்கியவாறு பி.எஸ்.எல்.வி.சி-11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.


மேலும் தகவல்கள் மற்றும் படங்களுக்கு இங்கே சுட்டவும்


நமது வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும் விஞ்ஞானிகளின் 5 வருட கடின உழைப்பை மறக்க செய்யும் என நம்புவோமாக.

8 கருத்துக்கள்:

VIKNESHWARAN ADAKKALAM said...

6-8 என குறிப்பிட்ட நீங்கள் ஏன் 6.20என முன்னமே குறிப்பிடவில்லை? விளக்கம் கொடுப்பீர்களா ஐயா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு விக்னேஷ்வரன் அவர்களுக்கு,

தற்சமயம் நமது கையில் இருக்கும் ஜோதிடத்தை வைத்து பார்த்தால் 2மணி நேர வித்தியாசத்தில் சொல்லுவதே பெரிய விஷயம்.

அதற்காக நான் சொன்னது சரி என சொல்ல மாட்டேன். இனி வரும் காலத்தில் வினாடி முதல் கொண்டு சொல்கிறேன்.

அவ்வாறு சொல்ல என்னிடம் ஜோதிடம் எனும் கருவி உண்டு. அதற்காக நான் கர்வி அல்ல :)

வீ. எம் said...
This comment has been removed by the author.
வீ. எம் said...

ஸ்வாமி,

52 மனி நேர கவுன் டவுன் படி, காலை 6:20 க்கு கிளம்பும் என்று முன்னமே தெரிந்தது தானே. நீங்கள் எப்படி 5.30 என்று எடுத்துக்கொண்டு
, பின்னர் 6 - 8 என்று சொன்னீர்கள்?

19ம் தேதியிட்ட பத்திரிக்கை செய்திகளில் பார்த்தீர்கள் என்றால், சந்திராயம் 1 , எந்தவித தடங்கலும் இல்லாவிடில், கவுன்டவுன் முடித்து 6.20 மனிக்கு கிளம்பும் என்று தெளிவாக திரு அன்னாதுரை , , project director தெரிவித்துள்ளார்..

கீழே பார்க்க - இந்துவில் வந்த செய்தி.



பின்பு நீங்கள் எப்படி உங்கள் பதிவில் 5.30 என்று எடுத்துக்கொண்டு, தடங்கல் ஏற்படும் பின்னர் 6 - 8 மனிக்கும் செல்லும் என்று சொன்னீர்கள்?

திரு அன்னாதுரை சொன்னது போல 6.20 க்கு திட்டமிட்டப்படி சென்றுள்ளது..

சரியான நேரத்திற்கு சென்றுள்ளதால், ஏதும் சிறு பிரச்சனை இருந்ததாக கூட தெரியவில்லை

5.30 , 6 - 8, 6.20 விளக்க முடியுமா?

பிரச்சனை வரும் என்று சொன்னீர்கள் - என்ன பிரச்சனை வந்தது என்று சொல்லமுடியுமா?

மேலும் தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள தினமலர் செய்தியில் கூட , சந்திராயம் பிரச்சனை ஏற்பட்டு, சற்று தாமதமாக போனது என்று செய்தி இருப்பது தெரியவில்லை..

HINDU NEWS dated 19th October

The fully assembled vehicle was moved to the umbilical tower. There will be a rehearsal of the launch sequence on Sunday,” said M. Annadurai, Project Director, Chandrayaan-1, from the Satish Dhawan Space Centre on Saturday. If the weather turns out to be fine, the PSLV-C11 will lift off from the second launch pad on October 22 at 6.20 a.m. and put Chandrayaan-1 in orbit.

Santhosh said...

//கால நிலை காரணமாக சிறிது தாமதம் ஆனாலும் செயல் வெற்றியடைந்தது பாராட்டவேண்டிய விஷயம்.//

என்னாது ராக்கெட்டு லேட்டா போச்சா? இந்த விஷயம் மாதவன் நாயருக்கும், அண்ணாதுரைக்கும் தெரியுமா? அவங்களை விடுங்க சரியான நேரத்துல பறந்த விண்கலத்துக்கு இந்த விஷயம் தெரியுமா?

//தற்சமயம் நமது கையில் இருக்கும் ஜோதிடத்தை வைத்து பார்த்தால் 2மணி நேர வித்தியாசத்தில் சொல்லுவதே பெரிய விஷயம். //
அப்ப இப்ப சொல்லுற ஜோசியம் சரியில்லை அப்படி தானே?

அதெல்லாம் விடுங்க.. 2009இல் யாரு இந்தியாவின் பிரதமர்? 2010க்கு முன்னாடி இதற்கான நேரம் வந்து இதற்கு பதில் சொல்லுவிங்கன்னு நினைக்கிறேன்..

Santhosh said...

////ஸ்வாமி ஓம்கார்

* Age: 108
* Location: ஈஸ்வரனின் மனதில் : புருவ மத்தியில்
//
ஸ்யப்பா profileஜ பாக்கும் பொழுது கண்ணு கை கால் மூக்கெல்லாம் கட்டுதே.. முடியலை //
ஸ்வாமி மெய்யாலுமே உங்களுக்கு 108 வயசா? நீங்க அந்த பறவைகள் விலங்குகளிடம் பேசுவாரே ஒரு சாமியார் அவருக்கு மூத்தவரா இல்ல இளையவரா?

தருமி said...

//ஆனால் சில காரணங்களால் காலதாமதம் ஆகும். சின்ன தடங்கலுக்கு பிறகு ..//

//திட்டமிட்டபடி இன்று காலை 6.20 மணிக்கு சந்திராயன் - 1 செயற்கோளை தாங்கியவாறு பி.எஸ்.எல்.வி.சி-11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. //

இந்த இரு மேற்கோள்களுமே உங்கள் இரு சந்திராயன் பதிவுகளில் உள்ளவை.

ஏதோ கொஞ்சம் உதைக்கிறது மாதிரி தெரியலையா..?

Unknown said...

உங்களின் உண்மையான பெயர்?
ஸ்வாமி என்பது உங்கள் பெயரின் ஒரு பாதியா?
உங்கள் உண்மையான வயது 108 ???