Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, October 20, 2008

சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்படுமா ?- ஓர் ஜோதிட ஆய்வு

செயற்கைகோள் வரலாற்றில் இந்தியா அடுத்த இலக்கை தொடும் நிகழ்வு நடக்க இருக்கிறது.

22 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஏவப்படும் செயற்கைகோள் சந்திரனுக்கு சென்று ஆய்வு நடத்த இருக்கிறது. விஞ்ஞானமும் கணினி பயன்பாடும் வளர்ந்த இந்த காலத்தில் நவீன மனிதர்கள் என்பவர்கள் ஜோதிடம் சாஸ்திர போன்றவற்றை நம்புவதில்லை. ஜோதிட சாஸ்திரம் நமது செயல்கள் அனைத்தையும் முன்னரே தெரிவிக்கும் ஓர் கருவியாகும்.
விண்வெளி ஆய்வு மற்றும் அதிக பொருளாதாரம் சார்ந்த ஆய்வுக்கு முன்னர் ஜோதிட ரீதியாக ஆய்வின் வெற்றியை முடிவு செய்தால் பலசிக்கல்களை தவிர்க்க முடியும்.


சந்திராயன் செயற்கைகோளுக்கு ஜாதகம் பார்க்க போகிறீர்களா என நீங்கள் கேட்பது புரிகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் ஆருடம் எனும் பகுதியை கொண்டு ஆய்வு செய்ய போகிறேன். கிருஷ்ண மூர்த்தி பத்ததி எனும் ஜோதிட முறை துல்லியமானது என நிரூபணம் செய்யப்பட முறை. இந்த முறையை ஜோதிட கருவியாக கொண்டு எனது ஆய்வு துவங்குகிறது.


சந்திராயன் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுமா?
நாள் :20-அக்டோபர் - 2008

நேரம் : காலை 10:55
இடம் : கோவை.

ஆருட எண் : 29.
(கணிக்கப்பட்ட ஜாதகம் கீழே தரப்பட்டுள்ளது)


ஆய்வு :

லக்னம் ரிஷபராசியில் அமைகிறது. லக்னாதிபதி சுக்கிரன் லக்னத்தை பார்ப்பதால், கேள்வியின்
தன்மை சரியானதே என்றும், உண்மையாக கேட்கப்பட்ட கேள்வி என்றும் கூறலாம். செயல் வெற்றி அடையுமா என பார்க்க 1,6,11 ஆம் வீடுகளை ஆய்வு செய்ய வேண்டும். முக்கிய வீடாக லக்னம் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது.

லக்னத்தின் உபநட்சத்திராதிபதி சந்திரன்.
அவர் ராகுவின் நட்சத்திரத்தில் உள்ளார். ராகு 1,6,11 ஆம் வீடுகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை. ராகு சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் இருப்பதாலும் அதன் உப நட்சத்திர அதிபதியும் சுக்கிரனாக இருப்பதாலும் சுக்கிரன் இங்கு முக்கியத்துவம் பெருகிறார்.


சுக்கிரன் 1,6க்கு அதிபதியாகி 7ஆம் பாவகத்தில் அமர்ந்திருக்கிறார். லக்ன உபநட்சத்திராதிபதி சந்திரனை, 11ஆம் பாவகத்தின் அதிபதி குரு பார்வை செலுத்துவது நன்மையை கொடுக்கும்.

குருவின் நட்சத்திரத்தில் யாரும் இல்லை என்பது முக்கியமான அம்சம். மேலும் குரு 1,6,11க்கு
நேரடி குறிகாட்டி. சனி லக்னத்தை பார்வை செலுத்துவதும், குருவுடன் திரிகோணத்தில் அமர்ந்திருப்பதும் சில சிக்கல்களை ஏற்படுத்தும்.


ஆய்வு முடிவு :

22 ஆம் தேதி சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்படும். ஆனால் சில காரணங்களால் காலதாமதம் ஆகும். சின்ன தடங்கலுக்கு பிறகு வெற்றி கிடைக்கும். ஆறு மணிக்கு மேல் எட்டு மணிக்குள் துலாம் லக்னத்தில் சந்திராயனை வெற்றிகரமாக பிஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தும். இந்திய விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்வோம்.


உங்கள் கருத்துக்கள், கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கபடுகிறது.

59 கருத்துக்கள்:

Udhayakumar said...

எப்படி பாஸ் உங்களால மட்டும் இது முடியுது? சான்ஸே இல்லை.

கோவி.கண்ணன் said...

ஜோதிடத்தைப் பற்றி கருத்து எதுவும் இல்லை. ஆனால் சந்திராயன் வெற்றிகரமாக இயங்குவதற்கு உங்கள் வாழ்த்தில் பங்கு கொண்டு வாழ்த்துகிறேன்.

குசும்பன் said...

2011ல் யார் முதல்வராக வாய்பு அதிகம் என்றும் சொல்ல முடியுமா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு உதய குமார்.

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

அவன் சொல்கிறான்...”அவனே” செய்கிறான்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

உங்கள் இணைவாழ்த்துக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு குசும்பன்,

வெளிநாட்டி உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டை பற்றிய உங்கள் கவலை பிரம்மிப்பாக இருக்கிறது.

அடுத்த முதல்வர் யார் என்னால் கண்டிப்பாக சொல்ல முடியும்.
அதனால் தமிழகம் காக்கப்படும் என நினைக்கறீர்களா?

என் நிலை இது தான்..

ராமன் ஆண்டாலும் - ராமனுக்கு எதிரானவர் ஆண்டாலும் எனக்கு ஒன்னும் கவலை இல்ல...

Unknown said...

2011ல் யார் முதல்வராக வாய்பு அதிகம் என்றும் சொல்ல முடியுமா?

அய்யா, சந்திராயன் சந்திரனில் இறங்குவதால் பூமியில் உள்ள மானிடரின் வாழ்வில் சந்திரன் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா?

தருமி said...

//வெளிநாட்டி உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டை பற்றிய உங்கள் கவலை பிரம்மிப்பாக இருக்கிறது.//

நான் உள்ளூர்க்காரன்; அதுவும் மதுரைக்காரன். அதனால்:

//குசும்பன் said...
2011ல் யார் முதல்வராக வாய்பு அதிகம் என்றும் சொல்ல முடியுமா?//

ரிப்பீட்டேய்!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சேவியர் அவர்களுக்கு,

உங்கள் வருகைக்கு நன்றி.

உங்கள் முதல் கேள்வி முன்பே ஒருவர் கேட்டு விட்டார். எனது பதிலும் அதை தொடர்ந்து உண்டு.

பிரபஞ்சம் எந்த மூலையில் ஒரு அனு அசைந்தாலும் மறுபுறம் அதற்கான விளைவுகள் இருக்கும். காலம்தான் வேறுபடுமே தவிர விளைவு நிச்சயம்.

உங்கள் மேல் ஒரு கொசு உட்கார்ந்தால் என்ன நடக்கும்? ஒன்றும் இல்லை. ஆனால் சிலகாலத்திற்கு பிறகு மலேரியாவோ, சிக்கன்குனியாவோ வரலாம்.

இது தான் சொந்த காசு செலவழித்து......என சிலர் பழமொழியாக சொல்லுவார்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

ஹம்ம்ம்ம்...

//அவன் சொல்கிறான்...”அவனே” செய்கிறான்.//

எவன்...? நான் அவள் என நினைத்தேன்...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சேவியர் அவர்களுக்கு,

உங்கள் வருகைக்கு நன்றி.

உங்கள் முதல் கேள்வி முன்பே ஒருவர் கேட்டு விட்டார். எனது பதிலும் அதை தொடர்ந்து உண்டு.

பிரபஞ்சம் எந்த மூலையில் ஒரு அனு அசைந்தாலும் மறுபுறம் அதற்கான விளைவுகள் இருக்கும். காலம்தான் வேறுபடுமே தவிர விளைவு நிச்சயம்.

உங்கள் மேல் ஒரு கொசு உட்கார்ந்தால் என்ன நடக்கும்? ஒன்றும் இல்லை. ஆனால் சிலகாலத்திற்கு பிறகு மலேரியாவோ, சிக்கன்குனியாவோ வரலாம்.

இது தான் சொந்த காசு செலவழித்து......என சிலர் பழமொழியாக சொல்லுவார்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தருமி அவர்களுக்கு,

பதிலின் ஒரு பகுதியை தான் படிப்பீர்களா? :)

நேரம் வரும் பொழுது கண்டிப்பாக இதை வெளியீடுவேன்.

கடந்த சில வருடங்களாக எங்கள் அமைப்பின் பத்திரிகையில் அரசியல் குறித்த ஜோதிட பலன்கள் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் ”1995 ஆம் ஆண்டே யார் முதல்வர் என சொன்னவர் “ எப போட்டுக்கொள்ளும் ஜோதிடர் அல்ல நான்.

எனது பணி வேறு.

தருமி said...

//பதிலின் ஒரு பகுதியை தான் படிப்பீர்களா? :)//

இல்லையே இதையும் -//ராமன் ஆண்டாலும் - ராமனுக்கு எதிரானவர் ஆண்டாலும் எனக்கு ஒன்னும் கவலை இல்ல...//படித்தேனே. அதனால்தான் கேட்டேன். உங்களுக்கோ எந்தக் கவலையுமில்லை; குசும்பன் வெளிநாடு. நானோ உள்நாடு; அதுவும் மதுரை. உங்களை மாதிரி எனக்கென்ன என்று இருக்க முடியாதல்லவா? அதற்காகத்தான் தெரிந்து கொள்ள ஆசை.

ரங்குடு said...

அது சரி. ஸ்வாமிகளே. ஒரு வேளை அந்த ராக்கெட் திசை
மாறி வங்கக் கடலில் விழுந்தால் ஜோதிடம் பொய்யென
ஒத்துக் கொள்வீர்களா? அல்லது ஏவிய லக்கினம் சரி யில்லை,
ஏவியவர்களுக்கு சந்திராஷ்டமம், அல்லது மன்மோஹன் சிங்கின்
ஏழரை நாட்டு சனி என்று ஏதாவது காரணம் சொல்வீர்களா?

ஒரு வேளை ஏவப்படும் நேரத்தில் காற்றோ, மழையோ வந்து
ஏவும் நாள் தள்ளிப் போய், அதுவே வெற்றி கரமாக முடிந்தால்
தங்களது ஆருடம் எல்லாமே இல்லாமல் போய் விடுமே?

இந்திய விஞ்ஞானிகளின் திறமை மீது எனக்கு நம்பிக்கை
உண்டு. ஆனால் ஒரு பரிசோதனை வெற்றியோ, தோல்வியோ
அடைவது ஜாதகத்தின் மீது மட்டும் இல்லை. சோதனை
வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும், துவளாது
அடுத்த படியை நோக்கி நகர்வதே நமது நோக்கமாக வேண்டும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரங்குடு அவர்களே,

ஆருடம் சொல்லி இருக்கிறேன்.
இன்னும் அந்த சம்பவம் நடக்கவில்லை.

24 மணி நேரம் பொருங்கள் என்ன நடக்கிறது என பார்த்து விட்டு ஜோதிடம் தவறா? நான் தவறா? இல்லை உங்கள் எண்ணமே தவறா என தெரியவரும்.


நான் சொன்ன ஆருடம் சரியாக வந்தால் ஜோதிடத்தை நம்புகிறீர்களா என கேட்கமாட்டேன். காரணம் ஜோதிடம் நானோ நீங்களோ நம்பி பிழைக்கவேண்டிய சாஸ்திரம் அல்ல.
யாரும் நம்பவில்லை என்றாலும் சாஸ்வதமாக இருக்கும்.
அதனால் தான் அதன் பெயர் சாஸ்திரம்.

குசும்பன் said...

//ஸ்வாமி ஓம்கார் said...
திரு குசும்பன்,

வெளிநாட்டி உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டை பற்றிய உங்கள் கவலை பிரம்மிப்பாக இருக்கிறது.//

இதை தாங்கள் எப்படி சொன்னீர்கள் என்று தெரியவில்லை, சுவாமிகள் உள்குத்து எல்லாம் வைத்து சொல்லி இருக்கமாட்டீங்க என்று நினைக்கிறேன்.
இயல்பாகவே இருக்கும் ஒரு ஆர்வமும், ஒவ்வொருவரும் நான் தான் 2011ல் முதல்வர் என்று சொல்லிப்பதாலும் தான் கேட்டேன்.தாங்கள் கருத்துப்படி பார்த்தால் வெளிநாட்டில் இருந்தால் தாய்நாட்டை பற்றிய நினைவு வரக்கூடாது என்பது போல் அல்லவா இருக்கு:( என்ன சுவாமி!

வலையுலக குரு தருமி அய்யா எனக்கு ஆதரவு கொடுத்ததுக்கு நன்றி!

அமர பாரதி said...

ஸ்வாமி,

தங்களுடைய நம்பிக்கை வியக்க வைக்கிறது.

//அல்லது ஏவிய லக்கினம் சரி யில்லை,
ஏவியவர்களுக்கு சந்திராஷ்டமம், அல்லது மன்மோஹன் சிங்கின் ...//

அவசரப்படாமல் கொஞ்சம் பொறுங்களேன். ஸ்வாமி சொல்வது போல.

வேறு ஒரு பதிவில் ஜொதிடம் சம்பந்தமான கேள்வி கேட்கலாம் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் சொந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்றும் சொல்லி இருக்கிறீர்கள். காரணம் தெரிந்து கொள்ளலாமா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு குசும்பன் அவர்களுக்கு,

உங்கள் குரு தருமி அவர்களுக்கு கொடுத்த பதிலில் உங்களுக்கான பதிலும் குறிப்பிட்டுள்ளேன்.

உங்கள் ஆர்வம் புரிகிறது.

பூமிக்கு வெளியே சுற்ற போகும் செயற்கை கோளுக்கே ஆருடம் போடும் நாங்கள், செயற்கையான வாக்குறுதி கொடுக்கும் வருங்கால முதல்வருக்கு ஆருடம் கணிக்க மாட்டோமா?

நேரம் வரும் பொழுது நிச்சயம் எனது பதிவில் வெளியீடுவேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அமர பாரதி,

//வேறு ஒரு பதிவில் ஜொதிடம் சம்பந்தமான கேள்வி கேட்கலாம் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் சொந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்றும் சொல்லி இருக்கிறீர்கள். காரணம் தெரிந்து கொள்ளலாமா?//


தனிபட்ட மனிதர்களுக்கு உதவவோ, ஜோதிடத்தை தொழிலாகவோ செய்வதற்கான வலைதளம் அல்ல இது. சாஸ்திரம் பற்றிய விழிப்புணர்வை கொடுக்கும் இடம்.

விழிப்புணர்வு பெற்றால் உங்கள் வாழ்க்கை வளமாகும் அல்லவா? பலன் எதற்கு?

அமர பாரதி said...

ஸ்வாமி,

//தனிபட்ட மனிதர்களுக்கு உதவவோ, ஜோதிடத்தை தொழிலாகவோ செய்வதற்கான வலைதளம் அல்ல இது. சாஸ்திரம் பற்றிய விழிப்புணர்வை கொடுக்கும் இடம்.//

சாஸ்திரங்களின் பயன் என்பதே தனிப்பட்ட மனிதர்கள் மேம்படத்தானே ஸ்வாமி?

கல்வெட்டு said...

//நேரம் வரும் பொழுது நிச்சயம் எனது பதிவில் வெளியீடுவேன்.//

அந்த நேரம் எப்போது வரும் என்று இபோது கணித்துச் சொல்லமுடியுமா ஸ்வாமி? இல்லை அதற்கும் ஒரு நேரம் உண்டா?

தமிழ் ஈழம் அமையுமா? எப்போது அமையும்? இதைச் சொல்லவும் ஏதாவது நேரம் வேண்டுமா?

**

நீங்கள் எல்லாம் எப்போதுதான் திருந்துவீர்களோ?

**

வலைப்பதிவுகளில் ஜோசிய சாமிகள் வருவது நல்லதுதான். ஆனால் இங்கும் வந்து இப்படி எதையாவது சொல்வது நல்லது அல்ல. அறிவியலின் வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டே அதனை மூடத்தனத்திற்கு பயன்படுத்துவது உண்டவீட்டுக்கே துரோகம் செய்வது.


நல்லா இருங்க சாமிகளா!

KARMA said...

அமர பாரதி அவர்களே,

//சாஸ்திரங்களின் பயன் என்பதே தனிப்பட்ட மனிதர்கள் மேம்படத்தானே ஸ்வாமி?//

உண்மைதான். ஆயினும்,

தொழில் தொடங்கலாமா? கல்யாணம் எப்போது? வெளிநாடு செல்வது எப்போது? போன்ற தனிநபர் குறித்த கேள்விகள் வேண்டாம் என்று ஸ்வாமி கூறியதாக கருதுகிறேன்.

Subbiah Veerappan said...

/////நான் சொன்ன ஆருடம் சரியாக வந்தால் ஜோதிடத்தை நம்புகிறீர்களா என கேட்கமாட்டேன். காரணம் ஜோதிடம் நானோ நீங்களோ நம்பி பிழைக்கவேண்டிய சாஸ்திரம் அல்ல.
யாரும் நம்பவில்லை என்றாலும் சாஸ்வதமாக இருக்கும்.
அதனால் தான் அதன் பெயர் சாஸ்திரம்./////


நல்ல விளக்கம் சுவாமிஜி. நன்றி!

அமர பாரதி said...

கர்மா,

//தொழில் தொடங்கலாமா? கல்யாணம் எப்போது? வெளிநாடு செல்வது எப்போது? போன்ற தனிநபர் குறித்த கேள்விகள் வேண்டாம் என்று ஸ்வாமி கூறியதாக கருதுகிறேன்.// அதை நானும் புரிந்து கொண்டேன். ஆனால் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட கட்டுரைகளும் ஜோதிட பாடங்களும் ஜோதிடர்களுக்கு மட்டுமே விருப்பப்பட்டவைகளாக இருக்கும். வலையில் உலாவும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர்களின் சொந்த பலன்கள் மட்டும் தானே தேவையானதான இருக்கும்?.

நான் ஸ்வாமியிடம் தெரிந்து கொள்ள நினைப்பது, அவர் இப்படி சொன்ன காரணம் அவருடைய நேரமின்மையா அல்லது விருப்பமின்மையா? அல்லது வேறு ஏதாவது கட்டன சேவை வழி முறைகள் இருக்கிறதா?

ஏனென்றால் ஜோதிடம் என்பதும் மருத்துவம் போன்ற ஒரு தொழிலே. தனக்கு தெரிந்ததை பிறருக்கு உபயோகமான வழியில் பயன் படுத்துவதுதானே வித்தை அல்லது வித்யை.

95% சாதாரன மனிதர்களுக்கு அவர்கள் வாழ்க்கை கேள்விகள் தான் முக்கியமானதாக இருக்கும். அவர்கள் சாஸ்த்திரத்தை அறிந்து என்ன செய்யப்போகிறார்கள்?

ஸ்வாமிகள் தவறாக எண்ண வேண்டாம். தங்களின் பதில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது பதில் என்பதே இல்லாமலும் இருக்கலாம். ஆனால் கேள்வி கேட்க தோன்றியது அதனால் கேட்டேன்.

KARMA said...

அமர பாரதி அவர்களே,

//95% சாதாரன மனிதர்களுக்கு அவர்கள் வாழ்க்கை கேள்விகள் தான் முக்கியமானதாக இருக்கும். அவர்கள் சாஸ்த்திரத்தை அறிந்து என்ன செய்யப்போகிறார்கள்?
//

உங்கள் கேள்வி புரிகிறது. எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன். இந்த வலைதளம் அதை நோக்கமாககொண்டது அல்ல,

ஜோதிஷத்தின் மேல் எழக்கூடிய, அறிவியல் பூர்வமான, மற்றும் ஆக்கப்பூர்வமான வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் (purely on the subject of astrology and not specific to predict any individual's future)ஸ்வாமிகளால் ஏற்படுத்தப்பட்ட்டது.

கல்வெட்டு அவர்களுக்கு,

//நீங்கள் எல்லாம் எப்போதுதான் திருந்துவீர்களோ?//

தயவு செய்து ஸ்வாமி ஓம்கார் அவர்களை பற்றி எந்த முன்முடிவும் அவசரப்பட்டு எடுத்துவிட வேண்டாம்.

அவர் இங்கு கூறும்(கூறப்போகும்) விஷயங்கள், பல வியாபார நோக்குடன் தொழில் செய்யும் ஜோதிடரிடம் ஏமாந்து போகும் வாசகருக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருக்கலாம். எனக்கும் அவர் பற்றி ஏதும் தெரியாது.

தொடர்ந்து படித்து வாருங்கள். தவறான வழிநடத்துதல் போல் தெரிந்தால் அவசியம் தாங்கள் கருத்தை விருப்பம் போல் தெரிவிக்கலாம். நானும் உடன்பாடு இருக்கும் பட்சத்தில் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குள்ள யாரையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். அது நமக்கு நாமே செய்துகொள்ளும் உதவி.

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கல்வெட்டு அவர்களுக்கு,

உங்கள் வரவுக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அமரபாரதி,

தனிமனிதரின் எதிர்காலத்தை சொல்ல அனேக ஜோதிடர்கள் இருக்கிறார்கள். அதில் சிறந்தவர்கள் யார், சாஸ்திரத்திற்கு எதிரானவர் யார் என கண்டு கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் எனது நோக்கம்.

நான் ஜோதிடம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும் என 99% நினைப்பதால் தான் அனேகம் பேர் ஏமாற்ற கிளம்பி இருக்கிறார்கள்.

ஜோதிடம் ஒன்றும் மாபெரும் விஷயம் அல்ல. ஊன்றி படித்தால் யார்வேண்டுமானாலும் பலன்சொல்லலாம்.

என்னிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்திருக்கிறார்கள். அதில் அதிகமானவர்கள் ஜோதிடம் பற்றி படிப்பதற்கு முன் கேள்விப்பட்டது கூட இல்லை.

காலம் மாறிவிட்டது. இந்த ஜாதி அல்லது மதம் சார்ந்தவர்கள் தான் படிக்கவேண்டும் என்பதில்லை. நீங்களும் கற்று அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

சாஸ்திர விழிப்புணர்வு ஏற்படுத்துவது என் பரம்பரை சொத்தல்ல. வேண்டுமாலால் என்னுடன் இணையுங்கள் விழிப்புற்ற பரம்பரையை தோற்றுவிப்போம்.

ஏசு கிருஸ்து சொன்னதை இங்கு கூற விரும்புகிறேன்...

“மீன்களை பிடித்தது போதும், இனி மனிதர்களை பிடிப்போம் வாருங்கள்”.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கர்மா அவர்களுக்கு,

எனது ”கர்மா”வை நீங்கள் செய்தமைக்கு நன்றி.

உங்கள் கருத்துக்கள் எப்பொழுதும் எங்களுடன் இருக்கட்டும்.

கல்வெட்டு said...

நண்பரே முன் முடிவுகள் ஏதும் இல்லை.

ஆனால் ஜோசியம் என்ற ஒரு நம்பிக்கையை அறிவியல் விசயங்களுடன் சேர்த்து இது நடக்கும்/ நடக்காது என்று சொல்லும் கேலிக்கூத்தை காணச்சகிக்கவில்லை.

**

சாமி ஓம்கார் முதலில் அவரது பதிவை, அவர் நம்பும் சோதிடத்தில் அலசி காயப்போட்டுஆராய்ச்சி செய்து கொள்ளவும்.

1.ஒரு பதிவை எழுதுங்கள்

2.அதை எழுதும் நேரத்தை வைத்து அல்லது உங்களின் சோதிட சாத்திரப்படி அதற்கான சாதக அமைப்பை கட்டம் கட்டுங்கள்.

3.அதில் இருந்து...

அ. எத்தனைபேர் அதைப்படிப்பார்கள்?

ஆ. எத்தனைபேர் பின்னூட்டம் இடுவார்கள்?

இ. எத்தனைபேர் ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுவார்கள்?

ஈ. எத்தனைபேர் சிரிப்பான் மட்டும் போடுவார்கள்?

... என்ற விசயங்களை முன்கூட்டியே கணித்து அதே பதிவில் போடுங்கள்.

இப்படிச் செய்தால் அவரது சோதிடம் அவருக்காவது பயன்படும்...


****

சோதிடத்தை உங்கள் நம்பிக்கை என்று சொல்லிவிட்டுப் போங்கள் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

அறிவியலுக்கு சாதகம் கணித்து அறிவியலைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.


***

பேர் அண்டு லவ்லி, மைக்கேல் ஜாக்சன், ஜோதிடம் மற்றும் சில மனிதர்கள்
http://kalvetu.blogspot.com/2007/11/blog-post_20.html

கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்
http://kalvetu.blogspot.com/2007/10/blog-post_26.html

ISR Selvakumar said...

கடவுள் நம்பிக்கை போல, ஜோதிட நம்பிக்கையும், எப்போதும் விவாதத்திற்குறியதாகத்தான் இருந்திருக்கிறது, இருக்கிறது.

என்னை பொறுத்தவரையில் முறைகள் மாறுபடலாம், ஆனால் கணிப்பு சாத்தியமே.

கல்வெட்டு said...

செல்வக்குமார்,
//ஆனால் கணிப்பு சாத்தியமே.//

கணிப்பு ஊகம் என்பது அனைத்திலும் சாத்தியமே. கிளி சோதிடத்தில் ஆரம்பித்து, நாடி, பிரசன்னம்,ஜாதகம், குறி பார்த்தல், மை போட்டுப் பார்த்தல்..

என்று பல கணிப்பு வகையறாக்கள் உள்ளது. இவையெல்லாம் அவரவர் நம்பிக்கை சார்ந்த விசயங்கள்.

நம்பிக்கை என்று வந்துவிட்டால் அதில் விவாதத்திற்கு இடமேயில்லை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு.

ஆனால் கும்ஸ்காக சாமி ஓம்கார் இப்படி
'//ஜோதிட சாஸ்திரம் நமது செயல்கள் அனைத்தையும் முன்னரே தெரிவிக்கும் ஓர் கருவியாகும். //" சொல்லுதல் தவறு.

சோதிடம் நமது செயல்கள் அனைத்தையும் முன்னரே தெரிவிக்கும் ஓர் கருவி என்றால், இந்த மண்ணாங்கட்டி கருவி சுனாமியின் போதும், கும்பகோணத்தில் குழந்தைகள் இறக்கும் போதும் off செய்யப்பட்டு இருந்ததா அல்லது சாமி ஓம்கார் தூங்கிவிட்டாரா?

எப்படியோ போங்கள். தாவு தீருது.

கல்வெட்டு said...

சாமி ஓம்கார்,

சோதிடத்தை உங்களின் நம்பிக்கை என்று சொல்லுங்கள் சாமி.

அதைவிடுத்து அதை கருவி என்று சொன்னால்,

//ஜோதிட சாஸ்திரம் நமது செயல்கள் அனைத்தையும் முன்னரே தெரிவிக்கும் ஓர் கருவியாகும். //

//கிருஷ்ண மூர்த்தி பத்ததி எனும் ஜோதிட முறை துல்லியமானது என நிரூபணம் செய்யப்பட முறை.//


....

அந்த கருவி எப்படிச் செயல்படும்? , எந்த எந்த காலத்தில் மட்டும் செயல்படும்?, எந்த எந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் என்று "கருவி இயக்க வழிகாட்டி" (Users Manual) தேவை.

2011 -ல் யார் முதல்வர் என்று கேட்டால், நேரம் வரும் போது சொல்கிறேன் என்று சொல்வது முரணாக இல்லை?

அந்த நேரம் உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருந்தால் சோதிடம் கருவி அல்ல. நம்பிக்கை.

வீ. எம் said...

ஸ்வாமி,

52 மனி நேர கவுன் டவுன் படி, காலை 6:20 க்கு கிளம்பும் என்று முன்னமே தெரிந்தது தானே. நீங்கள் எப்படி 5.30 என்று எடுத்துக்கொண்டு
, பின்னர் 6 - 8 என்று சொன்னீர்கள்?

19ம் தேதியிட்ட பத்திரிக்கை செய்திகளில் பார்த்தீர்கள் என்றால், சந்திராயம் 1 , எந்தவித தடங்கலும் இல்லாவிடில், கவுன்டவுன் முடித்து 6.20 மனிக்கு கிளம்பும் என்று தெளிவாக திரு அன்னாதுரை , , project director தெரிவித்துள்ளார்..

கீழே பார்க்க - இந்துவில் வந்த செய்தி.



பின்பு நீங்கள் எப்படி உங்கள் பதிவில் 5.30 என்று எடுத்துக்கொண்டு, தடங்கல் ஏற்படும் பின்னர் 6 - 8 மனிக்கும் செல்லும் என்று சொன்னீர்கள்?

திரு அன்னாதுரை சொன்னது போல 6.20 க்கு திட்டமிட்டப்படி சென்றுள்ளது..

சரியான நேரத்திற்கு சென்றுள்ளதால், ஏதும் சிறு பிரச்சனை இருந்ததாக கூட தெரியவில்லை

5.30 , 6 - 8, 6.20 விளக்க முடியுமா?

பிரச்சனை வரும் என்று சொன்னீர்கள் - என்ன பிரச்சனை வந்தது என்று சொல்லமுடியுமா?

மேலும் தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள தினமலர் செய்தியில் கூட , சந்திராயம் பிரச்சனை ஏற்பட்டு, சற்று தாமதமாக போனது என்று செய்தி இருப்பது தெரியவில்லை..

HINDU NEWS dated 19th October

The fully assembled vehicle was moved to the umbilical tower. There will be a rehearsal of the launch sequence on Sunday,” said M. Annadurai, Project Director, Chandrayaan-1, from the Satish Dhawan Space Centre on Saturday. If the weather turns out to be fine, the PSLV-C11 will lift off from the second launch pad on October 22 at 6.20 a.m. and put Chandrayaan-1 in orbit.

அமர பாரதி said...

கல்வெட்டு,

சிறிது அதிகப்படியாக வார்த்தைகளைப் பிரயோகித்து விட்டீர்கள். ஜோதிடம் என்பது சரியாக கணிக்கப்பட்டால் பொய்க்காது என்பது ஸ்வாமிகளின் கூற்று. அதை விட்டு விட்டு கும்பகோணம் பற்றி பேசியிருப்பதும் சுனாமி பற்றி பேசியிருப்பதும் இங்கே பொருந்தவில்லை.

சுனாமியைப் பற்றியும் கும்பகோணத்தைப் பற்றியும் முன்னமே "சுனாமி வருமா?", "பள்ளியில் தீ விபத்து ஏற்படுமா?" என்று யாரும் கேட்டதாக தெரியவில்லை.

ஆனால் வீ.எம். சொலவதும் யோசனைக்குரிய விஷயமே. இதற்கு ஸ்வாமிகள் தான் விளக்கமளிக்க வேண்டும்.

KARMA said...

//சோதிடத்தை உங்கள் நம்பிக்கை என்று சொல்லிவிட்டுப் போங்கள் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

அறிவியலுக்கு சாதகம் கணித்து அறிவியலைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.//

உங்களது கோபமும், ஆற்றாமையும் புரிகிறது. அவையனைத்தும் மக்களை ஏமாற்றும் சோதிடர்களின்பாற்பட்டது.

சோதிடர்கள் போலியாக இருக்கலாம் (போலி மருத்துவர், போலி சமுதாய சீர்திருத்தவாதியை போலவே). சோதிடம் பொயாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை (இருக்கவும் செய்யலாம்).

ஸ்வாமி ஓம்கார் சோதிடம் உண்மை என்ற கருத்தை வலியுறுத்த இந்த வலைதளத்தை தொடங்கியுள்ளார்.

சோதிடம் பொய் என்றால், அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.

//சோதிடம் நமது செயல்கள் அனைத்தையும் முன்னரே தெரிவிக்கும் ஓர் கருவி என்றால், இந்த மண்ணாங்கட்டி கருவி சுனாமியின் போதும், கும்பகோணத்தில் குழந்தைகள் இறக்கும் போதும் off செய்யப்பட்டு இருந்ததா அல்லது சாமி ஓம்கார் தூங்கிவிட்டாரா?//

ஒரு வகையில் இது நல்ல கேள்வி. அறிவியலின் பக்கத்தில் இருந்து பார்த்தால் நடக்கப்போகும்
இயற்கையின் சீற்றங்களை முன்னமே தெரிவித்து மக்களை, உயிர்களை காக்கும் கருவிகள் (புயல், சுனாமி எச்சரிக்கை கருவிகள்) உள்ளன.

சோதிடம் அல்லது சோதிடர்களால் (சோதிடம் உண்மையாக இருந்தாலும் கூட) இந்த வகையில் என்ன பயன்?

KARMA said...

வீ.எம்-ன் கேள்விகளும் நியாயமானவையே.

ஸ்வாமிகள் என்ன விளக்கம் தருகிறார் என பார்ப்போம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கல்வெட்டு,

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

என்னை நம்பித்தான் ஆகவேண்டும் நான் சொல்லுவது அனைத்தும் உங்களுக்கு என எதையும் நான் திணிக்கவில்லை.

பகுத்தறிவு என வாதம் பேசுபவர்கள் அனைவரும் என்ன செய்தார்கள் என்பது எனக்கு தெரியும்.

ஜோதிட சாஸ்திரம் எது என தெரியாமல் கிளி ஜோதிடத்தையும், மை போடுவதையும் இணைத்து கூறும்பொழுது உங்கள் எண்ணம் அறிவின் ஆழம் வெளிப்படுகிறது.

//சாமி ஓம்கார் முதலில் அவரது பதிவை, அவர் நம்பும் சோதிடத்தில் அலசி காயப்போட்டுஆராய்ச்சி செய்து கொள்ளவும்.//

முதலில் பிறர் இப்படித்தான் நடக்க வேண்டும் என கட்டளை இட நீங்கள் யார்? இது தான் உங்கள் பாசைறையில் பெற்ற பயிற்சியா?

ஒருவரின் நம்பிக்கை பிறரை புண்படுத்தாத வரை அதற்கு ஒன்றும் தோஷம் இல்லை.

நீங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என சொல்லவில்லை. ஆனால் நீ இதை செய்ய கூடாது என சொல்லவோ , இதை தான் செய்யவேண்டும் என சொல்லவோ உங்களுக்கு உரிமை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்த வலைதளம் உங்களுடையது அல்லவே? படிக்கவோ அல்லது பின்னூட்டம் இடுவதற்கோ என்ன இருக்கு?


சுனாமி, கும்பகோணம் என்ற பழைய பல்லவி வேறு.

நான் கேட்கிறேன்.. ஒருவருடம் முன்கூட்டி இதை சொன்னால் கேட்கவா போகிறீர்கள்?

அப்பொழுதும் பைத்தியகாரன் என சொல்லுவீர்கள், உணர்ந்ததும்/சம்பவம் நடந்ததும் உங்கள் நாற்கலிக்கு அடியில் இந்த விஷயத்தை போட்டு புதைப்பீர்கள்.

குறிப்பு : சுனாமி பற்றி ஒரு மாதத்திற்கு முன்னரே தகவல் சொல்லி இருக்கிறேன். என்னிடம் ஆதாரம் உள்ளது.

எனது மாத பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் தீய நிகழ்வுகளை நடக்கும் தேதி வாரியாக வெளியுடுகிறேன். நேற்று நடந்த குண்டு வெடிப்பு வரை வெளியிட்டுள்ளேன்.

உங்களை போன்றவர்கள்...எனது மாத பத்திரிகையை போலி பகுத்தறிவு எனும் முட்டாள் தனத்தால் தொடாமல் சென்றது எனது தவறா?

ஐயா தெரியாமல் தான் கேட்கிறேன் , கேள்வி கேட்பது இருக்கட்டும். சம்பவம் நடந்த பிறகாவது சுனாமிக்கும்,கும்பகோணம் குழந்தைகளுக்கும் என்ன செய்தீர்கள்.?

கிருஷ்ண மூர்த்தி ஜோதிட முறை பற்றி முதலில் என்ன என தெரிந்து விட்டு அதைபற்றி கருத்து சொல்லுங்கள்.

2011ல் முதல்வர் யார் என சொன்னால் யாருக்கு என்ன பிரயோஜனம்? சந்திராயன் பற்றிய ஆய்வு கட்டுரையில் அடுத்த முதல்வர் யார் என கேட்டது எனது முட்டாள் தனமல்ல. அந்த முட்டாள் தனத்தை நாசூக்காக தவிர்க்க நினைத்தால் அதை நீங்கள் மீண்டும் முன்மொழிந்து தலைமை தாங்கலாமா?

ஆன்மீகவாதி என்றால் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், சாடலாம் என எண்ணினால் அது தவறு.


முடிந்தால் நல்லது செய்யுங்கள். அல்லது பிறரை செய்ய விடுங்கள்.
எனது சக்தியை இனிமேல் உங்களுக்காக செலவளிக்க விரும்பவில்லை.

உங்கள் பாஷையில் சொல்லவேண்டும் என்றால் தாவு எனக்கும் தீர்ந்து விட்டது. :))

தருமி said...

//தாவு எனக்கும் தீர்ந்து விட்டது. :)) // --- சரி தாவு தீருவது இருக்கட்டும் ஸ்வாமி!

//5.30 , 6 - 8, 6.20 விளக்க முடியுமா?

பிரச்சனை வரும் என்று சொன்னீர்கள் - என்ன பிரச்சனை வந்தது என்று சொல்லமுடியுமா?//

இதுக்கு உங்க பதில் தெரிந்துகொள்ள அம்புட்டு ஆவல்....

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வீ.எம்,

நான் வலைதளத்தில் பதிவு ஏற்றம் செய்யும் நாள் அன்றுதான் கவுண்டவுன் தொடங்கியது. இஸ்ரோவின் ஆதார பூர்வமான வலைதளத்தில் 5 முதல் 6 மணிக்குள் என்றும், 46 மணி நேர கவுன்டவுண் என்றும் இருந்தது.

கவுண்டவுன் துவங்காமல் சரியான மணியை முன்பே கூற முடியாது என நினைக்கிறேன். 20 ஆம் தேதி அன்று தான் கவுண்டவுன் துவங்கியது.

சில செயற்கைகோள் ஏவப்படும்பொழுது கவுண்டவுன் போக சில மணி நேரம் தாமதம் ஆனால் மட்டுமே தாமதம் என கூறுவார்கள். கவுண்டவுன் ஆனது 48 மணிநேரமாக மாற்றம் செய்யப்பட்டது.

இன்னும் சில பத்திரிகைகள் 6.22க்கு என இரு நிமிடம் தாமதம் என வெளியிட்டுள்ளனர்.
இதற்காகதான் இஸ்ரோவின் வலைதளத்தை எனது பதிவில் இணைத்துள்ளேன். பத்திரிகையை காட்டிலும் அதில் தெளிவாக கொடுக்கபட்டுள்ளது.

உலகமய ஜோதிடம் (முண்டேன் ஜோதிடம்) பல முறை பலன் கூறி இருந்தாலும் தமிழ் வலை உலகில் இதுவே முதல் முறை.

இன்னும் வரும் காலத்தில் பல கருத்துகளை வெளியிடுவேன். அவற்றையும் இதே போல அலசி கருத்துக்கள் சொல்லவும்

உங்கள் வருகைக்கு நன்றி.

அமர பாரதி said...

கல்வெட்டின் நாகரீகமற்ற எழுத்துகளுக்கு என்னுடைய கண்டனங்கள்.

ஸ்வாமிகள் தருமிக்கும். வீ.எம்.முக்கும் கர்மாவுக்கும் மற்றும் எனக்கும்
//5.30 , 6 - 8, 6.20 விளக்க முடியுமா?

பிரச்சனை வரும் என்று சொன்னீர்கள் - என்ன பிரச்சனை வந்தது என்று சொல்லமுடியுமா?// இந்த கேள்விக்கு விளக்கம் சொல்லுங்களேன்.

அமர பாரதி said...

கல்வெட்டின் நாகரீகமற்ற எழுத்துகளுக்கு என்னுடைய கண்டனங்கள்.

ஸ்வாமிகள் தருமிக்கும். வீ.எம்.முக்கும் கர்மாவுக்கும் மற்றும் எனக்கும்
//5.30 , 6 - 8, 6.20 விளக்க முடியுமா?

பிரச்சனை வரும் என்று சொன்னீர்கள் - என்ன பிரச்சனை வந்தது என்று சொல்லமுடியுமா?// இந்த கேள்விக்கு விளக்கம் சொல்லுங்களேன்.

கல்வெட்டு said...

சாமி ஓம்கார்,

//ஒருவரின் நம்பிக்கை பிறரை புண்படுத்தாத வரை அதற்கு ஒன்றும் தோஷம் இல்லை.//

நீங்களே சோதிடத்தை நம்பிக்கை என்று சொல்லிவிட்டபின் நான் ஒன்றும் சொல்லப்போவது இல்லை.

கும்பகோணத்திற்கு அல்லது அது போன்ற நிகழ்வுகளுக்கு நான் என்ன செய்தேன் என்பதை ஏன் என்னிடம் கேட்கிறீகள் சாமீ ஓம்கார்?

கும்பகோண விபத்துக் கட்டம் வரைந்து அறிந்து கொள்ளலாமே ?



நல்லாருங்க சாமிகளா !!!


****

இது கர்மா வின் கேள்விக்கு மட்டுமே....

கர்மா,
//சோதிடம் பொய் என்றால், அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது. //

சோதிடம் அறிவியல் என்றால் அதில் பேசலாம். சோதிடம் நம்பிக்கை என்றால் அதில் உரையாட ஒன்றும் இல்லை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு.

அறிவியல் என்னும் பட்சத்தில் சோதிட அறிவியலார்கள் அதனை நீருபித்து சோதிட அறிவியல் நோபல் பரிசு பெறலாம். அதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

சோதிடம் இன்றுவரை அறிவியலாக நிரூபிக்கப்படவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள்/உண்மைகளுக்கான அங்கீகாரமாக நான் கொள்வது நோபல் பரிசு வகையறாக்கள் மட்டுமே.

மேலும் அறிவியல் என்பது முற்றான முடிவு அல்ல.

இன்று கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள ஒன்றை, நாளைய அறிவியல் முயற்சிகள் தவறு என்று நீரூபணம் செய்யலாம்.

ஆனால் சூரியன் நட்சத்திரம் என்று அறிவியல் சொன்னாலும் அதையும் ஒரு கிரகம்தான் என்று சோதிடம் இந்த நூற்றாண்டுவரை ஜல்லியடித்துக் கொண்டுள்ளது.

எனவே, சோதிடக் கட்டங்கள் மாறாதவை. ஆனால் புதியதாக ஒரு கோள் கண்டறியப்படும்போது அல்லது இருக்கும் கோள் எண்ணிக்கை தவறு என்று அறிய வரும்போது , அறிவியல் அதனை ஏற்றுக் கொண்டு கோள் எண்ணிக்கை கட்டங்களை மாற்றிக்கொள்ளும்.

இறுதியாக....

சோதிடம் என்பது நம்பிக்கை அறிவியல் அல்ல.எனவே நம்பிக்கையைக் கொண்டு அறிவியலை அறிவியல் முயற்சிகளை அளவிட வேண்டாம் அல்லது கணிக்க வேண்டாம்.

***


அனைவரின் கண்டனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்.


மன்னிக்கவும்.

பூமி தட்டையல்ல என்று சொன்னவனுக்கு கிடைக்காதா கண்டனங்களா

**

தருமி said...

கல்வெட்டு,

நீங்கள் சொன்னது எல்லாமே சரிதான் இதைத் தவிர - //மன்னிக்கவும்.//

கல்வெட்டு said...

சுவாமி ஓம்கார்,

//உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்த வலைதளம் உங்களுடையது அல்லவே? படிக்கவோ அல்லது பின்னூட்டம் இடுவதற்கோ என்ன இருக்கு?
//


நான் இன்று இந்தப் பதிவில் வந்து பின்னூட்டமிடப்போவது நிச்சயம் உங்களுக்கு முன்னரே தெரிந்து இருக்கும்.

நடக்கப்போகும் துர்நிகழ்வுகளை தேதிவாரியாக மாதப் பத்திரிக்கையில் வெளியிடும் நீங்கள், இந்தப் பதிவு போட்ட உடனேயே என்னவெல்லாம் நடக்கும் என்று கணித்திருப்பீர்கள்.

எனவே, இது என்னுடைய தவறு அல்ல. எல்லாம் பதிவை வெளியிட்ட நேரம். :-((((

**

எந்த நேரத்தில் பதிவை வெளியிட்டால் என் போன்றோரைத் தவிர்க்கலாம் என்று கட்டம் தயாரித்து அந்த நேரத்தில் மட்டுமே பதிவுகளைப் போடலாம்.

அல்லது அறிவியலைப் பயன்படுத்தி பின்னூட்ட மட்டுறுத்தல் அல்லது குறிப்பிட்ட சிலர் மட்டுமே படிக்க வசதி செய்யலாம். Blogger -ல் எல்லா வசதிகளும் உள்ளது.

***

சோதிடம் உங்களிம் நம்பிக்கை என்று சொன்ன பின்னால் இனிமேல் நான் அது பற்றிப் பேச மாட்டேன்.

உங்கள் நம்பிக்கையை மதிக்கிறேன்.

நன்றி !

**

KARMA said...

//ஆன்மீகவாதி என்றால் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், சாடலாம் என எண்ணினால் அது தவறு.//

சிலருடைய நம்பிக்கை சோதிடத்திற்கு எதிராக இருக்கலாம், அதற்காக சோதிடத்தையோ, அதை சொல்ல வருபவரையோ எள்ளி நகையாட வேண்டிய அவசியம் இல்லை, அது நாகரிகமும் இல்லை. தருமி அய்யா அவர்களின் பின்னூட்டத்திலும் அதன் சாயலை பார்ப்பது வருத்தமளிக்கிறது.

நம்பிக்கை என்றாலும் கூட, அந்த ஒரு காரணத்தினாலேயே அது கீழானது என்பது போன்ற ஒரு பிம்பத்தை தோற்றுவிப்பது சரியாகாது. வாழ்வில் 90% விஷயங்கள் நம்பிக்கை சார்ந்தவையே.

அறிவியலும் சற்று உற்று நோக்கின் அதுவும் ஒரு நம்பிக்கையே.

கண்டனங்கள் தேவையற்றது. சில சமயம் சுற்றிலும் நடக்கும் பொய், புரட்டு, ஏமாற்று வித்தைகள் நம்மை அவ்விதம் பேசத்தூண்டுகிறது, மற்றபடி கல்வெட்டுக்கும் ஸ்வாமிக்கும் தனிப்பட்ட வகையில் அவ்விதம் கடுமையான வார்த்தைகள் பரிமாற வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

எல்லா ஆன்மிகவாதிகளையும் ஏமாற்றுக்க்காரர்கள் என்ற முன்முடிவுக்கு வந்ததை தவிர்த்திருக்கலாம்.

கல்வெட்டு said...

தருமி,
-->கல்வெட்டு,
நீங்கள் சொன்னது எல்லாமே சரிதான் இதைத் தவிர - //மன்னிக்கவும்.// <--

:-)))

என்னத்த சொல்ல ஜி ?
ஏம்பா இப்படி அறிவியலை அலும்பு பண்றீங்கன்னு கேட்டா கண்டனங்கள்தான் வருது.

ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்.

நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது சுவாமி பதிவை வெளியிட்ட நேரத்திலேயே முடிவு செய்யப்பட்ட ஒரு சோதிட உண்மை. எல்லாம் அதுப்படிதான் நடக்கும். :-)))

தருமி said...

ஓம்கார்,
நீங்கள் வீ. எம்.-க்கு அளித்துள்ள பதில் என் மூளைக்குப் புரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதும் புரியவில்லை.

சரியான நேரத்தில் சந்திராயன் ஏவப் பட்டதா? உங்கள் சோதிடம் சரியாக அதைச் சொல்லியுள்ளதா என்பது புரியவில்லை.

2011 சஸ்பென்ஸ் முடியமாட்டேங்குதே...

கல்வெட்டு said...

கர்மா,

//மற்றபடி கல்வெட்டுக்கும் ஸ்வாமிக்கும் தனிப்பட்ட வகையில் அவ்விதம் கடுமையான வார்த்தைகள் பரிமாற வேண்டிய அவசியம் ஏதுமில்லை. //

இவை எல்லாம் நான் பிறந்த நேரம் அல்லது சுவாமி பிறந்த நேரம் அல்லது இந்தப் பதிவை சுவாமி வெளியிட்ட நேரம் என்ற ஏதோ ஒரு நேரத்தில் முன்னரே முடிசெய்யப்பட்ட ஒன்று.

எனவே, இந்த நிகழ்வுகள் தடுக்க முடியாதவை.

இப்படி நடக்கும் என்று உங்களுக்கும் எனக்கும் தெரியாவிட்டாலும் சுவாமிக்கு முன்னரே தெரிந்து இருக்கலாம்.

நேரம்/ராசி/நட்சத்திரம்/இலக்கிணம்...வகையறாக்களால் முன்னரே முடிவு செய்யப்பட்ட இந்த நிகழ்வை மாற்ற யாராலும் முடியாது.

முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ,யார் செயலுக்கும் யாரும் பொறுப்பு ஏற்க முடியாத நிலையில் நானும் உங்களைப் போல பார்வையாளன்தான்.

//எல்லா ஆன்மிகவாதிகளையும் ஏமாற்றுக்க்காரர்கள் என்ற முன்முடிவுக்கு வந்ததை தவிர்த்திருக்கலாம்.//

எந்த இடத்திலும் நான் ஆன்மிகத்தைப் பற்றிப் பேசவே இல்லை. எனவே நீங்கள் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. வேறு யாருக்கோ சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்

**

உரையாடலில் பங்கு கொண்ட சுவாமி ஓம்கார், கர்மா,அமர பாரதி மற்றும் தருமி அனைவருக்கும் நன்றி !

Santhosh said...

//நேரம் வரும் பொழுது கண்டிப்பாக இதை வெளியீடுவேன்.//
அண்ணே அந்த நேரம் 2011க்கு முன்னாடி வருமாண்ணே? (செந்தில் கேக்குற மாதிரி கேட்டுகோங்க)..

//உங்கள் மேல் ஒரு கொசு உட்கார்ந்தால் என்ன நடக்கும்? ஒன்றும் இல்லை. ஆனால் சிலகாலத்திற்கு பிறகு மலேரியாவோ, சிக்கன்குனியாவோ வரலாம்.//
ஜோசியத்துல கொசு ஒக்காந்தா கூட நோய் வருமாண்ணே? ஆனா அறிவியலில் கொசு கடிச்சாதான் நோய் வரும்முன்னு சொல்லுறாங்க.. கொஞ்சம் கட்டம் கட்டி சே! கட்டம் போட்டு வெளக்க முடியுமாண்ணே?

//
//குசும்பன் said...
2011ல் யார் முதல்வராக வாய்பு அதிகம் என்றும் சொல்ல முடியுமா?//
2011 விடுங்கண்ணே அடுத்த வருசம் யாருண்ணே இந்தியாவோட பிரதமரா வருவாங்க? இதுக்கு கூட நேரம் வரும்பொழுது தான் சொல்லுவிங்களா?



//திரு ரங்குடு அவர்களே,

ஆருடம் சொல்லி இருக்கிறேன்.
இன்னும் அந்த சம்பவம் நடக்கவில்லை.

24 மணி நேரம் பொருங்கள் என்ன நடக்கிறது என பார்த்து விட்டு ஜோதிடம் தவறா? நான் தவறா? இல்லை உங்கள் எண்ணமே தவறா என தெரியவரும்.
//

சொன்ன நேரத்துல ராக்கெட்டு சும்மா சுய்ய்ய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்ன்னு மேல பறந்துச்சே இப்ப என்ன செல்றீங்க? இப்ப என்ன சொல்றீங்க?

ஏம்பா அமர பாரதி.. எல்லாத்தையும் இங்கேயே சும்மா சொன்னா? நாங்க எப்படி கல்லா கட்டுறது.. உங்களோட ஒரே இம்சையப்பா.. புரிஞ்சிகோங்கய்யா...

தருமி மற்றும் கல்வெட்டு பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க. தருமி சார் அதெப்படி உங்களுக்கு புரியுற மாதிரி அம்முட்டு விரசா சொல்லிடுவோமா?

கல்வெட்டு said...
This comment has been removed by the author.
கல்வெட்டு said...

சுவாமி ஓம்கார் this is from your post

//உங்கள் கருத்துக்கள், கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கபடுகிறது.//

this is your response response to me for the comments

// உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்த வலைதளம் உங்களுடையது அல்லவே? படிக்கவோ அல்லது பின்னூட்டம் இடுவதற்கோ என்ன இருக்கு? //

????

வீ. எம் said...

ஸ்வாமி, உங்கள் பதில் தெளிவாக் இல்லையே.. ஒருவேளை என் கேள்வி புரியும்படி இல்லையா?

நீங்கள் பதிவு எழுதியது 20 ஆம் தேதி..

சந்திராயன் 6.20 கிளம்பிடும் வகையில் கவுன்டன் வைக்கபட்டுள்ளது என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்ட நாள் - 19 ம் தேதி.

இந்த செய்தியை பத்திரிக்கைக்கு சொன்னவர் அண்ணாதுரை. 19ம் தேதி பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது என்றால், நிச்சயம் அவர் 18 ம் தேதி இரவுக்குள் தான் பேட்டி கொடுத்திருக்கமுடியும்.

இஸ்ரோவின் வலைதளத்தில் நான் தேடினேன் , அதில் 5 - 6 மனிக்குள் என எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என கண்டுபிடிக்க இயலவில்லை..

அப்படியே இருந்தாலும் இஸ்ரோவேம 18ம் தேதியன்று மாற்றப்பட்ட கவுன்டவுன் மற்றும் புதிய நேரம் (6.20) என்று தெளிவாக பத்திரிக்கைக்கு தகவல் கொடுத்து, அது 19 ம் தேதி பிரசுரம் ஆகியுள்ளது.

நீங்கள் பதிவிட்டுள்ளது அக்டோபர் 20, 10.55 (19ம் தேதி காலை மற்றும் மாலை தினசரிகள் வந்த பிறகு)

ஆக, முன்பே பத்திரிக்கைகளில் வந்த 6.20 வது என்பது தான் அடுத்த நாள் உங்கள் கனிப்பில் 6 - 8 என்று வந்துள்ளது. நீங்கள் கணித்து இந்த பதிவு போடும் வரை 19, 20 ம் தேதி நாளிதழகளை படிக்கவில்லையா??


அடுத்து - உங்கள் கனிப்பில் "சிறு தடங்கல்" என்று சொன்னீர்கள். அது என்ன தடங்கல் என்று கேட்டேன் அதற்கு பதில் வரவில்லை.

விளக்கவும், நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

எனது வலையுலக நண்பர்களுக்கு,

இந்த கட்டுரை சந்திராயன் செயற்கை கோள் சார்ந்தது.

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் உடனே பதில் சொல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை.

நான் உங்கள் வீட்டின் பணி ஆள் ஆல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள்.

அடுத்த முதல்வர் யார், பிரதமர் யார் மேலும் ...விஜயின் வில்லு ஓடுமா...என முட்டாள் தனமான கேள்விகளை இங்கு பதிவு செய்வதை தவிர்க்கவும்.

இதற்கெல்லாம் பதில் சொல்லி..ஜோதிட சாஸ்திரம் என்ற புனிதமான விஷயத்தை சாக்கடையில் புகுத்த விரும்பவில்லை.

ஜோதிடம் நம்பிக்கையா விஞ்ஞானமா என புரிந்துகொள்ளவேண்டுமானால் முதலில் ஜோதிடத்தை கற்று பின் பின்னூட்டம் கொடுங்கள்.

நீங்கள் பின்னுட்டம் இடுவதற்கும் ஓர் வரம்பு உண்டு. இங்கு மட்டுறுத்தல் இல்லை என்பது மனித உரிமையை மதிக்கும் பண்பு. மதிக்கவிடுங்கள்.

உங்கள் பாஷையில் சொல்லவேண்டுமானால்..
பக்கவாதத்திற்கு மட்டுமே மருந்து உண்டு.

மொக்கை வாதத்திற்கு அல்ல.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வீ. எம்,

இஸ்ரோவின் அதிகார பூர்வமான வலைதளத்தில் 6.22க்கு ஏவப்பட்டது என கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பு இங்கே : http://www.isro.gov.in/pressrelease/Oct22_2008.htm


பத்திரிகையும் நீங்கள் சொன்ன விஞ்ஞானியும் 6.20 என சொன்னர்கள் என்கிறீர்கள்.

இஸ்ரோவின் வலைதளத்தில் 5 முதல் 6 என்றே முன்பு கொடுக்கபட்டிருந்தது.


விளம்பரம் தேடவோ, வியாபாரம் செய்யவோ நான் இங்கே எழுதுவதில்லை.

முதல் நிலையில் நான் சொன்ன பலன் “ஏவுதல் வெற்றி பெறும்” அதை சுட்டிகாட்டி யாரும் பேசவில்லை.

வானிலை தடுமாற்றமும் தடங்கல்களும் இருந்ததை பத்திரிகையும் இஸ்ரோவும் குறிப்பிட்டுள்ளன.

இனிவரும் காலத்தில் எனது கணிப்பை மேலும் துல்லியமாக்குகிறேன்.

தருமி said...

//அடுத்த முதல்வர் யார் என்னால் கண்டிப்பாக சொல்ல முடியும்.//

Mr. ஓம்கார்,

இப்படியும் ஒரு ஒப்புதல் வாக்குமூலம். அதன்பின் //அடுத்த முதல்வர் யார், பிரதமர் யார் மேலும் ...விஜயின் வில்லு ஓடுமா...என முட்டாள் தனமான கேள்விகளை ..// இப்படி ஒரு "புத்திசாலித்தனமான" பதில்.

அடிப்படை நாகரீகம் தவறியிருக்கிறீர்கள்.

supersubra said...

ஜோதிடம் ஒரு முழுமையாக அறிந்துகொள்ளப்ப்டாத ஒரு அறிவியல் கிளை என்பதில் சந்தேகம் இல்லை. என் வாழ்வில் தனிப்பட்ட முறையில் அனுபவங்கள் மூலம் இது ஒரு உண்மையான அறிவியல் என்பதை உணர்ந்து கற்க ஆரம்பித்தேன். ஆனால் எந்த ஒரு இயலை போலவே இதுவும் ஆழ்ந்து கற்கவேண்டிய இயல். என் துறைக்கு அப்பாற்பட்ட என் தேவைக்கு மீறிய அளவின் காரணம் கருதி கைவிட்டேன். என் அன்பவத்தில் உணர்ந்தவற்றை என் பதிவில் பதிந்துள்ளேன். நோயாளி இறந்தால் மருத்துவ இயல் பொய்யல்ல. வாதி தோற்றால் சட்டம் பொய்யல்ல. அது போல்தான்.

அன்புள்ள ஓம்கார் அவர்களுக்கு நீங்கள் தொடருங்கள் உங்கள் பணிகளை. அறிந்து கொள்ள ஆயிரம் பேர் இருக்கின்றோம்.

கிரி said...

//ஒருவரின் நம்பிக்கை பிறரை புண்படுத்தாத வரை அதற்கு ஒன்றும் தோஷம் இல்லை.//

//நீங்கள் பின்னுட்டம் இடுவதற்கும் ஓர் வரம்பு உண்டு. இங்கு மட்டுறுத்தல் இல்லை என்பது மனித உரிமையை மதிக்கும் பண்பு. மதிக்கவிடுங்கள்.//

வழிமொழிகிறேன்

சுவாமி எனக்கு ஜோதிடத்தில் முழுவதும் நம்பிக்கை இல்லை என்றாலும், அதை ஒரு வழிகாட்டியாக எடுத்து கொள்கிறேன், கண்மூடித்தனமாக பின்பற்றுவதில்லை. அதுவுமில்லாமல் தெரியாத ஒன்றை பற்றி புரிந்து கொள்ளாமல் அதி புத்திசாலியாக பின்னூட்டம் போடுவதில் எனக்கு விருப்பமில்லை.

ஒருத்தருக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றால் அல்லது பிடிக்கவில்லை என்றால் கிண்டலாக பின்னூட்டங்களை போடுவதை தவிர்க்க வேண்டும். கிண்டல் செய்பவர்களே கிண்டலடிக்கப்படக்கூடிய நிலை வரலாம். ஓம்கார் அவர்களின் பதிவுகளில் ஒப்புதல் இல்லை என்றால் ஆரோக்கியமான விவாதம் செய்யலாம், விவாதம் என்கிற பெயரில் நக்கலாக பேசுவது என்பது ஒப்புக்கொள்ள கூடிய ஒன்றாக இல்லை.

அமர பாரதி said...

ஸ்வாமி,

//அடிப்படை நாகரீகம் தவறியிருக்கிறீர்கள்.// இதை நான் வழிமொழிகிறேன். அதனால் உங்களுக்கு எந்த பாதகமும் சாதகமும் இல்லை. ஸ்வாமிகள் இன்னும் வீ.எம். முக்கு சரியான பதில் சொல்லவில்லை.


//நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் உடனே பதில் சொல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை// நன்று. நீங்கள் எழுதுவதை எல்லோரும் படித்து பாராட்ட மட்டும் செய்வார்கள் என்று எதிர் பார்க்க முடியாது.

//முதல் நிலையில் நான் சொன்ன பலன் “ஏவுதல் வெற்றி பெறும்” அதை சுட்டிகாட்டி யாரும் பேசவில்லை.// உண்மைதான். நீங்கள் அதை மட்டும் சொல்லியிருந்தால் இத்தனை கேள்விகள் வந்திருக்காது. ஆனால் இங்கே கேட்ட கேள்விகள் தடங்கல், பிறகு வெற்றி என்று சொல்லியிருந்ததால் தான்.

மதிபாலா said...

ஒருத்தருக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றால் அல்லது பிடிக்கவில்லை என்றால் கிண்டலாக பின்னூட்டங்களை போடுவதை தவிர்க்க வேண்டும். கிண்டல் செய்பவர்களே கிண்டலடிக்கப்படக்கூடிய நிலை வரலாம். ஓம்கார் அவர்களின் பதிவுகளில் ஒப்புதல் இல்லை என்றால் ஆரோக்கியமான விவாதம் செய்யலாம், விவாதம் என்கிற பெயரில் நக்கலாக பேசுவது என்பது ஒப்புக்கொள்ள கூடிய ஒன்றாக இல்லை.///

வழி மொழிகிறேன். பகுத்தறிவு பேசுபவர்கள் பேச வேண்டிய இடம் இதுவல்ல...மக்கள் , மக்களிடம் , ஆயிரக்கணக்கான போலி சோதிடர்களை நம்பும் மக்கள் வெளியே உளனர்...

அவர்களின் விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் முயல வேண்டும்....

இங்கே நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல ஒரு சோதிடத்தைக் கற்றுத் தேர்ந்தவர் நமக்கு பதில் சொல்ல முன் வந்திருக்கிறார்.....அவரிடம் தகுந்த விளக்கங்களை கேட்டுப் பெற்று , பின் தெளிந்து அதன் பின்னரே விமர்சனங்களை வைக்க வேண்டும்.

ஆனாலும் ஸ்வாமி

நானும் ஒரு பகுத்தறிவுவாதிதான்.
எல்லாவற்றையும் சோதிட சாஸ்திரத்தில் முன்கூட்டியே கணிக்க முடியுமென்றால் நிகழ்வுகள் எதனை அடிப்படையாக கொண்டு நிகழ்கின்றன???

உதா , என் சோதிட நண்பர்கள் சொல்வதுண்டு , ஒவ்வொரு கிரகத்தின் கதிரும் மனிதன் மேல் ஆதிக்கம் செலுத்துகிறதென்று...ஆனால் மனிதனுக்கோ , கதிர்களுக்கோ சம்பந்தமில்லாமல் பூமி அதிர்ச்சி ஏற்படுகிறது.அதன் மூலமே சுனாமி ஏற்படுகிறது......அதையும் சோதிடத்துடன் முடிச்சு போடுவது கடைந்தெடுத்த முட்டாள்தனம் போலவே தோன்றுகிறதே , அதைப்பற்றி விளக்க முடியுமா?