நாம் பயன்படுத்தும் சொல் நம்மை உயரத்தவும் தாழ்த்தவும் செய்யும்.
ஆம். வார்த்தைக்கு சக்தி உண்டு.
தமிழ் மொழியோ வேறு மொழியோ ஒரு வார்த்தை நாகரீகம் என்ற பெயரில் அடிக்கடி உச்சரிக்கப்படுவது உண்டு. அமெரிக்க ஆங்கிலம் பேசும் நம் ஆட்களில் பலர் S***, F*** என திரும்ப சொல்வதை பார்க்கிறோம். (உண்மையான அமெரிக்க ஆங்கிலத்தில் அப்படி பேசவேண்டியதில்லை என்பது வேறு விஷயம்.) மீண்டும் மீண்டும் இவ்வார்த்தைகளை சொல்வதால் நம் வாழ்க்கையும் இதுபோலவே ஆகும் என்பது புரிந்துகொள்ள வேண்டும்.
மந்திரசாஸ்திரம் போன்ற பெரிய விஷயங்களை வைத்து இக்கருத்தை ஆய்வு செய்ய வேண்டியதில்லை. நாம் திரும்ப திரும்ப ஒரு வார்த்தையை உச்சரிக்கிறோம் என்றால் அதன் தாளம் நம் மனதில் செயல்பட்டு ஒருவித அதிர்வை நம் சிந்தனையிலும் செயலிலும் ஏற்படுத்தும். அதனால் தமிழ் பயன்பாட்டில் பலர் மங்களச்சொல் அமங்களச்சொல் என பிரித்தார்கள். சிலர் ‘சாவி’ என கூறுவது தவிர்த்து ‘திறப்பு’ என சொல்வதுண்டு. சாவி என்ற சொல் சாவு என்ற அமங்களத்தை கூறுவதால், திறப்பு என்பது மங்களச்சொல்லாக பார்க்கப்படுகிறது. எளிமையாக சொல்வதானால் நேர்மறை வார்த்தைகள் நம்மை மேம்படுத்தும்.
சில வருடங்களாக தமிழக மக்கள் ‘மொக்கை’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். இதன் விளைவு, நம்மை ஆள்பவர்கள் முதல் மக்கள் மனநிலை வரை இந்த மொக்கை தன்மை எட்டிப்பார்க்கிறது.
திரையிசை பாடல்களில் கூட கவிஞர்கள் எழுதும் வரிகள் பலரை திரும்ப திரும்ப உச்சரிக்க வேண்டிய சூழல் வரும். அவ்வாறு செய்வதால் அந்த வரிகளின் பாதிப்பு உச்சரிப்பவர்களை பாதிக்கும். பழைய திரை இசை பாடல்களை எழுதிய கவிஞர்கள் இக்கருத்தை உணர்ந்து கவனமாக, தவறான வார்த்தைகளை தவிர்த்தார்கள்.
கொஞ்ச காலத்திற்கு முன் ‘கொலைவெறி’ , “வெட்றா அவள” போன்ற பாடல்கள் பிரபலமானது. இதனால் பலர் உச்சரித்தவண்ணம் இருந்தார்கள். இதனால் ஆணவ கொலை முதல் காதல் முறிவு கொலை வரை செய்திகளை நாம் கடந்து வருகிறோம்.
இதையெல்லாம் ஏன் சாமி இப்ப சொல்றீங்கனு நீங்கள் கேட்க்கலாம்..
2019ஆம் ஆண்டு நமக்கு “மாஸ் மரணம்” காத்திருக்கிறது...! என்பதை எச்சரிக்கவே கூறுகிறேன்.
0 கருத்துக்கள்:
Post a Comment