Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, August 19, 2015

வாஸ்து கோளாறு - 3

முல்லா நஸ்ருதீன் கதை ஒன்று உண்டு. முல்லா அரசரின் முதன்மை மந்திரியாக இருந்தார். அரசர் முக்கிய விஷயங்களை முல்லாவிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார். ஒரு நாள் முல்லா சிறிய தூண்டு கட்டிக் கொண்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அரசவை காவலர்கள் வந்து அரசன் அழைப்பதாக சொன்னவுடன் அப்படியே கிளம்பி அரசவைக்கு வந்துவிட்டார்.

துண்டு மட்டும் அணிந்து முல்லா வருவதை கண்டதும் அரசனும் அரசவையில் உள்ளவர்களும் முகம் சுளித்தனர். அரசன் முல்லாவிடம் அரசவைக்கு வரும் பொழுது அணியும் ஆடையை அணிந்து வா என கூறினார். வீட்டுக்கு சென்ற முல்லா ஒரு குச்சியை எடுத்து அதில் அரசவையில் அணியும் மந்திரி உடையை அணிவித்து அத்துடன் ஒரு கடிதம் எழுதி காவலர்களிடம் கொடுத்து அனுப்பினார்.

அந்த கடிதத்தில் ”அரசே , முக்கிய ஆலோசனை என்றவுடன் கட்டிய துண்டுடன் வந்தேன். என் உடை தான் ஆலோசனை வழங்குகிறது என்பது உங்கள் பேச்சின் மூலம் அறிந்தேன். இக்கடிதத்துடன் உடை அணிப்பி உள்ளேன். ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள் - என எழுதி இருந்தது..!

உடை ஒரு மனிதனின் அறிவு செயலை செய்யாது. அறிவு அந்த உடையை அணிந்திருக்கும் மனிதனுக்கு உள்ளே இருந்து செயல்படுமே தவிர உடையில் என்ன இருக்கிறது?

வீடு என்பது நம் உடலின் மேல் அணியும் ஆடை போல பெரிய உடை என தெரிந்துகொள்ளுங்கள். உடையின் உள்ளே வசிக்கும் மனிதன் ஆற்றல் பெற்றவனாக இருந்தால் என்ன உடை அணிந்தாலும் அவனுக்கு ஆற்றல் செயல்படும். அதை விடுத்து ஒரு மனிதன் ஆற்றல் இழந்து இருக்க வீடு தான் ஆற்றலை கொடுக்கிறது என்றால் அவன் அத்தகைய ஆற்றலை எப்பொழுது வேண்டுமானாலும் இழப்பான்.

உங்கள் உடை செளகரியமாகவும், தேவையான வசதிகள் உடையதாகவும், நவநாகரீகமாகவும் இருந்தால் அது சரியான உடை என அணிந்து கொள்கிறோம்.

அதுபோல உங்கள் வீடும் செளகரியாமான, வசதி உள்ள மற்றும் நாகரீகமான நிலையில் இருந்தால் நல்லது. வாஸ்து அடிப்படையில் வீடு கட்டும் பொழுது  அமைத்துக் கொள்ளுங்கள், பிறகு வாழ்க்கை முழுவதும் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை. துன்பம் வரும் பொழுதெல்லாம் வாஸ்து பார்க்கும் நிலையில் மக்கள் தற்சமயம் இருக்கிறார்கள். இது மிகவும் தவறான ஒரு நிலை.


வாஸ்து என்பது உபசாஸ்திரம். பிற சாஸ்திர ஆன்மீக விஷயத்துடன் வாஸ்து இணைந்து செயல்படும். வாஸ்துவை மட்டுமே வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. யாக சாலை எப்படி அமையவேண்டும், எங்கே யாக குண்டம் இருக்க வேண்டும் என்பது வாஸ்து குறிப்பில் உண்டு.

அப்படி யாகசாலையை வாஸ்து அடிப்படையில் கட்டிவிட்டு சும்மா இருந்தால் போதுமா? அங்கே யாகங்கள் நடந்தால் தானே பலன் உண்டு?

வீடு கட்டும் பொழுதும், வீட்டு கட்ட துவங்க பூமி பூஜை செய்யும் பொழுதும் வாஸ்து புருஷன் என்ற நிலையில் பஞ்சாங்க கணித தன்மை செய்கிறார்கள்.

அதன்படி வருடம் சில நாட்கள் வாஸ்து புருஷன் விழிப்பான், குளிப்பான், உணவு உண்பான் மற்றும் தாம்பூலம் தரிப்பான் என சொல்லுவதுண்டு. வாஸ்து காலத்தில் சரியான நேரத்தில் பூமிபூஜை செய்து வாஸ்து பூஜை செய்யலாம். வாஸ்து புருஷன் என்பது பஞ்ச பூதத்தின் சலனத்தின் அடிப்படையில் ஏற்படும் விளைவை ஒரு மனிதனாக உருவகப்படுத்துவது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

பிறகு கிரகபிரவேசம் நடக்கும் நாளுக்கு ஒரு நாள் முன்பு வாஸ்து சாந்தி என ஒரு பூஜை செய்வார்கள். வாஸ்து புருஷனை தவறாக துன்புறுத்தி இருந்தாலோ, வாஸ்து பிரச்சனை கொண்ட வீடாக இருந்தாலோ அதனால் ஏற்படும் விளைவுகளை தீர்க்க செய்வதே இந்த வாஸ்து சாந்தியாகும்.

வாஸ்து சாந்தி ஹோமங்கள் செய்த பின்பு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்றவைகள் செய்த பின்பே கிரஹபிரவேசம் செய்வோம். அதனால் இத்தனை ப்ரார்த்தனைகளுக்கு பிறகும் வாஸ்து பிரச்சனை வர வாய்ப்பு இல்லை..!

தற்சமயம் சுலநலக்காரர்களால் வாஸ்து புருஷன் - வாஸ்து பகவானாக மாறிவிட்டார். விரைவில் அவருக்கு கோவில் கட்டி அங்கே சென்று வழிபட்டால் வாஸ்து பிரச்சனை நீங்கும் என கிளப்பிவிடுவார்கள். இப்படிதான் நம் சாஸ்திரங்கள் கொச்சைப்படுத்தப்படுகிறது. நம் கலாச்சார வாஸ்து கோளாரு பத்தாது என சீன வாஸ்து , எகிப்து வாஸ்து என தனியாக குழப்பங்கள் உண்டு.இறந்த உடல் மூவாயிரம் வருடமாக காக்கப்படும் பிரமீடு வைத்து உள்ள கட்டிடம் வாஸ்துவை முடிவு செய்யும் என தான் உயிரோடு வசிக்கும் வீட்டில் பிரமீடு வைக்கிறார்கள். இதற்கு தான் நடைபிணமாக வாழ்வது என சொல்லுவார்களோ?

இவைகளை பற்றி நான் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை. நம் கலாச்சார வாஸ்துவே கேவலமாக பயன்படுத்தும் இக்காலத்தில் அடுத்த கலாச்சாரம் பற்றி விமர்சனம் செய்ய என்ன தகுதி நமக்கு உண்டு?

வாஸ்து சரியில்லை என்றால் வீட்டை மாற்றாதீர்கள். வாஸ்து சரி யில்லை என்றால் உங்கள் வீட்டின் பகுதியை இடித்துக்கட்டாதீர்கள். வாஸ்து சரி இல்லை என்றால் காற்றில் அசையும் மணியோ மூங்கில் நாற்றோ ,பிரமீடோ உதவாது. வேறு என்ன தான் செய்வது?

ஒரு பயில்வான் உங்களிடம் வம்பு செய்கிறான் என வைத்துக்கொண்டால் அவனை எதிர்க்க நீங்கள் உங்களின் உடையை மாற்றிக்கொண்டு போனால் போதுமா? இல்லை உங்கள் உடல் பலத்தை அதிகரித்துக் கொண்டு செல்ல வேண்டுமா என நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

கீழ்கண்ட ஏதாவது ஒரு விஷயத்தையோ பல விஷயத்தையோ நீங்கள் பின்பற்றினால் வாஸ்து பற்றி கவலைபட வேண்டாம்..!

மந்திர ஜபம் : தினமும் குரு உபதேசித்த மந்திரத்தை ஜபம் செய்பவராக இருக்க வேண்டும். அல்லது பாராயண மந்திரம் என சொல்லப்படும் மந்திரம் சொல்பவராக இருத்தல் வேண்டும்

தியானம் : தினமும் இறைவனின் மேல் தியானம் செய்பவராக இருத்தல் வேண்டும்.

தான தர்மம் : வருடம் ஒரு முறையாவது தானம் செய்பவராக இருத்தல் வேண்டும்

யாகம் : வருடம் ஒரு முறை வீட்டில் வேள்வி நடத்த வேண்டும்.

குரு அம்சம் : குருவின் ஆசி பெற்ற அவரின் உடை, ஜபமாலை, பாதுகை, குடை , பிரசாதம் ஏதேனும் ஒன்று பூஜையில் இருத்தல் வேண்டும்.

இவை அனைத்தும் ஆற்றலை மேம்படுத்தும் கருவிகள். இவைகள் இருந்தால் வாஸ்து கோளாரு என்ன எந்த கோளாரும் ஒன்றும் செய்யாது.

இதற்கு மேலும் இவையெல்லாம் எனக்கு தெரியாது, ஆற்றல் மேம்படுத்த முயற்சிக்கவும் மாட்டேன் என நீங்கள் சொன்னால் வாஸ்து சாஸ்திர நிபுணரை அழைத்து உங்கள் வீட்டின் மூலையையும் என்னிடம் வந்து உங்கள் மூளையையும் சரிசெய்து கொள்ளுங்கள்.


(வாஸ்தவமானது)

ஓம் தத் சத்

7 கருத்துக்கள்:

திவாண்ணா said...

//விரைவில் அவருக்கு கோவில் கட்டி அங்கே சென்று வழிபட்டால்// ஐய்! நல்ல ஐடியாவா இருக்கே! ஒரு கோவில் கட்டி பிரபலப்படுத்திடுவோமா?

திவாண்ணா said...

தத் சத் சொன்னதால தொடர் முடிஞ்சாச்சுன்னு எடுத்துக்கலாமா? :-))

Senthil said...

அருமையான தீர்வுடன் அழுத்தமான கருத்துகள்!
வாஸ்து வாஸ்த்தவமனது. நன்றி!

K.Kalachalvan said...

நல்ல பதிவு ஜி , இங்க ரொம்ப மோசம் போங்க

Sermaraj S said...

/////////என்னிடம் வந்து உங்கள் மூளையையும் சரிசெய்து கொள்ளுங்கள்.////////
சுவாமிஜி நச் டச்.....

சில சந்தேகங்கள் சுவாமிஜி...

1. வாஸ்துவை நவக்கிரக காரகத்துவங்களோடு இணைத்து பயன்படுத்தலாமா? உதாரணமாக வடகிழக்கு குருவிற்கான இடம். எனவே அங்கு பூஜை அறை. தென்கிழக்கு சுக்கிரன் ஆதிக்கம். எனவே சமையல் அறை.
2. மாற்றி அமைத்தால் உண்மையில் பிரச்சினை வருமா? (ஆன்மிக நெறியில் இல்லாதவர்களுக்கும் உள்ளவர்களுக்கும்)
3. பஞ்ச பூதங்களை மனையில் சமன்படுத்த முடியுமா? சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைப்பது இதன்படி தானா?
4. அஸ்திவாரம் தோண்டும் போது கிடைக்கும் சல்லியங்கள் உண்மையிலேயே நன்மையை/பாதிப்பை தருமா?

Thirumal said...

ஐயா

வாஸ்து சரியில்லை என்றால் மேற்கண்ட எளிய தீர்வு முறைகளை கடைபிடித்து வாழ்வில் வெற்றி பெறுவோம்.

எம்.திருமால்
பவளத்தானூர்

sekar said...

அற்புதமான விளக்கம். வாஸ்து பற்றிய சந்தேகங்கள் தீர்ந்தன, நன்றி சுவாமிஜி.