இறையருள் ஒளிரட்டும், குரு அருள் பெருகட்டும்.
ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை தனிமனித ஆன்மீக முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. நமது இயல்பு வாழ்க்கையின் சூழலால் ஆன்மீக ஈடுபாடு ஏற்பட்டாலும் அதை தொடர்வதிலும் ஆழ்ந்து செயல்படுவதிலும் சில தடைகள் ஏற்படுகிறது.
அத்தகைய சூழலை சரி செய்யும் நோக்கில் ப்ரணவ பீடத்தில் நடைபெறும் நிகழ்வு - ஓம்கார யோகம்.
ஓம்கார யோகம் என்பது 90 நாட்களுக்கு ஒரு முறை ஒரு நாளை முற்றிலும் ஆன்மீகத்திற்காக அர்ப்பணிக்கும் வகையில் உங்களை தூண்டி ஆன்மீக வேள்வியில் ஈடுபடுத்தும் நிகழ்வாகும்.
காலை ஹத யோக பயிற்சியில் துவங்கி பல்வேறு தியான பயிற்சிகள் மற்றும் மனவள பயிற்சி நடைபெறும். மாலை வேளையில் நம் கலாச்சார நூல்களான பாகவதம், திருமந்திரம் மற்றும் உபநிஷத்துகளுடன் சத்சங்கம் மற்றும் பஜன் நடைபெறும்.
ஆங்கில வருடத்தின் ஒற்றைப்படை மாதங்களின் மூன்றாம் ஞாயிறு அன்று ஓம்கார யோகம் நடைபெறும். இந்த நிகழ்ச்சி மார்ச் மாதம் 15ஆம் தேதி கோவை ப்ரணவ பீடத்தில் நடைபெறுகிறது.
ஓம்கார யோகத்தில் அனைவரும் கலந்து கொள்ளலாம். இதற்கு முன் ஆன்மீக பயிற்சியில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
ஓம்கார யோகத்தில் கலந்து கொள்ள நன்கொடை 500/- ரூபாய். இந்த நன்கொடையில் மதிய உணவு தேனீர் வழங்கப்படும். ஓம்கார யோகம் என்ற இந்த அந்தர் யோக நாளில் உங்கள் நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர்கள் என யாரேனும் ஒருவரை உங்கள் சார்பாக அழைத்து வரலாம். அவர்களுக்கு இப்பயிற்சி இலவசம்.
உங்களின் ஆன்மீக நெருப்பை அணையாமல் ஒளிர செய்ய ஓம்கார யோகத்தில் இணைவோம்.
மேலும் விபரங்களுக்கு
ஸ்வாமி ஓம்கார்
தொலைபேசி எண் : 9944 2 333 55
0 கருத்துக்கள்:
Post a Comment