Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, December 3, 2013

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - பகுதி 5

உலகின் இரண்டாவது பெரிய சிகரம்...உலகின் மிக நீண்ட மலைத்தொடர் ஆண்டிஸ் மலைக்கு சுப்பாண்டியுடன் செல்ல திட்டம்.
அவ்வழியே பயணிக்கும் பொழுது உலகின் சிறந்த வான் ஆராய்ச்சி கூடத்தை கண்டு களிப்பதும் ( நாங்களும் ஜோசியம் படிச்சிருக்கொம் இல்லையா? - சுப்பாண்டியின் டயலாக் இது...! ), நிலவு பள்ளத்தாக்கு என்ற உலகின் முதல் உயிர் வாழ்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என திட்டம் மிக அற்புதமாக தீட்டப்பட்டது.

சில நூறு கிலோமீட்டர் தூரமே காரில் பயணித்து பழக்கம் உள்ள நான் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வாகனம் ஓட்ட வேண்டுமானால் மிகவும் தேர்ச்சி தேவை...குழப்புத்துடன் அமர்ந்திருந்தேன்.
ஜெர்மனியில் உலகின் அதிவேக சாலை என்ற பகுதியில் 220 கிலோமீட்டர் வேகத்தில் கார் ஓட்டி இருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் 90 கிலோமீட்டர் தொலைவு கொண்டது. 20 நிமிடத்தில் நீங்கள் கோவையிலிருந்து ஈரோடு சென்று விடலாம் என நினைத்தால் வியப்பாக இருக்கிறதா? ஆம் அது போன்ற தொலைவை ஜெர்மனியில் 20 நிமிடத்தில் கடக்கலாம். ஆனல் இங்கே விஷயம் வேறு அதிவேகம் சாத்தியமல்ல மேலும் இது சில நூறு கிலோமீட்டரும் அல்ல. சில ஆயிரம் கிலோமீட்டர்கள்....ஐந்து நாள் பயணம்....!

என் உதவிக்கு என் அர்ஜண்டினாவின் பிரதான மாணவி ராமதாசி வந்தார். அவரின் இயற்பெயர் வேறு. நாம் கூப்பிடுவதற்கு எளிமையாக இருக்க இப்பெயர். ராமனுக்கு தாசர்கள் உண்டு. அதாவது ஆஞ்சனேயரும், சுக்ரீவன் மற்றும் விபீஷணன் ஆகியோரை குறிப்பிடலாம். தாசிகள் என்றால் அதுவும் ராமனுக்கு என சொல்லும் பொழுது கொஞ்சம் முரணாக தெரிகிறதா?

ராமனுக்கு ஆஞ்சனேயரை போல பெண் உருவில் தாசர்கள் உண்டு. அவள் தான் சபரி. ஸ்ரீ ராமனின் வருகைக்காக காத்திருந்து, வந்தவுடன் ராமனின் நாக்கின் சுவை உணர்ந்து தான் புசித்து பின் அளித்த ராம தாசி.

அது போல என் அர்ஜண்டினாவின் வருகைக்கும், எனது உணவு பழக்கத்தையும் உணர்ந்து ஓர் தாய் போல என்னை பார்த்துக்கொண்டார். 

நம்மில் பலர் தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என வாய் கிழிய பேசினாலும், அதை பின்பற்றுவதில்லை. என்னிடம் பயின்றதை தம் மக்களும் பயில வேண்டும் என என்னை வரவேற்று ஏற்பாடுகளில் என்னை ஆச்சரியப்படுத்தியவர் ராமதாசி.

ஸ்பானிஷ் மொழியில் பத்திரிகை நடத்தி அதில் எனக்கென ஒரு பக்கம் ஒதுக்கி என் செயல்களை எழுதி வந்திருக்கிறார். அர்ஜண்டினா தெருக்களில் வலம் வரும் பொழுது “ஹோலா ஸுவாமிய்” என மக்கள்  அவர்கள் உச்சரிப்பில் என்னை அழைக்க காரணமாக இருந்தவர்.

கார் பயணத்தில் தானும் ஓட்டுவதாக கூறி இணைந்து கொண்டார். மேலும் ஸ்பானீஸ் மொழி தெரிந்தவர் ஒருவர் உடன் இருப்பது அர்ஜண்டினாவில் அவசியம் என்பதால் சரி என்றேன். அவரும், நானும் பின்னே நம் சுப்பாண்டியும் இப்பயணத்தை துவக்கினோம்.

 “சாமி மூணு பேரா போறோமே போற காரியம் வெளங்குமா?” எனக்கேட்டான் சுப்பாண்டி. அவனுக்கு தெரியாது இவன் ஒருவனுடன் போலானே எந்த காரியமும் விளங்காது என்று.

பயணங்கள் மலைப்பாதை, அடந்த காடு மற்றும் பாலைவனம் ஆகியவை ஊடுருவி செல்லுவதால் பயண பாதையை உணர மேப் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.

சில மணிநேரம் சுப்பாண்டியை காணவில்லை. பிறகு கையில் ஒரு கருவியுடன் வந்தான்.

என்ன சுப்பு இது என கேட்டேன். “ஸ்வாமி கடவுள் வழிகாட்டாத இடத்திற்கும் இந்த ஜிபிஸ் வழிகாட்டும், நம்ம இருக்கும் தெருவில் டாக்ஸி ட்ரைவரிடம் இரவல் வாங்கிட்டேன்” என்றான். மொழி தெரியாத ஊரிலும் நம் ஆட்களின் இரவல் மொழி அபாரமானது என உணர்ந்தேன்.

சாமி காரில் வலது காலை வச்சு ஏறி இருக்கீங்க...... சூப்பர் சாமி...! என என்னை உற்சாகப்படுத்தினான். ஆம். ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்திய நாடுகள் தவிர பிற நாடுகளில் இடது பக்கம் தான் கார் ஓட்ட வேண்டும். அதனால் வலது காலை உள் வைத்தே வாகனத்தில் ஏற வேண்டும். 

புதிய வாகன சூழல், இடது பக்க ஓட்டும் தன்மை, அருகே சுப்பாண்டி, பின்புறம் ராமதாசி என பயணங்கள் துவங்கியது.

“கடவுள் வழிகாட்டாத இடத்திற்கும் இந்த ஜிபிஸ் வழிகாட்டும்,” என எந்த முகூர்த்தத்தில் கூறினானோ தெரியவில்லை.... கடைசியில் எங்களுக்கு கடவுள் தான் வழிகாட்டினார் ...!

(அன்பு பெருகும்)

7 கருத்துக்கள்:

Ashwin Ji said...

அரிய வாய்ப்பினை அருமையாகப் பயன்படுத்தி உள்ளீர்கள். விவேகானந்தர் செல்லாத நாடுகளில் இதுவும் ஒன்றா?

புதுகை.அப்துல்லா said...

// என் அர்ஜண்டினாவின் பிரதான மாணவி ராமதாசி //

அர்ஜென்டினாவில் என் பிரதான மாணவி என்றுதான் எழுத வேண்டும். நீங்கள் எழுதி இருப்பது அர்ஜென்டினா முழுவதும் உங்களுடையது என்ற அர்த்தத்தைத் தருகிறது! முற்றும் துறந்தவருக்கு அர்ஜென்டினா மட்டும் எதுக்கு? :)

திவாண்ணா said...

சஸ்பென்ஸ், சஸ்பென்ஸ்!
ராமதாசி சர்வ சகஜமா வஜ்ராசனத்துல இருக்காப்போல இருக்கே!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு , அஸ்வின் ஜி,

தெரியவில்லை. அவர் தென் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார் என்றே நினைக்கிறேன். ஆனால் அர்ஜண்டினாவுக்கு அல்ல.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே,

உங்கள் கருத்தில் இரண்டு புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

ஒன்று அர்ஜண்டினா என்னுடையது அல்ல. மற்றது நான் முற்றும் துறந்தவன்.

:)

ஸ்வாமி ஓம்கார் said...

திவாஜி,

//சஸ்பென்ஸ், சஸ்பென்ஸ்! //

என்ன செய்ய சரவணன் மீனாட்சியும் கோலங்களும் பார்த்து வளர்ந்துட்டோம். :))


//ராமதாசி சர்வ சகஜமா வஜ்ராசனத்துல இருக்காப்போல இருக்கே!//

ஆமாம் 2 மணிநேர பூஜைக்கும் அப்படித்தான். ஐயங்கார் யோகா மாணவி. அவர் ஹதயோகா கற்க துவங்கும் பொழுது நான் பிறக்கவே இல்லை :))

geethasmbsvm6 said...

ஆஹா, அடுத்துக் காத்திருக்கேன். :)))