ஆஸ்திரேலிய காட்டுகளின் மையப்பகுதி. கரிய பழங்குடியினர்களின் கூட்டம் காட்டின் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்துகொண்டிருந்தது. இருபது நாள் குழந்தையை கைகளில் சுமந்துகொண்டு தன் உடமைகள் தலையில் அழுத்த நடந்து கொண்டிருந்தாள் மலிந்தா.
சுருட்டை முடியும், கரிய உடலும் மேனியில் தோல் ஆடைகளும் கொண்ட கூட்டத்தின் நடுவே அதே உடல் மொழியுடன் கால்கள் மண்ணில் புதைபட பயனித்தாள். சிரமமான பிரசவத்தால் அவள் உடல் கிழிந்த துணிபோல துவண்டிருந்தது. சுமையின் அழுத்தமும், உடலின் தெம்பும் அற்றவளாக கால்களை இழுத்து இழுத்து நடந்து கொண்டிருந்தாள்.
குதிரைகளின் குழம்பொலி கேட்க ஆக்கிரமிப்பாளர்கள் கூட்டம் இவர்களை நோக்கி வரும் சப்தம் கேட்டது. பழங்குடியினர் கூட்டம் பல திசைக்கு ஓடினார்கள். உடல் வலுவற்ற நிலையில் நடக்க கூட சக்தி இல்லாத மலிந்தா சோர்வுடன் நின்றாள்.
ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் குதிரைகளுடன் மலிந்தாவை சூழ்ந்து நின்றுகொண்டனர். கைகளில் இருக்கும் துப்பாக்கிகள் இவளை நோக்கி குறி பார்த்தன.
“பழங்குடியினரின் பூசாரி இவள் தான். இவளின் தலையை பிளப்போம்” என்றான் குதிரையில் அமர்ந்திருந்தவன்.
மலிந்தாவின் கண்கள் சிவக்க துவங்கின....
“ஹம்...ஊஊஊஊஊ..” என நீண்ட மற்றும் பெரிய சப்தம் எழுப்பினாள்.
காட்டில் உள்ள சிறிய பூச்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு லட்சக்கணக்காக அந்த இடத்தில் சூழ்ந்தது. ஒரே இரைச்சலும் குடைச்சலும் அதிகமாக ஆகிரமிப்பாளர்கள் நிலைகுலைந்து போனார்கள். துப்பாக்கிகள் கீழே விழுந்தன. சிலர் குதிரையிலிருந்து விழுந்து தங்கள் காதுகளை மூடிக் கொண்டனர்.
சில நிமிடத்தில் பூச்சிகள் மறைந்து போனது. மலிந்தா நின்று இருந்த இடம் காலியாக இருந்தது.
“அந்த மாயக்காரியை பிடித்து வாருங்கள்....” குதிரைமேல் இருந்த ஒருவன் பெரும் சப்தம் செய்தான்.
அதே நேரத்தில் மலிந்தா சக்தியை திரட்டி காட்டின் ஒரு புறம் ஓடிக்கொண்டிருந்தாள். அவளின் இடம் நோக்கி ஓடினாள். இடம்பெயர இனி ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தாள்...!
அவளின் குடியிருப்புக்கு அருகே இருக்கும் ராட்சத மர பொந்தினுள் சென்று குழந்தையையும் தனது பொருட்களையும் வைத்து அருகே இருந்த விறகுகள் மற்றும் மர கட்டைகளை எடுத்துவந்து மர பொந்தின் வாயிலை அடைத்தாள்.
இருள் சூழ்ந்த மர பொந்தினுள் கண்களை மூடி வழக்கம் போல காவல் தெய்வத்தை வணங்கும் மந்திரத்தை உச்சரிக்க துவங்கினாள்.
சட்டனெ அவளின் மனக்கண்ணில் சில காட்சிகள் தெரியத்துவங்கியது.
கூடாரங்கள் கொண்ட பெரிய மைதானம்....மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து செல்கிறார்கள். நிர்வாண நிலையில் தலையிலிருந்து கால்வரை சடாமுடி தவழ ஒரு கூட்டம் நடந்து செல்கிறது.
அதன் நடுவே இருந்து தலை மழிக்கப்பட்ட நிலையில் கருப்பு சால்வை போர்த்திய ஒருவர் வெளிப்படுகிறார். கையில் பெரிய கம்பு மறுகையில் தீபம் ஏற்றப்பட்ட விளக்கை எடுத்துக்கொண்டு இவளின் அருகில் வந்தார்
தூரத்தில்.... பறவைகள் சலசலத்து பறப்பதை கண்ட ஆக்கிரமிப்பாளர்கள் அந்த திசையை நோக்கி குதிரைகளை முடுக்கினார்கள்.
பழங்குடியினரின் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த ஒரு மரத்தின் அடிப்பாக முழுமையாக கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. மரத்தின் பாதி அளவு கரிய நிறத்துடன் காணப்பட்டது. மரத்தின் மேல் இருந்த பறவைகள் பீதியுடன் கூக்குரல் எழுப்பிய வண்ணம் விண்ணில் பறந்தன.
(மேளா தொடரும்)
7 கருத்துக்கள்:
அருமை. விடாது கருப்பு அளவுக்கு பில்ட் அப் பலமா இருக்கு! இரு நிகழ்வின் உள்கருத்து இன்னும் பிடிபடவில்லை, அடுத்த பதிவின் ஆவல் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
கொஞ்சம் ஒருமை பன்மை பாத்து எழுதுங்க சாமி. நல்ல கதை இதனால் நெரடுது! :-))
நல்லா போயிட்டு இருக்கு .. Keep going
சுவாரிசியமாக இருக்கு...
3D effect -ல பார்க்கற fiction மாதிரி அருமையாக இருக்குங்க ..:-)
waiting for next part eagerly....
கதை சுவாரசியமா போகுது. நானும் ஆஸ்திரேலிய பழங்குடி இன மக்கள் தமிழ் நாட்டின் கள்ளர் இனத்தின் பிரிவு என்று கேள்விப்பட்டு இருக்கேன்
அவர்களின் உடம்பில் நாம் விபூதி பூசிக்கொள்வது போல பூசிக்கொள்வார்கள் என்றும் படத்தில் பார்த்திருக்கேன்.
ஒருமை, பன்மை மட்டுமில்லாமல் எழுத்துப் பிழைகளையும் தவிர்த்து எழுதி இருக்கலாம். :))))))
Post a Comment