Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, October 17, 2012

தெய்வம் இருப்பது எங்கே? பகுதி 3


கேள்வி : வருடத்திற்கு ஒரு முறை எங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வீடு திரும்பினால் எங்கள் பங்காளிகளில் யாரோ ஒருவர் இறந்துவிடுகிறார். இதன் காரணமாக பல வருடமாக யாரும் குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வதே இல்லை. மரண பயம்தான் காரணம். நாங்கள் என்ன செய்வது?

பதில் : நாங்கள் வழிபடுவது குலதெய்வமா? கொல தெய்வமா என கேட்கிறீர்கள்...! தெய்வ வழிபாட்டால் இறப்பு நிகழும் என்பது மிகவும் வேடிக்கையானது. குலதெய்வ வழிபாட்டு செய்ய சோம்பேறித்தனம் கொண்ட சிலர் பரப்பும் வதந்தி இது. மேலும் குலதெய்வ வழிபாட்டில் குடும்ப உறவு முறையில் சிலருக்கு போட்டி பொறாமை வரும்பொழுது பரப்பும் செய்தியாகவும் இருக்கிறது. உண்மையில் குலதெய்வ வழிபாட்டால் உடல் உபாதைகள் தீர்ந்து மற்றும் அந்திம காலத்தில் இருப்பவர்களில் ஆயுள் மேம்படுதல் ஆகியவையே ஏற்படும். ஆகவே ஒன்றை உணருங்கள் குலதெய்வம் மரணத்தை கொடுக்காது மரணமில்லா பெருவாழ்வையே கொடுக்கும்.

கேள்வி : நான் வழிபடும் முறையும் என் ஆன்மீக விருப்பமும் வேறாக இருக்கிறது. அகிம்சையையும், சைவத்தையும் நான் விரும்புகிறேன். ஆனால் என் குலதெய்வ வழிபாட்டில் மிருக பலி இருக்கிறது. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் குலதெய்வ வழிபாட்டை நான் எப்படி செய்வது?

பதில் : நீங்கள் நாகரீகம் அடைந்து நூடுல்ஸ், பிசா என சாப்பிட்டாலும் உங்கள் வீட்டில் இருக்கும் முதியவருக்கு என்ன பிடிக்கும் என நினைக்கிறீர்கள்? அவருக்கு எப்பவும் சாம்பார் ரசம் கொண்ட சாப்பாடு தானே? அதுபோலத்தான் நம் குலதெய்வ வழிபாட்டில் என்ன சொல்லுகிறார்களோ அதை நம் சித்தாந்தத்துடன் போட்டு குழப்பிக்கொள்ளாமல் செய்து வர வேண்டும். நம் தர்க்க ரீதிக்கு அப்பாற்பட்டது குலதெய்வ வழிபாடு என்பதை அறிக. மேலும் அவ்வாறு நீங்கள் சீர்திருத்தம் கொண்டுவர நினைத்தால் ஆன்மீக பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களின் வழிகாட்டுதலில் பலியிடுவதை மாற்றம் செய்யலாம். 

அதை விடுத்து குலதெய்வ வழிபாட்டை செய்ய மாட்டேன் என பலர் விட்டு விடுவது நல்லது அல்ல.

இவ்வாறு பல கேள்விகள் நமக்கு இருக்கிறது. குலதெய்வத்தை வழிபடுவேன் என்ற ஆர்வம் மற்றும் ஆழ்ந்த பக்தி இருந்தாலும் நாம் பல கேள்விகளையும், காரணங்களையும் கூற மாட்டோம்.

நேப்பாள மன்னரின் குலதெய்வம் இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதஸ்வாமி என்றும், இராமநாதபுரம் சமஸ்தான ராஜாவுக்கு நேப்பாள பசுபதி நாதர் தான் குலதெய்வம் என்றும் நான் கேள்விப்ப்பட்டதுண்டு.

சில கிலோமீட்டர் தூரம் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு செல்லவே நாம் கஷ்டப்பட்டுக் கொண்டு பிடி மண் எடுத்து வீட்டுக்கு அருகில் கோவில் கட்டிவிடுகிறோம். இவர்களை நினைத்துப்பாருங்கள். குலதெய்வத்தால் வடக்கும் தெற்கிலும் இருந்து இணைந்தவர்கள்....!

பழனி திருப்பதி போன்ற கோவில்கள் குலதெய்வமாக இருக்க வாய்ப்பு மிகமிக குறைவு. குலதெய்வம் தெரியாத காரணத்தால் இஷ்டதெய்வத்தையே குலதெய்வமாக்கியவர்கள் பலர் இருக்கிறார்கள். இஷ்ட தெய்வமும், ப்ரார்த்தனா தெய்வமும் முக்கியம் தான் ஆனால் அந்த தெய்வ அனுககிரகம் வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு அவசியம்.

உதாரணமாக சபரிமலை விரதம் இருந்து பள்ளிக்கட்டு பூஜை நேரத்தில் முதலில் வழிபடும் தெய்வம் குலதெய்வம். இது எல்லா ஆன்மீக பூஜைகளிலும் முதன்மையானது. இதை விடுத்து செய்யும் ஆன்மீக பூஜைகள் செயல்படாது.

முற்றிலும் குலதெய்வமே எங்கே இருக்கிறது என்பது தெரியாது. என் குடும்பத்தில் மூத்தவர்கள் இல்லை அதனால் குலதெய்வத்தை அறியமுடிய வில்லை என்றாலும் கூட ஜோதிடத்தில் ஆருடம் மூலம் குலதெய்வத்தை அறியலாம். தேவப்பிரசன்ன முறைகளில் குலதெய்வ பிரசன்னம் ஒருவகையாகும்.

நம் கலாச்சாரமும் சாஸ்திரமும் பல்வேறு வழிகளில் நமக்கு உதவக் காத்திருக்கிறது. நம் சோம்பேறித்தனத்தை விடுத்து, நம் குல தெய்வத்தை கண்டறிந்து வாழ்க்கையை ஒளிமயமாக்குவோம்.

8 கருத்துக்கள்:

Sanjai said...

அருமை மற்றும் பயனுள்ள தகவல் .. Swami, Please Keep posting such stuffs ...

மதி said...

>>>ஜோதிடத்தில் ஆருடம் மூலம் குலதெய்வத்தை அறியலாம்<<<

அரிதான அனைத்து தகவலுக்கும் நன்றி...

பாலா said...

நான் இதுவரை கேள்விபடாத பல விஷயம் சொல்லி இருக்கீங்க..., அருமை!!

கனவு பையன் said...

>>>இஷ்ட தெய்வமும், ப்ரார்த்தனா தெய்வமும் முக்கியம் தான் ஆனால் அந்த தெய்வ அனுககிரகம் வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு அவசியம்.<<<
ஸ்வாமி , இதை குதர்க்கமாக கேட்கிறேன் என்று எண்ணாதிர்கள் ,கோவில்களுக்கு செல்லுதலின் நோக்கம் பிராணனை பெறுவது மட்டுமே என்று அறிவியல் பூர்வமாக கூறியுள்ளிர்கள் , அப்படி இருக்க , "குல தெய்வம்" என்ற கோவிலுக்கு மட்டும் செல்லவில்லை எனில் வேறு எந்த கோவிலுக்கும் சென்றாலும் பலன் இல்லை கூறுவதும் , மற்றும் குறைகள் ஏற்படும் என்பதும் முரண்பட்டதாக இருக்கிறது ஸ்வாமி . தயவு செய்து விளக்குங்கள் .

ஸ்வாமி ஓம்கார் said...

என் உடலில் உள்ள ப்ராணன் என் தாய் தந்தையர் கொடுத்தது. அதை மேம்படுத்தவே கோவில்களுக்கு செல்கிறோம். அப்படி இருக்க என் பெற்றோரின் பெற்றோர் என என் ஆதி பெற்றோரின் ப்ராணனை நான் வணங்காமலும், பெறாமலும் செய்யும் வழிபாடு ஏற்புடையதா என சிந்தியுங்கள்.

Nadopasana said...

Swami,
What about Swami malai Murugan? My kula deivam was considered as swami malai for 2-3 generations. Suddenly one astrologer confused us by saying that it is not your kula deivam but a smaller nattu deivam called angala parameshwari amman is real kula deivam. What is your opinion on this? These days we visit both swami malai and also amman deivam after the astrologer said this.

Gopal said...

Thanks Swami, at the right time i have seen this post. Really useful information

Sridevi said...

Thank you sir for the very excellent expansion about Kula deivam