Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, May 8, 2012

குழலினிது யாழினிது - பகுதி 3 +18


உள்ளம் பெரும் கோவில் ஊன் உடம்பே ஆலயம் என்கிறார் திருமூலர். அவரின் வரிகளை கவனித்துப்பாருங்கள். உடம்பே ஆலயம் என கூறவில்லை. ஊன் உடம்பே என்கிறார். உடம்பு என்பது பல உண்டு. அதில் நாம் குழப்பம் கொள்ளக்கூடாது என்பதற்காக ஊன் உடம்பே என குறிப்பிட்டு எழுதுகிறார்.
நவீன நாகரீததில் இருக்கும் நமக்கோ ஊன் உடம்பை தவிர பிற உடல் பற்றிய புரிதல் இல்லை.

நமக்கு ஐந்து உடல் (கோஷங்கள்) இருப்பதாக கூறினேன் அல்லவா? இவை நமக்கு பஞ்ச பூதத்திலிருந்து தோன்றியது. ஒவ்வொரு உடலும் பஞ்சபூத தன்மையிலேயே செயல்படுகிறது. அவற்றை சுருக்கமாக பார்ப்போம்.

அன்ன மய கோஷம் (ஊன் உடல்) : பூமியில் உருவாகும் பொருட்களால் உருவான உடல் அன்னமய கோஷம். அன்னம் என்ற உணவு மூலம் வளர்ச்சி பெற்றது. பஞ்சபூதத்தில் மண் தன்மை கொண்டது.  நம் கண்களால் பார்க்கக்கூடிய ஒரே உடல் அன்னமய கோஷம் மட்டுமே. அதனால் நவீன மருத்துவம் இவ்வுடலை மட்டுமே கொண்டு சிகிச்சை அளிக்கிறது.

ப்ராண மய கோஷம் (சக்தி உடல் ) : பிரப்ஞ்ச ஆற்றலால் உருவான உடல். உடல் செயல்களுக்கும் மனச்செயல்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. பஞ்சபூதத்தில் வாயுவின் தன்மையை கொண்டது. இவ்வுடலில் சக்தி குறைவதனால் உடல் உறுப்புக்கள் செயல்படாமல் ஸ்தம்பிக்கிறது. மின்சாரக்கருவிகள் போன்று ஊன் உடலை உருவகித்தால் ப்ராண உடலை மின்சாரமாக உணர முடியும்.

மனோமய கோஷம் (மன உடல் ) : எண்ணங்களினால் உருவான உடல். காலம் மற்றும் வாழ்க்கை தன்மைக்கு காரணமான உடல் இந்த மனோ உடல். பஞ்சபூதத்தில் நீரின் தன்மையை கொண்டது. மனம் சார்ந்த சிந்தனைகள் மற்றும் குழப்பங்கள் அனைத்துக்கும் காரணமாகிறது மன உடல்.

விஞ்ஞானமய கோஷம் (அறிவுடல்) : நம் அனுபவங்களின் தொகுப்பாகவும் அறிவு சார்ந்த செயல்களுக்கு காரணமாக இருப்பது விஞ்ஞான மயகோஷம். பஞ்ச பூதத்தில் நெருப்பின் தன்மையை கொண்டது.
நெருப்பை போன்று அறிவின் செயலை நன்மை, தீமையும் அதனால் ஏற்படும் விளைவையும் கொண்டு உருவாகிறது. ஞாபக மறதி மன நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இவ்வுடல் விளங்குகிறது.

ஆனந்த மய கோஷம் (ஆன்ம உடல்) : என்றும் எப்பொழுதும் பரமானந்த நிலையில் இருப்பதால் ஆனந்த மய கோஷம் என அழைக்கப்படுகிறது. பஞ்சபூதத்தில் ஆகாயத்தின் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆன்மா பரிசுத்தனாம இறை நிலையின் பிரதியாக இருப்பதால் என்றும் ஆனந்த நிலையில் இருக்கிறது. ஆன்மா எப்பொழுதும் சம நிலை தவறுவதில்லை. ஆன்மா ஆன்மாவாகவே இருந்து பிற உடல்களின் செயல்களுக்கு சாட்சியாக இருக்கிறது.  

ஆனந்த மய கோஷத்தை தவிர பிற உடல்கள் சமநிலை தவறினாலோ, செயல்படாமல் போனாலோ வாழ்க்கை தன்மை பாதிக்கப்படுகிறது. குழந்தை இன்மை என்ற வகையில் பார்த்தால் ஊன் உடல் மற்றும் சக்தி உடல் இரண்டும் முக்கிய பங்கை ஆற்றுகிறது.

மாதவிடாய் சுழற்சி மற்றும் விந்து உற்பத்திக்கு சக்தி உடல் (ப்ராண மய கோஷம்) காரணமாகிறது. அதனால் ப்ராண உடலில் ஏதேனும் குறை இருப்பின் இச்செயல்கள் தடைபடும். மனோமய கோஷமும் உடலுறவு செயல்களின் தன்மையை எண்ணங்களால் பாதிப்படைய செய்கிறது. 

நடைமுறையில் ஊன் உடலை மட்டும் முன்னிருத்தி ஹார்மோன் சிகிச்சை, ஐவிஆர் மற்றும் சோதனை குழாய் மூலம் கரு உற்பத்தி செய்யும் பொழுது குழந்தையின் ஊன் உடல் மட்டுமே நன்றாக இருக்கும். தாய் தந்தையரின் பிற உடல்களில் குறை இருப்பதால் பிறக்கும் குழந்தையும் அவ்வுடலின் பாதிப்புடன் பிறக்கும்.

பிறக்கும் பொழுது அனைத்து உடலும் நன்றாக இருக்கும் படியே பிறக்கிறோம். அப்படியானால் அவ்வுடல்களில் குறை ஏற்படுவதற்கும் சமநிலை தவறுவதற்கும் யார் காரணம்?

வேறு யார்? நீங்கள் தான்...!

(கரு உருவாகும்...)

8 கருத்துக்கள்:

enpena said...

மிக மிக அருமையான விளக்கம்.. உங்கள் ஸ்டைல்-ல இன்னும் சூப்பர்...
அடிங்க சுவாமி அடிங்க !!!!! வாங்கிக்கறோம்...LOL

Sanjai said...

/வேறு யார்? நீங்கள் தான்...!/
ஒரு சவுக்கடி !!!

சேலம் தேவா said...

ஐந்து உடல்களைப்பற்றிய புரியும்படியான தெளிவான விளக்கத்திற்கு நன்றி.தொடர்ந்து வாசிப்பேன்.

Thirumal said...

நவீன மருத்துவம் இவ்வுடலை மட்டுமே கொண்டு சிகிச்சை அளிக்கிறது//

ஸ்வாமிஜி,
அன்னமய கோஷத்தைச் சரி செய்வதன் மூலம், ப்ராணமய கோஷத்தைச் சீராக்க இயலாதா ?

Sivakumar said...

ஸ்வாமி,

ஐந்து உடல்களையும் சமநிலையில் வைக்க என்ன செய்ய வேண்டும்?

Nadopasana said...

Muthuswamy dikshitar references Pranamaya kosha when praising Lord at Kalahasthi

http://www.medieval.org/music/world/carnatic/lyrics/TKG/shri_kalahastisha.html

arul said...

nalla vilakkam

சுரேகா said...

அற்புதம்! ஸ்வாமி! நடத்துங்க... !\

சீக்கிரம் அடுத்த பாகம் வரட்டும்!



உங்களை தருமபுரத்துக்கு ரெக்கமண்ட் பண்ணலாம்னு இருந்தேன்.. நீங்க என்னடான்னா.. நல்லவிஷயங்களா சொல்லிக்கிட்டிருக்கீங்க..!

:)))