Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, May 2, 2012

குழலினிது யாழினிது - +18

படைத்தல் என்ற ஒரு தொழில் உலகின் இயக்கத்திற்கு அடிப்படையானது. பூரணத்திலிருந்து தோன்றும் அனைத்தும் பூரணமாகவே இருக்கிறது என்றது உபநிஷ்த். அது போல இறை நிலை நம்மை உருவாக்கிய காரணத்தால் நமக்குள்ளும் உருவாக்கும் தன்மை இருக்கிறது.

மனிதனை தவிர பிற உயிர்கள் ஒன்றிணைவது அதை போன்றே மற்றொரு உயிரை தோற்றுவிக்க மட்டும் தான். ஆனால் மனிதன் இன்பம் கருதியும், குழந்தை பிறப்பு என இரு வேறு காரணத்தால் ஒன்றிணைகிறார்கள்.

இந்திய கலாச்சாரம் காமம் மற்றும் திருமணம் ஆகியவைகளை தனிமனிதன் சம்பந்தப்பட்ட விஷயமாக கருதுகிறது. ஆனால் குழந்தை பிறப்பு சமுதாயம் சம்பந்தமான விஷயமாக கருதுகிறது.

இருவர் இன்பத்திற்காக இணையும் பொழுது சமூகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் தனக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக இணைந்தால் அந்த குழந்தை எதிர்காலத்தில் சமூகத்தில் ஏதேனும் தாக்கத்தை உண்டு செய்யும். அதனால் குழந்தை பிறப்பை இருவர் முடிவு செய்ய கூடாது என்கிறது. 

சாஸ்திரம். குழந்தை பிறப்பை - கர்ப்ப தானம் என கூறி சமூக நிகழ்வாகவே கொண்டாடுகிறது. குழந்தை பிறப்பை மனிதனின் முழுபரிமாணமாகவும், உயர் செல்வமாகவும் நம் சமுதாயம் கருதியது.

அஷ்ட செல்வம் என கருதுவதில் தனம், தான்யம் போன்ற வரிசையில் சந்தானம் என்பதையும் வைத்தது நம் சாஸ்திரம்.

ராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இதிகாசங்கள் குழந்தை பிறப்பு என்ற மிக முக்கியமான நிகழ்வுகளை உள்ளடக்கியது. இவற்றை வரும் பகுதிகளில் விரிவாக பார்ப்போம்.

இத்தகைய முக்கியத்துவம் மிக்க குழந்தை பிறப்பு விகிதம் சமீபகாலத்தில் குறைந்து வருகிறது.
இயற்கையான முறையில் குழந்தை பேறு கொண்ட சமூகம் தற்சமயம் கருதரித்தல் மைய வாசலில் காவல் கிடக்கிறது.

உலகில் 1977 ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களில் பத்தில் நான்கு நபர்களுக்குத் தான் குழந்தை பிறப்பு நிகழும் தன்மை உண்டு. வாழ்வியல் தவறுகள் மற்றும் இயற்கையிலிருந்து வேறுபட்ட சூழலால் மலட்டு தன்மை அதிகரித்து வருகிறது.

மழலை சொல் கேட்காதவர் புல்லாங்குழல் மற்றும் யாழின் இசையை அருமை என கூறுவார்கள் என்கிறார் வள்ளுவர். நவீன் நாகரீகமும் வாழ்வியலும் இப்படியே சென்றால் குழலும் யாழும் மட்டுமே இனிக்கும், மழலை என்பதை கேட்க முடியாது..!

இதற்கு நான் ஏன் தொடர் எழுத வேண்டும்?

நம் சாஸ்திரத்தில் எளிய முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் இருக்க, அதை விடுத்து நவீன மருத்துவத்தில் ஹார்மோன் சிகிச்சையாலும், பிற வழிமுறையாலும் தங்கள் உடலையும் வாழ்க்கை தரத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள் என்பது நிதர்சனம். ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் கெடுத்துக்கொள்ளாமல் சிறந்த குழந்தையை பெற்று சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கும் தன்மையையே குழல் இனிது யாழினிது கட்டுரை விவரிக்கப்போகிறது.

(கரு உருவாகும்..)

17 கருத்துக்கள்:

புதுகை.அப்துல்லா said...

மங்களம் உண்டாகட்டும்.

Sanjai said...

நல்ல முயற்சி .. அடுத்தடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் :)

Senthil said...

மானுட வாழ்வியல் மேன்மையை கருத்தில்கொண்டு ஆரம்பித்துள்ள இந்த தொடர், மிகவும் வரவேற்பிற்கு உரியது வாழ்த்துக்கள் சுவாமி! பரிபூரண பயன்பாட்டிற்குரிய உரிய தொடராய் இது இருக்கபோவது உறுதி. தொடர் பதிவுகள் தொடர்ச்சியாய் வந்தால் மகிழ்ச்சி :)

Sivakumar said...

ஸ்வாமி, சீக்கிரம் அடுத்தடுத்த பதிவுகளை இடுங்கள். நான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம்.

மேலும், ஹார்மோன் டெஸ்ட் மற்றும் இயற்கை முறை மருத்துவம் எனக்கூறி ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் சுரண்டும் டாக்டர் கும்பலின் முகத்திறையையும் கிழிக்க வேண்டுகிறேன்.

Pattarai Pandi said...

அப்பாடா ஆரமிசாச்சா :)

அப்துல்லா அண்ணே,
இந்தியா'வின் முக்கியாமான ஒரு நெரிசலான நகரத்தில்.. வண்டிகள் சேதராம் இல்லாமலும், கிரிசெல்கள் இல்லாமலும் வோடுதாமே...?
- இவன்
அவன் :)

Anonymous said...

Nalla muyarichi, sikiram eluthungal

guna said...

அடுத்தடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்

கனவு பையன் said...

சுவாமி ,

இந்த தொடரை நீண்ட நாளாக எதிர்பார்த்திருக்கும் என் போன்றோருக்கு பெரும் மகிழ்ச்சி .

"நம் சாஸ்திரத்தில் எளிய முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் இருக்க, அதை விடுத்து நவீன மருத்துவத்தில் ஹார்மோன் சிகிச்சையாலும், பிற வழிமுறையாலும் தங்கள் உடலையும் வாழ்க்கை தரத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள் என்பது நிதர்சனம்." - அப்படி என்றால் நவீன ஆங்கில மருத்துவ முறையால் சிறப்பான முறையில் குழந்தை பெறுவது சாத்தியம் இல்லையா ? மற்றும் தம்பதியரின் உடல் நலம் கெடும் என்பது வருந்த தக்கது சுவாமி

சேலம் தேவா said...

நல்ல முயற்சி.அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் ஸ்வாமி...!!

விஜி said...

மங்களம் உண்டாகட்டும்.

arul said...

arumayana pathivu adutha pathivukkaga kathirukkiraen

pranavastro.com said...

குழலினிது யாழினிது - +18
18 வயது கடந்தவர்களுக்கு மட்டும்
சரிதானா ?

ceylonstar said...

ஆஹா அருமை! அருமை!

Naveenkumar said...

This is the required and necessary subject for this KALIKALAM... Waiting for the subsequent posts swami Ji..

Unknown said...

enga arambikaleye enru irundhen nalldhu natakkattum

Unknown said...

nalla muyarchi vaazthukal

enpena said...

சுவாமி மிக்க நன்றி..!!!! ஒரு வாரமாக படிக்காமல் மிஸ் பண்ணிருக்கேன்....