பரணி பாடுவது என்பது தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளில் ஒன்று. ஆயிரம் யானைகளை அடக்கி வேட்டையாடும் அரசனின் வீரத்தை போற்றுவதற்கு பாடுவதே பரணி என்பதாகும்.
அத்தகைய வீர இலக்கிய பாடல் தன்மையை தன் குருவை போற்றுவதற்கு பாடினார் ஒருவர்.
ஆயிரம் யானைகளை அடக்கினால் பரணி பாடுவார்கள். நீ அயிரம் பரணி பாடுவதற்கு தகுதியானவன் என பொருள் கொண்ட பாடல் அது...
இத்தகைய உருவகத்தை பல்வேறு புலவர்கள் கொண்ட சபை எதிர்த்து வழக்கு தொடுத்தது.
வழக்காடு மன்றத்தில் குரு ஆஜராக வேண்டும் என்றும் தன் வீரத்தை நிரூபித்தால் அப்பாடலைஏற்கிறோம் என்றும் புலவர்கள் கூறினார்கள்.
வழக்கு நடக்கும் நாள் வந்தது.
அனைவரும் கூடி இருந்தார்கள். வழக்காடு மன்றம் சலசலப்புடன் இருந்தது. நீதிபதிகளும் அவர்களுக்குள்இந்த விசித்திர வழக்கு பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
வழக்காடுமன்றத்தின் வாயிலில் அந்த வாகனம் வந்து நின்றது.
குரு அதிலிருந்து அமைதியாக இறங்கினார்.
மன்றத்தின் நடுவில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார். கண்களை மூடினார்.
அனைவரும் சலசலப்பற்று சிலைகள் போல உறைந்து நின்றார்கள்.
பல மணிநேரம் சென்றது. வழக்காடு மன்றத்தில் ஒரு சலனமும் இல்லை.
பிறகு குரு தன் கண் இமைகளை சிமிட்டினார். அனைவரும் சுய நினைவுக்கு வந்தனர்.
நினைவு பெற்று பின்பும் அவர்களின் உள் பேரமைதி சூழ்ந்த வண்ணம் இருந்தது.
இவரை தலைவனாக கொண்டு பரணி பாடியது சரியே. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. என நீதிபதிகள் தீர்ப்பை கூறினார்கள்.
வீரம் என்பது விலங்குகளை வேட்டையாடுவது அல்ல. நம்மை விலங்கிட்டு பிணைக்கும் ஐம்புலன்களை வசமாக்குவதே உண்மையான வீரம் என புலவர்கள் உணர்ந்து கொண்டனர்.
இன்று மஹாவீர் ஜெயந்தி...!
10 கருத்துக்கள்:
//வீரம் என்பது விலங்குகளை வேட்டையாடுவது அல்ல. நம்மை விலங்கிட்டு பிணைக்கும் ஐம்புலன்களை வசமாக்குவதே உண்மையான வீரம் என புலவர்கள் உணர்ந்து கொண்டனர்.//
ஹௌ ட்ரூ!
//வீரம் என்பது விலங்குகளை வேட்டையாடுவது அல்ல. நம்மை விலங்கிட்டு பிணைக்கும் ஐம்புலன்களை வசமாக்குவதே உண்மையான வீரம்//
இதைப் புரிந்துகொண்டாலே ஆணவம் பாதி அழிந்துவிடும்..!!
ஆஹா...யானையை அடக்குவதை விட புலன்களை அடக்குவதே பெரிது என்ற தத்துவத்தை மஹாவீர்ஜெயந்தி மூலம் பதிவு செய்தது அருமை.
Thanks Guruji.
A good post
well said
குட்டி பதிவுதான் ஆனால் விசயமோ மிகப் பெரியது.......
இது தத்துவராயர் தன் குரு ஸ்வரூபானந்ததை பற்றீய கதை என்று நினைக்கிறேன். அருமையாக எழுதுயிருக்கீங்க
simple and super !!
superb post nice explanation
புலன்களை அடக்குவது யானைகளை அடக்குவதை விடக் கடினம் என்பதைப் புரிய வைத்த பதிவு. ரொம்ப நன்றி.
Post a Comment