Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, September 17, 2011

தேவப்பிரசன்னம் - பகுதி 6

ஜாதக சக்கரத்தில் பன்னிரெண்டு வீடுகள் இருப்பது நீங்கள் பார்த்திருக்கலாம். மனிதனுக்கு பன்னிரெண்டு வீடுகளில் ஏற்படும் பலன்களை ஜோதிடர் ஆய்வு செய்வார். லக்னம், தனம், தைரியம், சுகம் என பல்வேறு தன்மைகளில் ஜோதிடம் மனித வாழ்க்கையை பன்னிரெண்டு வகையான அடிப்படையில் பிரிக்கிறது.

மனிதவாழ்க்கையை போலவே தேவப்பிரசன்னத்தில் பன்னிரெண்டு வீடுகள் கோவிலின் தன்மையை இவ்வாறு குறிக்கும்

முதல் வீடு - கோவிலில் இருக்கும் இறைவனின் தன்மை
இரண்டாம் வீடு - கோவிலின் பொருளாதர நிலை
மூன்றாம் வீடு - பிரசாதம் செய்பவர் அல்லது மடப்பள்ளி
நான்காம் வீடு - கோவிலுக்கு இருக்கும் சொத்துக்கள் மற்றும் அலங்கார பொருட்கள்
ஐந்தாம் வீடு - இறை அருள் இருக்கும் தன்மை (சாநித்யம்)
ஆறாம் வீடு - கோவிலில் நடக்கும் தவறான செயல்கள்.
ஏழாம் வீடு - பக்தர்கள், கோவிலில் வழிபடுபவர்கள்
எட்டாம் வீடு - கோவிலில் நடக்கும் திடீர்செயல்கள் மற்றும் அசுத்தம்
ஒன்பதாம் வீடு - கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்
பத்தாம் வீடு - கோவில் பூஜாரி, மேல் சாந்தி
பதினோராம் வீடு - கோவிலில் செய்ய வேண்டிய முன்னேற்றங்கள்
பன்னிரெண்டாம் வீடு - கோவிலில் இருக்கும் பழமையான பொருட்கள் மற்றும் பாரம்பரிய தன்மை

இக்கருத்துக்களை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் அமர்ந்திருக்கும் கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப பலன் கூறுவார்கள்.

சரி மனிதனுக்கு பார்க்க ஜாதகம் இருக்கும். இறைவனுக்கு எப்படி பார்ப்பது? இறைவனுக்கு ஜாதகம் கிடையாதே? அவன் பிறப்பும் இறப்பும் அற்ற நிலையில் இருப்பவன் ஆயிற்றே என உங்களுக்கு தோன்றலாம். அதனால் தான் பிறப்பு ஜாதகம் பார்க்காமல் பிரசன்ன முறையில் கணிக்கப்படுகிறது. அதனால் இதற்கு தேவப்பிரசன்னம் என்கிறோம்.

தேவப்பிரசன்னம் செய்ய முதலில் யாகங்கள் செய்து, ஜாதக சக்கரத்தை கோவிலின் வடக்கு பகுதியில் வரைந்து கொள்வார்கள். பிறகு இறைவனை ஜாதக சக்கரத்தின் மையத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அச்சமயம் கோவில் கருவறையை பூட்டிவிடுவார்கள். இறை ஆற்றல் ஜாதக சக்கரத்தில் இருக்கும் அதனால் கருவறையை மூடிவிடும் சம்ப்பிரதாயம் உண்டு.

ஓம் என ஒரு பக்கம் எழுதப்பட்ட தங்கத்தால் ஆன ஒரு காசு, சில பூக்கள் மற்றும் அக்‌ஷதை இவற்றை ஒரு குழந்தையின் கையில் அளிப்பார்கள். கூட்டத்தில் உள்ள 11 வயதுக்கு உட்பட்ட குழந்தையாக தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் கையில் கொடுத்து 12 ராசி கட்டங்களில் ஏதேனும் ஒரு ராசிகட்டத்தில் வைக்க சொல்லுவார்கள். மூன்று முறை ராசி கட்டத்தை வலம் வந்து அந்த குழந்தை எந்த ராசியில் கையில் உள்ள காசை
வைக்கிறதோ அதுவே லக்னம் என கொள்ளப்படும்.

காசு இருக்கும் ராசி முதல் வீடாக கொண்டு பண்ணிரண்டு ராசிகளின் பலன்களை கிரகிப்பார்கள். இச்செயலை ஒரு பல ஜோதிடர்கள் கொண்ட குழு செய்வார்கள்.இவ்வாறு ஒரு கோவிலில் ஜோதிடர்கள் தேவப்பிரசன்னம் பார்க்கும் பொழுது எட்டாம் இடத்தில் ராகு என்ற கிரகம் இருந்து, அந்த கிரகத்தை பத்தாம் வீட்டில் உள்ள கிரகத்துடன் தொடர்பு கொண்டதால் கோவிலில் அசுத்தம் நடைபெற்றுள்ளது என முடிவு செய்தார்கள்.

ராகு என்ற கிரகம் அமர்ந்து அது பெண் ராசியாக இருந்ததால் விதவை பெண் ஒருவரால் இவ்வகை அசுத்தம் நடைபெற்றிருக்கும் என்று முடிவு செய்து அதை பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினார்கள். மேலும் கோவில் நிர்வாகிகள் இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்றும் இக்கூட்டத்தில் இருக்கும் விதவைப்பெண்கள் யாரேனும் இவ்வாறு அசுத்தம் செய்திருந்தால் மனம் உவந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

திடீரென அக்கூட்டத்திலிருந்து வந்த ஒருவர், ஜோதிடக்குழுவை பார்த்து. அது எப்படி நீங்கள் விதவை பெண்ணால் அசுத்தம் என கூற முடியும்? என கேட்டார். பார்க்க ஒரு சாதாரண குடியானவன் இப்படி கேள்வி கேட்டதும் குழம்பினார்கள் ஜோதிடர்கள். உங்களுக்கு ஜோதிடம் தெரியுமா என கேட்டனர்.

அந்த குடியானவர் சொன்னார் ,

“தேவனை நீ பார்க்காமலேயே தேவப்பிரசன்னம் சொல்லும் பொழுது, நான் ஏன் ஜோதிடம் பற்றி படிக்காமலேயே கேள்வி கேட்க கூடாது?”

(பிரசன்னமாகும்)

3 கருத்துக்கள்:

Velu.M said...

சாமிமிமி..

பிரசன்னம் சொல்லறேன்னு மெகா சீரியலே நடத்தரீங்கலே..

முடியல..தாங்க முடியல..

திவாண்ணா said...

நல்ல கேள்விதானே?
:-)))))

கேள்வி கேட்கறது எந்த முட்டாளும் கேட்கலாம். பதில் சொல்லத்தானே புத்திசாலித்தனம் தேவை?

அறிவில்லாதவன் said...

தியா , முட்டாள்கள் கேள்வி கேட்பதில்லை. கேட்டாலும் பொருத்தமற்றதாக கேட்பார்கள் . கேள்வி கேட்க புத்திசாலிதனமும் , தைரியமும் வேண்டும் . ஜோதிடர்கள் "ஜோதிடம் தெரியுமா " என்று எதிர்கேள்வி கேட்பதில் இருந்தே கேட்டவரின் கேள்வியில் உள்ள புத்திசாலித்தனம் தெரிகிறது. எதிர்கேள்வியையும் அந்த குடியானவர் திருப்பி அடித்ததில் உள்ள புத்திசாலிதனத்தை மெச்ச வார்த்தைகளே இல்லை.