Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, August 15, 2011

தேவப்பிரசன்னம்

தேவப்பிரசன்னம்
-இறைவனின் வயர்லெஸ்

ஆன்மீகவாதிகள் இறைவனின் செயல்நிலையை ஐந்தாக வகைப்படுத்தலாம் என்கிறார்கள். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என இந்த ஐந்து நிலைகளும் ஐந்து பிராண ரூபங்களாக வெளிப்படுகிறது.

ஐவகை இறைச்செயலை புரிந்து கொள்ள நாம் இயல்பு வாழ்க்கையின் ஓர் உதாரணத்தை காணலாம். குழந்தையின் விளையாட்டுக்கு தேவையாக ஒரு வீடியோ கேம் கருவியை தந்தை வாங்கி வருகிறார். இது படைத்தல். அந்த கருவி பலர் கை பட்டு கெட்டுவிடாமல் இருக்கவும் அது தேவையான பொழுது பயன்படுத்தவும் ஒரு பெட்டியில் போட்டு தொலைக்காட்சி அலமாரியில் வைக்கிறார். இது காத்தல். குழந்தை விடியோ கேம் விளையாட சொல்லி கொடுத்தும், குழந்தைக்கு தேவையான பொழுது அக்கருவியை கொடுப்பதும் அருளல்.

பள்ளி தேர்வு நேரத்தில் பாடம் படிக்காமல் குழந்தை விடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தால் அந்த விடியோ கேம் பெட்டியை குழந்தை கண்களுக்கு எளிதில் கிடைக்காத அளவில் வைத்துவிடுவார். இது மறைத்தல்.

அதிகம் பயன்படுத்தியதன் விளைவாக அந்த விடியோ கேம் பழுதானால் அதை வீசிவிட்டு மற்றொரு பொருளை வாங்குவார். இது அழித்தல் என வகைப்படுத்தலாம்.

நம் உடலை கொடுத்த தந்தையே ஐவகை தொழிலை செய்யும் பொழுது இந்த பிரபஞ்சத்தின் தந்தை ஐவகை தொழிலை எப்படி சிறப்பாக செய்வார் என யோசித்துப்பாருங்கள்.

இறையருளில் கருணையால் நமக்கு பல்வேறு கலைகளும் அறிவியலும் அருளப்பெற்றோம். அதைக்கொண்டு நம் வாழ்க்கையின் ஆதாரத்தை உயர்த்தவும் பல்வேறு ஆன்மீக நிலைக்கு மாற்றம் அடையவும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாக இருக்கிறது.

அதற்கு மாறாக நம் சுயநலத்திற்கு பயன்படுத்தும் பொழுது இறையருளால் கிடைக்கப்பெற்ற ஆற்றல் நமக்கு மறைக்கப்படுகிறது. இக்கருத்துக்கு பல்வேறு உதாரணம் கூறலாம். ஆனாலும் தற்காலத்திற்கு பொருந்தும் உதாரணம் தேவ ப்ரசன்னம்..!

தேவ ப்ரசன்னம் என்றால் என்ன என கேட்டால் ஜனநாயகத்திற்கு விளக்கம் கூறுவது போல இறைவனால் இறைவனுக்காக இறைநிலையிலிருந்து மனிதனுடன் உறவாட தோற்றுவிக்கப்பட்டது தேவ ப்ரசனம் என கூறலாம்.

தேவ ப்ரசனம் என்ற இந்த வடமொழி சொல்லுக்கு தெய்வீக ஆருடம் என தமிழ் செய்யலாம்.

பிற ஆருட முறைகளில் ஜோதிடர் பலன் கூறினால் தெய்வீக ஆருடத்தில் தெய்வமே பலன் கூறும். அப்படி பட்ட தெய்வீக ஆருட முறையான தேவ ப்ரசன்னத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

முன்பு ஒரு காலத்தில் படைக்கப்பட்டு, இறைவனால் அருளப்பட்டு, ரிஷிகளால் காகப்பட்ட இந்த தெய்வீக முறை பலரின் கைகளில் மாட்டி மறைந்து கிடைக்கிறது. அதை அழியவிடக் கூடாது என்பதற்காகவே இந்த கட்டுரை..


(ப்ரசன்னமாகும்)

6 கருத்துக்கள்:

Sanjai said...

நல்ல ஆரம்பம், கட்டுரைக்காக காத்திருக்கிறோம் :)

பிரசன்னத்திற்கும் குறி சொல்லுவதற்கும் என்ன வேறுபாடு ?

KK said...

Thanks for writing on this topic, Swamiji.

Looking forward for another interesting and enriching information.

KK

மதி said...

பகிர்விற்கு நன்றி...

KARIKALVALAVAN said...

நன்றி சுவாமி
தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறோம்

shortfilmindia.com said...

இண்ட்ரஸ்டிங்.
கேபிள் சங்கர்

ரங்கன் said...

ஸ்டவ் ஜோசியம் என்று ஒரு காலத்தில் எண்களின் பாட்டி சொல்லிக்கொண்டிருந்தார்.

நாங்கள் அதைக் கேலி செய்வோம். இன்றும் எங்கள் ஊரில் சாமி ஆடி குறி சொல்லிகொண்டிருக்கின்றனர்.

ஹூம் ! ஆரம்பிச்சிட்டிங்க - எங்க போய் நிக்குது பார்க்கலாம் !!