Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, August 5, 2011

பழைய பஞ்சாங்கம் 5/08/2011

உங்க சம்பளம் எவ்வளவு?

திருவண்ணாமலை கோவிலில் இருக்கும் கம்பத்து இளையனார் சன்னிதியில் எப்பொழுதும் சேஷாத்திரி ஸ்வாமிகள் அமர்ந்திருப்பார். அவரின் செயல்களும் பேச்சும் நமக்கு சரியாக புரியாது. ஒருவித ஞான பைத்தியமாக திருவண்ணாமலையை வலம் வந்தவர்.

அவரிடம் ஒருவர் வந்து ஐயா உங்களை மாதிரி ஒரு உயர்ந்த ஞானியை பார்த்ததில்லைனு சொன்னாரு..

அவரு சொன்னாரு நான் எல்லாம் ஆயிரம் ரூபா சம்பளத்தில இருக்கேன். மலை மேல ஒரு குகையில ஒருத்தன் பத்தாயிரம் ரூபா சம்பளம் வாங்கிட்டு இருக்கான். அவனை பார்த்தா நீ என்ன சொல்லுவே.. போயி அவனை பாரு...

அங்கே மலைமேல் விருப்பாட்சி குகையில் ரமணர் வாழ்ந்த காலம் அது..!

ஆமாம்.. நீங்க எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க?

--------

நான் ஒரு பிச்சைக்காரன்

என்னை ஒரு கம்பெனியின் நிர்வாகி பார்க்க வந்தார். அவருக்கு என்னை முன் அறிமுகம் இல்லை. அந்த கம்பெனியின் முதலாளி எனக்கு நெருக்கமானவர். அவர் நேரடியாக வர முடியாத சூழலில் தன் நிர்வாகியை என்னிடம் அவர் சார்பாக பேசுவதற்கு அனுப்பி இருந்தார்.

ஏதோ எதிர்பார்த்து வந்தவர் முன் நான் அமர்ந்திருந்தேன். ஒரு அலட்சிய பார்வையுடன் நேராக என்னிடம் வந்தார், நான் _____ கம்பெனியின் ஆட்மின் மேனேஜர். இருபது வருட சர்வீஸ். உங்களை ____ பார்க்க சொன்னார் என்றார்.

“வணக்கம், நான் பெயரில்லாத ஒரு ஜடம். பிச்சைக்காரனாக இருக்கிறேன். பிறந்தது முதல் இது தான் நம்ம சர்வீஸ். என்னை பார்க்க வந்ததுக்கு நன்றி.” என்றேன்.

ஒரு நிமிடம் குழப்பி பிறகு சகஜ நிலைக்கு வந்தார். அவர் வந்த காரியத்திற்கு ஆலோசனை கூறியதும் நம்ப முடியாத குழப்பத்துடனே சென்றார். வரும் பொழுதும் போகும் பொழுதும் குழப்பம் மட்டுமே எஞ்சி இருந்தது அவருக்கு...

இறைவனின் சன்னிதியான இந்த பிரபஞ்சத்தில் நாம் எல்லோரு பிச்சைக்காரகள் தானே? இதில் என்ன பதவி பெயரும் இருக்கிறது?

நமக்குள்..
ஆணவம் இருக்கும் வரை பிரணவம் தெரியாது..!
ஆங்காரம் இருக்கும் வரை ஓங்காரம் ஓங்காது..!

--------

ஆர்கெஸ்ட்ரா பாடகி

பாராட்டு என்பது சிலருக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடியது.சிலருக்கு உற்சாகத்தை அழிக்கக்கூடியதும் ஆகும். சிலர் செய்யும் அபாரமான விஷயங்களை பாராட்டாமல் விட்டோம் என்றால் அதுவே பெரிய தவறு என்பேன். அதேபோல ஒருவர் தான் திறமையானவர் என நம்பி முயற்சி செய்யும் பொழுது அவர்களை கேலி செய்யாமல் அதே நேரம் நாசூக்காக சொல்லி புரியவைத்து வளர்ப்பது மிக முக்கியம். அப்புறம் எப்படித்தான் சொல்லி புரியவைப்பது என்கிறீர்களா? இதோ ஒரு உதாரணம்.

என்னை சந்திக்க வந்திருந்த நபர் அவரின் பெண் நன்றாக பாடுவாள் என என் முன்னே நிறுத்தினார். கல்லூரி செல்லும் பருவம் கொண்ட பெண் கண்களை மூடி சாஸ்திரிய சங்கீதத்தில் தனக்கு தெரிந்த பாடலை பாடினாள். நல்ல முயற்சியாக இருந்தாலும், நல்ல பாடலை வாய்ப்பாடு போல பாடினாள். மேலும் அப்பாடல் எனக்கு தெரிந்திருந்ததால் அதற்கும் இதற்கும் ஏணி அல்ல எதை வைத்தாலும் எட்டாது என புரிந்தது.

அப்பெண்ணிடம், “ இசையில நீ நல்லா வளர்ந்து வரம்மா...அம்மா பிரபல ஆர்கெஸ்ட்ரா லக்‌ஷமண் ஸ்ருதி கேள்விப்பட்டிருக்கியா? அவங்க அளவுக்கு இல்லைனாலும் அவங்க திறமைக்கு 50 சதவிகிதம் வந்துட்ட, அதாவது லக்‌ஷ்மண் உனக்கு கைகூடிவந்திருச்சுமா, இனி நீ அடுத்த 50 சதவிகிதத்திற்கு முயற்சி செஞ்சா போதும்..” என்றேன்.

உங்களுக்கு புரிஞ்சுதா?

--------

குருவின் குரல்

சென்ற மாதம் குரு பூர்ணிமா விழா சிறப்பாக நடைபெற்றது. அன்று நிகழ்த்திய செற்பொழிவு பற்றி பலர் கருத்துக்கள் கூறினார்கள். நீங்கள் விரும்பினால் வரும் வாரத்தில் இங்கே ஒலிவடிவில் அளிக்கிறேன். எழுத்தில் அப்பேச்சை கொண்டுவருவது சிரமம். குரு பூர்ணிமா அன்று பேச்சை கேட்க முடியவில்லை, அதனால் சில நாட்களுக்கு பிறகு அந்த ஒலிநாடாவை கேட்டேன் பல உதாரண கதைகளுடன் மிகவும் நன்றாக இருந்தது. குரு பூர்ணிமா அன்று கேட்கவில்லையா நீங்க எங்க போனீங்கனு கேட்கறீங்களா? அன்று நான் பிஸி..!

--------

கோத்ரா சம்பவம்

சமூக வலைதளங்களான Facebook, Twitter போன்று google Buzz என்ற வலைதளத்திலும் இயங்கி வருகிறேன். அதில் திரு.கேசவன் பாஷ்யம் என்ற நண்பர் கோத்ரம் என்பது ரிஷி வழி வரும் வம்சாவழிகள் என கூறி இருந்தார். கோத்திரம் என்பதன் உட்கருத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். உங்களுக்கும் பயன்படும் என்பதால் இங்கே கொடுக்கிறேன்.

உண்மையில் கோத்திரம் என்பது வம்சாவழி அல்ல. குலம் என்பதே வம்சாவழி. கோத்ரம் என்றால் யாரிடம் குருகுலம் கற்ற குடும்பத்தார் என்பதை காட்டும்.

மாதா, பிதா குரு தெய்வம் என்பது போல அபிவாத மந்திரம் சொல்லும் பொழுது மூன்றாவதாக கோத்திரம் சொல்லப்படும்.

ஒரே கோத்திரம் என்றால் ஒரே குருவின் கீழே ஸ்கூலில் படிப்பது போன்றது. முன்பு ஒருவருக்கு ஒருவர் கற்ற கல்வியை பிறருக்கு பகிர்ந்து கொடுப்பார்கள். அதனால் ஒரே குருவிடம் கற்றால் புதிய கருத்துக்கள் தெரிந்துகொள்ள முடியாது. (சந்ததியினர் தெரிந்து கொள்ள முடியாது).

அதனால் ஒரே கோத்திரம் தவிர்க்கப்பட்டு வந்தது.தற்சமயம் பிரிட்டீஷ் கல்வியும் முறையற்ற கல்வியும் படித்துவிட்டு கோத்திரம் சொல்லுவது மிகவும் வேடிக்கையானது.

--------
சிவலிங்கம்

சென்ற பழைய பஞ்சாங்கத்தில் நீங்கள் பார்த்த லிங்கம் சிங்கப்பூரில் பார்க் மற்றும் நடைபாதையில் வைக்கும் ஒரு தடுப்பு கல். சிங்கப்பூரை சேர்ந்த பழனி சரியாக பதில் சொல்லி இருந்தார். அவருக்கு என் பாராட்டுக்கள். அடுத்த முறை சிங்கை வரும் பொழுது பரிசு அளிக்கிறேன்.

சென்ற முறை சிங்கை சென்ற பொழுது, பார்க்க சிவலிங்கம் போல இருந்ததால் படம் எடுத்தேன். நமக்கு தான் எங்க போனாலும் அதுவே கண்ணுல தெரியுதே..!

8 கருத்துக்கள்:

தனி காட்டு ராஜா said...

ஆமாம்.. நீங்க எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க? :)

MANI said...

/////பிரபல ஆர்கெஸ்ட்ரா லக்‌ஷமண் ஸ்ருதி கேள்விப்பட்டிருக்கியா? அவங்க அளவுக்கு இல்லைனாலும் அவங்க திறமைக்கு 50 சதவிகிதம் வந்துட்ட,

அதாவது லக்‌ஷ்மண் உனக்கு கைகூடிவந்திருச்சுமா,

இனி நீ அடுத்த 50 சதவிகிதத்திற்கு முயற்சி செஞ்சா போதும்..” என்றேன்./////

அதாவது லக்‌ஷ்மண் உனக்கு கைகூடிவந்திருச்சுமா, ஸ்ருதி வந்தாக்கா நீதாம்மா லக்ஷமண் ஸ்ருதி. சரியா.. :)

ரங்கன் said...

நான் அறிந்தவரை கோத்ரம் என்பது வம்சாவளியை குறிக்கும் சொல். தங்களது விளக்கம் ஏற்பு உடையதாக இல்லை.
ஏதானும் ஆதாரம் கொடுத்தால் உதவியாக இருக்கும்.

palani said...

அன்புள்ள சுவாமி அவர்களுக்கு, எப்பொழுது தாங்கள் சிங்கை வருகிறீர்கள்?
சென்ற முறை வந்திருந்த போது சிவன் கோவிலில் தினமும் மாலையில் "தினம் ஒரு திரு மந்திரம் " சொன்னிர்கள். அப்பொழுது நானும் வந்திருந்தேன்.
மீண்டும் தங்களை சிங்கையில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.

Sanjai said...

பதிவு ஸ்வாரஷ்யமா இருந்துச்சு.

"உங்க சம்பளம் எவ்வளவு?"
-எனக்கு சம்பளம் இல்லை - ப்ரீ

"ஆணவம் இருக்கும் வரை பிரணவம் தெரியாது..!
ஆங்காரம் இருக்கும் வரை ஓங்காரம் ஓங்காது..!"
-உண்மை

"நமக்கு தான் எங்க போனாலும் அதுவே கண்ணுல தெரியுதே..! "
-நீங்களும் லிங்கமும் - Magnet & Magnet.
நாங்கள் (நான்) இன்னும் இரும்பாகவே இருக்கிறோம் (இருக்கிறேன்)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிருஷ்ணா,

நானெல்லாம் தினக்கூலி வாங்கும் ஆளு..

திரு மணி ,
மிகச்சரி...!

திரு ரங்கன்,
நான் வழங்கும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதல்ல. எனக்கு தெரிவிக்கப்பட்டதை பகிர்ந்துகொள்கிறேன்.

இவ்விஷயம் பற்றி விரிவாக பேசினால் ஜாதீய கட்டுரையாக இருக்கும். என்பதாலேயே தவிர்த்தேன். சூழல் வரும் பொழுது உங்களுக்கு சான்றுகள் அளிக்கிறேன்.

திரு பழனி,
//அன்புள்ள சுவாமி அவர்களுக்கு, எப்பொழுது தாங்கள் சிங்கை வருகிறீர்கள்?
//
இன்னும் 40 நாளில் சிங்கையில் இருப்பேன்.

திரு சஞ்சய், :))

அனைவருக்கும் நன்றிகள்.

பரிசல்காரன் said...

லக்‌ஷ்மன் ஸ்ருதி - அக்மார்க் ஒம்கார் குசும்பு!

வாழ்க்கை ரொம்ப போரடிக்குது ஸ்வாமி. எதுவுமே பிடிக்கலை. கூடிய சீக்கிரம் உங்க சிஷ்யனா ஒரு லேப் டாப்போட வருவேன். ப்ளீஸ் அக்செப்ட்டு மீ!

சுரேகா.. said...

பஞ்சாங்கம் பதமான வரிசையில், பக்குவமா இருக்கு ஸ்வாமி!! :)