தேவப்பிரசன்னம் என்பதில் இரண்டு வார்த்தைகள் உண்டு. முதல் வார்த்தை தேவம் மற்றது ப்ரசன்னம். தேவம் என்றால் தெய்வீகம் என அர்த்தப்படுத்தலாம். தெய்வீகம் என்ற சொல்லை விளக்குவதை விட உணர்ந்தால் மட்டுமே புரியும். ப்ரசன்னம் என்ற வார்த்தையை விளக்குவது எளிது.
ப்ரசன்ன என்ற வடமொழி சொல்லுக்கு கேள்வி என அர்த்தம். விடை தெரிய முற்படும் கேள்விக்கு ப்ரசன்ன என மொழி பெயர்க்கலாம். வேதத்தில் உள்ள ஒரு உபநிஷத்தின் பெயர் ப்ரசன்ன உபநிஷத். கேள்விகளால் தூண்டப்பட்டு இறை உண்மை விளக்கப்படுவதால் உபநிஷத் இப்பெயர் பெற்றது.
ஒருவர் தன் வாழ்வில் குழப்பத்துடன் நம் முன் வரும் பொழுது “என்னப்பா உனக்கு பிரச்சனை” என பேச்சு வழக்கில் கேட்பார்கள் அல்லவா? அதுபோல வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை ஜோதிடர்களிடம் கூறும் பொழுது அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகங்களை கொண்டு பலன் சொல்லும் ஜோதிட சூட்சமத்திற்கு பிரசன்னம் என பெயர்.
பிறந்த நேரம் கொண்டு ஜாதகம் கணித்து வாழ்க்கையின் அனைத்து பலன்கள் பார்ப்பது போல இல்லாமல், ஒரு கேள்வி அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகத்தை வைத்து ஒரு ஜாதகம் பார்ப்பது என்பதே ப்ரசன்ன ஜோதிடம் என்பதாகும்.
ஒரு கேள்விக்கு ஒரு ஜாதகம் என்றேன் அல்லவா? அடுத்த கேள்வி கேட்கும் பொழுது முன்பு இருந்த ஜாதகத்தை விட்டு புதிய கேள்வி கேட்ட நேரத்தில் மீண்டும் ஜாதகம் கணிப்பார்கள். ஆக கேள்வி வர வர ஜாதகம் மாறும்..!
பிறந்த நேரத்தை கொடுத்தாலே ஜாதகம் கணித்து பதில் சொல்லலாமே ஏன் ஒவ்வொரு கேள்விக்கு ஜாதகம் போட வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். வெளிப்படையாக கூறவேண்டுமானால் அனைத்து கேள்விக்கும் பிறப்பு ஜாதகத்தில் பலன் கூற முடியாது. ஆம் இது முற்றிலும் உண்மை. உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள்.
நான் வீடு வாங்குவேனா என கேட்டால் பிறப்பு ஜாதகத்தில் கூறிவிடலாம். ஆனால் நான் கும்பகோணத்தில் வாங்குவேனா இல்லை கோளப்பாக்கத்தில் வாங்குவேனா என கேட்டால் ப்ரசன்னம் தான் ஒரே வழி.
எனக்கு பதவி உயர்வு கிடைக்குமா என கேட்டால் பிறப்பு ஜாதகம் போதும், இதுவே எனக்கு பதவி உயர்வு உதவி மேலாளராகவா அல்லது கிளை மேலாளராகவா என கேட்டால் பிறப்பு ஜாதகம் வழி கூறாது. பிரசன்ன ரீதியாகவே பார்க்க வேண்டும்.
இதற்கெல்லாம் மேலே கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றிப்பெறும் என கேள்வி எழுந்தால் இரு அணியில் விளையாடும் 22 நபர்களின் ஜாதகத்தை கணித்தா பலன் கூற முடியும்? அவ்வாறு செய்தால் மேட்சே முடிந்துவிடும். இதெற்கெல்லாம் பயன்படுவது பிரசன்ன ஜோதிடமே ஆகும்.
இன்னும் எளிமையாக கூற வேண்டுமானால் பிரசன்ன ஜோதிடத்தில் கூற முடியாததே எதுவும் இல்லை, அனைத்துக்கும் ஜோதிட பலன் கூற முடியும்.
பிறப்பு ஜாதகத்தில் பிறந்த நேரம் தவறாக இருக்கலாம். நமக்கும் துல்லியமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிரசன்னம் என்பது நீங்கள் ஜோதிடரிடம் கேள்வி கேட்கும் நேரம் என்பதால் இந்த நேரத்தை துல்லியமாக கூற முடியும். அதனால் பலனும் துல்லியமாக வரும்.
மின்சாரம் எப்பொழுது வரும்? கையில் மறைத்து வைக்கப்பட்ட பொருள் என்ன? நாணயத்தை சுண்டினால் தலை விழுமா பூவா? இவை எல்லாம் பிரசன்னத்தில் முன்பே கூற முடியும். அதுவும் பொதுவாக இல்லை. மிக மிக துல்லியமாக, மைக்ரோ அளவில் கூற முடியும்.
பிரசன்ன ஜோதிடம் பல ஜோதிடர்களுக்கு தெரியாது. இதனால் ஜோதிடத்தில் முழுமை பெறாமல் இருக்கிறார்கள். கேரள ஜோதிடம் புகழ்பெற்று இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு பிரசன்ன ஜோதிடம் மட்டும் தான் தெரியும்...!
பிரசன்ன ஜோதிடத்தின் துல்லியம் வேறு எந்த ஜோதிட முறைகளிலும் கிடையாது. பராசரர், வராஹ மிஹிரர், காளி தாசர் இவர்கள் எல்லாம் பிரசன்ன ஜோதிடத்தில் திறன்மிகுந்தவர்களாக இருந்தவர்கள்.
இப்படிப்பட்ட மிக சக்தி வாய்ந்த பிரசன்ன ஜோதிடத்துடன் இறை சக்தி இணைந்தால் அதன் பெயர் தேவப்பிரசன்னம்...!
தேவப்பிரசன்னம் எப்படி பார்க்கப்படுகிறது?
(ப்ரசன்னமாகும்)
9 கருத்துக்கள்:
மிக எளிமையான விளக்கம் ஸ்வாமி.. அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன். நன்றி.
மிக எளிமையான விளக்கம் ஸ்வாமி.. அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன். நன்றி.
சூப்பரு
முதல் கேள்வி கேட்டு அடுத்த கேள்வி கேட்க 5 நிமிடம் இருக்கும்போது 5 நிமிடத்தில் கிரகங்களில் மாற்றம் ஏற்படாதே எவ்வாறு பதில் சொல்லுகிறார்கள்?. தொடர் நன்றாக உள்ளது.
எங்கள் நேரம் நன்றாக இருப்பதால் இந்த விளக்கத்தை கேட்க முடிகிறது.அடுத்த பாகத்தை படிக்க ஆவலாக உள்ளது.நீங்கள் தேவபிரசன்னம் பார்ப்பீர்களா சுவாமி..?! :)
சுவாமி,
இன்னொரு அருமையான தொடரை ஆரம்பித்து இருக்குறீர்கள். எளிமையான நடை.
நன்றி.
சுவாமி,
இன்னொரு அருமையான தொடரை ஆரம்பித்து இருக்குறீர்கள். எளிமையான நடை.
நன்றி.
சகாதேவ நூல் என்னும் சகாதேவ நிமித்த சூடாமணி: ஆருட சாத்திரம்
i got this book but i dont understand the method explained in this book
பிரசன்ன ஜோதிடத்தில் கலக்கிய k p முறையைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை,அது குறைபாடுள்ளது என்று கருதுகிறீர்களா.
Post a Comment