பஞ்சபூதங்களில் ஒன்றானதும் வேதங்களால் வணங்கப்பட்டதுமான அக்னி இறையாற்றலின் தனித்துவமான வடிவம். நவநாகரீக கலாச்சாரத்தால் அக்னியின் மகத்துவத்தை உணராமல் ஒரு ஜடமான நிலையில் நம் வாழ்க்கை அமைந்திருக்கிறது.
இறைவன் ஒருவனே என்றும் பல்வேறு வடிவில் இருப்பவனும், பல்வேறு பெயரில் அழைக்கப்படுபவனும் இறைவன் தான் என கூறுவது போல தீ,வெம்மை, வெப்பம், நெருப்பு, கனல் மற்றும் அக்னி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பல்வேறு நிலையில் இருப்பது இறைவனின் ஆற்றலான அக்னியே என்பதை உணரவேண்டும்.
சிந்தித்து பார்த்தோமானால் தினமும் நம் வாழ்க்கையில் அக்னியின் செயல் மிகவும் இன்றியமயாதது. காலையில் நீங்கள் எழும் நேரம் கிழக்கில் சூரியன் என்னும் அக்னி ரூபம் செயல்பட வேண்டும். உங்கள் உடலை சுத்தமாக்கும் நீர் மழை வடிவிலும் நதி வடிவிலும் கிடைப்பதற்கு அந்த சூரியனே அக்னியாக இருந்து செயல்படுகிறார்.
தாவரங்களின் செயலுக்கும் நம் உணவின் உற்பத்திற்கும் அக்னியின் பயன் மிகவும் அவசியமாகிறது. நம் உடலின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் வெப்பமே உணவை ஜீரணம் செய்ய உதவுகிறது. இதற்கு ஜட அக்னி என்று பெயர்.
ஒரு மனித உடலின் வெப்ப நிலை இழந்து மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது என்றால் அதற்கு பெயர் பிணம் என்கிறார்கள். ஆக ஒரு மனிதன் உயிருடன் இருப்பதை நிர்ணயிப்பதே அக்னியின் செயலாகிறது. எந்த ஒரு பொருளும் உயிர்ப்புடன் இருப்பதற்கு அக்னியே காரணம் என்பது ஆழ்ந்து உணர்ந்தால் புரியும்.
பிரபஞ்சத்தின் அனைத்து பொருளும் பஞ்சபூதத்தால் ஆனது. அவற்றில் அக்னியின் அளவு கூடுதலாக இருப்பது இயங்கும் உயிராகவும், அக்னி குறைவாக இருப்பது இயக்கமற்ற பொருளாகவும் மாறுகிறது.
பூமியின் மையத்தில் அக்னி குழம்பு இருக்கிறது அவை நில அடுக்குகளில் புகுந்து வெளிவரும் பொழுது எரிமலை அக்னி குழம்பை கக்குகிறது. நாம் வசிக்கும் சூரிய மண்டலத்தின் மையத்தில் அக்னி ரூபமாக இருக்கிறது சூரியன். சூரிய மண்டலத்தில் மட்டுமல்ல அனைத்திலும் விதையாகவும், கருவாகவும் இருப்பது அக்னியே ஆகும்.
தீ நெருப்பு என குறிப்பிடாமல் அக்னி என குறிப்பிட காரணம் என்ன? அக்னி என்பது நெருப்பின் ஆழ்ந்த சொரூபம். ஜிவாலையாக எரியும் பொழுது நெருப்பு என்றும் கட்டுப்பாட்டுடன் திகழும் பொழுது அக்னி என்றும் கூறலாம். அக்னி என்பது வடமொழிச்சொல் என்றாலும் அக்னி என பல்வேறு சங்ககால தமிழ் படலிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
யஜூர் வேதத்தின் அக்னி என்பது முழுமுதற்கடவுளாக வர்ணிக்கப்படுகிறது. மேலும் உபநிஷத்தில் அக்னி ஜாதவேதன் என கூறிப்பிடுகிறார்கள். ஜாதவேதன் என்றால் அனைத்திலும் இருப்பவன் - அனைத்தையும் உணர்ந்தவன் என கூறலாம். எனக்கு பிடித்த பெயர்களின் ஒன்று ஜாதவேத் எனும் பெயர்.
இப்படி எங்கும் எதிலும் நீக்கமற நிரைந்திருக்கும் அக்னியை வணக்குவதும் அதற்கு நன்றி அறிவிப்பதும் நம் கடமையல்லவா? நாம் என்றாவது அக்னிக்கு நன்றி கூறி இருக்கிறோமா?எதற்கு இந்த கேள்வி ? இப்பொழுது எதற்கு அக்னி புராணம் என நீங்கள் நினைக்கலாம். அக்னிஹோத்ரம் எனும் புனித வேள்வியை பற்றி இனி கூறப்போகிறேன்.
அதற்கான முன்னோட்டமே இது. அக்னிஹோத்ரம் என்பதை பற்றி விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக உள்ளது. அதை களையும் பொருட்டே இந்த கட்டுரைத் தொடர்.
நம் ஆட்களுக்கு அக்னிஹோத்திரம் என்றவுடன் போப்பால் விஷவாயு தாக்குதல் சம்பந்தப்பட்ட அபத்தமான ஓரு வதந்தியை நினைவு கூறுவார்கள்.
நாத்திகம் பேசும் பகுத்தறிவு புலிகளாக இருந்தால் அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியை நினைப்பார்கள். தாத்தாச்சாரி கூறியதை ஆராய்ந்தவர்கள் கூட அவர் பெயரில் ஒட்டி இருக்கும் அக்னிஹோத்திரம் என்பது என்ன என ஆராயவில்லை என்பது வேடிக்கை.
அக்னிஹோத்ரம் என்பதை தெரிந்துகொள்ள சில நாட்கள் காத்திருங்கள்....
( அக்னி ஒளிரும்..)
10 கருத்துக்கள்:
ஆஹா,அருமையான தலைப்பு அன்பரே.வயிற்றில் இருக்கும் அக்னிக்கு ஜட அக்னி அல்ல அதற்கு ஜாடராக்னி जाठराग्नि என்று பெயர்.வாழ்க வளர்க அக்னிஹோத்ரம் தங்கள் விளக்கத்தால்
திரு வெங்கடேச சிவா,
// ஜாடராக்னி // என்பது தெரியும். பலர் படிப்பார்கள் அவர்களுக்கு எளிமையில் புரிய அவற்றை பிரித்து எழுதினேன்.
ஜாடார் அக்னி= ஜாடாராக்னி - நிலையான அக்னி. அதனால் ஜட அக்னி என்றேன்.
உங்கள் விளக்கத்திற்கும் கருத்துக்கும் நன்றிகள்.
இப்பவும் பலபேர் ஒருநாளைக்கு 1 பாக்கெட் அக்னிஹோத்ரம் செய்யறாங்களே? ஓ.... இது வேறயா?
:))))))))))))))))))))))))))
எழுதுங்க.... எழுதுங்க.....
//இப்பவும் பலபேர் ஒருநாளைக்கு 1 பாக்கெட் அக்னிஹோத்ரம் செய்யறாங்களே?//
அப்புறம் அதை கால்ல போட்டு மிதித்து பாவம் தேடிக்கொள்கிறார்களே :))
--
ஸ்வாமி தொடருங்கள். :)
புர்னமத புர்னமித ...என தொடங்கும் மந்திரதின் பொருள் புரனமான ஒரு பொருலளிருந்து புரனமான ஒரு பொருளை எடுத்தால் மிதம் இருபது புரனமான இனொரு பொருள். இந்த மந்திரம் ஆக்னி மட்டுமெ பொருந்தும்.
ஸ்வாமி தொடருங்கள். :)
திரு சந்தானகிருஷ்ணன்,
//புர்னமத புர்னமித ...என தொடங்கும் மந்திரதின் பொருள் புரனமான ஒரு பொருலளிருந்து புரனமான ஒரு பொருளை எடுத்தால் மிதம் இருபது புரனமான இனொரு பொருள். இந்த மந்திரம் ஆக்னி மட்டுமெ பொருந்தும்.//
செம்மொழி மாநாடு நடக்கும் இந்த நேரத்தில் உங்கள் பின்னூட்டம் அருமை.
பூரணத்தை பூரணமாக எழுதினாலே பூரணமாகும்.
உங்கள் வருகைக்கு நன்றி
திரு சந்தானகிருஷ்ணன்,
//புர்னமத புர்னமித ...என தொடங்கும் மந்திரதின் பொருள் புரனமான ஒரு பொருலளிருந்து புரனமான ஒரு பொருளை எடுத்தால் மிதம் இருபது புரனமான இனொரு பொருள். இந்த மந்திரம் ஆக்னி மட்டுமெ பொருந்தும்.//
செம்மொழி மாநாடு நடக்கும் இந்த நேரத்தில் உங்கள் பின்னூட்டம் அருமை.
பூரணத்தை பூரணமாக எழுதினாலே பூரணமாகும்.
உங்கள் வருகைக்கு நன்றி
Wow.... I am just searching for this for sometime and think of learning this. What a time!!!
swami
sorry for spelling mistake
It is difficult to me type the Tamil words in English keyboard.
ஆஹா ! அக்னி நட்சத்ரம் முடிந்த கையோடு அக்னிப் பரீட்சை ஆரம்பமாகி விட்டது !!
அப்பப்போ நம்மால் முடிந்த அளவுக்கு ஊதி விடவேண்டியதுதான் !!!
(போபால் அபத்தமா ? இந்த நாடே (நான் கூட ) அதை நம்பிக் கொண்டிருக்கின்றோம். என்ன
பூதம் கிளம்புதுன்னு பொறுத்துப் பார்க்கலாம் )
Post a Comment