Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, June 29, 2010

அக்னி ஹோத்ரம் - பகுதி 4

உலகில் ஒரு சமுதாயம் தங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் சமூகத்திற்கு ஊறு விளைவிக்காமல் அதே சமயம் முன்னேற்றம் மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டது என்றால் அது வேதகால சமூகம் மட்டுமே என்பேன்.

ஒருவர் மற்றொருவரை படுகொலை செய்துவிடுகிறார். உடனே அவை நீதிமன்றத்தில் நிறுத்துகிறோம். நீதி விசாரணையில் பல ஆண்டுகள் சென்றுவிடும். இறுதியில் ஒரு நாள் அவருக்கு தூக்கு தண்டனை வழங்குவார்கள். பிறகு அவர் ஜனாதிபதி மனு அளித்து தண்டனையை குறைப்பார். மேல் முறையீடு செய்வார். இந்த சமூகமும், ஊடகங்களும் குற்றவாளியை பற்றியும் அவனுக்கு கிடைத்த தண்டனை பற்றியும் பேசும். ஆனால் அனைவரும் படுகொலை மூலம் இறந்தவரின் குடும்பத்தை மறந்துவிடுவோம்.

படுகொலை செய்தவனை தாங்களும் தண்டனை என்ற பெயரில் படுகொலை செய்கிறது தற்கால சட்டமும் நீதியும். வேதகாலத்தில் இருந்த தர்மசாஸ்திரம் கொலை குற்றவாளிக்கு அளிக்கும் தண்டனை என்ன தெரியுமா? இறந்தவனின் குடும்பம் மேம்பட்டு விளங்கும் வரை தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். சொத்தில் பெரும்பகுதி கொடுக்க வேண்டும். மேலும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்கிறது. வேதகால சமூகம் தங்களின் செயல் எப்பொழுதும் சமூகத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இருக்க வேண்டும் என நினைத்தது.

வேதகால நடைமுறையில் ஒன்றுதான் அக்னிஹோத்ரம் என உணருங்கள்...! அதனால் தனிமனிதனும் சமூகமும் மேம்படும் என்கிறது இதன் அடிப்படை உண்மை. உங்கள் புறச்சூழலும் அகச்சூழலும் ஒன்று சேர மேம்பாடு அடைவது அக்னிஹோத்ரம் என்ற நடைமுறையினால் மட்டும் தான்.வறட்டியையும் அரிசியையும் எரிப்பதால் என்ன நடக்கும்? அக்னி ஹோத்திரத்தால் சுற்றுசூழலில் என்ன நடக்கும்? ஸ்வாமி சரடு விடுகிறாரே என நினைக்க தோன்றுகிறதா?

அறிவியல் பூர்வமாக கூற வேண்டுமானல் நம் வாழும் சூழலில் அயனியாக்கம் என்பது எப்பொழுதும் நடைபெறும் நிகழ்வு. எதிர் அயனிகள் மற்றும் நேர்மறை அயனிகள் என்ற இருதன்மை சூழலில் இருக்கும்.வேதி வினைகளில் அயனியாக்கம் என்பது ஒரு நிகழ்வு உண்டு. தனிமம் மற்றும் வாயுக்களின் அனுவில் அயனியாக்கம் நடைபெறும் பொழுது அதன் தன்மைக்கு ஏற்ப மாற்றம் அடைகிறது.

அக்னிஹோத்ரம் நடைபெறும் சூழலில் உள்ள ஆக்ஸிஜன் அயனியாக்கம் அடைந்து எதுவாக மாறுகிறது தெரியுமா? ஓசோனாக மாறிவிடுகிறது. அதாவது O2 என்பது O3 ஆக மாற்றமடைகிறது. எளிமையாக கூறுவது என்றால் ஓசோன் என்பது பல கோடி ஆக்ஸிஜனை டெபாஸிட் செய்து வைத்த வங்கி கணக்கு. அதில் வரும் வட்டியே நம்மை வளமாக்கும். ஓசோனுக்குள் பல மடங்கு ஆக்ஸிஜன் உண்டு. ஆக்ஸிஜனை உருவாகுவதை காட்டிலும் ஓசோனை உருவாக்கினாலேயே பலமடங்கு ஆக்ஸிஜன் கிடைக்கும்.

இப்பொழுது சொல்லுங்கள் வாகனத்தில் பயணித்தும், மரங்களை வெட்டியும் ஓசோனை கெடுக்கும் சமூகம் நாகரீகம் அடைந்ததா? அல்லது அக்னிஹோத்ரம் மூலம் ஓசோனை வளர்க்கும் சமூகம் நாகரீகம் அடைந்ததா?

ஓசோனில் ஓட்டை விழுகிறது என்றவுடன் நவீன விஞ்ஞானிகள் செய்தது என்ன? நம்மை நோக்கி விரல் நீட்டினார்கள். உங்களின் வாகன பயன்பாட்டால் தான் உலகம் நிர்மூலம் ஆகப்போகிறது என்றனர். ஆனால் ஓசோனை மேம்படுத்த இந்த நிமிடம் வரை என்ன செய்தார்கள்?

மாற்று எரிபொருள் கண்டுபிக்க பல பில்லியன்கள் செலவு செய்கிறார்கள். இனிவரும் காலத்தில் மாற்று எரிபொருளால் வாகனம் ஓடுகிறது என வைத்துக்கொள்வோம். ஆனால் இதுவரை கெட்டு போன ஓசோனுக்கு என்ன பதில்?

ஓசோனை மேம்படுத்தவும் இனி கெடாமல் காக்கவும் இருக்க ஒரே வழிதான் உண்டு. அது அக்னிஹோத்ரம்...!

அறிவியல் ஆய்வுகளில் அக்னிஹோத்ரம் ஆச்சரியப்படும் விடைகளை கொடுத்திருக்கிறது. மேலை நாட்டில் அக்னிஹோத்ரம் காங்கிரஸ் என்று ஒரு சங்கம் துவங்கி விழிப்புணர்வு கொடுத்து வருகிறார்கள். அவர்கள் அக்னிஹோத்ரத்தின் அறிவியல் உண்மைகளை உணர்ந்து பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

நம் சகோதரி ஒருவர் சாணம் வறட்டி கிடைக்கவில்லை என்கிறார். ஆனால் வெளிநாட்டில் வறட்டி என்றாலே என்ன என தெரியாதவர்கள் அக்னிஹோத்திரம் தினமும் செய்கிறார்கள். எத்தனை ஆண்டுகளாக தெரியுமா? கடந்த 15 வருடங்களாக. நாம் வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம்.

இவ்வளவு சிறப்பு மிக்க அக்னிஹோத்திரத்தை அனைவரும் செய்ய வேதகால சமூகம் அனுமதிக்கவில்லை. சிலர் அக்னிஹோத்ரம் செய்யக்கூடாது என்கிறது...!

நண்பர்களே இந்த வரியை படித்ததும் கருப்பு சட்டையை மாட்டிக்கொண்டு தயாராகிவிட்டீர்களா?

[அக்னி ஒளிரும்]
நன்றி : Smithsonian national museum of natural history

16 கருத்துக்கள்:

Anonymous said...

ஒரு சின்ன வேண்டுகோள் சுவாமி. அக்னிஹோத்திரம் செய்முறையை வீடியோ எடுத்து Youtube இல் போட்டால இன்னும் தெளிவாக சிறப்பாக செய்ய முடியும். அறிவுபூர்வமான தகவலுக்கு மிக்க நன்றி.

Jayashree said...

என்ன பண்ணுகிறோம் என்பதைவிட எப்படி பண்ணுகிறோம் என்பது முக்கியம் இல்லையா. இங்க “எப்படி” என்பதும் நோக்கம்,(bha)பாவம் நல்லெண்ணம் இவைகளே. . அதே மாதிரி அக்னி வழிபாட்டுக்கும், பண்ணவேண்டும், நன்றியோடு இருக்க வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் முக்கியமே தவிர எந்த வஸ்துக்களினால் என்பது இல்லை . வறட்டியில் பண்ணுவதால் ஒருவர் சுறு சுறுப்பும் இல்லை சுள்ளியில் செய்வதால் சோம்பேரியும் இல்லை.:))) உண்மையில் எதைவைத்து செய்தாலும் அந்த பொருளை உண்டக்கியதில் நம் பங்கு என்ன உபயோகபடுத்துவதை விட !!!! செய்யும் செயலின் பொறுளுணர்ந்து செய்ய உபயோகமாக வழிபாட்டை நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். விஞ்ஞான விளக்கம் நன்றாக இருக்கிறது . மெய்ஞானத்தை விளக்குவது கடினம். .நான் சொல்ல வந்தது என்னன்னா என்னைபோல் தெரியதவர்களுக்கும் புரியாதவர்களுக்கும் இந்த மந்திரம் தான் சொல்லணும், இந்த பொருட்களினால் தான் செய்யணும் என்று அங்கும் “தான்” வந்துவிட்டால் அது “டுக்ருக் கரணே “ மாதிரி செயல் பொருள் இழந்தும் போகலாம். தெரியாத மந்திரங்களால் ஆராதிப்பதை விட இறைவன் உணர்ந்து சொல்வதை உடனே கேட்கிறான், உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல் சிந்தனை செயல் இணைந்து வரும், நமக்கு தெரிந்த வார்த்தைகளே மந்திரம் தான். ஐயா! எத்தனை நாட்கள் செய்கிறோம் எத்தனை தலைமுறை செய்கிறோம் என்பது முக்கியமில்லையே!!” அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,” அவ்ன் நினைக்க செயல் இறங்குகிறோம். நாள் முழுவதும் உழைத்து களைத்து பசித்து வருபவன் தெய்வத்தை நினைந்து குடிக்கும் தண்ணீரும், தான் சமைத்து உண்ணும் சோறும் வேள்வியில் சேர்க்கப்படுகிறது என்பதை மறுக்க முடியுமா. வயிற்றில் நாம் அக்னியை சுமக்க வில்லையா? அவன் நினைக்க முதல் முயற்சியே அவன் தாளில் நம்மை சேர்க்கும்.

Anonymous said...

பரவாயில்லையே ஜீ,ஏதேதோ சொல்லுரிங்க.நா கெமிஸ்ட்ரில வீக்.அதனால கருத்து சொல்ல வரல.பை த பை நண்பர் தினேஷ்பாபு சொன்னபடி வீடியோ வா எடுத்து அட்டாச் பன்னலாமே.

sowri said...

Interesting.... just curious to know more about this. Thanks for the tons of information.

yrskbalu said...

என்ன ஓம்கார்ஜி,

வாழப்பழத்தை கொடுத்தால் - நீயே உரித்து கொடு என்கிறார்களே ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தினேஷ் பாபு,

அனேக வீடியோக்கள் ஆல்ரெடி யூ டியூபில் கிடைக்கிறது.

அக்னிஹோத்ரம் செய்வது SMS செய்வதை விட எளிது :)

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி ஜெயஸ்ரீ,

உங்கள் நிலைப்பாட்டை பார்க்கும் பொழுது ஒன்று நீங்கள் முழு அறியாமையில் இருக்க வேண்டும், அல்லது முழுமையான ஞான நிலையில் இருக்க வேண்டும்.

இரண்டாம் நிலையில் இருந்தால் உங்களை வணங்குகிறேன்.

பெரிய புரணத்தில் ஒரு நாயன்மார் கற்களால் பூஜை செய்தார் மற்றொருவர் மனதிலேயே கோவில் கட்டினார். அதற்காக அனைவரும் கல்லில் பூஜை செய்யுங்கள் அல்லது மனதில் கோவில் கட்டுங்கள் என கூறலாமா?

(Bhava) பாவம் என்பது அடிப்படையில் வருவதற்கு மிகவும் சிரமமான விஷயம். நீங்கள் சொல்லும் விஷயம் சரி என்றாலும் அடிப்படை ஆன்மீக முதிர்ச்சி இல்லாதவர்களுக்கு முற்றிலும் ஒத்துவராது.

இரண்டும் இரண்டும் எத்தனை என்றால் நான்கு என நீங்கள் மனக்கணக்கு போட்டுவிடலாம், ஆனால் முதல் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு அது கஷ்டமான காரியம்.

கைவிரல் கொண்டு தான் நீ எண்ணுவாயா மனம் இருந்தால் போதாதா என அச்சிறுவனை பார்த்து கேட்டால் அவன் நிலை என்ன?

அதனால் உங்கள் ஞான முதிர்ச்சியை கண்டு நான் மகிழ்கிறேன். உங்களால் பாவனாபக்தி உணர முடிந்தால் அதுவே ஆன்மீகத்தின் கடை நிலை என்பதை கூற விரும்புகிறேன்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வெங்கடேச சிவம்,

/.நா கெமிஸ்ட்ரில வீக்//

உங்கள் தன்னடக்கத்திற்கு அளவே இல்லை :))

வீடியோ முன்பே இருக்கு... பாருங்கள். உங்களை போன்ற ஆகம புயல்களுக்கு அக்னிஹோத்ரம் ஒரு சிறு பிள்ளை விளையாட்டு அல்லவா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செளரி,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbalu,

//வாழப்பழத்தை கொடுத்தால் - நீயே உரித்து கொடு என்கிறார்களே ?//

அறிவியல் பூர்வமான விளக்கம் எல்லாம் வேண்டுமா? மக்கள் அவ்வளவு பின் தங்கி இருக்கிறார்களா? என இவர்களுக்கு தானே நீங்கள் சிபாரிசி செய்தீர்கள்?

:)

வாழை பழத்தை ஜீரணித்து சத்தை மட்டும் குடுக்க முடியாதா?
என்றும் சிலர் கேட்ப்பார்கள். :)

Unknown said...

ஸ்வாமி ஓம்கார் அவர்களே,
வணக்கம். குரு அருளை நாடி ஆன்மீக பாதையில் அடியெடுத்து வைத்த புதியவன். கடந்த ஒரு மாத காலமாக தங்களின் வலைதளத்தை முழுவதும் படிக்க எனக்கு ப்ராப்தம் கிடைத்தது. தங்களுடைய கருத்துக்கள் மற்றும் பல விளக்கங்கள் எல்லாமே என்னை நல்வழி படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு மூன்று மாத காலமாக ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்ப்பட்டு சித்தர்களின் நாமஜெயம் காலை மாலை வேளைகளில் செய்துவருகிறேன். சிறு வயதுமுதல் இறைநம்பிக்கை உள்ளவன் தான் ஆனால் இவ்வளவு மனமுருகி இருந்ததில்லை. நான் இதை தொடங்கும் சமயம் அசைவ உணவு பிரியனாக இருந்து பின்பு மெல்ல மெல்ல சைவ உணவு உட்கொள்பவனாக மாறினேன். நான் வளைகுடா பகுதியல் ஒரு தனியார் கம்பெனியில் சைட் சூப்பர்வைசர் ஆக பணிபுரிகிறேன். என் குடும்பம் தமிழ் நாட்டில் உள்ளது. ஆன்மீக சம்பந்தமான வலைதளங்களை தேடும் போது கிடைத்த அறிய பொக்கிஷம் தங்களின் வலைத்தளம். தங்களின் பணி சிறக்கவும் மேலும் இதுபோல நல்ல அறிய கருத்துக்களை தெரிந்துகொள்ளவும் பரப்பிரமத்தை, சித்தர்களின் துணையுடன் வேண்டுகிறேன்.
விடுமுறையில் வரும்போது தங்கள் சொன்ன அக்னி ஹோத்ரத்தை செய்துபார்க்க ஆவலாக இருக்கிறேன். அக்னி வேள்வி இறங்கிய(முடிந்த) உடன் செய்ய வேண்டிய வற்றையும் சொன்னால் நன்றாக இருக்கும்.

குரு அருளை நாடும்,
ச.விஜயராகவன், கத்தார்.

virutcham said...

//தினமும் வீட்டில் ஒரே இடத்தில் நிரந்தரமாக செய்ய சதுரமாக குழி தோண்டி அதில் சாணம் கொண்டு மொழுகி பயன்படுத்தலாம்.//
எந்த திசை நோக்கி அமர வேண்டும் (கிழக்கு ?) என்பது மாதிரி ஏதாவது ?

ரங்கன் said...

//அக்னிஹோத்திரத்தை அனைவரும் செய்ய வேதகால சமூகம் அனுமதிக்கவில்லை. சிலர் அக்னிஹோத்ரம் செய்யக்கூடாது என்கிறது...!
நண்பர்களே இந்த வரியை படித்ததும் கருப்பு சட்டையை மாட்டிக்கொண்டு தயாராகிவிட்டீர்களா? //

தெய்வத்தின் குரல் படித்துக் கொண்டிருக்கின்றேன். அதில் மகாபெரியவர் என்னதான் சொன்னாலும் கொஞ்சம் "அந்த" விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லோரயும் வேதம் படிக்க/அதன் படி நடக்க விட்டிருந்தால் ஜாதி என்ற ஒன்று தோன்றி இருக்காது என்பது என் நம்பிக்கை. ஒரு லிங்க் இத்துடன் கொடுத்துள்ளேன் - ஜாதி தலை விரித்து ஆடிக் கொண்டிருந்ததற்கு அடையாளமாக.
http://www.stigmasofthetamilstage.com/images/fullpictures/Fig5.jpg

ஸ்வாமி ஓம்கார் said...

திரு விருச்சம்,

//எந்த திசை நோக்கி அமர வேண்டும் (கிழக்கு ?) என்பது மாதிரி ஏதாவது ?//

அக்னிஹோத்ரம் செய்யும் குண்டம் நிலத்தில் சதுரமாக இருப்பதால் நான்கு திசைக்கும் பொதுவானதாக இருக்கும்.

நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமரலாம்.

என் தனிப்பட்ட கருத்து, அக்னிஹோத்ரத்திற்கு திசை முக்கியம் இல்லை.

காரணம் அக்னி என்றும் திசை சார்ந்து இல்லாமல் ஆகாயத்தை நோக்கியே ஒளிரும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரங்கன்,

//எல்லோரயும் வேதம் படிக்க/அதன் படி நடக்க விட்டிருந்தால் ஜாதி என்ற ஒன்று தோன்றி இருக்காது என்பது என் நம்பிக்கை//


நீங்க நல்லவரா கெட்டவரா :)))

Anonymous said...

நன்றி சுவாமிஜி.

ஜெயஸ்ரீயின் கருது அருமை.

@ykrsbalu
அறிவு உள்ளவர்களுக்கு, வாழைபழத்தை கொடுத்தால் போதும். எங்களைபோன்ற பொது மக்களுக்கு, வாழைபழத்தை உரித்து கொடுத்தால் தான் புரியும் :)