Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, June 25, 2010

அக்னி ஹோத்ரம் - பகுதி 3

நம் மக்களிடம் ஒரு பழக்கம் உண்டு. தாங்கள் எந்த காரியம் செய்தாலும் உடனடியாக அதற்கு பிரதி பலன் உண்டாக வேண்டும். இல்லை என்றால் அக்காரியத்தை அடுத்த முறை செய்ய மாட்டார்கள்.

தலை முடி வளரும் தைலம் என போலியாக ஒரு எண்ணெய்யை ஒருவர் தலையில் கட்டியிருப்பார். நம் ஆள் அதை விடிய காலை எழுந்து தலையில் தேய்த்துக் கொண்டு இரவு தூங்குவதற்கு முன் ஆயிரம் முறை கண்ணாடியை பார்ப்பார்கள். வாங்கிய பொருளின் பலனை சோதனை செய்கிறார்களாம்.

அதனால் தான் யாரேனும் என்னிடம் தியானம் செய்தால் என்ன பயன் என கேட்டால், “ஒரு பயனும் இல்லை என்பேன்”. தியானம் செய்தால் அந்தரத்தில் பறக்கலாம் என கூறுகிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். கண்களை மூடி தியானிக்க துவங்கி சில வினாடிகள் கூட கழிந்திருக்காது, கண்களை திறந்து எத்தனை அடி மேலே பறக்கிறோம் என குனிந்து பார்த்துக் கொள்ளுவார்கள். :)

இவ்வாறு இருக்க அக்னிஹோத்திரம் செய்தால் சூரிய பகவான் உங்களை ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் கூட்டி சென்று பிரபஞ்சத்தை சுற்றிக்காட்டுவார் என்றால் என்ன நடக்கும்? :)

அக்னிஹோத்திரம் செய்து சில வினாடிகளில் வெளியே ஓடி சென்று குதிரை வண்டி வந்தாச்சா என பார்ப்போம்.

அக்னிஹோத்திரம் ஒரு வித யோக பயிற்சி போன்றது. தினமும் அக்னிஹோத்திரம் காலையும் மாலையும் செய்ய வேண்டும். தினமும் செய்ய செய்ய நம் உடல், நம் வசிக்கும் இடம், நம் ஆன்மா, நம் பாரம்பரியம் என பல்வேறு தளங்களில் அக்னிஹோத்ரம் பலன்களை அள்ளித் தெளிக்கும். இவற்றை பட்டியலிட்டு செய்வதை விட பூரண நம்பிக்கையுடன் செய்வதே நன்று.

சரி அக்னிஹோத்ரம் எப்படி செய்ய வேண்டும் என பார்ப்போமா?

அக்னிஹோத்ரம் என்ற புனித யாகம் செய்யும் முறையை படிப்படியாக காண்போம்.

அக்னிஹோத்ரம் செய்ய தேவையான பொருட்கள் :

1) சிறிய ஹோம குண்டம்,

ஒரு அடி அகலம் ஒரு அடி நீளம் அரை அடி ஆழம் கொண்ட செம்பு உலோக பாத்திரம் அல்லது மண் பாண்டத்தை குண்டமாக பயன்படுத்தலாம். தினமும் வீட்டில் ஒரே இடத்தில் நிரந்தரமாக செய்ய சதுரமாக குழி தோண்டி அதில் சாணம் கொண்டு மொழுகி பயன்படுத்தலாம்.

2) சாண வறட்டி

சிறிய அளவிலான வறட்டிகள் போதுமானது.

3) முனை உடையாத பச்சரிசி.

இரு பக்க முனைகளும் உடையாத பச்சரிசி தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். நூறு கிராம் பச்சரிசி ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்த முடியும். காரணம் ஒரு சிட்டிகை அளவே அரிசி தினமும் பயன்படுத்த போகிறோம்.

4) பசு நெய்

சிறிது அளவு போதுமானது. அதிகமான பொருட்களை நாம் அக்னியில் இடுவதில்லை.

இது போக நெய் ஊற்ற சிறிய கரண்டி. அவ்வளவு தான்.

அக்னி ஹோத்ரம் செய்யக்கூடிய நேரம் :

சூரிய உதிக்கும் நேரம் மற்றும் சூரிய அஸ்தமன நேரம்.
நேரம் மிகத்துல்லியமாக கணிக்க வேண்டும்.
சூரிய அஸ்தமன/ உதய நேரத்திற்கு முன் சில நிமிடங்களில் துவங்க வேண்டும்.
சரியான அஸ்தமன/ உதய நேரத்தில் பொருட்களை அக்னியில் சேர்க்க வேண்டும்.
இந்த நடைமுறை மிக முக்கியமானது.

அக்னிஹோத்ரம் செய் முறை :

ஹோம குண்டத்திற்கு திலகம் இட்டு வணங்கவும்.

பின் சாண வறட்டியை இரண்டு மூன்று துண்டுகளாக்கி குண்டத்தில் அடுக்கவும்.
வறட்டியில் சிறிது நெய் துளிகள் விட்டு, வரட்டியில் நெருப்பை ஏற்றவும்.

நன்றாக வறட்டி எறியும் வரை காத்திருக்கவும். அக்னி நன்றாக உயர்ந்த நிலையில் சிறிது பச்சரிசி எடுத்துக்கொண்டு சில துளி நெய்யுடன் கலக்கவும். மந்திரம் கூறி அக்னியில் சேர்க்கவும்.

இரு மந்திரங்கள் கூறுவதால் இரு முறை மட்டுமே அக்னியில் அரிசியை சேர்த்தால் போதுமானது.

அக்னியை வணங்கி அக்னிஹோத்ரத்தை நிறைவு செய்யவும்..


அக்னி ஹோத்ரத்தில் கூற வேண்டி மந்திரம் :

சூரிய உதய காலத்தில் கூறும் மந்திரம்

சூர்யாய ஸ்வாஹா ( முதல் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
சூர்யாய இதம் நமஹா

ப்ரஜாபதியே ஸ்வாஹா ( இரண்டாம் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
ப்ரஜாபதியே இதம் நமஹா

சூரிய அஸ்தமனத்தில் கூற வேண்டிய மந்திரம்

அக்னியே ஸ்வாஹா ( முதல் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
அக்னியே இதம் நமஹா

ப்ரஜாபதியே ஸ்வாஹா ( இரண்டாம் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
ப்ரஜாபதியே இதம் நமஹா

அவ்வளவுதான். அக்னிஹோத்திரம் இது செய்வதற்கு ஏதேனும் கஷ்டம் உண்டா?

அக்னிஹோத்திரத்திற்கு என சின்னதாக ஒரு பை தயார் செய்து அப்பொருட்கள் அதனுள் வைத்திருந்து தினமும் பயன்படுத்தலாம்.
-----------------------


அக்னிஹோத்திர மந்திரங்களை சமஸ்கிருதத்தில் கூறமாட்டேன், செம்மொழியாம் தமிழ் மொழியில் கூறுவதாக இருந்தால் செய்கிறேன் என்பவர்களுக்கு தமிழ் மாத்திரைகள் (மந்திரங்கள்) கொடுக்கப்பட்டுள்ளது.

அக்னி வேள்வி :

கதிர் உயரும் நேரம் கூறும் மாத்திரைகள் :

கதிரவனிடம் சரணாகதி அடைகிறேன்
கதிரவன் இங்கே எழுந்தருளட்டும்.

அண்டத்தை படைத்தவனை சரணடைகிறேன்.
அண்டத்தை படைத்தவன் இங்கே எழுந்தருளட்டும்.

கதிர் சாயும் நேரம் கூறும் மாத்திரைகள் :

அக்னியை சரணடைகிறேன்
அக்னியை இங்கே எழுந்தருளட்டும்.

அண்டத்தை படைத்தவனை சரணடைகிறேன்.
அண்டத்தை படைத்தவன் இங்கே எழுந்தருளட்டும்.
-------------------------

அக்னிஹோத்ரம் கொடுக்கும் உண்மையான விளைவு என்ன?

நமக்கு அறிவியல் பூர்வமாக சொன்னால் தானே ஏற்றுக்கொள்வோம் ? நாம் எல்லோரும் பகுத்தறிவாளர்கள் ஆயிற்றே... இருங்கள் விவரிக்கிறேன்.

(..அக்னி ஒளிரும்)

20 கருத்துக்கள்:

எம்.எம்.அப்துல்லா said...

//கதிரவனிடம் சரணாகதி அடைகிறேன்
கதிரவன் இங்கே எழுந்தருளட்டும்.

//


தமிழகம் முழுவதும் இதைத்தான் சொல்லணும்னு நான் மிகவும் விரும்புகின்றேன் :))

yrskbalu said...

நமக்கு அறிவியல் பூர்வமாக சொன்னால் தானே ஏற்றுக்கொள்வோம் .

- still you think like that ?

-- here people will follow MASS .

if they follow system / ethics / sastra - india will be rolemodel country.

so, i not acepted your statement, it may be forsake of readers interest

Anonymous said...

மிக அருமை.இருப்பினும் தமிழ செம்மொழி பெயர்ப்பு அவ்வளவாக சரியில்லை என நான் நினைக்கிறேன்.
1.சூர்யாய ஸ்வாஹா -சூரியன் பொருட்டு அளிக்கிறேன்.
2.சூர்யாய இதம் ந மம-சூரியனே இது என்னுடையது அல்ல(அதாவது இதை உனக்கே அர்ப்பணிக்கிறேன்)என்றுதானே வரும்.
இதை தாங்கள் ஏற்க்கமாட்டீர்கள்.தங்களின் 7வது அறிவின் மூலம் தாங்கள் மொழிபெயர்த்ததே சரி என்பீர்கள் என்பது நான் அறிந்ததே.இருப்பினும், "அவ்ளோ அக்யூரட்டா watch பன்றோங்க,உங்க கருத்துக்கள"அப்டிங்கரத காமிக்கவேண்டாமா!அதான் ஜீ.மேலும் தொடர்க...

Unknown said...

தக்க நேரத்தில் தக்க பதிவு.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..

முடியல.. உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbalu,

பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்றால் நம் ஆட்கள் அதற்கு அறிவியல் ஆதாரம் எல்லாம் கேட்க்கமாட்டார்கள்.

இதுவே யோக பயிற்சி செய்தால் நன்மை என்றால் அதற்கு அறிவியல் ஆதாரம் கேட்பார்கள்.

அக்னிஹோத்ரம் செய்தால் காசு வரும் என கூறினேன் என்றால் நானும் அறிவியல் பற்றி கூறதேவையில்லை :)

உலகம் அப்படி...!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வெங்கடேஷ சிவம்,

// தமிழ செம்மொழி பெயர்ப்பு அவ்வளவாக சரியில்லை என நான் நினைக்கிறேன்.//

எனக்கு தமிழும் தெரியாது வட மொழியும் தெரியாது. எனக்கு புரிந்ததை மொழிபெயர்த்திருக்கிறேன்.

நம் ஊர் எழுத்தாளர்கள் ரஷ்ய கதைகளுக்கு மொழிபெயர்ப்பதில்லையா? அது போல.
உங்கள் வருகைக்கு நன்றி..

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பிரபு,

உங்கள் வருகைக்கு நன்றி.

Anonymous said...

என்ன ஜீ,இப்படி ஜர்க் ஆகிட்டிங்க.இப்ப என்ன சொல்ல வாரீக,உங்கள் மொழிபெயர்ப்பு சரி என்கிறீரா?

Jayashree said...

வறட்டி எல்லா இடத்திலும் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தானே. தெய்வம் எண்ணும் எண்ணத்திலும் அதை சார்ந்த உணர்விலும். நடைக்கு போகும் போது சேகரித்த சுள்ளிகளும்,நெய்யும் கொஞ்சம் சமைத்த சாதம் அல்லது தானியமும் தான் எங்கள் வழிபாட்டில். "தெய்வமே நான் உன்னை பார்த்ததில்லை எப்போவாவது துளியூண்டு உணர்ந்திருக்கிறேன்,அக்னியை விட சுத்தமான இடம் இல்லை, அதனால இந்த அக்னி உன் ஆஸனத்தையும் என் மனத்தையும் சுத்தப்படுத்தி உன்னை இருக்க செய்யட்டும்! எல்லா ஜீவராசிக்கும் தர முடியாவிட்டாலும் உனக்கு கொஞ்சம் என் உணவில் கொஞ்சம் அளிக்கிறேன் நீ எல்லாருக்கும் கொடுத்து நல்லா வச்சுக்கோ"இந்த ப்ரேயரை தான் நான் சமீபத்தில் ஒரு சித்தரை எதேச்சையாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றதிலிருந்து அவர் சொன்னதில் புரிந்து கொண்டு மனதார சொல்கிறோம். அதுவும் தேவலைனு தான் எனக்கு படறது..CREATE IN ME A CLEAN HEART AND RENEW A RIGHT SPIRIT WITHIN ME (quote from the Bible ?) EQUIVALENT OF GAYATHRI??

Unknown said...

சுவாமிக்கு வணக்கம். நன்றாக உள்ளது. இதை கோயில்களில் செய்யலாமா? கோவில்களில் செய்வது என்றால் என்ன மாதிரியான மந்திரங்களை கூறவேண்டும் ?அக்னிஹோத்ரம் நிறைவு செய்யும் போது எப்படி செய்வது தீ எப்படி அணைப்பது? நன்றி சுவாமி

Paleo God said...

////கதிரவனிடம் சரணாகதி அடைகிறேன்
கதிரவன் இங்கே எழுந்தருளட்டும்.

////
ஸ்வாமி, முடியல உடலெல்லாம் பற்றிக்கொண்டு எரிகிறது! குளிர்ச்சி வேண்டும், பெரிய இரண்டு இலைகளை தலைமீது வைத்துக்கொண்டு மழையில் நனைய ஆசை. எதுனா பார்த்து செய்யவும்.
:))

Vijayaraghavan TV a.k.a Vijay TV said...

தாங்கள் கூறுவது சரியே. பலனை எதிர் பார்க்காமல் காரியம் செய்ய சொன்னால் நம்மில் பலருக்கும் கொஞ்சம் கஷ்டமே.
இருப்பினும்,
சூர்ய நமஸ்காரம் செய்வதற்கும் இதற்கும் என்ன வித்யாசம்?

bogan said...

எதிர் அயனிகள் என்று ஒரு சமாச்சாரம் சொல்கிறார்கள்.சுற்றுப் புற சூழல் அதிகம் மாசு படாத இடங்களில் [மலைப் பிரதேசங்கள் போன்று ]இவை அதிகம் காணப் படுகின்றன.இவை மிகுந்து காணப் படும் இடங்கள் மகிழ்வும் சாந்தியும் [பக்கத்து வீட்டுப் பெண் அல்ல]தருவதாக மேலை நாடுகளில் நம்புகிறார்கள்.இவற்றை செயற்கையாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நன்கு விற்கின்றன.சில பிரான்ட் ஏசி மஷினகளின் கூடவே இந்த வசதியும் கொடுக்கிறார்கள்.அக்னி ஹோத்திரம் இந்த எதிர் அயனிகளை அதிக அளவில் சூழலில் பரப்புகிறது என்று படித்த நினைவு.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி ஜெயஸ்ரீ,

தாய் தந்தை முதல் தெய்வம் என பிள்ளையார் சுற்றிவந்த திருவிளையாடல் புராண கதை தெரியும் தானே?

உங்கள் தாய் தந்தையரை மட்டும் வணங்கி அனைத்தையும் விட்டுவிடுவீர்களா?

நம் ஆட்களுக்கு முழுமையாக ஒரு முயற்சியை செய்ய எத்தனையோ காரணம் வந்துவிடும்.

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்.. எனக்கு ஒரு துளசியும் சிறிது நீரும் கொடுத்தாலே போதும் நான் மகிழ்வேன் என்று... இதை ஒரு காரணமாக கொண்டு ஒரு பெரும் செல்வந்தர் தினமும் ஒரு துளசி இலையும் ஒரு சொட்டு நீரும் கொடுத்தால் அது எவ்வளவு கொடுமையோ அது போன்றதே உங்கள் நிலையை உணர்கிறேன்.

உங்களை நீங்களே சமாதானம் செய்துகொள்ள எங்களை போன்றோர் இடத்தில் கேள்வியை கேட்டு “ஆம்” என்ற பதிலை வாங்கி உங்கள் சோம்பே
உங்கள் ஆன்மீக சோம்பலை வளர்த்துகிறீர்கள் என உணர்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜேஷ்,

கோவில்களில் அக்னிஹோத்ரம் செய்யக்கூடாது..

அக்னிஹோத்ரம் உங்கள் பர்சனல் விஷயம் போல. அதை பொது இடங்களில் செய்யக்கூடாது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சங்கர்,

/முடியல உடலெல்லாம் பற்றிக்கொண்டு எரிகிறது! குளிர்ச்சி வேண்டும், பெரிய இரண்டு இலைகளை தலைமீது வைத்துக்கொண்டு மழையில் நனைய ஆசை. எதுனா பார்த்து செய்யவும்.//

முடிந்தால் எலும்மிச்சை பழத்தை தலையில் பறபற என தேய்து குளிக்கவும். நானும் அது தான் செய்கிறேன். :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு விஜய ராகவன்,

//சூர்ய நமஸ்காரம் செய்வதற்கும் இதற்கும் என்ன வித்யாசம்//

சூரிய நமஸ்காரம் என்பது சூரியனை வணங்குதல்.

அக்னிஹோத்ரம் என்பது சூரியனுடன் இணைவது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு போகன்,

நீங்கள் கூறும் கருத்து முற்றிலும் சரி.

உங்கள் வருகைக்கு நன்றி.

SUMAN said...

கதிரவனின் சக்தி தெரியாதவர்கள் எதுவும் பேசுவார்கள்.
இதையே ஒரு மேலை நாட்டு அறிஞன் சொன்னால் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்வார்கள் .

எதிர்க் குரல் கொடுப்பவர்கள் அல்லது நையாண்டி பேசுவோர் தயவு செய்து நீங்கள் பேசும் விடயத்தில் ஓரளவுக்காவது அறிவைப் பெற்றுக்கொண்டு பேசுதல் நலம் .


எல்லா வளமும் நலமும் இருந்தும் கீழைத் தேய நாடுகள் வளராமல் போனதற்குக் காரணம் இதுவேதான்.

தொடருங்கள் உங்கள் பணியை :)