Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, June 17, 2010

அக்னி காரியம் - பகுதி 2

அக்னிஹோத்ரம் என்பது ஒரு வழிபாட்டு முறை அல்ல. பலர் அது ஒரு மதத்தின் வழிபாட்டு சின்னமாகவும். அக்னி வளர்த்தி யாகம் செய்தால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதி அடிப்படையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இன்னும் சற்று ஒருபடி மேலே சென்று நான் அவ்வளவு தூய்மையானவன் கிடையாது. நான் வழிபடலாமா என கேட்கிறார்கள். எதற்கு இந்த தாழ்வு மனப்பான்மை?

பாரத கலாச்சாரம் சூரியனை ஆழ்ந்து ஆராய்ந்து வழிபட்ட சமூகம். அதனால் தான் உலகிலேயே எந்த கலாச்சாரமும் செய்யாத அளவில் சூரியனுக்கு கோவில் கட்டி வழிபட்டனர்.



சூரியன் நம் கண் முன்னால் இருக்கும் இறையாற்றல் என கூறுகிறார்கள். மேலும் ஆறுவித வழிபாட்டு முறைகளில் சூரிய வழிபாடு என்பதும் ஒன்று. ஆகையால் சூரியனை வழிபடுவது நம் கலாச்சாரத்தில் ஒன்று.

ஒரிசா மற்றும் பல ஊர்களில் சூரியனார் கோவில் உண்டு. பிற மத கோவிலில் கூட சிவனை ருத்ர ரூபமாகவும், விஷ்ணுவை சூரிய நாராயணர் என்றும் வழிபட்டனர். கோவிலின் கட்டமைப்பில் கூட சூரியன் குறிப்பிட்ட நாளில் விக்ரஹத்தின் மேல் விழுமாறு செய்து மகிழ்ந்தனர். ஆக சூரியன் ஒரு தெய்வாம்சம் என்பது பாரத கலாச்சாரத்தின் சான்றாகிறது.

நம் உடல் பிரபஞ்சத்தின் வடிவமாக கருதினால் நம் ஆன்மா சூரியனாக இருக்கும். சூரியன் என்பது சுயம் பிரகாசிக்கும் ஒன்று. ஆன்மாவும் எந்த தூண்டுதலும் இல்லாமல் நம்மில் என்றும் உண்டு. அக்னிஹோத்ரம் என்பது ஓர் வித ஆன்மாவை அறியும் தியானம் என்று உணரப்பட வேண்டும்.

அக்னிஹோத்ரம் என்றால் சுயமாக உருவான அக்னியை நாம் உருவாக்கிய அக்னியால் வணங்கி நன்றி கூறுவது அக்னிஹோத்ரம் என எளிமையாக கூறலாம். அதன் படி சுயமான அக்னியாகிய சூரியனை, நாம் உருவாக்கும் அக்னி கொண்டு நன்றி தெரிவிப்பது அக்னிஹோத்ரம் என புரிந்துகொண்டால் போதுமானது.

அக்னியை வணங்கவோ அல்லது வளர்த்தவோ நீங்கள் ஒரு மனிதனாகவும் உங்கள் ஆன்மாவை உணர விரும்புபவராகவும் இருந்தால் போதுமானது. மற்றபடி அக்னிஹோத்ரம் ஜாதி,மத மற்றும் நாட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.

வேடிக்கையாக நான் ஒன்று கூறுவது உண்டு. நாத்திகார்கள் கூட சூரியனை வழிபட துவங்கிவிட்டனர். பல்வேறு வருடமாக நாத்திகாராக இருந்த ஒருவரிடம் “ஓம் நமோ நாராயணா” என கூறச்சொன்னால், அவர் “சூரியனுக்கு வணக்கங்கள்” என கூறுகிறாராம். அதனால் பகுத்தறிவாளியாகவோ அல்லது ‘பகூத்’ அறிவாளியாக இருந்தாலும் பூமியின் செயல்,வளர்ச்சி மற்றும் அழிவுக்கு காரணமான சூரியனுக்கு நன்றி செலுத்தலாம்.

இவ்வளவு கூறினாலும் என் உள்ளத்தையும் என்னிடம் உள்ளதையும் திருடிய திருமூலரின் வார்த்தையில் அக்னி என்றால் என்ன என பார்ப்போம்.

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே.
-திருமந்திரம் 222

அக்னிஹோத்ரம் மற்றும் பிற ஹோமம் செய்யும் பொழுது இருக்கும் அக்னியும், இடுகாட்டில் உடலில் இடும் அக்னியும், உடலின் உள்ளே இருக்கும் அக்னியாக வினை செய்பவனும், வேதத்தில் அக்னி என்று போற்றப்படுபவனும் ஈசனே ஆகும். இறைவன் அக்னி சொரூபம் என்பதையும் அனைத்து இடத்திலும் இருக்கும் அக்னியும் இறைவனின் சொருபமே என்றும் விளக்கும்.

அக்னிஹோத்ரம் தற்காலத்திற்கு தேவையா? நம் வாழ்க்கை முறைக்கு ஒத்து வருமா?
இத்தகைய அக்னிஹோத்ரம் எப்படி செய்வது என பார்ப்போமா?

(அக்னி ஒளிரும்)

23 கருத்துக்கள்:

தினேஷ் said...

hhhhhhmmmmmmmm

Krubhakaran said...

//பல்வேறு வருடமாக நாத்திகாராக இருந்த ஒருவரிடம் “ஓம் நமோ நாராயணா” என கூறச்சொன்னால், அவர் “சூரியனுக்கு வணக்கங்கள்” என கூறுகிறாராம். அதனால் பகுத்தறிவாளியாகவோ அல்லது ‘பகூத்’ அறிவாளியாக இருந்தாலும் பூமியின் செயல்,வளர்ச்சி மற்றும் அழிவுக்கு காரணமான சூரியனுக்கு நன்றி செலுத்தலாம். //

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும். - ”முதல்வருக்கு” வனக்கங்கள்.

Unknown said...

//இன்னும் சற்று ஒருபடி மேலே சென்று நான் அவ்வளவு தூய்மையானவன் கிடையாது. நான் வழிபடலாமா என கேட்கிறார்கள். எதற்கு இந்த தாழ்வு மனப்பான்மை?//

இதற்கு காரணம் சில நூற்றுண்டுகள் முன் பிராமனர்கள், அவர்கள் மிகவும்
தூய்மையனவர்கள்(உயர்ந்தவ்கள்),மற்றவர்கள் தூய்மை இல்லதவர்கள்(தாழ்ந்தவகள்) என்று பிராமனர்கள் உருவாகிய எண்ணம் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளது.

yrskbalu said...

அக்னிஹோத்ரம் தற்காலத்திற்கு தேவையா?

--அதானே ?

---எதற்காக ?

ரங்கன் said...

சில வருடங்களுக்கு முன்பு வரை நான் கேட்டுகொண்டிருந்த கேள்வி - சூரியன் இன்றி நாம் வழ இயலாது - சரி - சுட்டு எரிப்பதும் சூரியனே அல்லவா - ஆதலால் நான் சூரியனுக்கு நன்றி தெரிவித்து என்ன ஆகப்போகிறது ?

தற்போது ஓரளவுக்கு ஒத்துக் கொண்டாலும் - மனதிலிருந்து இந்த எண்ணம் போக மறுக்கிறது - ( சூர்யனுக்கு மட்டுமல்ல மற்ற நான்கும் கூட)

sowri said...

:) nice start.. with regular punch line. I hope you are still in Covai:))

நிகழ்காலத்தில்... said...

ஜெய் சூர்யா !!!!

நாலாவதா ஓட்டு போட்டு இருக்கேன்.. :))

எம்.எம்.அப்துல்லா said...

//பல்வேறு வருடமாக நாத்திகாராக இருந்த ஒருவரிடம் “ஓம் நமோ நாராயணா” என கூறச்சொன்னால், அவர் “சூரியனுக்கு வணக்கங்கள்” என கூறுகிறாராம். //


சாரி சாமி, நாத்திகராக இருந்த அல்ல இன்னும் இருக்கின்ற ஒருவர் அவர் :))

எல் கே said...

அக்னி ஹோத்ரம் செய்ய உபயோகிக்கும் அக்னியை நாம் ஒரு மண் பானையில் வைத்து இருக்க வேண்டும். நமது உடலுக்கு வைக்கப் படும் அக்னி அதில் இருந்துதான் வரவேண்டும் என்கிறார்கள் உண்மையா

வெற்றி-[க்]-கதிரவன் said...

சாஸ்திர குப்பையில் உருண்டு புரளும் சுவாமி ஒம்காரை எத்தனை அவதாரம் வந்தாலும் மாற்ற இயலாது

***

நீங்க எழுதிருக்க திருமந்திரத்துல வேதம் என்ற சொல்லே வரல விளக்கதுல வந்திருக்கு இதுக்கு பெயர் தான் இடை சொருகல் ???

ஸ்வாமி ஓம்கார் said...

அக்னிஹோதிர பதிவுக்கு சூரியனே மறுமொழி கொடுத்தது மகிழ்ச்சி :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிருபா,

என் மேல ஏதாவது கோவமா? :) நான் சூசகமா சொன்னதை இப்படி விளம்பரப்படுத்தீட்டீங்களே. :)

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சந்தான கிருஷ்ணன்,

வர்ணாஸ்ரமம் என்ற குப்பையை பற்றி பேசவில்லை. நீங்கள் அறிவில்லாதவர் என மற்றவர்கள் சொன்னால் அதை ஆமாம் என ஆமோதிப்போமா? அதுபோலவே இது.


உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbalu,


உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரங்கன்,


//சில வருடங்களுக்கு முன்பு வரை நான் கேட்டுகொண்டிருந்த கேள்வி - சூரியன் இன்றி நாம் வழ இயலாது - சரி - சுட்டு எரிப்பதும் சூரியனே அல்லவா - ஆதலால் நான் சூரியனுக்கு நன்றி தெரிவித்து என்ன ஆகப்போகிறது ?//

நம் தந்தை நம்மை கண்டிக்கிறார் என்பதால் அவரை வெறுத்து ஒதுக்கிவிடுவோமா?

சிலநேரம் காதலும் சில நேரம் ஊடலும் கொண்டது தானே மண வாழ்க்கை. அது போலவே இது.

சூரியனை நன்றி கூறுங்கள் இல்லையேல் காதலியுங்கள்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செளரி,
திரு நிகழ்காலம் சிவா,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அப்துல்லா அண்ணே,

//சாரி சாமி, நாத்திகராக இருந்த அல்ல இன்னும் இருக்கின்ற ஒருவர் அவர் :))
//

நீர் தொண்டன் ...நீர் உடன் பிறப்பு.

ஒத்துக்கறேன். :))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு எல்.கே,

அக்னிஹோத்ரம் தொடர்ந்து செய்பவர்களுக்கு அது நடைமுறை உண்டு.

அனைவருக்கும் அல்ல.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வெற்றிக்கதிரவன்,

//எத்தனை அவதாரம் வந்தாலும் மாற்ற இயலாது

***
//

அவதாரங்கள் வருவதில்லை. தோன்றுகிறார்கள் :))

//
நீங்க எழுதிருக்க திருமந்திரத்துல வேதம் என்ற சொல்லே வரல விளக்கதுல வந்திருக்கு இதுக்கு பெயர் தான் இடை சொருகல் ???//

கடைசி வரியில் “கோமத்துள் ” என்கிறாரே.... அது தான் வேதம்.

வேதத்தால் கூட முழுமையாக விளக்க முடியாத பரம்பொருள் இறைவன் என்கிறது.

திருமந்திரமே வேதம் தானே ஐயங்காரே... ;)

உங்கள் வருகைக்கு நன்றி.

virutcham said...

சமீபத்தில் எனக்கத் தெரிந்தவர் ஒருவர் அக்னிஹோத்ரம் பற்றி என்னிடம் பேசிக் கொண்டு இருந்த போது நமக்கு அது பற்றிய முறையான அறிவு இல்லையே என்று நினைத்துக் கொண்டுஇருந்தேன்.
உங்களுக்கு தெரிந்து விட்டது போல. பாருங்க உடனே பதிவு போட்டுட்டீங்க.
நன்றி

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)))

ஞான் அய்யர் நாட் ஐய்யங்கார்.

எம்.எம்.அப்துல்லா said...

//திருமந்திரமே வேதம் தானே ஐயங்காரே... ;)


//

ஹா..ஹா..ஹா...


சாமி இந்த உள்குத்து மத்தவங்களுக்குப் புரியுமான்னு தெரியலை.ஆனா கண்டிப்பா எனக்கும் வெற்றி கதிரவனுக்கும் நல்லாவே புரியும்.

இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன் :))))))))

Krubhakaran said...

//திரு கிருபா,

என் மேல ஏதாவது கோவமா? :) நான் சூசகமா சொன்னதை இப்படி விளம்பரப்படுத்தீட்டீங்களே. :)
//

இரட்டுர தானே மொழிந்திருக்கிரேன் ”ஸ்வாமி”? சூரியன் முதல் கடவுள் அல்லவா? அது தான் ஞாயிறு போற்றுது-முதல்வருக்கு வணக்கம். எப்புடீ?

தவறு என்றால் மன்னிக்கவும் ”ஸ்வாமி”. நன்றி.