Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, May 25, 2010

பழைய பஞ்சாங்கம் 25 - மே - 2010

வெள்ளிங்கிரி பயணம்

வெள்ளிங்கிரி என கூறப்படும் தென்கைலாய மலைக்கு பயணம் சென்றேன். வருடா வருடம் செல்லும் இடம் தான் என்றாலும் இந்த முறை பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல உடல் சற்று திடமாக இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் இருதய நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதன் மூலம் பயணத்தின் சிக்கலை உணர்ந்து கொள்ளலாம்.

1800 மீட்டர் உயரத்தில் மலையின் உச்சியில் ஒரு குகை உண்டு. அங்கே சுயம்புவாக தோன்றிய பஞ்ச லிங்கங்கள் உண்டு. இந்த வருடம் செல்லும் பொழுது புதிய சில குகைகளை கண்டேன். அங்கும் பரவசமான உணர்வுகள்.

என்னுடன் மலை ஏற ஒரு வலைப் பதிவரும் வந்திருந்தார். கட்டதுரை மாதிரி ஏறிய அவர் இறங்கும் பொழுது கைப்புள்ள போல நடந்து வந்தார் என்பது சிறப்பு செய்தி...!

-------------
மஹா பெரியவர்

காஞ்சி பரமாச்சாரியார் அவர்களை பலருக்கும் தெரியும். ஆன்மீகம், சமூகம் மற்றும் மொழியியல் ஆழ்ந்த அனுபவம் பெற்று சதமடித்து சமாதியானவர். ஒரு முறை வெளி ஊரில் பயணம் மேற்கொண்டிருந்த சமயம் ஒரு இடத்தில் தொடர்ந்து பத்து நாட்கள் தங்கி இருந்தார்.

தினமும் அதிகாலை 4.30 மணிக்கு தன்னை துயில் எழுப்புமாறு ஆசிரம சேவகர் ஒருவரிடம் கூறினார். கடிகாரம் பரவலாக புழக்கத்தில் இல்லாத காலம் அது. முதல் நாள் காலை சரியாக எழுப்பிய சேவகர் அடுத்தநாள் வேலை பழுவால் தூங்கிவிட்டார். அதனால் மஹாபெரியவர் தாமதமாக எழ வேண்டி அமைந்தது.

மறு நாளில் காலை 4.20 க்கு மஹாபெரியவரே அறையிலிருந்து வெளியே வந்து சேவகரை எழுப்பினார். இந்த செய்கை அடுத்த சில நாட்களும் தொடர்ந்து. எப்படி இவர் கடிகாரமும் அலாரமும் இல்லாமல் சரியாக எழுந்திருக்கிறார் என சேவகருக்கோ ஒரே ஆச்சரியம். தனது வியப்பை பற்றி பெரியவரிடம் கேட்டார்.

மஹாபெரியவர் கூறினார் “4.20க்கு ஒரு ரயில் நாம் தங்கி இருக்கும் இடத்தை கடந்து செல்லுகிறது. அதை ஒரு நாள் கவனித்தேன். ரயில் சப்தம் கேட்டவுடன் எழுந்துவிடுவேன். இதில் அதிசயம் ஒன்றும் இல்லை” என்றார்.

தற்சமயம் வெளிவரும் சில ஆன்மீக பத்திரிகைகள் இவரை சுற்றி சில அதிசய பிம்பங்களை கொண்ட கதைகளை ஏற்படுத்துகிறது. விளம்பரங்களை தவிர்த்து மிகவும் எளிமையாக வாழ்ந்த ஒரு மஹானை பற்றி தவறான தகவல் எதிர்கால தலைமுறைக்கு செல்லுகிறது. அவரின் ஆன்மீக பெயர் மறந்து அனைவரும் மஹாபெரியவர் என அழைக்கிறார்கள் என்பதை விட அதிசயம் தேவையா?
----------

சென்னையில் திருமந்திரம்

பல அன்பர்கள் சென்னையில் திருமந்திர புத்தகம் எங்கே கிடைக்கும் என கேட்டு மின்னஞ்சல் செய்கிறார்கள். நம் பதிவுலக நண்பர்கள் மூலம் அதற்கான ஏற்பாடுகள் செய்துவிட்டோம்.

புத்தக நிலையத்தின் முகவரி கீழே :

டிஸ்கவரி புக் பேலஸ் ,
6 மகாவீர் காம்பளக்ஸ் ,
முனுசாமி சாலை பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்,
கேகே.நகர் சென்னை 78.
தொலைபேசி : 9940446650

இப்பணிக்கு உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்.

----------------

ஜென் கவிதை

இதுவமது
--------------

பூவின் நடுவில்
மகரந்தம்

மகரந்தத்தின் உள்ளே
பூக்கள்

15 கருத்துக்கள்:

yrskbalu said...

are you visited saduragiri malai ?

Romeoboy said...

பஞ்சாங்கத்தில் சுப்பாண்டி காணோமே சாமி ...அப்பறம் யார் அந்த கைப்புள்ள ??

sowri said...

Good ones...Esp the Veliangiri.. The place i admire most.

fieryblaster said...

i think u want all credit for a godman to be given to you alone. when u write that u got aathmanubhavam, u expect us to believe. when others say that he got wonderful experience with MahaPeriyaval, u write that things are spun using his name.

when a commercial person like you can get aathmanubhavam, why cannot Kanchi Periyaval do wonders? they are not spun, but they are real. Certain things have to be felt. just becos u have a blog and know how to write, u cannot fill page with non sense stuff.

Mahesh said...

//தற்சமயம் வெளிவரும் சில ஆன்மீக பத்திரிகைகள் இவரை சுற்றி சில அதிசய பிம்பங்களை கொண்ட கதைகளை ஏற்படுத்துகிறது.//

எனக்கும் இது கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. அவருடைய எளிமையையும் உன்னதத்தையும் கேலிக்குரியதாக்குவதாகவே பட்டது.

ஜென் கவிதை அருமை !! அதற்குள் இது... இதற்குள்ளே அது !!

Mahesh said...

///அவரின் ஆன்மீக பெயர் மறந்து அனைவரும் மஹாபெரியவர் என அழைக்கிறார்கள் என்பதை விட அதிசயம் தேவையா?
//

fieryblaster நினைப்பதைப் போல அல்லாமல், இன்றைய உலகில் சிறு சிறு சித்துவிளையாட்டுக்களுடன், விளம்பரங்களுடன் வலம் வரும் xxxஆனந்தர்களின் வரிசையில் மஹாபெரியவரையும் சேர்த்துவிடும் அபாயம் இருக்கிறது என்ற கருத்தை ஒட்டியே ஓம்கார் எழுதியிருப்பதாக நான் நினைக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbalu,

அங்கும் சென்று இருக்கின்றேன். எங்கும் இருக்கும் இறைவனை காண...

திரு ரோமியோ பாய்,

சுப்பாண்டி பிஸி :) கைப்புள்ள ரகசியத்தை கேட்காதீங்க..:))


திரு செளரி,
உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி fieryblaster,

உங்கள் மறுமொழி கண்டதும் ஒரு தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டும் காட்சி நினைவுக்கு வந்தது....

”உங்களை போன்ற தீவிர விசிறிகள் இருக்கும் வரைக்கும் அசைச்சுக்க முடியாது....” என்பதே அது..

ஆன்மீகவாதிகளுக்கு பக்தர்களாக இருங்கள், ரசிகர்களாக இருக்காதீர்கள்..!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

/சித்துவிளையாட்டுக்களுடன், விளம்பரங்களுடன் வலம் வரும் xxxஆனந்தர்களின் வரிசையில் //

சித்துவிளையாட்டு மட்டுமா? சித்தி விளையாட்டும் நடக்கிறது..!

லிங்கம் எடுத்தால்தான் லாயக்கு,
விபூதி எடுத்தால்தான் விமோச்சனம்,
அதிசயம் நிகழ்த்தினாலேயே அனுபூதி என நினைக்கும் பலருக்கு உண்மையான ஆன்மீக இன்பம் என்பது தெரியப் போவதில்லை.

உங்கள் வருகைக்கு நன்றி.

Krubhakaran said...

//
பூவின் நடுவில்
மகரந்தம்

மகரந்தத்தின் உள்ளே
பூக்கள்
//

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்
பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில்


இல்லையா ”ஸ்வாமி”?

Unknown said...

லிங்கம் எடுத்தால்தான் லாயக்கு,
விபூதி எடுத்தால்தான் விமோச்சனம்,
அதிசயம் நிகழ்த்தினாலேயே அனுபூதி என நினைக்கும் பலருக்கு உண்மையான ஆன்மீக இன்பம் என்பது தெரியப் போவதில்லை.
உண்மை.

ரங்கன் said...

நீங்க சரின்னு ஒரு வார்த்தை சொல்லுங்க - உங்களுக்கும் கட்டுரை எழுதத் தயார். தலைப்பு கூட ரெடி
"வானைத் திற - வையகம் எழும்"

காசு சுவாமி ! அத்தனை காசு!!

Unknown said...

//வானைத் திற - வையகம் எழும்//
இடத்த காலிபண்ணு. உதை விழும். இப்படிக்கூட எழுதலாம் ஓம்கார் ஸ்வாமிஜி

fieryblaster said...

@ Omkar: if u know the right meaning, devotee is one step ahead of a fan. u can expect a devotee to go wild when something bad about his or her guru is told.

our devotion should be one pointed and without doubt. as a layman, by reading the works(or complilation) of a God man,(deivathin kural for example),a person becomes principally convinced about following Him. Still, to get one pointed faith, to believe that He is the person to whom I have to surrender, books like "Maha Periyavalin darisana anubavangal" helps me. As you say, some magazines may spun something, but net net the result is only good. Our faith becomes stronger and the bond becomes closer.

And that quote of theevira rasigargal was a kevalamana quote. that was meant for a cine actress. Using this quote in this place does not suit my Guru's calibre. neither does it suit a 'swamy' like you.

ரங்கன் said...

fieryblaster

அதிசயங்கள் என்று கூறி நிஜமான தெய்வப்ப்ரிவைகளை நம்மிடம் இருந்து பிரித்துவிடுகின்றன இந்த பத்திரிகைகள். நமக்குத் தேவை விஷயம் - visual அல்ல. (தீவிர ரசிகர் - நடிகைக்காக அல்ல - நன்குகவனிக்கவும்)