Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, March 2, 2010

காசி சுவாசி - பகுதி 13

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்
பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே
----------------------------------------------------------திருமந்திரம் 512

நம்மில் பலருக்கு காசி என்றவுடன் பல்வேறு முன்கருத்துக்கள் உண்டு. சினிமாவோ, தொலைக்காட்சியோ, கதைகளோ காட்டும் காசியை நம்புகிறோம். பலருக்கு காசி என்றதும் அது என்னவோ வயசான பிறகு சென்று தங்கள் பாவத்தை கரைக்க வேண்டிய இடம் என நினைத்துவிடுகிறார்கள்.

சில நாட்களுக்கு முன் காசியின் ஒரு படித்துறையில் அமர்ந்திருந்த பொழுது நான் கண்ட காட்சியை விவரிக்கிறேன்.

காலை 6 மணி இருக்கும், கங்கையின் படித்துறையில் அமர்ந்து சூரிய உதயத்தை கண்டவாறு விடியலை வரவேற்க வேண்டுமானால் உங்கள் கண்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். கங்கையின் மேலே விழும் சூரிய கதிர்களை நான் ரசிக்கும் தருணத்தில் இரு முதியவர்கள் கைகளை பிடித்தபடி வந்தனர். ஒருவருக்கு சுமார் 80வயதும், ஒருவருக்கு 60 வயதுக்கு மேலும் இருக்கலாம்.

படித்துறையில் யாரும் இல்லை. இருவரும் எனக்கு அருகில் தங்கள் துணிகளை வைத்துவிட்டு என்னை பார்த்தார்கள். பிறகு மிகவும் வயதான முதியவர் நீர் இருக்கும் படிக்கு முன்படியில் அமர்ந்து கொண்டார். குறைந்த வயது முதியவர் அவரின் காதுகளில் கைகளை வைத்து காதுக்கு அருகே குனிந்தார்.

காங்கைக் கரையில் காதின் அருகே இவ்வாறு கைகளை வைத்து மந்திர உபதேசம் வழங்குவது இயல்பு. மந்திர உபதேசம் செய்வதற்கு நான் இடைஞ்சலாக இருக்க விரும்பாமல் சில அடிகள் நகர்ந்து உட்கார எண்ணி எழுந்தேன். அப்பொழுது அந்த வயது குறைந்த முதியவர் மற்றொருவரின் காதில் மட்டுமல்ல பலருக்கு கேட்கும் விதத்தில் உரக்க கூறிய மந்திரம் என்ன தெரியுமா?

”படியில் பாசம் அதிகமா இருக்கும், பார்த்து காலை வையுங்க”

இப்பொழுது சொல்லுங்கள் கங்கையையும், காசியையும் அனுபவிக்க சரியான வயது எது? வயது முதிர்ந்த காலத்தில் நடக்கவும், பார்க்கவும் திறன் குறைந்த சூழலில் அங்கே சென்று என்ன செய்யப் போகிறோம்?

புலன்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படும் பொழுது அங்கே சென்று அனுபவித்து ஆன்மீக அனுபவங்களை பெற்று வர வேண்டாமா? பிறகு முதிர்ந்த வயதில் மீண்டும் சென்று அங்கே கிடைக்கப்பெற்ற ஆன்மீகத்தை அசைபோட வேண்டாமா?


கங்கை ஆறு பல்லாயிரக்கணக்கான வருடங்களாக காசியை ஸ்பரிசித்து வருகிறது. அங்கே வருபவர்களை எல்லாம் ஒரு பிரதி எடுத்துக்கொள்ளும். உங்கள் உடலை மட்டும் பிரதியாக்குவதில்லை. உங்களின் ஆன்மாவையும் பிரதியாக்குகிறது. ஒருவர் கங்கையின் முன் அமர்ந்து கங்கையை ஆழமாக கவனித்தால் கங்கை அவர்களின் ஆன்மாவின் ஆழத்திற்கு ஊடுருவுகிறாள். உங்களின் முற்பிறவி வாசனைகளையும், ஞாபக அடுக்குகளையும் நினைவுபடுத்தி உங்களின் பூர்வ ஜென்மங்களை தூசு தட்டும். கங்கை உங்களை பல நூற்றாண்டுகளாக கவனித்து வருகிறாளே..!

காசிக்கு சென்றால் எதையாவது விட்டு விட வேண்டும் என்பது பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். காசிக்கு சென்றால் மட்டும் அப்படி என்ன விசேஷம்? காசி என்ற நகரில் நம் உடலில் இருக்கும் ஐந்து வித ப்ராணனும் ஒரு வித கட்டுப்பாட்டில் இருக்கும். அங்கே சென்று நீங்கள் எடுக்கும் ஒரு முடிவு வைராக்கியத்தின் உச்சமாக செயல்படுத்த முடியும். அதனால் அங்கே அப்பழக்கம் தோன்றியது.

உண்மையில் காசியில்
சென்று எதையும் விட்டு விட வேண்டிய அவசியம் இல்லை. திடமாக ஒரு முடிவு உங்கள் வாழ்க்கையின் நீங்கள் எடுத்து அதன்படி செயல்பட வேண்டுமானால் காசி போன்று ப்ராணன் கட்டுக்குள் இருக்கும் நகரில் அந்த முடிவை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் உங்கள் முடிவு ஆன்மாவில் பதியப்பட்டு உங்கள் மனம் தடம் மாறினாலும் அம்முடிவு மாறாது.

நம் உடலில் இருக்கும் ஐந்து பிராணன்கள் மட்டுமல்ல சூழலில் இருக்கும் ப்ராணன்களும் கட்டுக்குள் வருகிறது. இதை சுட்டிக்காட்டவே முதல் பகுதியில் காசியில் நடக்கும் ஐந்து அதிசயங்களை பட்டியலிட்டு இருந்தேன்.

காசி நகரில் சுவாசம் மூலம் கடத்தப்படும் ப்ராணனை விட அங்கே இருப்பதால் கிடைக்கப்பெறும் ப்ராணன் அளவற்றது.அதனால் தான் இக்கருத்தை குறிப்பால் உணர்த்த இந்த தொடரின் சித்திர வடிவை அமைத்தேன்.


காசியில் நீங்கள் சுவாசிக்க வேண்டாம் அங்கே காசி வாசியாக இருந்தாலே ப்ராணன் உட்புகும்.

நேரம் கடக்கிறது... இன்னும் தாமதிக்காதீர்கள். காசியை அனுபவிக்க புறப்படுங்கள்.


- ஓம் தத் சத் -

21 கருத்துக்கள்:

எறும்பு said...

//நேரம் கடக்கிறது... இன்னும் தாமதிக்காதீர்கள். காசியை அனுபவிக்க புறப்படுங்கள்.//


ஆம் சுவாமி.நேரம் கடக்கிறது...

எறும்பு said...

//காசிக்கு சென்றால் எதையாவது விட்டு விட வேண்டும் என்பது பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். //

நம்ம பலாபட்டறை ஷங்கர் காசிக்கு போலாம் வாங்கன்னு கூபிடுறாரு. பேசாம கூட்டிட்டு போய் அவர அங்க விட்ற வேண்டியதுதான்.
:)

Unknown said...

ஆகா!! என்னுள் கங்கையை கொண்டு வந்தீர்கள் சுவாமி. என் ஆன்மா ஏங்குகிறது எப்பொழுது காசியை தரிசிப்பது என்று மிகவும் நன்றி சுவாமி அடுத்த தொடர் எப்பொழுது சுவாமி?

*இயற்கை ராஜி* said...

:-) nice post swami ji

Paleo God said...

உண்மைதான் ஸ்வாமி, வலிவு உள்ளபோதே பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.
---

ஸ்வாமி, எறும்புஹத்தி தோஷ நிவர்த்தி வேண்டும்..:))

Unknown said...

காசி சுவாசி எதுகை மோனை என்றே நினைத்தேன் நீங்கள் விளக்கியபிறகே புரிந்தது. இதுபோல நிறைய புரியவைக்கிறது உங்கள் பதிவு. நன்றி சுவாமி.

yrskbalu said...

dear omkarji,

well done.

finally very well connected topic heading.

but to go kasi - the man need some
punya or prarabhtha.

what you think?

Siva Sottallu said...

அருமை ஸ்வாமி. சிறப்பான மற்றும் பல உண்மைகளுடன் இந்த தொடரை கொடுத்ததற்கு மிக்க நன்றி ஸ்வாமி.

//காசி போன்று ப்ராணன் கட்டுக்குள் இருக்கும் நகரில் அந்த முடிவை எடுக்க வேண்டும்//

காசி போன்று ப்ராணன் கட்டுக்குள் இருக்கும் நகரம் தமிழ் நாட்டிலும் உள்ளதா ஸ்வாமி?

// - ஓம் தத் சத் - // அப்படி என்றால் என்ன ஸ்வாமி? ஓம் / பரமன் மட்டுமே உண்மை என்று அர்த்தமா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜகோபால்,

//
நம்ம பலாபட்டறை ஷங்கர் காசிக்கு போலாம் வாங்கன்னு கூபிடுறாரு. பேசாம கூட்டிட்டு போய் அவர அங்க விட்ற வேண்டியதுதான்.
:)//
ரொம்ப கவிதை எழுதறாரோ? :)

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜேஷ்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி இயற்கை,

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷங்கர்,

//ஸ்வாமி, எறும்புஹத்தி தோஷ நிவர்த்தி வேண்டும்..:))//

1008 எறும்பு வடிவ லிங்கங்களை எறும்பின் உடலால் வடிவமைத்து வழிப்பட்டால் தோஷம் நீங்கும் ;)

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பிரபு,

வருகைக்கு நன்றி

திரு yrskபாலு,

//but to go kasi - the man need some
punya or prarabhtha.

what you think?//

காசிக்கு சென்று புண்ணியம் தேடிகிறார்கள் பலர். நீங்கள் காசிக்கு செல்லும் பொழுதே புண்ணியம் வேண்டும் என்றால் எப்படி?

உணவருந்தும் முன்னே வயிறு நிறைந்திருக்க வேண்டும் என கூறுவது போல..

திரு சிவா,
//காசி போன்று ப்ராணன் கட்டுக்குள் இருக்கும் நகரம் தமிழ் நாட்டிலும் உள்ளதா ஸ்வாமி? //

எங்கெல்லாம் காசி விஸ்வநாதர் இருக்கிறாரோ அங்கெல்லாம் ப்ராணன் கட்டுக்குள் வரும்.

//// - ஓம் தத் சத் - // அப்படி என்றால் என்ன ஸ்வாமி? ஓம் / பரமன் மட்டுமே உண்மை என்று அர்த்தமா?//

இது 10 நாட்கள் தொடர் சொற்பொழிவு நடத்தும் அளவுக்கு பெரிய விஷயம். குறைந்த இடவசதி கொண்ட இடத்தில் விளக்குவது கடினம்.

துளசி கோபால் said...

காசி இன்னும் கூப்புடலையே ஸ்வாமி:(

ஆனாலும் போய்த்தான் ஆகவேண்டும் கைகால் நல்ல செயலில் இருக்கும்போதே!

தொடர் அருமை. மிகவும் அனுபவித்து எழுதி இருந்தீர்கள். ரசித்தேன்.

Anonymous said...

மிகவும் அருமையான தொடர் சுவாமி. எனக்கும் இதே கேள்வி இருந்தது. வயதான பிறகுதான் காசி செல்லனுமா என்று. உங்கள் பதிவை பார்த்து, மேலும் உற்சாகமாக இருக்கிறது. தங்கள் ஆன்மீக பணி தொடரட்டும். மேலும் பல புண்ணிய ஸ்தலங்களை பற்றி இதைபோல் எழுதி எங்கள் கண்களை திறந்துவையுங்கள்.

மதி said...

>>நேரம் கடக்கிறது... இன்னும் தாமதிக்காதீர்கள். காசியை அனுபவிக்க புறப்படுங்கள்<<

இதற்க்கு கொடுப்பினை வேண்டும் ஸ்வாமி.

எம்.எம்.அப்துல்லா said...

////காசிக்கு சென்றால் எதையாவது விட்டு விட வேண்டும் என்பது பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். //

நான் என் நண்பர் சாருவை அழைத்துச் செல்லலாம்னு இருக்கேன் :))

vanila said...

தங்களின் தொடரை ரசித்து படித்தோம்.. காசிக்கு சென்று வந்ததைப்போலவே உணர்ந்தோம்..

நகரேஷு காசி..

Thirumal said...

ஏதோ ஒரு அற்புத நிகழ்வை சொல்லப் போகிறீர்கள் என்று நினைத்தால்
”படியில் பாசம் அதிகமா இருக்கும், பார்த்து காலை வையுங்க” என்று முடித்தது அழகான நகைச்சுவை. :-))
*************************
சித்திர விளக்கம் மிக அழகு.
************************
//உண்மையில் காசியில் சென்று எதையும் விட்டு விட வேண்டிய அவசியம் இல்லை. திடமாக ஒரு முடிவு உங்கள் வாழ்க்கையின் நீங்கள் எடுத்து அதன்படி செயல்பட வேண்டுமானால் காசி போன்று ப்ராணன் கட்டுக்குள் இருக்கும் நகரில் அந்த முடிவை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் உங்கள் முடிவு ஆன்மாவில் பதியப்பட்டு உங்கள் மனம் தடம் மாறினாலும் அம்முடிவு மாறாது..///

வார்த்தைகளே இல்லை .. ரொம்ப நன்றி சுவாமி
************************

pranavastro.com said...

காசி சுவாசி பல சுவாரசியமான உண்மைகள் சுமந்து வந்த கங்கா தீர்த்தம் போன்று தரிசித்தேன் மகிழ்ந்தேன் ஆனந்தம் அடைந்தோம் மிக்க நன்றி
மோகன் குமார்

Killivalavan said...

காசி சுவாசி பகுதி புத்தகமாக வர வாய்ப்பு உள்ளதா?