Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, March 9, 2010

பழைய பஞ்சாங்கம் - 09 மார்ச் 2010

பிச்சகாரி வாங்குங்கள்

கடந்த ஒரு மாதம் டெல்லியில் இருந்தேன். என் டெல்லி மாணவர் திரு.பிரேம் விஸ்வநாத் என்பவரின் அன்பாலும் அவர் குடும்பத்தின் அரவணைப்பாலும் மகிழ்ந்தேன். ஒரு நாள் மாலை அவர்கள் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பேச்சின் நடுவே பிச்காரி வாங்கவேண்டும் என பேசிக்கொண்டார்கள். விதவிதமான பிச்காரி என்றும் நாளை கட்டாயம் தேவை என்றும் அவர்களுக்குள் பேசிக்கொண்ட பொழுது குழம்பிப்போனேன். ஆதரவு அற்று பிச்சை எடுக்கும் பெண்களை இவர்கள் தத்து எடுப்பார்கள் என நினைத்து விபரம் கேட்டேன்.



ஹோலி பண்டிகைக்கு பிறர் மேல் வண்ணம் தெளிக்க நம் ஊரில் பூச்சி மருந்து அடிப்பார்களே அது போன்ற ஒரு வஸ்து தான் “pichkari”. பீச்சும் குழாய் போன்ற இந்த கருவிக்கு பிச்காரி என்று பெயர் என விபரம் கூறினார்கள். நல்ல வேளை சுப்பாண்டி என்னுடன் வரவில்லை என நினைத்துக் கொண்டேன்.

---------------------------

டில்லி பதிவர்கள் சந்திப்பு

வலைதளத்தில் எழுத துவங்கியதன் பயன் பல சகோதர சகோதரிகளின் நட்பு கிடைக்கப் பெற்றேன். டெல்லியில் வலை எழுத்தாளர்கள் சிலரை சந்திக்க முடிந்தது. நான் வரும் தகவல்கள் தெரிந்து பலர் முக்கிய பணிகளில் பிஸியானர்கள் என்பது கூடுதல் செய்தி :) இறை சக்தி அவர்களை காப்பாற்றி இருக்கிறது :)

அன்று சந்தித்தவர்களில் திரு.வெங்கட் நாகராஜ், சகோதரி.முத்துலட்சுமி, முனைவர் எம்.ஏ சுசீலா , திரு.செல்வக்குமார் மற்றும் சந்திர புவன் என்ற சிலர் என் நினைவில் இருக்கிறார்கள்.

இடமிருந்து வலமாக :
வெங்கட் நாகராஜ், இவருக்கு பெயர் தேவையில்லை, செல்வகுமார், சந்திர புவன், முனைவர் சுசீலா.
சகோதரி முத்துலட்சுமி இதில் அருவமாக இருக்கிறார் :)


முனைவர் சுசிலா இலக்கிய ஆர்வம் மிக்கவராக இருந்தார். நான் சீரியஸாக எழுதாமல் லைட் வெயினாக (light vein) எழுதுவதாகவும், இலக்கியம், ஆழ்ந்த ஆன்மீகம் என எழுதுவதில்லை என குறிப்பிட்டார். நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம், பிரம்ம சூத்திரம் என நான் ஆரம்பித்தால் வலையுலகம் தாங்குமா என தெரியாது :) இங்கே திருமந்திரத்திற்கே தெரிச்சு ஓடுகிறார்கள்...:)

டெல்லி பதிவர்கள் பேசியதில் குறிப்பாக பதிவுலகம், டெல்லி வாழ்க்கை, டெல்லி வாழ் தமிழர்களின் ஜாதீய போக்கு என பலவிஷயங்களை விவரித்தார்கள். பதிவர்களின் பேச்சில் சகோதரி முத்துலட்சுமியின் பேச்சு என் காதுகளில் இன்னும் ரிங்காரிக்கிறது. சகோதரியின் வீட்டில் அனைவரும் பதிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி பதிவர்கள் தமிழகம் வந்தால் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது.

பதிவர் சந்திப்பு நடந்த கோவிலில் பிரசாதம் கொடுக்க துவங்கியதும் கூட்டத்தை கலைத்தோம்.
----------------

சிங்கையில் ஸ்வாமி ஓம்கார்


இந்தியாவுக்கு ஒரு பத்து நாட்கள் சுபிக்‌ஷம் அளிக்கலாம் என நினைத்து சிங்கை செல்லுகிறேன். சிங்கை மாணவர் வைரவன் மற்றும் பதிவுலக நண்பர் கோவியார் ஆகியோரின் சீரிய முயற்சியால் சிங்கை செல்லும் சூழல் சாத்தியபட்டது. அவருக்கும் இவ்விஷயத்திற்கு வித்திட்ட வடுவூர் குமார் அவர்களுக்கும் என் நன்றிகள். சிங்கை சென்று வந்து பயணம் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

தினமும் திருமந்திர சொற்பொழிவு உண்டு. அதை பற்றியும் குறிப்புகள் வலையேற்றுகிறேன்.
மேலும் சிங்கை நிகழ்ச்சிகள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்
--------------

ஜென் கவிதை

தூரிகையின் நுனி
அசைய வண்ணங்கள் வெளிப்பட்டது.

ஓவியமே வண்ணமயமாகி
ஓவியன் நிறமற்று நிற்கிறான்.

நிறத்தால் நிறைந்த ஓவியத்தில்
தூரிகை இருப்பதில்லை.

தூரிகை அடுத்த ஓவியத்திற்கு
தயாராகி விடுகிறது.

10 கருத்துக்கள்:

Unknown said...

சுவாமிக்கு இனிய காலை வணக்கம். தினம் ஒரு பதிவு இடுங்கள் சுவாமி நான் தினமும் உங்கள் site பார்த்துக்கொண்டு இருப்பேன். பதிவு வரவில்லை என்றால் ஏமாற்றம் அடைவேன். net யை திறந்தவுடன் முதல் site உங்களுது தான்.

பரிசல்காரன் said...

அடங்க மாட்டீங்களா ஸ்வாமி.. ஒவ்வொரு பத்தியோட ஃபைனல் டச்சும் அபாரம்!

எம்.எம்.அப்துல்லா said...

//இவருக்கு பெயர் தேவையில்லை //

அப்ப ஓம்கார்ங்குறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?!?!

:))

Thirumal said...

நினைக்க நினைக்க பரவசம் தரும் அழகான ஜென் கவிதை..
நன்றி ஸ்வாமி

Unknown said...

சுவாமிக்கு இனிய காலை வணக்கம். தினம் ஒரு பதிவு இடுங்கள் சுவாமி. நன்றி.

G.MUNUSWAMY said...

சுவாமிஜிக்கு வணக்கம்,
சிங்கப்பூர் சென்றாலும்
எங்களை மறக்காமல்
தினமும் திருமந்திரம்
விளக்கம் எழுதுங்கள்,
நிச்சயம் நான் ஓட
மாட்டேன்.
நன்றி
தங்கள்
கோ .முனுசாமி.
சென்னை துறைமுகம் .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிச்சக்காரிக்கு ஒரு ரூபா போடறோமோ இல்லையோ இந்த பீச்காரிக்கு 150 ரூபாயாச்சும் எடுத்துவச்சாகனும்..

selventhiran said...

அசத்துங்க...

vanila said...

கும்பமேளா தொடருக்காக காத்திருக்கிறேன்..

pranavastro.com said...

"மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்

தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்

சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்

எந்தை பிரான்தன் இணைஅடி தானே'

Mohankumar