Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, February 3, 2010

காசி சுவாசி - பகுதி 9

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே

-------------------------------------------------------திருமந்திரம் - 121.

இறப்பு என்ற வார்த்தை மனிதனின் வேர்களை ஆட்டம் காணச்செய்யும். எந்த மொழி கலாச்சாரம் ஆனாலும் பிறப்பும் இறப்பும் ஒன்றுபோலவே நிகழ்கிறது. இறப்புக்கு பின் என்ன நிகழும் என்பதை புரிந்துகொள்ள முடியாத மனிதன் இறப்பு என்றதும் மிகவும் கலவரம் அடைகிறான்.

உலக கலாச்சாரங்களை கவனிக்கும் பொழுது பாரத கலாச்சாரம் மட்டுமே இறப்புக்கு பின் என்ன நடக்கும் என்பதை மனிதனுக்கு புகட்டுகிறது. மதங்கள் இறப்புக்கு பிறகு ஒரு உலகம் இருக்கிறது அதில் சொர்க்கம் நரகம் உண்டு என விளக்குகிறது. ஆனால் பாரத கலாச்சாரம் இறப்புக்கு பின் நிகழும் தன்மையை மிகவும் வெளிப்படையாக சிறுவயதிலிருந்தே உணரச்செய்கிறது.

கடோபநிஷத்தில் நாசிகேதன் என்ற சிறுவன் இறப்பு என்ற நிலையுடன் கலந்துரையாடும் கதை ஒன்று உண்டு. அந்த கதை மூலமாக நமக்கு இறப்பு என்றால் என்ன, அதன் பிறகு நிகழும் தன்மை என்ன என்பதை வேதாந்தம் விளக்குகிறது. கடோபநிஷத்தை படித்து உங்களின் இடத்தில் நாசிகேதனை வைத்துபாருங்கள் அனைத்தும் உணரப்படுவீர்கள்.

எதற்கு இத்தனை விளக்கம்.. இறப்புக்கு பின் என்ன நிகழும் கூறுங்கள் என கேட்பது புரிகிறது. இறப்புக்கு பின் என்ன நடக்கும் என கேள்விபடுவதை விட உணரப்படுவது அவசியம்.

எப்படி உணர்வது? மிக எளிது..

உடனடியாக செத்துவிடுங்கள்.


அப்பொழுது தானே தெரிந்து கொள்ள முடியும்?


சாவம் என்பது இயக்கமற்ற உயிர் அற்ற உடல். இயக்கும் மற்ற உயிர் கொண்ட உடல் சிவம். சவத்திற்கும் சிவத்திற்கும் இடையே ஆன வித்தியாசம் மிக நுட்பமானது.

தியானத்தில் திளைத்து மிகவும் உன்னத நிலை அடைவது சமாதி. அப்படி ஒருவர் சமாதி நிலை அடைந்தால் அவரின் உடல் அசைவற்று இறந்த உடல் போல இருக்கும். அதே நேரம் அவரின் உடல் இறைநிலையுடன் இணைந்து பிரகாசிக்கும். சாமாதி நிலையில் இருக்கும் வரை வெளிமுகமாக பார்த்தால் இறந்த சவத்தை போல இருப்பார்கள். உண்மையில் அவர்கள் சவமல்ல பரம்பொருளுடன் இணைந்த சிவம்..!

சமாதி நிலையை ஆன்மீக மேல்நிலையில் மட்டுமே உணரமுடியும். அவ்வாறு உணர்ந்தாலும் வெளிப்படுத்துவது என்பது மிகக்கடினம்.

தற்காலிக மரணம் என்பது சமாதி. அனைத்து செயலுடனும், உலகத்துடன் வாழ்ந்துகொண்டே எப்பொழுதும் சமாதி நிலையிலேயே இருப்பது சாத்தியம் உண்டு அதன் பெயர் நிர்விகல்ப்ப சமாதி. இவற்றை பின்பு ஒருநாள் விளக்குகிறேன்.

ரமண மஹரிஷிக்கு இளம் வயதில் மரணம் பற்றிய ஒர் அனுபவம் ஏற்பட்டது. அந்த அனுபவம் அவரை திருவண்ணாமலையை நோக்கி செலுத்தியது. அது போல நம் உடலை விட்டு வெளியே பயணித்து மீண்டும் நம்முள்ளே அடங்கினால் அந்த பரமானுபவம் நம்மை மற்றொரு உலகுக்கு கொண்டு செல்லும்.

சிலர் மரண நிகழ்வை செயற்கையாக நினைத்துக்குள்வது போன்ற தியானத்தை செய்கிறார்கள். சாப்பிடுவது போல கற்பனை செய்தால் வயிறு நிறையுமா? அதுபோன்றதே இது.


ஆன்மீக நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். ஆனால் சாதாரண இயல்பு வாழ்க்கை வாழும் ஒருவரால் சாமாதியை ஒரு ஷணம் உணர வேண்டுமானால் அதற்கு பல முயற்சிகள் செய்ய வேண்டும். தக்க குருவின் உதவி மற்றும் சூழல் அவசியம்.

சமாதியை உணரும் அந்த சூழலை காசி எப்பொழுதும் பெற்று இருக்கிறது. காசிக்கு சென்றால் அங்கே உங்கள் மனம் என்ற தளம் மிக விசித்திரமாக செயல்படத்துவங்கும். அங்கே நீங்கள் நினைப்பது உணர்வது ஒரு கனவைப்போல புரிபடாத உணர்வில் இருப்பீர்கள். இதற்கு என்ன காரணம் என்றால் அங்கே தினமும் உங்களுக்கு கிடைக்கும் காட்சி.



காக்ஷி (காட்சி) என்ற சொல்லே காசி என மருவி இருக்கிறது. தினமும் எழுநூறு முதல் ஆயிரம் வரையிலான பிணங்கள் எரிகிறது. அத்தகைய மயான சூழலில் பிணம் எரிவதை ஒரு தியானமாக அமர்ந்து பார்க்க வேண்டும். முதலில் நமக்கு ஏற்படம் உணர்வு சிறுக சிறுக விலகி புதுவிதமான ஒரு உணர்வு ஏற்படும்.

காசியில் இரவு பன்னிரண்டு மணிக்கு அமர்ந்து ஒரு பிணம் முழுவதும் எரிந்து சாம்பலாவதை காண வேண்டும். அவ்வாறு கண்ட பிறகு வேறு ஒரு நாள் நீங்கள் ஆன்மீக பயிற்சி மேற்கொள்ளும் தருவாயில் எதிர்பாராத விதமாக உங்கள் உடலைவிட்டு வெளியேறி நீங்கள் உங்களின் உடலை சாட்சியாக காண்பீர்கள்.

அதுவே சரியான ஒரு முறையில் மரணத்தை பற்றிய தியானமாக அமையும். காட்சியாக பார்த்ததின் சாட்சியாக மாற்றம் கொள்வீர்கள்.


இதைத்தான் கூறினார்கள்...

காசியில் இறந்தால் முக்தி..!

[சுவாசிப்பேன்..]

18 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

இங்கு எல்லாமே உண‌ர‌ப்ப‌ட‌ வேண்டிய‌வை தான்.

எறும்பு said...

செத்து செத்து விளையாட ஆசைதான்..
இம்...

yrskbalu said...

1.you are selected matched thirumantra.

2. you are writing make readers - this path so easy.like that they think. but practically .....????

Mahesh said...

நல்ல விஷயங்கள்.... அருமை... ஆனாலும் இன்னமும் காசி என்றாலே ஒருவிதமான அருவெறுப்பும் சிலருக்கு வருகிறது.... நீங்கள் சொல்லியுள்ளது போல தினமும் பார்த்து பார்த்து வேறு வித உணர்வுகள் உண்டாகும்போது அந்த அருவெறுப்பு அகலலாம்.

ரங்கன் said...

சாதரணமாகச் சிறய வயதுள்ளவர்களின் வார்த்தைகள் அல்ல இவை. தங்களின் ஆன்மிக வயது மிகவும் அதிகம் என நினைக்கின்றேன். பல வருடங்களுக்கு முன்னால் எங்கள் கிராமத்தில் ஒரு முதியவர் (அவரைப் பைத்தியம் என்றோம்) "பிறப்பின் ரகஸ்யம் என்ன தெரியுமா ?" என்று எங்களிடம் கேட்டார். நாங்கள் பயந்து ஓட முயல்கையில் எங்களை வழி மறித்து உரத்த குரலில் " இறப்பு !" என்றி கத்திவிட்டு அவர் ஓடிவிட்டார். எனக்கு அன்றைக்கு நல்ல ஜுரம் வந்துவிட்டது. ஆனால் இன்று அர்த்தம் புரிந்தது போல உள்ளது. ஏதோ ஒரு விடை கிடைக்கும் போல் தோன்றுகிறது.பார்க்கலாம்.

Siva Sottallu said...

நன்றி ஸ்வாமி.

//அது போல நம் உடலை விட்டு வெளியே பயணித்து மீண்டும் நம்முள்ளே அடங்கினால் அந்த பரமானுபவம் நம்மை மற்றொரு உலகுக்கு கொண்டு செல்லும்.//

ஆயிரத்தில் ஒருவன் பட பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றது...

மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறட
உடலை விட்டு நீங்கட
உன்னை உற்று பாரடா...

sarul said...

அற்புதம்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வடுவூர் குமார்,

உணர்(த்தி)ந்துவிட்டீர்கள்.

திரு ராஜகோபால்,

விளையாடுவோம் விரைவில்...

திரு yrskbalu,
1. நன்றி
2. முயற்சிக்கின் முடியாதது ஏதும் உண்டோ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

நம் தேகம் எப்படி பட்டது என்பதை உணர வேண்டுமானால் அறுவைசிகைச்சை செய்வதைவிட.. இவ்வழி மிச்சரியானது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரங்கன்,

எனக்கு சிறுவயதா? 108 வயது :)

//எனக்கு அன்றைக்கு நல்ல ஜுரம் வந்துவிட்டது//

மீண்டும் ஜுரம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//ஆயிரத்தில் ஒருவன் பட பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றது...
//

நீங்கள் தான் சரியான தமிழன்... :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு உமாசங்கர்,
திரு கேஎஸ்,

உங்கள் வருகைக்கு நன்றி.

Unknown said...

மனம் இறப்பதே முக்தி

மதி said...

உங்கள் ஒவ்வொரு வார்த்தை(அழுத்தத்தை) உணர்ந்தேன்.

>>உங்கள் உடலைவிட்டு வெளியேறி நீங்கள் உங்களின் உடலை சாட்சியாக காண்பீர்கள்<<

இதைதான் கூடு விட்டு (கூடு) பாய்வது என்பார்களோ...!!!



நன்றி.

Mukhilvannan said...

ஸ்வாமி அநேக நமஸ்காரங்கள்.
தமிழில் ஜனன மரண ரகசியங்கள், உபநிஷதம், திருமந்திரம் போன்ற மறைநூல்களின் தெள்ளிய விளக்கம் கூடிய தங்கள் பதிவு சிந்தனைக்கு விருந்து. மனதின் சலனத்தை அடக்கி அமைதிப்படுத்துகிறது.
எந்தக் கொம்பனும் மரணம் எனும் சொல் கேட்டு அதிர்ந்துதான் போகிறான். ஆனால் நமது இந்துத் துறவிகளும், பற்றுத் துறந்த இல்லறப் பெரியோர்களும் மரணத்தைத் தழுவ எப்பொழுதும் சித்தமாக இருக்கிறார்கள்.
காசி-மரணத்தை மிக எளிதாக எதிர்கொள்ள பாடம் புகட்டிக்கொண்டே இருக்கிறது.
கற்றோர்க்கும் கல்லாதார்க்கும் தங்கள் பதிவு ஒரு அருமருந்து.

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார்

உணர வேண்டிய ஒன்று என்ற முதல் மறுமொழி - நன்று - உணர முயல் வேண்டும்

இரவு 12 மனீக்கு பிணம் எஇரிவதௌ முழுவதும் பார்த்து உணர வேண்டுமா - இயலுமா - இடு காட்டில் திரும்பிப் பார்க்காமல் செல்லும் நாம் உணர முடியுமா

நல்வாழ்த்துகள் ஓம்கார்

ஷண்முகப்ரியன் said...

இதைத்தான் கூறினார்கள்...

காசியில் இறந்தால் முக்தி..!//

புதிய விளக்கம்,ஸ்வாமிஜி.

virutcham said...

ஒரு முறை நான் தூங்குவதை நானே பார்த்தேன். அது வேறு இடம் அல்ல. எனது அறை தான். எல்லாமே அப்படியே இருந்தன. எனது தலை மாட்டில் ஒரு அடி தள்ளி நின்று கொண்டு நான் தூங்குவதை நானே பார்க்கிறேன். சட்டென்று அது எனக்குப் புரிகிறது. அது எப்படி நான் தூங்குவதை நானே பார்க்க இயலும் என்ற எண்ணம் என்னை ஆ ட்கொண்டவுடன் மிரண்டு எழுந்து அமர்ந்தேன். அன்று தூக்கம் அவ்வளவு தான்.

இன்னொரு முறை அத்தகைய அனுபவம் ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வேன் என்று தெரியாது. ஆனால் முதல் அனுபவம் என்னை மிரளச் செய்தது

காசியின் இன்னொரு முகம் என்று ஒரு பிணம் தின்னி மனித உலகத்தைSUN TV சித்தரித்தது. காசிக்குச் சென்று வந்த யாரும் அப்படிச் சொன்னதில்லை. அப்படி எதையும் பார்த்ததில்லை என்றும் கூறுகிறார்கள். உங்கள் கருத்து என்ன?