Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, February 10, 2010

காசி சுவாசி - பகுதி 10

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்ற பழமொழியை கேட்டு இருப்பீர்கள். உண்மையில் இதற்கு ஆயிரம் ’முறை’ போய் தங்களை பற்றி சொல்லி பெண் கேட்டு திருமணம் நடத்த வேண்டும் என்ற வாக்கியம் திரிந்து இந்த அவல நிலையில் இருக்கிறது. இதற்கு பெயர்தான் ‘முறை’ தவறுவது என்பார்களோ? இது போல ஏத்தனையோ அர்த்தங்கள் அனர்த்தங்களாக நம்மிடையே உலாவுகிறது. அதில் ஒன்றுதான் காசியில் இறந்தால் முக்தி என்ற வாக்கியமும்.

காசி என்ற தலத்தில் தன்னை கடந்த நிலைக்கு செல்லும் உன்னதத்தை விடுத்து எத்தனையோ ஆட்கள் இறந்து போவதற்காகவே வருகிறார்கள்.

தங்களில் முதிய வயதில் அனைத்து கடமைகளையும் முடித்துவிட்டு காசிக்கு வந்து இறப்பை எதிர்நோக்கி தினமும் காத்திருக்கிறார்கள். உங்களால் இந்த சூழலை உணரமுடியுமா? தினமும் காலையில் இன்று நான் இறப்பேனா என ஒருவர் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?


சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாள் நரகமாகிவிடும் என்ற சினிமா வசனத்தை கேட்டிருப்பீர்கள். இங்கே சாகும் நாளுக்கு தினமும் காத்திருக்கிறார்கள். வாழும் நாள் இவர்களுக்கு நரகமாகிவிடுவதில்லை, மாறாக ஒரு வித உன்னத உள் நிலையில் இந்த உலகை காண்கிறார்கள். இப்படி இருப்பதற்கு மஹா வைராக்கியமும் தைரியமும் தேவை. தற்கொலை செய்பவர்களுக்கு கூட தான் இறப்பேன் என்று எண்ணும் துணிச்சல் சில விநாடிகள் தான் இருக்கும். இவர்கள் அத்தகைய துணிச்சலை தினமும் பெற்று இருக்கிறார்கள்....!

காசியில் முதியவர்கள் பலர் இவ்வாறு வாழ்கிறார்கள். இவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை முறை உண்டு. அவை மிக சுவாரசியமானது. தினமும் அதிகாலை எழுந்து கங்கையில் குளித்து கோவிலுக்கு செல்லுகிறார்கள். அங்கே விருப்பமான உணவை உண்கிறார்கள். சிலர் பணம் வைத்துக்கொள்கிறார்கள். சிலர் அவையும் இல்லாமல் மடங்களிலும், கோவிலிலும் ஒரு வேளை மட்டும் உணவு உண்கிறார்கள். காசியில் இவர்களுக்கு என இருக்கும் உணவகத்திலோ, மருந்துக்கடையில் தினமும் கையெழுத்து இடுகிறார்கள். ஒரு நாள் இவர்கள் கையெழுத்து இட வரவில்லை என்றால் அந்த கடைக்காரர் சிலருடன் சென்று அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு செல்லுவார். வேறு எதற்கு தகனம் செய்யத்தான்...

தங்களின் உறவினர்கள் முகவரியை அந்த கடைகளில் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் இறந்ததும் உரியவர்களுக்கு கடைக்கார் தெரியப்படுத்துகிறார். இவை அனைத்தும் சேவையாகவே அங்கே இருக்கும் கடைகாரர்கள் பலர் செய்கிறார்கள். இறப்பை எதிர் நோக்கி இருந்தாலும் தினமும் தங்களை சுத்தமாக வைத்திருப்பதிலும், பக்தியிலும் இவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள். இவர்களில் சிலரை சந்தித்த பொழுது அவர்களிடம் அனுபவம் வாய்ந்த முதியவரிடம் பேசுவது போல இல்லை. அவர்கள் புதிய குழந்தையாக உற்சாகம் காட்டினார்கள். இவர்கள் பழுத்த இலை அல்ல, உள்ளே துளிர்த்த இலை...!

உலக பந்தங்களை விடுத்து, தனக்கு என்ற தேவைகள் இல்லாமல் இந்த உலகை காணும் பாக்கியம் பெற்றவர்கள் அவர்கள். வனப்ரஸ்தம் என்பது நமது கலாச்சாரத்தில் ஒரு நிலை. கடமைகளை முடித்ததும் உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு தனித்து வாழ்வது. இவர்கள் இருப்பதும் ஒருவகை வனப்ரஸ்தம் தான்.

குடும்ப சுமையால் தங்களால் முன்பு ஆன்மீகமாக இருக்க முடியவில்லை. முக்தி பெற வேறு வழி தெரியவில்லை. இங்கே இறந்தால் முக்தி கிடைக்கும் என நினைக்கிறோம் என்பதே இவர்களின் பெரும்பாலனவர்களின் கருத்து.


மேலைநாட்டுக்காரர்களுக்கு இறப்பை எதிர்நோக்கி இருக்கும் இவர்கள் ஒரு அசாத்திய மனிதர்கள். வெளிநாட்டினரிடம் நீங்கள் பத்து நிமிடம் தொடர்ந்து இறப்பை பற்றி பேசினால், மனம் வருந்தி பல நாட்களுக்கு அவர்கள் உங்களிடம் விலகி இருப்பார்கள். ஆனால் நம் கலாச்சாரம் இறப்பை கொண்டாட நம்மை பழக்கி இருக்கிறது. இன்றும் பல வெளிநாட்டினர் அதிசயம் என எண்ணி இறப்பை எதிர்நோக்கி இருக்கும் முதியவர்களை வைத்து குறும்படம் செய்து கொண்டிருக்கிறார்கள். முதியோர் இல்லங்கள் என்ற தற்கால நாகரீகத்திற்கும் நம்நாட்டினர் அனைத்து நாட்டினருக்கும் முன்னோடியாக இருந்தார்கள்.

காசியில் இறப்பவர்கள் எரிக்கப்படுகிறார்கள். ஆனால் சன்யாசிகள் எரிக்கப்படுவதில்லை...! அவர்கள் ஜலசமாதி என அவர்களின் உடல் கங்கையில் விட்டுவிடுகிறார்கள். இறந்த உடலை கங்கையில் போட்டால் கங்கை அசுத்தமாகி விடாதா? இவற்றிற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா? உடல் ஏன் எரிக்கப்பட வேண்டும்? ஏன் சிலர் உடல் எரிக்கப்படுவதில்லை? உங்கள் கருத்தை சொல்லுங்கள்...

[சுவாசிப்பேன்..]

26 கருத்துக்கள்:

எறும்பு said...

படிக்க படிக்க சுவாரசியமா இருக்கு. என்னைக்கு காசிக்கு போகும் நாள் என்று தெரியவில்லை..
:)

ஷண்முகப்ரியன் said...

எதையும் எதிர்பார்த்துக் காத்திருத்தல் எந்த விதத்தில் ஆன்மீகமாகும் என்று எனக்குத் தெரியவில்லை,ஸ்வாமிஜி?

மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருத்தல் என்பது, ஒரு மன நோய் போலத்தான் எனக்குப் படுகிறது.

இருக்குமிடம் எல்லாமே புனிதத் தலம்தான் என்ற முதிர்ந்த மன நிலை அனைவருக்கும் வாய்க்க வேண்டும்.

Subbaraman said...

Pure joins pure.

Anonymous said...

அவர்கள் ஜலசமாதி என அவர்களின் உடல் கங்கையில் விட்டுவிடுகிறார்கள். இறந்த உடலை கங்கையில் போட்டால் கங்கை அசுத்தமாகி விடாதா? //

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே..சில உயிரினங்களுக்காவது அவர்கள் உடல் பிரயோஜனமா இருக்கட்டும்னுதான்(சாப்பிட)சரியா சாமி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜகோபால்,

:) விரைவில் ஜூனியருடன் செல்லுங்கள்.

Anonymous said...

ஒருமுறை கல்கத்தா வரை சென்று வந்தேன்..அதன்பிறகு தான் தெஇயும் காசி அங்கிருந்து பக்கம் என்று.னல்ல சான்ஸ் விட்டு விட்டோம் என்று இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது காசி பற்றிய சுவையான அபூர்வ தகவல்களை தொடர்ந்து வெளியிடுங்கள்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

கொஞ்சம் விரிவான மறுமொழி இட விரும்புகிறேன்.

//எதையும் எதிர்பார்த்துக் காத்திருத்தல் எந்த விதத்தில் ஆன்மீகமாகும் என்று எனக்குத் தெரியவில்லை//

இறப்பை எதிர்நோக்குவது என்பது பிற உலக விஷங்களை எதிர்பார்த்து செய்யும் பூஜைகளை போன்றது அல்ல. இறப்புக்காக எதிர்நோக்கி இருக்கும் சமயத்தில், இறப்புக்கு அப்பால் என்ன.. நான் எங்கிருந்து வந்தேன் எங்கே செல்ல இருக்கிறேன் போன்ற விச்சாரங்கள் உருவாகும். இந்த கேள்விகள் நம் இயல்பு வாழ்க்கையில் தோன்றினாலும் நீடித்து இருக்காமல் நம் வாழ்க்கை சூழல் விழுங்கிவிடும்.

ஆழ்ந்த கேள்விகள் பிறக்கும் பொழுது ஞானம் பிறக்கிறது. இல்லையேல் இவர்களை போன்றவர்களுக்கு ஞான பெறும் பிறப்பு அமைகிறது.

//மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருத்தல் என்பது, ஒரு மன நோய் போலத்தான் எனக்குப் படுகிறது.//

மரணத்தை எதிர்நோக்குவது மட்டுமல்ல... மனம் என்பதே நோய் தான். :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்புராமன்,

திரு ஆர்.கே.சதீஷ்குமார்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எறும்பு said...

சுவாமி

ஒரு லச்சம் ஹிட்ஸ்கு பார்ட்டி உண்டா?! நாங்க சன்யாசியையும் விட மாட்டோம்
:)

ஸ்வாமி ஓம்கார் said...

//ஒரு லச்சம் ஹிட்ஸ்கு பார்ட்டி உண்டா?! நாங்க சன்யாசியையும் விட மாட்டோம்//

வலைதளத்தை திறந்து, கீ போர்ட்டில்
பேப்பர் வைட்டை F5 கீ மேலை வைச்சு கஷ்டபட்டு ஹிட்ஸ் கொண்டு வந்தா நீங்க பார்ட்டி கேட்பீங்களா? நல்ல கதையா இருக்கே :)))

நிகழ்காலத்தில்... said...

\\மனம் என்பதே நோய் தான். :)//

நூற்றுக்கு நூறு உண்மை..

வாழ்த்துகள்

எம்.எம்.அப்துல்லா said...

:)

pranavastro.com said...

நல்ல சுவாரசியமான தகவல்கள் பழமொழி விளக்கம் சூப்பர் வற்றாத ஊற்றினால தாகம் தணியவில்லை

Mohankumar

yrskbalu said...

ஏன் சிலர் உடல் எரிக்கப்படுவதில்லை?

-- definitely you will convey in differently. so let us view yours.

2. you are liking or beleving hits? i think you will not ?

G.MUNUSWAMY said...

Swamiji,
Maranam engum adaialam, anaal Kasiyil adainthal adhu iravanodu erandara kalathaal matrum meendum maru priappu enra uyariya nilai adaiya vazhi adhanal kasiyil erappu matrum udalai erippadhu.
Nandri Swami melum kasiyayi patri neeraiya sollungal.
Yours
G.Munuswamy,
Chennai Port Trust.

Siva Sottallu said...

// உடல் ஏன் எரிக்கப்பட வேண்டும்? ஏன் சிலர் உடல் எரிக்கப்படுவதில்லை? உங்கள் கருத்தை சொல்லுங்கள்...//

ஸ்வாமி, என்றோ படித்ததை நினைவுகூர்கின்றேன்...

எங்கு இருந்து வந்ததோ அங்கே சென்றடைகின்றது. பஞ்ச பூதங்களினால் ஆனா உடல் செயல் இழந்தஉடன் அதனை எரிப்பதினால் நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயத்துடன் கலந்துவிடுகின்ற்றது. மீதம் அஸ்தியை நீரில் கரைதுவிடுகின்றோம்.

சன்யாசம் எடுக்கும் பொழுது நம் சொந்த பந்தங்களை விட்டு நம் உடலை எரித்துவிடுவதன் அடையாளமாக நம் குருவிடம் மரக்குச்சிகளை கொடுப்பதாக படித்த ஞாபகம் அதனால் சன்யாசிகளின் உடல் ஏற்கனவே எரிக்கப்பட்டதால் அதனை புதைக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.

உங்கள் தெளிவான விளக்கம் அறிய காத்திருக்கின்றேன் ஸ்வாமி.

sarul said...

வணக்கம் ஸ்வாமி

(1) வண்டி மாட்டின் முன் தொங்கவிடப்பட்ட வாழைப்பழத்தை உண்ண எத்தனித்து தன்னையறியாமல் தன் நினைவில்லாது அது வண்டியிழுப்பது போல , இந்த ஆன்மீகம் என்ற மாயமானை மனிதன் மனதில் விதைத்துவிட்டால் அவன் எந்தச் சுமையையும் வேறெங்கோமனம் வைத்தபடி சுமப்பான் என்பதன் நீட்சியே இந்த இறப்பு நவிற்சியும் இருக்குமோ என்று ஒரு கணம் எண்ணம் உதயமாவதைத் தவிர்க்க முடியவில்லை.
தன் இறப்பைக் கூடக் கொண்டாடுமளவிற்கு மனிதன் ஆன்மீகம் என்ற போர்வையில் மூளை மழுங்கடிக்கப்படுகிறானா.

தவறாயிருந்தால் மன்னிக்கவும்

(2) மனித மனம் என்பதே நோய்தான் ஆனால் மனித மனத்தின் கற்பனைவிரிவாக்கங்களாலும் அதன் நிறைவேற்றங்களாலும் எட்டப்பட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் முக்கியமான கணனி மனித மனம் என்பதே நோய்தான் என்று பதிவிடப் பயன்படுவது முரண்நகை.

தயவுசெய்து இதைக் குதர்க்கம் என்று எண்ணவேண்டாம் ,பதிலளித்தால் நன்றியுடையவனாவேன்.
இடைஇடையே இப்படியான எண்ணங்கள் வருவது மனச்சிதைவுநோயின் அறிகுறியாக இருக்குமோ.-:))

ரங்கன் said...

சந்ந்யசிகளின் ஜீவன் மிக அதிக நாட்களுக்கு, அவர்கள் இறந்து விட்டனர் என்று நாம் நினதபோதிலும், இருக்கும் என்பது யுகம் யுகமாக இருக்கும் நம்பிக்கை. ( கிருத யுகத்தில் எலும்பு அழியும் வரையிலும் ஒரு மனிதனின் ஜீவன் இருந்ததாக சொல்லபடுகிறது.) கலியுகத்தில்சன்ன்யசியாவது அந்த சக்தியைப் பெற்றிருக்கக்கூடும் என்ற எண்ணமாக இருக்கலாம். (பார்பன உளறல் என்று கடலுக்கு அப்பாலிருந்து யாரோ சொல்லுவது போல என் காதில் விழுகிறமாதிரி உள்ளது)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrsbalu,

//ஏன் சிலர் உடல் எரிக்கப்படுவதில்லை?

-- definitely you will convey in differently. so let us view yours.

2. you are liking or beleving hits? i think you will not ?//

வித்தியாசமாகவே சொல்லுவேன் என நீங்களே முடிவெடுத்துவிட்டால் அதில் என்ன வித்தியாசம் இருக்க போகிறது.? :)

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

உங்கள் பதில் ஓரளவு சரி.

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கே.எஸ்,

//வணக்கம் ஸ்வாமி

தன் இறப்பைக் கூடக் கொண்டாடுமளவிற்கு மனிதன் ஆன்மீகம் என்ற போர்வையில் மூளை மழுங்கடிக்கப்படுகிறானா.
//

பிறப்பை வருடாவருடம் கொண்டாடுகிறார்களே அவர்கள் எல்லோரும் மூளை மழுங்கடிக்கப்பட்டவர்களா?

பிறப்பை போன்று இறப்பும் ஒரு நிகழ்வே. அனைத்தையும் கொண்டாடுவதே ஆன்மீகம்..!

(2) மனித மனம் என்பதே நோய்தான் ஆனால் மனித மனத்தின் கற்பனைவிரிவாக்கங்களாலும் அதன் நிறைவேற்றங்களாலும் எட்டப்பட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் முக்கியமான கணனி மனித மனம் என்பதே நோய்தான் என்று பதிவிடப் பயன்படுவது முரண்நகை.

மனித மனம் கண்டறிந்தது அல்ல அறிவியல் கண்டுபிடிப்புகள்.
மனிதனின் அறிவின் வடிவே கண்டுபிடிப்புகள். நீங்கள் கூறும் கணி கூட மனம் இன்றியே அற்புதங்களை நிகழ்த்துகிறது. அதற்கு மனம் இருந்தால் மனித இனம் அழிந்திருக்கும்..!

//தயவுசெய்து இதைக் குதர்க்கம் என்று எண்ணவேண்டாம் ,பதிலளித்தால் நன்றியுடையவனாவேன்.
இடைஇடையே இப்படியான எண்ணங்கள் வருவது மனச்சிதைவுநோயின் அறிகுறியாக இருக்குமோ.-:))//
சுப்பாண்டிகளுக்கு இது சகஜமான நிலையே :) நோயல்ல..

sarul said...

என்னுடைய உளறலையும் படித்து அதற்குப் பதிலளித்ததற்கு நன்றி ஸ்வாமி,
உண்மைதான் மனம் எப்போதும் ஒன்றுக்கொன்று எதிரான கருத்துக்களை அலசி அலைபாய்ந்தவண்ணமே மனிதனைக் குழப்புகிறது.
ஒன்றுக்கொன்று எதிர்திசையில் நீந்தும் மீனை அடையாளமாகக் கொண்ட மீனம் ஆன்மீகத்துடன் எவ்வாறு மேலைத்தேய ஜோதிடர்களால் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது ..விரிக்கவேண்டிய பாய்தான்.:)

sarul said...

உங்களின் பதிவிற்கு ஒரு சிஷ்யனின் பதில்

ஒரு மரம் cosmic ray யை கிரகித்து மனிதர்களுக்குத் தருவதுபோல் ,ஒரு சந்நியாசி பல லட்சம் மடங்கு இந்த சக்தியைக் கிரகித்து இருப்பார் ,அதனால் அவரின் உடல் எரிக்கப்பட்டு அந்த சக்தி வீணடிக்கப்படாமல் அது பூமிக்கோ ஜீவராசிகளுக்கோ பயன்படுவதற்காக மண்ணில் சமாதியாக அல்லது ஜலசமாதியாக மாற்றுகிறார்கள்.

ஸ்வாமி அப்படி முறைச்சுப் பாக்காதிங்க ஏதோ இந்தச் சின்னச் சுப்பாண்டியின் அறிவுக்கு எட்டியது அவ்வளவுதான்.:))

seethag said...

ஸ்வாமிஜி, 2005 ல் காசி செல்லும் வாய்ப்பு கிட்டியது.நான் சென்றவருடன் தங்கிய அனுபவமே 'அகஙாரத்தை' யோசிக்க வைத்தது.கடைசிய்ல் என்னுடன் சென்ற பெண்மணியை மனதில் திட்டஉவதே ஒருவேலையாகிவிட்டதே என்ரு மனது கஷ்டப்பட்டு ,ஒரே குழப்பம் போங்கள்.

இனிஒரு முறை நிதானமாக போகவேண்டும்.

Karthikeyan Krishnan said...

சாதாரண மக்கள் காசியில் இறப்பை எதிர்நோக்கி இருந்தாலும், பந்த பாசங்களை விட்டு முற்றிலும் விலகியவர்கள் அல்ல. எனவே அவர்களின் ஆன்மா இறந்த உடலில் மீண்டும் புக முயற்சிக்கலாம். சன்யாசிகள் உடலை ஆன்மாவின் ஆடையாக கருதும் பக்குவம் பெற்றவர்கள் . உடலை துறப்பது ஆடையை துறப்பது போல. நீரில் இருந்து வந்த உடல் நீரோடு கலக்கட்டும் என்று ஆற்றில் விட்டுவிடுகிறார்கள்.

எப்புடி நம்ம கண்டுபிடிப்பு ?

துளசி கோபால் said...

ஸ்வாமிஜி,

இங்கே நியூஸியிலும் முதியோர் இல்லத்தில் இருக்கும் பலர், தங்கள் முடிவை எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

பேச்சுக்கொடுத்தால் . ஓ ஜஸ்ட் வெயிடிங் ஃபார் காட்' ன்னு சொல்கிறார்கள்.

அதற்காக தங்களை அலங்கரித்துக்கொள்வதிலோ, வெளியே வாக்கிங், பார்க், கடைகண்ணி என்று போய்வருவதிலோ எந்த சுணக்கமும் இல்லை.

வீல்சேரில் இருப்பவர்கள் கூட அழகாக அலங்கரித்துக்கொண்டுதான் வெளியே போய்வருகிறார்கள்.

பொதுவாக இங்கே மக்கள் இறப்பிலும், சாவுச்சடங்குகளிலும் கதறி அழுவதோ இல்லை. கொண்டாட்டமாகத்தான் போகிறது.

'இறப்பைக் கொண்டாடுகிறார்கள்' என்று முன்பு ஒரு பதிவுகூட எழுதி இருக்கிறேன்.

'எல்லாம் அவன் செயல்' என்று விட்டுவிட்டால் மனசுக்கு நிம்மதி வந்துருது போல!

காசிக்கு இன்னும் போகலை. ஆர்வம் அதிகமாகிறது தங்கள் இடுகைகளால்.