டெல்லியில் ஒரு கில்லி
ஒரு மாதகால பயணமாக தில்லி வந்துள்ளேன். இங்கே பயிற்சி வகுப்புகள் நடத்தி மக்களின் வாழ்க்கையை உய்விப்பது என முடிவெடுத்துவிட்டேன். தில்லியில் தமிழ் பதிவர்கள் இருப்பதாக படித்தேன். தில்லி வாழ் தமிழ் பதிவர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். பின்னூட்டத்திலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள். ஒரு மணிநேர அறுவைக்கு நான் காரண்டி..!
உலக புத்தக கண்காட்சி
தில்லி கண்காட்சி மைதானத்தில் உலக புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. சென்னை புத்தக திருவிழாவில் புத்தகம் வாக்குவதை விடுத்து பதிவர்களுடன் பேசி பதிவர் சந்திப்பு நடத்தும் இடமா இது என சிலர் கேட்டிருந்தார்கள். அப்படிபட்டவர்களுக்கு ஏற்ற இடம் உலக புத்தக கண்காட்சி. நீங்கள் தனியாக வந்து தனியாக கும்பி அடிக்கலாம். யாரும் கேட்கமாட்டார்கள். சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியாததால் தில்லியில் அந்த ஆவலை தீர்த்துக்கொண்டேன்.
தில்லி வாழ் அல்லது கண்காட்சிக்கு வரும் தமிழர்களுக்கு மருந்துக்குக்கூட தமிழ் புத்தகம் இல்லை. கிழக்கு பதிப்பகம் தனது அரங்கை வைத்திருந்தது. இவர்களும் ஆங்கில புத்தகம் மட்டும் வைத்து தமிழ் வளர்த்தார்கள். அரங்கில் பிரபாகரன் சுயசரிதை ஆங்கிலத்தில் வைத்திருந்தார்கள். அவர்களுக்கு யாரும் கூறவில்லையா இந்த சரக்கு தில்லியில் விற்காது என்று?
நக்ஷத்திரா கண்காட்சி
உலக புத்தக கண்காட்சிக்கு அருகில் நக்ஷத்திரா என்ற சாஸ்திரங்கள் பற்றிய கண்காட்சி இருந்தது. இதில் வேத சாஸ்திரம், ஜோதிடம், வாஸ்து, கைரேகை, மருத்துவம், ராசிக்கல் என அனைத்து வகையானவர்களும் அரங்கு அமைத்திருந்தனர். ஒரு அரங்கில் ராசிகற்கள் மற்றும் ருத்திராட்சம் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஏகமுக ருத்திராட்சம் என்ன விலை என அரங்கில் இருந்த பெண்ணிடம் கேட்டேன். ஒரு லட்ச ரூபாய் என்றார். அவ்வளவு விலைக்கு என்ன இதில் இருக்கு என்றேன். இதை அணிந்தால் குபேரனுக்கு இணையான பலன் கிடைக்கும். கோடிஸ்வரன் ஆகலாம் என்றார். அப்படியானால் நீங்கள் ஏன் விற்கிறீர்கள்? நீங்கள் இதைவைத்தே கோடிஸ்வரன் ஆகக் கூடாதா? என்றேன். சிந்திக்க தெரிந்தவனை எல்லாம் இந்த கண்காட்சிக்குள் யார் உள்ளே விட்டது என்பது போல என்னை மேலும் கீழும் பார்த்தார்...
அமைதியாக நடந்து அங்கிருந்து சிறிது தொலைவில் இருந்த மற்றொரு அரங்கினுள் நிழைந்தேன். அது ப்ரணவ பீடம் அறக்கட்டளையின் அரங்கு ....ஸ்வாமி ஓம்காருக்காக சிலர் காத்திருந்தார்கள்.
சிகரெட் சீக்கரெட்
உலக புத்தக கண்காட்சியில் ஒரு பத்திரிகையாளரை சந்தித்தேன். இந்தியாவின் பிரபல பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் இருக்கிறார். கண்காட்சிக்கு வெளியே அவர் எதிர்பட்டதால் இருவரும் அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தோம். சில நிமிடம் பேச்சுக்கு பிறகு, “ஸ்வாமி உங்கள் முன் சிகரெட் பிடிக்கலாமா? உங்களுக்கு பிரச்சனை இல்லையே?” என்றவாறே சிகரெட் பாக்கெட்டை எடுத்தார்.
அவரை கூர்ந்து நோக்கிவிட்டு கூறினேன்...”சிகரெட் உடலுக்கு பிரச்சனை என தெரிந்தும் புகைக்கும் உங்களுக்கே பிரச்சனை இல்லாத பொழுது எனக்கு என்ன பிரச்சனை?” என்றேன். எடுத்த சிகரெட் பாக்கெட்டை உள்ளே வைத்தார்.
காசி வாசி
இம்மாதம் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை காசியில் இருப்பேன். காசிபயணத்தை பற்றி அறிவுப்பு கொடுத்தவுடன் 20க்கும் மேற்பட்ட்ட மின்னஞ்சல்கள் வந்து குவிந்தது மகிழ்ச்சியை அளித்தது. அதில் அனேகர் இதற்கு முன் பின்னூட்டம் மூலமோ மின்னஞ்சல் மூலமோ என்னை தொடர்பு கொள்ளாத புதியவர்கள். அனைவரையும் நான் வருக என அழைக்கவில்லை. காசிக்கு செல்ல ப்ராப்தம் வேண்டும். எல்லோராலும் வர முடியாது. காசியை உணர நல்ல முயற்சியை எடுத்திருக்கிறார்கள் இவர்கள். நீங்களும் வர விருப்பம் கொண்டால் என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள் உதவுகிறேன்.
ஜென் கவிதை
ஜென் கவிதை எழுதி அதிக நாட்கள் ஆகிவிட்டதால் உங்களுக்காக ஒன்று இதோ. :)
மூங்கிலின் வெளியே
காற்று - ஓசை
மூங்கிலின் உள்ளே
காற்று - இசை

22 கருத்துக்கள்:
//கோடிஸ்வரன் ஆகலாம் என்றார். அப்படியானால் நீங்கள் ஏன் விற்கிறீர்கள்? நீங்கள் இதைவைத்தே கோடிஸ்வரன் ஆகக் கூடாதா? என்றேன். //
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....ய் !
:)
நான் உங்களை உய்விக்கிறேன்.
//ஒரு மணிநேர அறுவைக்கு நான் காரண்டி..!//
சாமிய சென்னைல சந்திச்சத வச்சு சொல்றேன், சாமி சொன்னது உண்மைங்கிறதுக்கு நான் காரண்டி.
:))
//அரங்கில் பிரபாகரன் சுயசரிதை ஆங்கிலத்தில் வைத்திருந்தார்கள். அவர்களுக்கு யாரும் கூறவில்லையா இந்த சரக்கு தில்லியில் விற்காது என்று?
//
எப்படி சொல்கிறீர்கள்? ஏதாவது மந்திரசக்தியை வைத்தா அல்லது வெறும் ஊகம்தானா? நீங்கள் கடைக்காரரிடம் கேட்டுவிட்டு இப்படிச்சொல்லியிருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் படிப்பவர்கள் தில்லியில் வெகுவானவர்கள், குறிப்பாக பிரபாகனரைப்போன்றொரின் வாழ்க்கையை.
தில்லிப்பத்திரிக்கை அலுவலகங்கள் தங்கள் தொழில் நிமித்த்தம் காரணமாக படிக்க வேண்டும். தில்லியில் நான்கு பல்கலைக்கழகங்கள்; அவற்றின் ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், போன்றவர்கள் இப்படிப்பட்ட நூலகளைப்படிக்க வேண்டியது அவசியம்.
உங்கள் பார்வை பாமரப்பார்வை. ஆனால், ஆராய்ச்சியாளனுக்கும் பத்திரிக்கையாளனுக்கும், இலங்கையின் ஈழப்போராட்டம் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வு; ஆராயந்து தெளியப்படவேண்டும். அதற்கு பிரபாகாரனின் வாழ்க்கை நிகழ்வுகள் பேருதவி புரியம்.ஈழப்போராட்டத்தையும் பிரபாகரனையும் பிரிக்க முடியாது.
நன்றி.
zen...super
//மூங்கிலின் வெளியே
காற்று - ஓசை//
ஓசை ஒலி எல்லாம் ஆனாய் நீயே.
இது மாணிக்க வாசகர் பாடினது
டெல்லி உங்களை அன்புடன் வரவேற்கிறது, டெல்லிப் பதிவர்களும். :)
மேட்டர் பூரா புதுசு.... பேரு மட்டும் பழைய பஞ்சாங்கம்... ம்ம்ம்ம்...
கொஞ்ச வருஷம் முன்னால அலாவுதீன் விளக்கு இருக்குன்னு சொல்லி அதை 110 கோடிக்கு விற்க முயற்சி பண்ணினதா தினசிரிகள்ல செய்தி வந்தது. அது இப்ப ஞாபகம் வந்தது :)))))))))))
ஓம்கார்
வெளியே காரம்
உள்ளே ஓம்.
அட நானும் கவிஞனாயிட்டேனா?
திரு கோவி.கண்ணன்,
நல்ல விக்கிறீர் :)
திரு ராஜகோபால்,
உங்க காரண்டி எனக்கு பிடிச்சுருக்கு :)
திரு நாணல்,
இந்த பாமரனுக்கு கொஞ்சம் வளைந்து கொடுங்கள். இங்கே வந்து பார்த்துவிட்டு பிறகு சொல்லுங்கள்.
இங்கே நடப்பது காண மந்திரம் வேணாம் புத்தி இருந்தால் போதும்.
திரு செளரி,
திரு ஜெய்சங்கர் ஜகனாநாதன்,
சகோதரி விக்னேஷ்வரி,
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
திரு மகேஷ்,
//ஓம்கார்
வெளியே காரம்
உள்ளே ஓம்.
அட நானும் கவிஞனாயிட்டேனா?//
இல்லை.. நீங்க சுப்பாண்டி ஆயிட்டீங்க :)
பத்திகளின் தலைப்பு வெகுவாகக் கவர்ந்தது!
எனக்கு ஒரு சந்தேகம் ஸ்வாமி..
நான் போடறது பின்னூட்டம்னா, எனக்கு முன்னாடி கமெண்ட் போடறங்களுது முன்னோட்டமா? அப்ப எனக்கு பின்னாடி கமெண்ட் போடறவங்க?
வழக்கம் பொன்ற உங்கள் நக்கலான நகைச்சுவை,ஆன்மீகத்தின் ஆழத்தைக் காட்டுகிறது,ஸ்வாமிஜி.
//நான் போடறது பின்னூட்டம்னா, எனக்கு முன்னாடி கமெண்ட் போடறங்களுது முன்னோட்டமா? அப்ப எனக்கு பின்னாடி கமெண்ட் போடறவங்க?
//
ஓம்காருக்கு முன்னாடி வருவதெல்லாம் முன்னூட்டம். பின்னாடி வருவதெல்லாம் பின்னூட்டம்
ஓம்கார்!
ஈகோவுக்கு இங்கு இடமில்லை. டெல்லி புத்தககண்காட்சி இன்னும் முடியவில்லை.
பதிப்பகத்தார் புத்தகங்களை விற்பதற்கும் மட்டும வைக்கவில்லை. அதை விளம்பரப்படுத்தவும் வைக்கின்றனர்.
ஒரு புதிய நூலை பலகலைக்கழகங்கள், மற்ற நிறுவனங்களோ, ஒரே ஒரு நூல் என்று வாங்குவதில்லை. அவர்கள் bulk order வைப்பார்கள்.
இது Trade Fairலும் நடக்கும். எனவே அத்தகைய கண்காட்சியில் பொதுமக்களுக்கு மதியத்திற்குப் பின்னும், தொழிலதிபர்கள், மற்றும் bulk orders கொடுப்போர்க்ளுக்கு காலை முதல் மதியம் வரைக்கும் அனுமதி கொடுப்பர். தில்லி ட்ரேட் பேரில் காலை அனுமதிச்சீட்டு ரு 100 மாலை வெறும் ரு 10.
புத்தகக்கண்காட்சியில் அப்படி செய்யாமிலிருக்க்க் காரணம், bulk orders கொடுபபவர்கள், பின்னர் ப்திப்பதகத்தாருக்கு எழுதிப்பெறுபவர் என்ற நம்பிக்கையும், பொதுமக்களை (உங்களைப்போன்றவர்களை) கூட்டம் மிகக்குறைந்துவிடும் என்பதாலும்.
Political Science is a popular subject in Delhi and North India.
பிரபாகரன் எழுச்சி, வீழ்ச்சி, ஈழப்போராட்டம், இன்றைய தமிழ் ஏதிலிகள் நிலை, நாளைய நிலை - இவையெல்லாம், அப்பாடத்தில் கீழ் வருபவை. இங்கு தனிநபர் உணர்வுகளுக்கு இடமில்லை. தில்லிப்பல்கலைக்கழகத்திலும், JNU விலும் ஈழப்போராட்டத்தைப்பற்றி பல கருத்தரங்கள், ஆயுவுகள் நடைப்பெற்றூ வருகின்றனர்.
Academicians are like sannyaasi. They dont have egos to carry. They approach - or, rather, should approach - their subject with open mind. For them, no one is a hero and no one is a villain.
"எனக்கு பிரபாகரனைப் பிடிக்காது. எனவே புத்தகம் வாங்கப்படமாட்டாது " என்றெல்லாம் சொல்வது காழ்ப்புணர்ச்சி. சுத்த பாமரத்தனம். கற்றோர் செய்யமாட்டார்.
மேலும் ஆங்கிலம் புழங்கும் தில்லியில் பிரபாகரனைப்பற்றி ஆங்கில நூலே விற்காது என்ற கருத்தை எதில் சேர்ப்பது என்று பார்த்தால் அதை ஈகோவில்தான் சேர்க்க முடியும்.
ஆன்மிகமும் ஈகோவும் ஒன்றுக்கொன்று எதிரிகள்.
திரு JAR,
//இது Trade Fairலும் நடக்கும். எனவே அத்தகைய கண்காட்சியில் பொதுமக்களுக்கு மதியத்திற்குப் பின்னும், தொழிலதிபர்கள், மற்றும் bulk orders கொடுப்போர்க்ளுக்கு காலை முதல் மதியம் வரைக்கும் அனுமதி கொடுப்பர். தில்லி ட்ரேட் பேரில் காலை அனுமதிச்சீட்டு ரு 100 மாலை வெறும் ரு 10.
//
முதலில் நான் டெல்லிக்கு புதியவன். ஆனாலும் நீங்கள் சொல்லுவது போல 100,10 ரூபாய் எல்லாம் இங்கே நுழைவு சீட்டு கிடையாது. 20 ரூபாய் டிக்கெட் வாங்கி பிரகதி மைதான் என்ற வட்டாரத்தில் நுழைந்தால் அங்கே இருக்கும் அனேக கண்காட்சிகளில் பங்கேட்கலாம். வெவ்வேறு கண்காட்சிகளில் நுழையலாம்.
மேலும் எனக்கு பிரபாகரனை பிடிக்காது பிடிக்கும் என எங்கும் நான் குறிப்பிட வில்லை.
நான் கூறிய பதிப்பகத்தில் உங்களுக்கு அபிப்ப்ராயம் இருக்கலாம். அதனால் அப்படி கூறி இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
அவர்களை தவிர ஒரு அரங்கில் மட்டுமே அரசியல் புத்தகத்தை வைத்திருக்கிறார்கள். நீங்கள் கூறுவது போல இங்கே அரசியல் புத்தகத்தை கண்காட்சியில் வந்து வாங்கும் நபர்கள் வித்தியாசமானவர்களாகவே இருக்கிறார்கள். முடிந்தால் இங்கே பார்த்துவிட்டு கூறவும்.
நம் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கும், அனேக அரசியல்ஆர்வலர்களுக்கும் கவுஹாத்தில் சர்மிளாவின் போராட்டம் பற்றி தெரிந்து அளவே இங்கே ஈழம் பேசப்படுகிறது என்பது எனது அனுபவ கருத்து....
இதில் எனது ஆணவமோ ஒரு தனி நபரை பற்றி குறைந்த மதிப்பிடலோ இல்லை...
///அப்படியானால் நீங்கள் ஏன் விற்கிறீர்கள்? நீங்கள் இதைவைத்தே கோடிஸ்வரன் ஆகக் கூடாதா? என்றேன். சிந்திக்க தெரிந்தவனை எல்லாம் இந்த கண்காட்சிக்குள் யார் உள்ளே விட்டது என்பது போல என்னை மேலும் கேளும் பார்த்தார்...///
நீங்கள் தான் புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் ருத்திராட்சம் விற்றே கோடிஸ்வரன் ஆகலாம் என்ற எளிய மார்க்கத்தை உணர்ந்துள்ளனர்.
ஹிஹி.
பழைய பஞ்சாங்கம் என வேண்டாம், நவீன பஞ்சாங்கம் என் தலைப்பு போடுங்கள். அனைத்தும் நன்றாக உள்ளது.
நியூ ஹொரைசன் மீடியா இரண்டு அரங்குகளில் கடைகள் கொண்டுள்ளன. ஒன்று அரங்கு எண் 12. இது இந்திய மொழிகளுக்கான அரங்கு. இங்கு சென்று பார்த்திருந்தீர்கள் என்றால் எங்களது கிழக்கு பதிப்பக அரங்கில் தமிழ்ப் புத்தகங்கள் மட்டும்தான் வைத்துள்ளோம் என்பதைப் பார்த்திருப்பீர்கள்.
அடுத்து அரங்கு எண் 14. இது பொதுவாக குழந்தைகள் புத்தகங்களுக்கானது. இங்கு எங்களது Prodigy Books ஆங்கிலப் புத்தகங்களையே பெரும்பாலும் வைத்துள்ளோம். கூடவே எங்களது Oxygen Books, Indian Writing பதிப்புகளின் புத்தகங்களையும் ஓர் ஓரத்தில் வைத்துள்ளோம். தமிழை வளர்ப்பது இந்த ஸ்டாலின் நோக்கமல்ல. எங்களது ஆங்கிலப் பதிப்புகளை வளர்ப்பதுதான் இந்த ஸ்டாலின் நோக்கம்.
ஓம்! ஓம்! ஓம்!
திரு பத்ரி,
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி...
Dear Omkar,
Your "kasi vasi" is very nice.
I went only one time kasi in last year. As you said, i got very different experience with my good friend. I would like to go once again and stay for some days.
Your explanations about kasi is nicely going on.
Proceed.
Thank you.
//நம் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கும், அனேக அரசியல்ஆர்வலர்களுக்கும் கவுஹாத்தில் சர்மிளாவின் போராட்டம் பற்றி தெரிந்து அளவே //
ஹை எனக்குத் தெரியுமே :)
எறும்பு said...
//ஒரு மணிநேர அறுவைக்கு நான் காரண்டி..!//
சாமிய சென்னைல சந்திச்சத வச்சு சொல்றேன், சாமி சொன்னது உண்மைங்கிறதுக்கு நான் காரண்டி.
:))//
என்னோடது வாரண்டி..:))
ஸ்வாமி,ஒரு லட்சம் ஹிட்சுக்கு வாழ்த்துக்கள்
Post a Comment