log in செய்து அனைவருடனும் தொடர்பு உண்டாக்கினேன்.
ஸ்டேட்டஸ் மெசேஜில் “நான் இறைவன்” என்றேன்.
ஒரு பெருங்கூட்டம் வந்து
அப்படியானால் நாங்கள் எல்லாம் யார்?
எதற்கு இந்த ஏற்றத்தாழ்வு என்றனர்.
ஸ்டேட்டஸ் மெசேஜில் “நீயே அது” என்றேன்.
எங்களால் உணர முடியாத விஷயத்தை கூறி
குழப்புகிறாய் என புலம்பினார்கள்.
ஸ்டேட்டஸ் மெசேஜை “நான் அன்புமயமானவன்” என மாற்றினேன்.
சுனாமியில் இறந்தவர்களும், தீவிரவாதத்தில்
இறந்தவர்களுக்கும் உன் அன்பு எப்படிபட்டது என்றனர்.
இவர்களுக்கு புரியவைக்க முடியாது
என இன்விஸிபிள் ஆனேன்...!
இப்பொழுது எல்லோரு are you there...????
என நித்தமும் கேட்கிறார்கள்.
தேடுங்கள்...தேடுங்கள்
எல்லாம் நான் log off செய்யும் வரை தானே...
Subscribe to:
Post Comments (Atom)
22 கருத்துக்கள்:
ஸ்வாமிஜி எதோ சொல்ல வரீங்கன்னு தெரியுது ஆனா......
//சுனாமியில் இறந்தவர்களும், தீவிரவாதத்தில்
இறந்தவர்களுக்கும் உன் அன்பு எப்படிபட்டது என்றனர். //
//ஸ்டேட்டஸ் மெசேஜில் “நீயே அது” என்றேன். //
மாற்றிப் போட்டால்
புரியுது புரியுது
:)
சுவாமி இது கவிதையா..?:)
திரு ஸ்ரீதர்,
என்னை இலக்கியவாதி ஆக்க முயற்சிக்காதீர்கள் :))
திரு கோவி.கண்ணன்,
உங்களுக்கு புரிந்தால் பதினாலு லோகத்திற்கும் புரிந்த மாதிரி :)
திரு கேபிள் சங்கர்,
//சுவாமி இது கவிதையா..?:)//
ஒரு வரிக்கு கீழே மற்றொரு வரி போட்டும் உங்களுக்கு சந்தேகமா?
இப்படி கேப்பீங்கனு சொல்லிதான் லேபிலிள் கவிதைனு போட்டேன் :)
இன்னும் சந்தேகம் இருந்தா மாலை ஆறு மணிக்கு ஒரு இருட்டு சந்தில் சந்திப்போம் :)
அப்புறம் கண்டிப்பாக கவிதைனு ஒத்துப்பீங்க :)
அன்பின் ஓம்கார்
நல்ல கவிதை - பொருள் ஆயிரம் - புரிய நேரம் ஆகும்
நன்று நன்று நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
ஆஹா இன்விசிபிளில் இருப்பதுக்கு இப்படி ஒரு மீனிங்கா? நானும் இனி இதையே சொல்லிக்கிறேன்:)
இன்விசிபல் ஆக இருக்கீங்களோ?
எப்படியானாலும் இருக்கீங்கல்ல. அதுவே போதும். அப்படியே எங்களையும் பாத்துக்கோங்க.
:))
-வித்யா
ரசித்தேன்.
god@gmail.com வேலை செய்யுமென்றால் தெரியப்படுத்துங்கள். மனதுள் புதைந்து தேடிக்கொண்டே, அப்படியே ஈமெயிலில் ஒரு doubt session கடவுளிடம் :)))
//என இன்விஸிபிள் ஆனேன்...!
இப்பொழுது எல்லோரு are you there...????//
:))) enjoyed the post..
புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு...
omkarji,
you also trying in different form of
messages .
but see the comments.
now you can understand- your work is not completed.
ரசித்தேன் ஸ்வாமி. மிக்க நன்றி.
// இவர்களுக்கு புரியவைக்க முடியாது
என இன்விஸிபிள் ஆனேன்...!
//
புரிந்து கொண்டவர்களுக்கு மட்டும் நான் "Available" ஆனேன், என்று கூறியிருப்பார் என நினைக்கின்றேன் ஸ்வாமி.
நல்ல மெசேஜ். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தேடுவதெல்லாம் இல்லை. என் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
செருப்பில்லை என்று கவலைப்பட்டேன்
காலில்லாதவன் போகக்கண்டு அமைதியானேன்
தொப்பியில்லை என்று கவலைப்பட்டேன்
தலையில்லாதவனைக் கண்டு சாந்தியடைந்தேன்
இப்படிக்கு
சுப்பாண்டி
கவிதை...நம்புறோம் சாமி..
திரு சீனா,
திரு குசும்பன்,
சகோதரி வித்யா,
உங்கள் வருகைக்கு நன்றி.
சகோதரி சக்திபிரபா,
அவரின் பினாமியின் மின்னஞ்சல் முகவரி உண்டு :)
திரு கையேடு,
திரு மதி,
திரு yrskbalu,
திரு சிவா,
திரு ஸ்ரீராம்,
திரு கேஎஸ், கவித கவித :)
திரு ராம் குமார்,
உங்கள் வருகைக்கு நன்றி
ரசித்தேன்
ரசித்தேன் :)
இப்படியெல்லாம் சொன்னா அவங்களுக்கு விளங்காதே சுவாமி...
சிரிச்சு மாளலை!
:-))
Post a Comment