உலகில் இருக்கும் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு தனித்துவம் உண்டு. நாகரீகத்தின் அடையாளமாக விளங்கும் இடத்தை நகரம் என அழைக்கிறோம். வரலாற்றை திரும்பி பார்த்தால் எங்கே நீர் நிலை இருக்கிறதோ அங்கே நாகரீகம் தோன்றி இருக்கிறது என கூற முடியும். நீர் நிலைகள் என்பதிலும் முக்கியமாக ஆறுகள் நாகரீகத்தின் தொட்டிலாக இருந்திருக்கிறது.
உலகின் எந்த கண்டங்களை எடுத்துக்கொண்டாலும் அதில் ஆறுகளும் ஆறுகளை சார்ந்த இடமும் மிகவும் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. உலகின் பிற நில அமைப்புகளை காட்டிலும் இந்தியா ஒரு விஷேஷ தன்மையை கொண்டதாக இருக்கிறது. இதில் நாகரீகத்தை வளர்க்கும் நதிகள் பல இருக்கிறது.
தென் முனையில் சோழர்களை வளர்த்த காவிரி போன்று வடக்கில் கங்கை தனக்கென ஒரு பெரும் இடத்தை ஆக்கரமித்துள்ளது. கங்கை ஆற்றின் கரையில் எத்தனையோ நாகரீகங்கள் தோன்றினாலும் ஒரு நகரம் மட்டும் தனித்துவத்துடன் உலக புகழுடனும் விளங்குகிறது என்றால் அது காசி மாநகரம் மட்டும் என கூறலாம்.
வடமாநிலங்களில் சென்று காசி என்றால் பலருக்கு தெரியாது. வாரணாசி என்றாலே அந்த நகரை அடையாளம் காண்பார்கள். வாரண் மற்றும் அஸ்ஸி என்ற இரு கிளை நதிகளுக்கு இடையே அமைந்த நகரம் என்பதால் வாரணாசி என பெயர் பெற்றது.
ருத்திர பூமி, காலபைரவ புரி, பூலோக மயானம், கங்கா ஸ்தலம் என எத்தனை பெயர்கள் இந்த நகரத்திற்கு இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித சுவடுகள் கொண்ட நகரம்.அதனால் பழமையானது என்ற பெயரில் பனாரஸ் என்றும் அழைக்கிறார்கள். முன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல பல்கலைகழகங்களும், கல்லூரிகளும் பாடசாலைகளும் ,ஆன்மீக மடாலயங்களின் தலைமை பீடங்கள் கொண்ட நகரமாக இருந்தது.
வாரணாசியை விவரிக்க வேண்டுமானால்...
குறுகலான சந்துகள், காசி மக்களின் அன்பு, திரும்பிய பக்கமேல்லாம் பசுக்கள், கண்களை மூடியபடி அமர்ந்திருக்கும் சாமியார்கள், அழுக்கு படர்ந்த கட்டிடங்கள், தன் நிறத்தை இழந்த கோட்டைகள், தன் இடையை வளைத்து செல்லும் கங்கை, எப்பொழுதும் எறிந்து கொண்டிருக்கும் மனித உடல்கள் என பல காட்சிகளை கண்முன்னே விரிக்கும் மஹாநகரம்.
காசி விஸ்வநாதர், அன்ன பூரணி, காசி விஷாலாக்ஷி என பல இறைசக்திகள் இங்கே இருக்கிறது. கால பைரவருக்கு இது தலை நகரம்.
உணவு சத்திரங்கள், தங்குவதற்கான இடங்கள், ஆன்மீக மடாலயங்கள், இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் படித்துறைகள், மிகவும் தித்திப்பான பால் இனிப்புக்கள் ஆகியவை காணப்படும் நகரம்.
மேற்கண்ட விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு ஐயாயிரம் ரூபாய் செலவழித்தால் போதுமானது. சுற்றுலா கொண்டு செல்லும் டிராவல்ஸ்காரர்கள் இரண்டு மினரல்வாட்டர் பாட்டிலுடன் காசியை சுற்றிக் காண்பித்துவிடுவார்கள்.
இதற்கு நான் ஏன் தொடர் எழுத வேண்டும்?
இங்கே நனும் நீங்களும் பேசப்போவது வாரணாசியின் இன்னொரு பரிமாணத்தை...!
வாரணாசி என்ற நகரை ஒரு சாக்காக கொண்டு சில உண்மைகளை உங்களிடம், உங்களுக்கு தெரியாமலேயே உள் புகுத்துவதே இந்த தொடரின் நோக்கம்..!
(சுவாசிப்பேன்...)
பின் குறிப்பு : மார்கழி என்ற தேவர்களின் மாதத்தில், சோமவாரம் என்ற சந்திரன் திகழும் திங்கள் கிழமையில் இறைவனின் இருப்பிடமான வாரணாசி பற்றிய தொடரை உங்களுக்காக துவங்குகிறேன்.நன்றி.
18 கருத்துக்கள்:
சுமார் ஒரு மணிநேரம் மட்டுமே இருக்கவேண்டி வந்தது காசியில்.அந்தக் குறையைத் தீர்த்துக்கொள்ள மிகவும் தங்களுடைய இத்தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன. தொடருக்கு முன் கூட்டி வாழ்த்துக்கள்.
இனிதே ஆரம்பமானது ஸ்வாமி. தொடரட்டும் உங்கள் பணி. உண்மைகள் வெளிவரட்டும்.
காசி பற்றி பொதுவாக எழுதுபவர்கள் புன்னிய பூமி என்பதாகத் தொடங்குவார்கள். நீங்கள் தான் 'மகா மயானம்...' என்று மாறுபட்டு தொடங்குகிறீர்கள்.
காசி விஸ்வநாதர் கோவில் நந்தி விலகி வேற பக்கம் பார்த்து இருக்குற கதையும் எழுதுவீங்களா??
:)
இப்ப இருக்க காசி விஸ்வநாதர் கோவில் ஒரிஜினல் இடம் இல்லையாமே, என்னமோ போங்க சிவனையே இடமாதிடாங்க -:)))
திரு அலர்,
திரு சிவா,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு கோவியார்,
உண்மைதான் புனிதம் என்பார்கள், புண்ணியம் என்பார்கள்.
நான் கூறுவதேல்லாம் மயானம் கூட புண்ணியம் நல்கும் இடம். காரணம் மனிதன் அங்கே தான் புனிதம் அடைகிறான்.
அப்துல்லா அண்ணே...
/காசி விஸ்வநாதர் கோவில் நந்தி விலகி வேற பக்கம் பார்த்து இருக்குற கதையும் எழுதுவீங்களா??
//
நல்லாதானேய்யா.. போயிகிட்டு இருந்துச்சு.... :)
திரு ஞானபித்தன்,
//இப்ப இருக்க காசி விஸ்வநாதர் கோவில் ஒரிஜினல் இடம் இல்லையாமே, என்னமோ போங்க சிவனையே இடமாதிடாங்க -:)))//
இந்த தொடர் ஒரிஜினல் காசி விஸ்வநாதரை பற்றியது...வேறு எங்கும் கிளைகள் கிடையாது..!
(ஒரிஜினல் லாலா கடை விளம்பரம் போல படிக்கவும் :) )
Dear Swamiji,
Vanakkam. Let me witness these.
Umashankar:-)A
ஏ எல் ஆர் என்கின்ற intial அலர் என்று மாறும் என நினைக்கவே இல்லை. எனது இயற்ப் பெயரான "ரங்கன்" என்றே வைத்துள்ளேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்.
YAAH ALLAH
உண்மையான விஸ்வநாத லிங்கம் கிணற்றில் இருப்பதாக சொன்னார்கள் .......உண்மையா?ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன.
Swamiji,
Mikka Nandri, Neenda Natkalaga Iththodarukkaga Kathu Kondu Irunthom, Vazhka Vazhamudan.
சுவாமி எனக்கு காசி பற்றி தெரிந்து கொள்ள ரொம்ப ஆவல்..நீண்ட வருடங்களாக அங்கு செல்ல வேண்டும் என்று விருப்பம், இடம் காரணமாக முடியாமல் உள்ளது.
உங்களது இந்த தொடர் காசி பற்றி நன்கு தெரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.
ஆவலுடன் எதிபார்க்கிறேன்
புதிய தொடருக்கு
வாழ்த்துகள் நண்பரே
ஓம்கார்,
காசி பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவல்.
ரிசிகேஷ் மற்றும் ஹரித்தவார் வரை கங்கை மனதை அள்ளும்.
பிணக்குப்பையாய் மாறிப்போன காசி கங்கையை பார்க்க மனம் வரவில்லை. :-(((
அந்த நதியின் பார்வையில் ----
ஒரு நதியை சீரழித்த நதிக்'கறை' (அ)நாகரிகம். :-((((
http://blog.balabharathi.net/எச்சரிக்கை-‘புனித-கங்கை/
nice. please continue....
Post a Comment