மக்களுக்கு ஓட்டுரிமை என்பது மிகமுக்கியம் என்கிறார்கள் ஜனநாயகவாதிகள். அந்த காலத்தில் பிச்சைக்காரனை அரசனாக யானை தேர்ந்தெடுத்த கதை உண்டு. இன்று பல யானைகளை மக்கள் அரசனாக தேர்ந்தெடுக்கிறார்கள். கடைசியில் மக்கள் பிச்சைக்காரர்களாகவே இருக்கிறார்கள்.
சிவகாசிக்கு நியூமராலஜிப்படி பெயர் மாற்றினால் நன்றாக இருக்கும் என அவைக்கூட்டத்தில் முடிவு செய்கிறார்கள். நாளை மக்கள் நேமாலஜியும் உண்மை என நம்புவார்கள். ஏன் தெரியுமா? வாக்கு அளிக்கும் இடத்திற்கு வாக்கு’சாவடி’ என்று பெயராம். ஓட்டளிக்கும் பொழுதே சாவடிக்க துவங்கிவிடுகிறார்கள். பெயர் மாற்றம் அவசியம் என உணர்கிறீர்களா ?
என் உடம்புக்கு அரசியல் ஆகாது :) என்பதால் இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்.
சென்ற வாரத்தில் நம் வலைதளத்தில் ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி. மொத்தம் 235 ஓட்டுகள். அதில் சிறப்பான ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு தலைப்புக்கு சமமான ஓட்டுக்கள். இதன் மூலம் நான் கூறவிரும்புக் கருத்தை எப்படி விரும்புகிறார்கள் என தெரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது.
வாக்கு விவரங்கள்
காசி நகரம் ஓர் அற்புதம் ------------------------- 82 (34%)
புதிய கோணத்தில் திருமந்திர விளக்கம்---- 82 (34%)
முத்திரைகள் என்ன செய்யும்?-----------------80 (34%)
வேதகால மருத்துவம்---------------------------72 (30%)
மஹா கும்ப மேளா------------------------------50 (21%)
எதுவும் எழுதாமல் இருந்தால் நல்லது.----32 (13%)
Votes so far: 235
ஒரு 32 ஓட்டுக்கள் எதுவும் எழுதவேண்டாம் என விழுந்திருக்கிறது. அந்த 32 பேருக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் (நாங்களும் அரசியல்வாதி ஆயிட்டோம் :) ).
காசி மாநகரம் மற்றும் திருமந்திரம் ஒரே எண்ணிகையான வாக்குகள் வாங்கி இருப்பதால் இரண்டில் ஒன்றை நானே தேர்ந்தெடுக்கிறேன்.
அடுத்து வரும் கட்டுரையின் தலைப்பு மற்றும் சித்திர வடிவம்....
.
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்களேன்
22 கருத்துக்கள்:
அந்த 32 பேருக்கு தமிழ் சரியா படிக்க தெரியாதோ..?:(
//(நாங்களும் அரசியல்வாதி ஆயிட்டோம் :) ).
//
நாராயணா..இந்த பொல்டீஸ்யன் தொல்லை தாங்கமுடியலடா..
:))
//காசி நகரம் ஓர் அற்புதம் ------------------------- 82 (34%)//
:)
இந்திய அரசு 1 பில்லியன் யுஎஸ் டாலர் கடன் கேட்டு இருக்கிறதாம் கங்கையை புனிதப் படுத்த சாரி சாரி தூய்மை படுத்த.
கேபிள் சங்கர் அவர்களுக்கு தமிழ் தெரியும் என்றதால் அந்த முடிவெடுத்திருக்கலாம் :)
உங்கள் வருகைக்கு நன்றி
//நாராயணா..இந்த பொல்டீஸ்யன் தொல்லை தாங்கமுடியலடா..
:))///
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. :)
கோவியாருக்கு :)
//இந்திய அரசு 1 பில்லியன் யுஎஸ் டாலர் கடன் கேட்டு இருக்கிறதாம் கங்கையை புனிதப் படுத்த சாரி சாரி தூய்மை படுத்த.//
முகத்தில் இருக்கும் கரியை துடைத்தபின் தானே சிகப்பழகு கிரீம் போடுவது நல்லது? இவர்கள் பல கோடி கேட்கும் முன் இங்கே இருக்கும் தொழிற்சாலைகளை மூடட்டும்.
காசி நகரம் ஒர் அற்புதம் - காத்திருக்கிறேன் - எழுதுக விரைவினில்
நல்வாழ்த்துகள் ஓம்கார்
அப்பா நாம ஓட்டு போட்டதுதான்...
ஸ்ரீசக்ரபுரிக்கு ஓசில போயிடு வந்தாச்சு...
இப்போ காசி ட்ரிப் ஓசில... ஐய்யா... ஜாலி...
பெட்டி எல்லாம் பேக் பண்ணி ரெடியா வெச்சுட்டேன்...
சீக்கரம் ஸ்டார்ட் பண்ணுங்க...
(வி)சித்திரத் தலைப்பு மர்மமான சில கதைகளைச் சொல்கிறது.
அற்புத அனுபவத்திற்க்குக் காத்திருக்கிறோம்.
இதே முறை மேலும் தொடர வாழ்த்துக்கள்.
Cable Sankar said...
அந்த 32 பேருக்கு தமிழ் சரியா படிக்க தெரியாதோ..?:(
நல்லா தெரியுமோ என்னவோ ?
:)
தங்களுடன் சேர்ந்து காசி பயணத்தை மேற்கொள்ள ஆவலாய் உள்ளோம். ஆனால் இன்னறைய தேவைக்கு காசியா ? திருமந்திரமா ? தயவுசெய்து மறுபரிசீலனை செய்வீர்களா ?
"மஹா மயானம்" பற்றி அறிய ஆவலுடன் இருக்கின்றேன் சுவாமி.
தலைப்பு மற்றும் சித்திர வடிவம் நன்றாக உள்ளன.
அய்யா
காசி என்றால் நிச்சயம் அகோரிகள் பற்றியும் வரும் என்ற எதிர்பார்ப்புடன் படிக்கக் காத்திருக்கின்றேன்.
எதையும் எழுதவேண்டாம் என்று கூறும் அந்த32 பேரும் எதற்காக ,எதைப்படிப்பதற்காக இந்தத் தளத்திற்கு வருகிறார்கள்.
(ஒருவேளை அநியாயத்திற்கு ஸ்வாமியின் மேலுள்ள அன்பால் ஸ்வாமியின் கை வலிக்கக்கூடாது என்ற நல்லெண்ணமோ)
இப்படிக்கு
விளங்காத
குப்புசாமி
பி.கு:நான் கும்பமேளாவிற்கே வாக்களித்திருந்தாலும் உங்கள் ஜனநாயகரீதியான முடிவை ஏற்றுக்கொண்டு இந்தக் கட்டுரைத்தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
(தயவுசெய்து அந்த 32 பேரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டாமென்று ஏனைய 203 பேரின்சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்)
//மகாமயானம்//
சம்போ மகாதேவா! ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் ஸ்வாமிஜி! ஆனால் ஒன்று சொல்கிறேன் ஸ்வாமிஜி, டிவி சீரியல் இயக்குனர்களுக்கும் உங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, சரியான நேரத்தில் தொடரும்..... போடுவது, என்ன அதில் அறிவு மங்கும் இதில் அறிவு பொங்கும்,
- www.srisathish.blogspot.com
நாங்க சுவாசிக்க தயார் ஆயிட்டோம்.....
விளங்காத குப்புசாமியின் பின்னூட்டத்தை ரசித்தேன்..
Dear Swami,
Sorry I dint see the poll. Any how I am happy that you had taken my favorite topic. Eagerly waiting for it.
திரு பரிசல்காரன் அவர்களிற்கு
நான் என்றுமே உங்கள் பதிவின் பரம ரசிகன்
பதிவுலகத்தின் பெரும் நட்சத்திரமான நீங்கள் என் பின்னூட்டத்தை ரசித்ததாகச் சொன்னது என் பாக்கியம்.
நன்றிகள் பல.
ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவுமா?
திரு மருத புல்லட் பாண்டி,
//ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவுமா?//
ஏட்டு சுரைக்காய் மட்டுமல்ல எஸ்.ஐ சுரைக்காயும் உதவும்...
எல்லாம் நாம் பயன்படுத்தும் விதத்தில் தானே இருக்கு :)
Post a Comment